என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    வருடம் தோறும் திருவேங்கடமுடையான் சன்னதியில் நடக்கும் இந்த வசந்த உற்சவம், தற்போது ஊரடங்கு காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகத்திற்குள்ளேயே நடக்கிறது.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் வசந்த உற்சவம் சிறப்பாக நடைபெறும். ஆனால் இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களின்றி துவங்கியது.

    வருடம் தோறும் திருவேங்கடமுடையான் சன்னதியில் நடக்கும் இந்த வசந்த உற்சவம், தற்போது ஊரடங்கு காரணமாக ஆண்டாள் கோயில் வளாகத்திற்குள்ளேயே நடக்கிறது. இதனை முன்னிட்டு வெள்ளிக்குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சந்தன காப்பு மற்றும் வெண்பட்டு சாற்றபட்டு, மலர்சட்டை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்ற வசந்த உற்சவத்தையொட்டி ஆண்டாள், ரெங்கமன்னாருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளித்தனர்.

    கோயில் பட்டர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் செய்திருந்தனர். 10 நாட்கள் நடக்கும் வசந்த உற்சவம் மே 26 அன்று நிறைவடைகிறது.
    சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்குள் பிரவேசிக்கும் காலமே, வைகாசி மாதம். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட வைகாசி மாதத்தின் விழாக்களையும், விசேஷங்களையும் தெரிந்துகொள்வோம்...
    சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்குள் பிரவேசிக்கும் காலமே, வைகாசி மாதம். அதனால் இதற்கு ரிஷப மாதம் என்ற பெயரும் உண்டு. தமிழ்க் கடவுளான முருகப்பெருமான் அவதரித்த திருநாளான வைகாசி விசாகம், பௌத்தர் அவதரித்த பௌத்த பூர்ணிமா, நரசிம்ம ஜெயந்தி என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்ட வைகாசி மாதத்தின் விழாக்களையும், விசேஷங்களையும் தெரிந்துகொள்வோம்...

    வைகாசி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு, `மோகினி ஏகாதசி' என்று பெயர். இன்று விரதமிருந்து பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் பாவங்கள் அனைத்தும் விலகி வாழ்வில் வசந்தம் உண்டாகும்.

    தன்னைச் சரணடைந்த பக்தனைக் காக்க, சிம்ம முகமும் மனித உடலும் கொண்ட நரஹரி ரூபமாய் பெருமாள் `நரசிம்ம அவதாரம்' எடுத்த தினம் நரசிம்மர் ஜெயந்தி. அன்றைய தினம் நரசிம்மரை வணங்கினால் இடையூறுகள் அனைத்தும் விலகி வாழ்வில் நன்மைகள் ஏற்படும். பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதிகம்.  

    தேவர்கள் துயர் தீர்க்க, முருகப்பெருமான் வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி தினத்தில் அவதரித்தார். எண்ணிய காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் முருகப்பெருமானை வழிபட மிகச்சிறந்த நாள் வைகாசி விசாகம்.  

    புத்த பூர்ணிமா, புத்த மதத்தவருக்கு முக்கியமான நாளாகும். புத்தர் பிறந்த தினம், அவர் போதிமரத்தினடியில் தியானமிருந்து ஞானம் பெற்றது, அவர் பரிநிர்வாணம் அடைந்தது என்று முக்கியமான மூன்று நிகழ்வுகள் நடந்தது வைகாசி பௌர்ணமியன்றுதான்.

    `நடமாடும் தெய்வம்' என்று மக்களால் போற்றப்பட்ட காஞ்சி மகா பெரியவா, வைகாசி மாத அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தார். தம்முடைய ஜீவித காலத்திலும், முக்திக்குப் பிறகும் தம் பக்தர்களுக்கு அருள்புரிந்து வரும் காஞ்சி மகானை வழிபட்டு, அவருடைய திருவருளால் அனைத்து நன்மைகளும் பெறுவோம்.

    துயரங்கள் அனைத்தையும் போக்கும் விநாயகரை வழிபடுவதற்கு மிகச்சிறந்த நாள் சங்கடஹர சதுர்த்தி தினம். அன்றைய தினம் விரதமிருந்துதான் தேவர்கள் ஞானம் பெற்றார்கள். சங்கடஹர சதுர்த்தி விரதமிருந்து தும்பிக்கையானை வழிபட்டால், சங்கடங்கள் எல்லாம் தீர்ந்து, வாழ்க்கை சந்தோஷமாக அமையும்.

    அக்னி நட்சத்திரம் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. அக்னி பகவான் காண்டவ வனத்தை எரித்துப் பசியாறிய நாள்கள் அக்னி  தோஷமுள்ளவை என்பதால், கோவில்களில் இன்று அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம் நடைபெறும். இந்த தோஷ நிவர்த்தி பூஜையின்போது இறைவனை வணங்கினால் வேண்டியது அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதிகம்.

    வைகாசி மாத தேய்பிறை ஏகாதசிக்கு வருதிந் ஏகாதசி என்று பெயர். சிவபெருமான் பிரம்மனின் தலையைக் கொய்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்கிய நாள் இன்று. இன்று விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்பது ஐதிகம்.

    முன்னோர்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்த உகந்த தினம் அமாவாசை நாள். முன்னோர்கள் நினைவாக விரதமிருந்து நீர் நிலைகளில் புனித நீராடி வழிபாடு செய்தால் முன்னோர்களின் ஆசி பெற்று வாழ்க்கை செழிப்படையும் என்பது நம்பிக்கை. குல தெய்வ வழிபாட்டுக்கும் உகந்த தினம்.

    முருகப் பெருமான் அவதரித்த வைகாசி மாதத்தில் வரும் சஷ்டி சிறப்பு மிக்கது. இன்று விரதமிருந்து முருகனை வழிபட்டால் முருகனின் அருள் பெற்று, குழந்தைப் பேறு வரமாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    திருமண வயதை கடந்தும் திருமணம் நடக்காமல் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களில் உங்களுக்கு உகந்ததை தேர்வு செய்து தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
    * துளசி கல்யாணம் செய்தால் விரைவில் திருமணமாகும்.

    * ஓர் ஏழைப் பெண்ணுக்கு எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, சக்திக்கு ஏற்ப புத்தாடை அளித்து உணவு அளித்தால் திருமணம் விரைவில் நடைபெறும்.

    * சென்னை - திருவேற்காட்டில் தேவி கருமாரி அம்மன் கோவில் உள்ளது.

    * பல்வேறு புராணச் சிறப்புகள் மிக்கது. இந்த ஆலயம் திருவேற்காடு கருமாரியம்மனை தரிசிக்கும் கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கூடி வருகிறது.

    * வேப்ப மரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரை கடலை எண்ணை நீங்கலாக பிற பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி மஞ்சள் பொடி அபிஷேகமும், பால் அபிஷேகமும் செய்து வழிபட்டு வந்தால் மனதிற்கேற்ற வாழ்க்கை துணை அமையும்.

    * காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகமூர்த்திகளை வெள்ளிக்கிழமைமற்றும்பஞ்சமி நாட்களில் அடிப்பிரதட்சணம் செய்யுங்கள். ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்யச் சரடு தானம் செய்யுங்கள். சகல திருமண தோஷமும் தீரும்.

    * தேவதோஷம், பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம், திருஷ்டி தோஷம், பிரேத சாபம், அபிஷார தோஷம் என்று ஆறு வகையான தோஷங்களால் திருமணம் தடைப்படுகிறது. கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கி விரதம் இருந்தால் இந்த 6 வகை தோஷங்களும் நீங்கி உடனே திருமணம் ஆகிவிடும்.

    * திருமணம் செவ்வாய் தோஷத்தால் தடைபடு மாயின் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை (முருகன்) வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும்.

    * வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சித்து வழிபட திருமணம் கை கூடும்.

    * புன்னை மரத்தை சுற்றி வணங்கி வந்தால் திருமணம் விரைவில் நடைபெறும்.

    * ஞாயிறு தோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை) தீபம் ஏற்றி துர்க்கையை வழிபட வேண்டும். துர்க்கையை மனம் உருக வேண்டினால் நிச்சயம் பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடி வரும்.
    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழா கடந்த 17-ந் தேதி அரசு வழிகாட்டுதலின்படி இக்கோவிலில் உள் பிரகாரத்திலேயே தொடங்கியது.
    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் வசந்த உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழா கடந்த 17-ந் தேதி அரசு வழிகாட்டுதலின்படி இக்கோவிலில் உள் பிரகாரத்திலேயே தொடங்கியது.

    இதில் மேள தாளம், பட்டாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க, கள்ளழகர் பெருமாள், தேவியர்களுடன் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து 10-வது நாள் திருவிழா நேற்று பவுர்ணமி நாளில் நடைபெற்றது. இந்த திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோவில் பணியாளர்கள் மட்டும் சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    யாக்கோபுவும் யோவானும் தாங்கள் நேசித்த தொழிலை மட்டுமல்ல, இயேசுவை குருவாக ஏற்றுக்கொள்ள தங்கள் தந்தையையும் விட்டுவிட்டுச் சென்றார்கள். இயேசு போன்ற ஒருவருடன் செல்ல அந்தத் தகப்பனும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
    இயேசு தனது சீடர்களைத் தேர்வு செய்தபோதும், தாங்கள் தேடிய ஞானகுரு இவர்தான் என சீடர்கள் இயேசுவைக் கண்டடைந்தபோதும் எப்படி உணர்ந்திருப்பார்கள்? தங்களுக்குச் சொந்தமான அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு, அவற்றைவிட உயர்வான ஒன்றைப் பெற்றுக்கொள்கிறபோது ஏற்படும் உணர்வே ஆன்மிகத்திலும் கிடைக்கிறது. பதவி, பணம், புகழ் இந்த மூன்றும் கிடைத்துவிடும்போது, அந்தஸ்து தானாகவே வந்து ஒட்டிக்கொள்கிறது. இந்த மூன்றையும்விடச் சிறந்தது ஆன்மிக வாழ்வுதான். அதைப் பெறுவதற்காக தன்னிடமுள்ள அனைத்தையும் துறக்க யாராவது முன்வருவார்களா என்று கேட்டால், அது அரிதானதே. அப்படிப்பட்ட அரிய முன்மாதிரிகளாக இருந்தார்கள் இயேசுவும் அவரது சீடர்களும். இப்படிப்பட்ட அரிதான, அருமையான குணத்தைப் பற்றி இயேசு ‘விலை உயர்ந்த ஒரு முத்து’ பற்றிய உவமை வழியாக எடுத்துக் கூறினார்.

    மத்தேயு நற்செய்தி அதிகாரம் இதை 13-ல், 45 முதல் 48 வரையிலான இறைவசனங்களைப் படிப்பதன் மூலம் இதை அறிந்துகொள்ளலாம். இயேசு தாம் தேர்ந்தெடுத்த தன் சீடர்களைப் பார்த்து, “விண்ணுலக அரசாங்கம், அருமையான முத்துக்களைத் தேடிப் பயணம் செய்கிற வியாபாரியைப் போல் இருக்கிறது. விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டுபிடித்ததும், அவன் போய், தன்னிடம் இருந்த அனைத்தையும் உடனடியாக விற்று அதை வாங்கிக்கொண்டான். அதோடு, விண்ணுலக அரசாங்கம், கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொள்கிற வலையைப் போல் இருக்கிறது. வலை நிறைந்ததும் மீனவர்கள் அதைக் கடற்கரைக்கு இழுத்துக்கொண்டுவந்து அங்கே உட்கார்ந்து நல்ல மீன்களைக் கூடைகளில் சேகரிப்பார்கள், ஆகாதவற்றையோ தூக்கியெறிவார்கள்” என்றார்.

    மீன்பிடி தொழில், நிரந்தரமான வருவாயைத் தரக்கூடியது. மழை பொய்த்துப் போகலாம். ஆனால் கடலும் அதில் உற்பத்தியாகும் மீனும் என்றுமே வற்றுவதில்லை. அப்படிப்பட்ட உயர்ந்த, உடல் உழைப்பு கொண்ட தொழிலில் ஈடுபட்டிருந்த பேதுரு, அவரது சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, அவரது சகோதரர் யோவான் ஆகியோர் அந்தத் தொழிலை விட்டுவிட்டு இயேசு அழைத்ததும் அவரைப் பின்பற்றிச் சென்றார்கள். இதை மத்தேயு நற்செய்தி அதிகாரம் 4-ல், 18 முதல் 22 வரையிலான இறை வசனங்கள் நமக்கு விளக்குகின்றன.

    “கலிலேயா கடலோரமாக இயேசு நடந்துபோனபோது, பேதுரு என்ற சீமோனையும், அவருடைய சகோதரர் அந்திரேயாவையும் பார்த்தார். அவர்கள் இரண்டு பேரும் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் மீனவர்கள். இயேசு அவர்களிடம், ‘என் பின்னால் வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிப்பவர்களாக ஆக்குவேன்’ என்று சொன்னார். அவர்கள் உடனடியாக வலைகளை விட்டுவிட்டு அவர் பின்னால் போனார்கள். அங்கிருந்து அவர் போனபோது, சகோதரர்களாக இருந்த இன்னும் இரண்டு பேரைப் பார்த்தார். அவர்கள்தான் செபெதேயுவின் மகன்களான யாக்கோபும், யோவானும். அவர்கள் தங்களுடைய அப்பாவோடு படகில் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களையும் இயேசு அழைத்தார். அவர்கள் உடனடியாகப் படகையும், தங்களுடைய அப்பாவையும் விட்டுவிட்டு அவர் பின்னால் போனார்கள்”.

    யாக்கோபுவும் யோவானும் தாங்கள் நேசித்த தொழிலை மட்டுமல்ல, இயேசுவை குருவாக ஏற்றுக்கொள்ள தங்கள் தந்தையையும் விட்டுவிட்டுச் சென்றார்கள். இயேசு போன்ற ஒருவருடன் செல்ல அந்தத் தகப்பனும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

    இயேசு தன் உவமையில் குறிப்பிட்ட அந்த வியாபாரி செய்தது முட்டாள்தனமான ஒரு காரியமாக இன்றுள்ள பல வியாபாரிகளுக்குத் தோன்றலாம். காரணம் லாப நோக்கம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ஒரு வியாபாரி, இப்படிப்பட்ட வியாபாரத்தில் ஆர்வம் செலுத்தமாட்டார். ஆனால் இயேசுவின் உவமையில் குறிப்பிடப்பட்ட வியாபாரியின் உயரிய கண்ணோட்டம் வேறு வகையானது. பொருளாதார லாபத்தை அல்ல, ஆனால் ஒப்பற்ற மதிப்பு கொண்ட ஒன்றைச் சொந்தமாக்கிக் கொள்வதில் கிடைக்கிற மகிழ்வு, நிறைவு ஆகிய உணர்வுகளையே அவர் லாபமாகக் கருதினார். அந்த லாபம் ஆன்மிக ரீதியிலானது. உங்கள் குருவை நீங்களும், குரு உங்களையும் கண்டுகொள்ளும்போது நீங்களும் அதை அடைவீர்கள்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் நம்பெருமாளுக்கு வசந்த உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான நம்பெருமாள் வசந்த உற்சவம் கடந்த 18-ந்தேதி தொடங்கி நேற்று வரை 9 நாட்கள் நடைபெற்றது.

    இதையொட்டி தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 5.45 மணிக்கு சென்றடைந்தார். வசந்த உற்சவத்தின் போது கோவிலின் நான்காம் பிரகாரமான ஆலிநாடான் திருச்சுற்றில் அழகிய தோட்டத்தில் நான்கு புறமும் அகழி போல உள்ள பள்ளத்தில் நீர் நிரப்பி அழகிய மண்டபத்தின் நடுவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் ஒய்யாரமாக வீற்றிருந்தார்.

    வசந்த உற்சவத்தின் 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் 7-ம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார்.

    நிறைவு நாளான நேற்று மாலை 4மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தங்ககுதிரை வாகனத்தில் புறப்பட்டு ஆழ்வான் திருச்சுற்று வலம்வந்து மாலை 5.30 மணிக்கு சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 6.15 மணிக்கு வசந்த மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு மாலை 6.45 மணிமுதல் இரவு 8.30 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார். வசந்த மண்டபத்திலிருந்து நம்பெருமாள் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
    விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் தொன்மை வாய்ந்த திருநின்ற நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ளத தொன்மை வாய்ந்த திருநின்ற நாராயண பெருமாள் கோவில் உள்ளது. விரும்பும் வாழ்க்கைத் துணையை அடைய விரும்புபவர்கள் திருநின்ற நாராயண பெருமாளை வேண்டி வணங்கினால் பிரார்த்தனை நிறைவேறும்.

    திருமணத் தடை உள்ளவர்கள் பெருமாளையும், தாயாரையும் தொடர்ந்து வணங்கினால் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பெருமாளுக்கு பரிவட்டம் சாற்றி வழிபடுகின்றனர். சிலர் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்தும், புளியோதரை படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    சித்ரா பௌர்ணமி, வைகாசி வசந்தோத்சவம், ஆனி பிரமோத்சவம், ஆவணி பவித்ரோத்சவம், புரட்டாசி கருட சேவை, பங்குனி திருக்கல்யாண உத்சவம் ஆகிய விழாக்கள் இக்கோவிலில் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

    தல வரலாறு...

    இந்த கோவிலில்  மூலவராக திருநின்ற நாராயண பெருமாள் வீற்றிருக்கிறார். செங்கமலத்தாயார், ஆஞ்சநேயர், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. கோவிலில் கொடிமரம் உள்ளது. பாஸ்கர தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதி ஆகியவை தல தீர்த்தங்களாக உள்ளன. ஸ்ரீரங்கம், அழகர்கோவில் போன்று இங்கும் சோமசந்திர விமானம் உள்ளது.

    திருத்தங்கல்லில் உள்ள ‘தங்காலமலை’ என்ற குன்றின் மீது திருநின்ற நாராயண பெருமாள் கோவில் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலை கட்டியவர் குறித்து விபரம் எதுவும் இல்லை.

    இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 45ம் திவ்ய தேசமாகும். 2 நிலைகளாக உள்ள இந்த கோவிலில் முதல் நிலை கோவிலில் மூலவரான ‘நின்ற நாராயணப்பெருமாள்’ நிற்கும் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இவரது திருமேனி சுதையால் ஆனது. இவருக்கு தெய்வீக வாசுதேவன், திருத்தங்காலப்பன் என திருநாமங்கள் உள்ளன. 2ம் நிலை கோவிலில் செங்கமலத்தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    பவுர்ணமி சிறப்பு பூஜையை சில கோவில்களில் ஆன்லைன் மூலம் பக்தர்கள் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் வீடுகளில் இருந்தபடியே செல்போன் மற்றும் மடிக்கணினி மூலம் தரிசனம் செய்தனர்.
    கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வழிபாட்டுதலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகள் கோவிலுக்கு சென்று பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளதால் கோவில்களில் பூஜைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் கோவையில் வைகாசி பவுர்ணமியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    காட்டூர் மணி முத்துமாரியம்மன் கோவிலில் சில கோவில்களில் ஆன்லைன் மூலம் பக்தர்கள் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் வீடுகளில் இருந்தபடியே செல்போன் மற்றும் மடிக்கணினி மூலம் தரிசனம் செய்தனர்.

    மேலும் சிறப்பு பூஜையையொட்டி அம்மன் கோவில்களில் அம்மனுக்கு பால், தேன், தயிர், பன்னீர் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரமும் நடந்தது. அதுபோன்று கொரோனா தாக்கம் குறையவும், உலக மக்களுக்கு நன்மை கிடைக்கவும் பூஜைகள் செய்யப்பட்டன.
    பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டியில் மாரியம்மன் கோவிலில் வைகாசி பவுர்ணமியையொட்டி மாரியம்மனுக்கு பன்னிருவகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.
    பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த நிலையில் வைகாசி பவுர்ணமியையொட்டி மாரியம்மனுக்கு பன்னிருவகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.

    பின்னர் கொரோனா தொற்று முற்றிலும் நீங்கி உலகமக்கள் நன்மையடைய வேண்டும் என்று அம்மனுக்கு கொரோனா தேவி முகபாவத்துடன் கைகளில் மூலிகை தீர்த்தம் அடங்கிய குடம், வேப்பிலை கொத்து ஆகியவற்றுடன் மலர்களால் ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை செய்யப்பட்டது.

    இந்த பூஜைகளில் பக்தர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் பக்தர்கள் கோவிலின் நுழை வாயிலுக்கு முன்பு கற்பூரம் ஏற்றி அம்மனை வழிபட்டு சென்றனர்.
    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆதிகேசவ பெருமாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி ஆதிகேசவ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலித்தார்.
    திருச்செங்கோட்டில்  ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். விழாவை முன்னிட்டு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள்,  ஸ்ரீ செங்கோட்டுவேலவர் ஆகிய தெய்வங்களுக்கு பல்வேறு சமூகத்தவர் சார்பில் சிறப்பு அபிஷேகம், பூஜை மற்றும் வழிபாடு நடக்கும்.

    ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக மிகவும் எளிமையான முறையில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஆதிகேசவ பெருமாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி ஆதிகேசவ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
    உங்கள் வாழ்வில், நீங்கள் எதிர்பார்க்காத உன்னதங்களையெல்லாம் நடத்தித் தந்தருள்வார் மகான் ராகவேந்திரர். ஸ்ரீராகவேந்திரரை மனதால் நினைத்தாலே போதும்... நம்மையும் நம் சந்ததியும் செழிக்கச் செய்து அருளுவார்.
    மகான் படத்திற்கு தீப, தூபம் காட்டி தேங்காய் உடைத்தபின் கற்பூர ஆரத்தி எடுத்தும் கையில் துளசி தளங்களை வைத்துக் கொண்டு எழுந்து நின்று

    பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய
    சத்ய தர்ம ரதாயச
    பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம்
    ஸ்ரீ காம தேநுவே

    என்று சொல்லிக்கொண்டே படத்தையும் விளக்கையும் பதினோரு தடவைகள் வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறையும் சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.
    கடந்த சில மாதங்களாக கோவில்களில் அர்ச்சகர்கள் மட்டுமே உள்ளே சென்று பூஜைகள் செய்து வருகின்றனர். பக்தர்கள் கோவில்களுக்கு செல்ல முடியாமல், கோபுரங்களை பார்த்து தரிசனம் செய்து வருகிறார்கள்.
    வைகாசி மாதம் பவுர்ணமி தினமான வைகாசி விசாகம் அன்று தமிழ்க்கடவுள் முருகன் அவதரித்தார். இதையொட்டி ஆண்டுதோறும் வைகாசி விசாகம் அன்று முருகன் கோவில்களில் விழாக்கள் மற்றும் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெறும்.

    இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக கோவில்களில் அர்ச்சகர்கள் மட்டுமே உள்ளே சென்று பூஜைகள் செய்து வருகின்றனர். பக்தர்கள் கோவில்களுக்கு செல்ல முடியாமல், கோபுரங்களை பார்த்து தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தினர். ஆனால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    இதையொட்டி கோவில்கள் முன்பு நின்று பக்தர்கள் வழிபட்டனர். சந்திப்பு சாலைக்குமார சுவாமி கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில், பாளையங்கோட்டை மேலவாசல் முருகன் கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் பக்தர்கள் வழிபட்டனர்.
    ×