என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    கடன், குடும்பத்தில் பிரச்சனை, தொழில் நஷ்டம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் பலன் கிடைக்கும்.
    கடன், குடும்பத்தில் பிரச்சனை, தொழில் நஷ்டம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் பலன் கிடைக்கும்.
     
    குரு பக்த ரத்தினமே போற்றி
    கிரக தோஷம் களையும் கதிரே போற்றி
    தைரியம் வலிமை தருவாய் போற்றி
    ஞானமும் மோட்சமும் நல்குவாய் போற்றி
    கோடி நன்மை தரும் ஹனுமந்தா போற்றி
    சௌபாக்கியம் தரும் சித்தா போற்றி
    நித்ய மங்கள வைபவா போற்றி
    இடர் களையும் எழில் நாயகா போற்றி
    சங்கடம் தீர்க்கும் சதகுருவே போற்றி போற்றி.
    கீழே கொடுப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் அல்லது சிவனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வந்தால் சகல மங்களங்களும் உண்டாகும்.
    பக்தார்தி பஞ்ஜனபராய பராத்பராய
    காலாப்ரகாந்தி கரளாங்கித கந்தராய
    பூதேஸ்வராய புவனத்ரய காரணாய
    ஹாலாஸ்யமத்யநிலயாய நமஸ்ஸிவாய
    (மீனாட்சி ஸுந்தரேச்வர ஹாலாஸ்யநாத ஸ்தோத்திரம்)

    பொதுப்பொருள் :

    பக்தர்களுடைய மனக்கவலையைப் போக்கி அருள்பவரே, மீனாட்சி சுந்தரேஸ்வரா, நமஸ்காரம். பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்டவரே, பிரளயகால மேகம் போன்ற அருட்திரட்சி கொண்டவரே, காலகூட விஷத்தை அருந்தியதன் அடையாளமாக கழுத்தை உடையவரே, பிர மதகணங்களுக்கு ஈச்வரரானவரே, மூவுலகங்களையும் படைத்தவரே, ஹாலாஸ்ய ஷேத்திரம் எனப்படும் மதுரையம்பதியில் வசிப்பவரே, மீனாட்சி சுந்தரேஸ்வரா, நமஸ்காரம்.
    செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் இத்துதியை பாராயணம் செய்தால் திருமணமாகாத கன்னியர்க்கு, தடைகள் எல்லாம் நீங்கி, நல்ல கணவர் அமைவார்.
    அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்
    அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:
    தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நா
    தந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:

    - கோதாஸ்துதி பொதுப்பொருள் :

    ஆண்டாள் தேவியே, உனக்கு வந்தனம். சாத்திரங்கள் அனுமதிக்காத பாகவத அபசாரங்கள் பலவற்றை நெடுங்காலமாக நாங்கள் செய்து வருகிறோம். ஆனாலும் எங்களுக்கெல்லாம் தங்கள் கணவரான அரங்கத்துப் பெருமாள் திருவருள் புரிகிறார். தவறு செய்யும் எங்களுக்கும் பெருமாள் அருளும் காரணம் என்னவாக இருக்கும்? அது, நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிருப்பதால்தான்.

    அது மட்டுமல்லாமல் வீணையின் நாதம் போன்ற உன் குரலால் தீந்தமிழில் பிரபந்தமும் பாடித் துதித்திருக்கிறாய். அதனாலேயே உன் குழந்தைகளாகிய எங்களை பெருமாள் தண்டிக்காமல் விட்டிருக்கிறார். அதற்காக ஆண்டாள் தேவியே உனக்கு மீண்டும் வந்தனம்.

    - செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் இத்துதியை பாராயணம் செய்தால் திருமணமாகாத கன்னியர்க்கு, தடைகள் எல்லாம் நீங்கி, நல்ல கணவர் அமைவார்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்துதியை ராகு-கேது பெயர்ச்சியான நாளை (27.7.2017) பாராயணம் செய்தால் ராகு-கேது கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கும்.
    இத்துதியை ராகு-கேது பெயர்ச்சியான நாளை (27.7.2017) பாராயணம் செய்தால் ராகு-கேது கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கும். அனைத்து நலன்களும் பெருகும்.

    அர்த்தகாயம் மஹாவீர்யம் சந்த்ராதித்ய விமர்தனம்
    ஸிம்ஹிகாகர்ப்ப ஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம்
    பலாசபுஷ்ப ஸங்காசம் தாரகாக்ரஹமஸ்தகம்
    ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்
    நவகிரக ஸ்தோத்திரம்.

    பொதுப்பொருள்:

    பாதி (மனித) சரீரமுள்ளவரே, மகா பலசாலியானவரே, சந்திர-சூரியனையே மறைப்பவரே, ஸிம்ஹிகையின் கர்ப்பத்தில் பிறந்தவரே, ராகு பகவானே நமஸ்காரம். பலாச மலர் போன்றவரே, நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் தலைவரானவரே, கோபம் மிக்க உருவம் கொண்டவரே, அநீதிக்கு அச்சமூட்டுபவரே, கேது பகவானே, நமஸ்காரம்.
    முன்பெல்லாம் பலரது வீடுகளில், காலை எழுந்தவுடன் ‘ப்ராதஸ்மரனம்’ என்ற சுலோகத்தை பெரியவர்கள் தினமும் காலையில் சொல்லும் வழக்கம் இருந்து வந்தது.
    முன்பெல்லாம் பலரது வீடுகளில், காலை எழுந்தவுடன் ‘ப்ராதஸ்மரனம்’ என்ற சுலோகத்தை பெரியவர்கள் தினமும் காலையில் சொல்லும் வழக்கம் இருந்து வந்தது. அந்த சுலோகமானது..

    ‘ஸமுத்ர வசனே தேவி பர்வத ஸ்தன மண்டலே
    விஷ்ணு பத்னி நமஸ்துப்யம் பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே..’ -என்பதாகும்.

    அதாவது, ‘பெரும் நீர்ப்பரப்பான கடலை தனது ஆடையாக உடுத்திய நிலமகளே, எனது கால் பாதங்களை உன் மீது வைத்து எழுந்திருப்பதை பொறுத்தருள வேண்டும்’ என்று பெரியவர்கள் சொல்லியபடி படுக்கையில் இருந்து எழுவார்கள்.
    கடன், பயம், எதிரிகள் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த நரசிம்மர் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
    திருக்கடிகை ஸ்ரீயோக நரசிம்ம ஸ்வாமிக்கு மங்களம்
    மாமலையாம் திருக்கடிகையில் வாழ்பவரே உமக்கு மங்களம்
    தேவர்களும் முனிவர்களும் வணங்கிடும் பெருமாளே உமக்கு மங்களம்
    திருமகள் வாழ்கின்ற திருமார்புடைய ந்ருஸிம்ஹா உமக்கு மங்களம்
    அரங்கத்தில் வாழும் அடியார்கள் தொழும் பெருமாளே உமக்கு மங்களம்

    தீமைகளை அழித்து வேண்டும் வரம் அருளும் நரசிம்மா உமக்கு மங்களம் வைசாக முழுமதியில் ஸ்வாதி திருநாளில் அவதரித்த பெருமாளே உமக்கு மங்களம் அபயவரத ஹஸ்தங்களுடன் ஆனந்தம் அருளும் நரசிம்மா உனக்கு மங்களம் வாரணசி கயை, ப்ரயாகையிலும் புகழ் மிக்க் திருக்கடிகைப்பெருமாளே உமக்கு மங்களம் வானவரும மண்ணவரும போற்றிடும் அக்காரக்கனி ந்ருஸிம்ஹா உமக்கு மங்களம் சீர்மிகு சிறிய திருவடிக்கு ஸங்கம் சக்கரம் அருளிய பெருமாளே உமக்கு மங்களம் ஸ்ரீ அம்ருதபல வல்லி நாயகி ஸமதே ந்ருஸிம்ஹா உமக்கு மங்களம் மங்களம் மங்களம்

    நரமிம்மனையும் ஆஞ்சநேயரையும் துதித்து அகமகிழ்வோம்.

    பயம், எதிரிகள் தொல்லை, செய்வினை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள காளி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் துன்பத்திலிருந்து விடுபடலாம்.
    பயம், எதிரிகள் தொல்லை, செய்வினை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள காளி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் துன்பத்திலிருந்து விடுபடலாம்.

    ஓம் காளி நமஹ; ஓம் மாகாளி நமஹ;
    ஓம் ஜெய காளி நமஹ; ஓம் உக்கிர காளி நமஹ;
    ஓம் உத்தண்ட காளி நமஹ; ஓம் ஓங்கார காளி நமஹ;
    ஓம் ஆஙகார காளி நமஹ; ஓம் ருத்ர காளி நமஹ;
    ஓம் நீலி நமஹ; ஓம் சூலி நமஹ;

    ஓம் திரிசூலி நமஹ; ஓம் முப்புரத்து நீலி நமஹ;
    ஓம் சங்கரி நமஹ; ஓம் பயங்கரி நமஹ;
    ஓம் பூரணி நமஹ; ஓம் காரணி நமஹ;
    ஓம் மோஹினி நமஹ; ஓம் யோகினி நமஹ;
    ஓம் வர்த்தினி நமஹ; ஓம் மஹிஷாசுர மர்த்தினி நமஹ;
    ஓம் ஆனந்த ரூபிணி நமஹ; ஓம் ராஜ சிம்மாஸினி நமஹ;
    ஓம் பவானி நமஹ; ஓம் பைரவி நமஹ;
    ஓம் ஈஸ்வரி நமஹ; ஓம் அகிலாண்டேசுவரி நமஹ;
    ஓம் மந்தி தாரணி நமஹ; ஓம் ராஜ ராஜேசுவரி நமஹ;
    ஓம் காளி ! ஓம் மாகாளி ஓம் ஓம் மாகாளி ஸ்வாஹ!
    ஆடி மாதம் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் போற்றியை சொல்லி வழிபாடு செய்து வந்தால் மங்களம் உண்டாகும்.
    ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி 1
    ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
    ஓம் அருமறையின் வரம்பே போற்றி
    ஓம் அறம் வளர்க்கும் அம்மையே பொற்றி
    ஓம் அரசிளங் குமரியே போற்றி
    ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி
    ஓம் அமுத நாயகியே போற்றி
    ஓம் அருந்தவ நாயகியே போற்றி
    ஓம் அருள் நிறை அம்மையே போற்றி
    ஓம் ஆல்வாய்க் கரசியே போற்றி 10
    ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
    ஓம் ஆதியின் பாதியே போற்றி
    ஓம் ஆலால சுந்தரியே போற்றி
    ஓம் ஆனந்த வல்லியே போற்றி
    ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி
    ஓம் இமயத் தரசியே போற்றி
    ஓம் இடபத்தோன் துணையே போற்றி
    ஓம் ஈஸ்வரியே போற்றி
    ஓம் உயிர் ஓவியமே போற்றி
    ஓம் உலகம்மையே போற்றி 20
    ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
    ஓம் எண்திசையும் வென்றோய் போற்றி
    ஓம் ஏகன் துணையே போற்றி
    ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
    ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி
    ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
    ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
    ஓம் கற்றோர்க் கினியோய் போற்றி
    ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி
    ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி 30
    ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
    ஓம் கனகமணிக் குன்றே போற்றி
    ஓம் கற்பின் அரசியே போற்றி
    ஓம் கருணை ஊற்றே போற்றி
    ஓம் கல்விக்கு வித்தே போற்றி
    ஓம் கனகாம்பிகையே போற்றி
    ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
    ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
    ஓம் காட்சிக் கினியோய் போற்றி
    ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி 40
    ஓம் கிளியெந்திய கரத்தோய் போற்றி
    ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
    ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
    ஓம் கூடற் கலாப மயிலே போற்றி
    ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
    ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
    ஓம் சக்தி வடிவே போற்றி
    ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
    ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
    ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி 50
    ஓம் சிவயோக நாயகியே போற்றி
    ஓம் சிவானந்த வல்லியே போற்றி
    ஓம் சிங்கார வல்லியே போற்றி
    ஓம் செந்தமிழ்த் தாயே போற்றி
    ஓம் செல்வத்துக் கரசியே போற்றி
    ஓம் சேனைத் தலைவியே போற்றி
    ஓம் சொக்கர் நாயகியே போற்றி
    ஓம் சைவநெறி நிலைக்கச் செய்தாய் போற்றி
    ஓம் ஞானாம்பிகையே போற்றி
    ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி 60
    ஓம் தமிழர் குலச் சுடரே போற்றி
    ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி
    ஓம் திருவுடை யம்மையே போற்றி
    ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி
    ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
    ஓம் திருநிலை நாயகியே போற்றி
    ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
    ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
    ஓம் தென்னவன் செல்வியே போற்றி
    ஓம் தேன்மொழி யம்மையே போற்றி 70
    ஓம் தையல் நாயகியே போற்றி
    ஓம் நற்கனியின் சுவையே போற்றி
    ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
    ஓம் நல்ல நாயகியே போற்றி
    ஓம் நீலாம்பிகையே போற்றி
    ஓம் நீதிக்கரசியே போற்றி
    ஓம் பக்தர்தம் திலகமே போற்றி
    ஓம் பழமறையின் குருந்தே போற்றி
    ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
    ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி 80
    ஓம் பவள வாய்க் கிளியே போற்றி
    ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
    ஓம் பசுபதி நாயகியே போற்றி
    ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி
    ஓம் பாண்டி மாதேவியின் தேவே போற்றி
    ஓம் பார்வதி அம்மையே போற்றி
    ஓம் பிறவிப் பிணி தீர்ப்பாய் போற்றி
    ஓம் பெரிய நாயகியே போற்றி
    ஓம் பொன் மயிலம்மையே போற்றி
    ஓம் பொற்கொடி அன்னையே போற்றி 90
    ஓம் மலயத்துவசன் மகளே போற்றி
    ஓம் மங்கல நாயகியே போற்றி
    ஓம் மழலைக் கிளியே போற்றி
    ஓம் மனோன்மணித் தாயே போற்றி
    ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
    ஓம் மாயோன் தங்கையே போற்றி
    ஓம் மாணிக்க வல்லியே போற்றி
    ஓம் மீனவர் கோன் மகளே போற்றி
    ஓம் மீனாக்ஷி அம்மையே போற்றி
    ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி 100
    ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி
    ஓம் யாழ் மொழி யம்மையே போற்றி
    ஓம் வடிவழ கம்மையே போற்றி
    ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
    ஓம் வேத நாயகியே போற்றி
    ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
    ஓம் அம்மையே அம்பிகையே போற்றி போற்றி
    ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி
    மனநோய் உடல்நோயால் அவதிப்படுவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்ரீ தன்வந்திரி மகா மந்திரம் தினமும் சொல்லி வந்தால் நல்ல பலனை காணலாம்.
    ஓம் நமோ பகவதே வாஸூதேவாய
    தந்வந்தரயே அம்ருதகலச ஹஸ்தாய
    ஸர்வாமய விநாசநாய, த்ரைலோக்ய
    நாதாய ஸ்ரீ மகா விஷ்ணவே நம:
    ராகு - கேது தோஷம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் ராகு, கேதுவால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.
    ராகு காயத்ரி:

    நாக த்வஜாய வித்மஹே!
    பத்ம ஹஸ்தாய தீமஹி!
    தந்நோ ராகு ப்ரசோதயாத்!

    கேது காயத்ரி:

    அச்வ த்வஜாய வித்மஹே!
    சூல ஹஸ்தாய தீமஹி!
    தந்நோ கேது ப்ரசோதயாத்!
    சனிக்கிழமைகளில் நவக்கிரகங்களின் சன்னிதியில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஒரு பாடலைப் பாடி வழிபட்டால், ஒன்பது கிரகங்களின் அருளும் நமக்குக் கிடைக்கும்.
    சனிக்கிழமைகளில் நவக்கிரகங்களின் சன்னிதியில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஒரு பாடலைப் பாடி வழிபட்டால், ஒன்பது கிரகங்களின் அருளும் நமக்குக் கிடைக்கும்.

    சூரியன், சோமன், செவ்வாய்
    சோற்புதன், வியாழன், வெள்ளி
    காரியும், ராகு, கேது
    கடவுளர் ஒன்பா னாமத்
    தாரியல் சக்க ரத்தைத்
    தயவுடன் பூசித் தாலும்
    பாரினில் செல்வம் உண்டாம்
    பாக்கியம் நல்கும் தானே!
    ராகு - கேது தோஷம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள துதிப்பாடலை தினமும் அல்லது ராகு - கேது பெயர்ச்சி அன்று சொல்லி வந்தால் நல்ல பலனை காணலாம்.
    ராகு - கேது தோஷம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள துதிப்பாடலை தினமும் அல்லது ராகு - கேது பெயர்ச்சி அன்று சொல்லி வந்தால் நல்ல பலனை காணலாம்.

    சர்ப்ப கிரகமாய் தணியில் வந்து
    சந்தோஷத்தை வழங்கும் அரவே
    ஒப்பற்ற நிலையை நாங்கள் பெறவும்
    உள்ளம் மகிழும் வாழ்வைத் தரவும்
    நற்பலன் கொடுக்கும் ராகு கேதுவே!
    நாளும் உன்னைத் துதிக்கின்றோமே!
    எப்பொழுதும் நீ எமக்கு அருள்க!
    இதயம் மகிழும் வாழ்க்கையைத் தருக!
    ×