search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வசந்த உற்சவத்தையொட்டி ஆண்டாள், ரெங்கமன்னாருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய காட்சி.
    X
    வசந்த உற்சவத்தையொட்டி ஆண்டாள், ரெங்கமன்னாருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய காட்சி.

    வசந்த உற்சவம்: சிறப்பு அலங்காரத்தில் ரெங்கமன்னாருடன் காட்சி தந்த ஆண்டாள்

    வருடம் தோறும் திருவேங்கடமுடையான் சன்னதியில் நடக்கும் இந்த வசந்த உற்சவம், தற்போது ஊரடங்கு காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகத்திற்குள்ளேயே நடக்கிறது.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் வசந்த உற்சவம் சிறப்பாக நடைபெறும். ஆனால் இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களின்றி துவங்கியது.

    வருடம் தோறும் திருவேங்கடமுடையான் சன்னதியில் நடக்கும் இந்த வசந்த உற்சவம், தற்போது ஊரடங்கு காரணமாக ஆண்டாள் கோயில் வளாகத்திற்குள்ளேயே நடக்கிறது. இதனை முன்னிட்டு வெள்ளிக்குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சந்தன காப்பு மற்றும் வெண்பட்டு சாற்றபட்டு, மலர்சட்டை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்ற வசந்த உற்சவத்தையொட்டி ஆண்டாள், ரெங்கமன்னாருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளித்தனர்.

    கோயில் பட்டர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் செய்திருந்தனர். 10 நாட்கள் நடக்கும் வசந்த உற்சவம் மே 26 அன்று நிறைவடைகிறது.
    Next Story
    ×