என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
மேற்கண்ட 3 நாட்களுக்கு மூலவர் மற்றும் உற்சவர் கோவிந்தராஜசாமிக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது. அதன் பிறகு மகாசாந்தி ஹோமம், மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் உள் பிரகாரத்தில் வலம் வருகிறார்கள்.
மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரலாறு
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு முதல் வேம்பார் வரை வாழ்ந்து வந்த பரதவ மக்கள் கீழக்கரைவரை மீன்பிடித்தல், முத்துக் குளித்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுவந்தனர். இப்பகுதியில் இவர்களுக்கும் மூர் இன முசுலீம்களுக்கும் தொழில் பேட்டி இருந்துவந்த நிலையில் இது மோதலாக உருவெடுத்தது. இதனால் பரதவ மக்கள் கோவாவில் இருந்த போர்ச்சுகீசியர்களிடம் ஆயுத உதவியைக் கேட்டனர். அதற்கு அவர்கள் தாங்கள் நேரடியாக உதவ இயலாது என்றும், வேண்டுமானால் கிறித்தவர்களாக மாறினால் உதவத் தயார் என்றனர். இதையடுத்து 1529 ஆம் ஆண்டு 40,000 பரதவர்கள் பெர்ணாண்டோ கிறித்தவர்களாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த மக்களில் ஒரு பகுதியினர் மூக்கையூரில் வாழ்ந்து வந்த நிலையில், இந்த மக்களுக்காக 1715இல் புனித சந்தியாகப்பர் தேவாலயம் கட்டப்பட்டது.
ஆனால் கொரோனா தாக்கத்தின் 2-ம் அலை தீவிரம் காரணமாக சபரிமலை கோவிலில் 2 மாதங்களாக பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. அதே சமயத்தில் பக்தர்கள் இன்றி பூஜை மட்டும் நடந்து வந்தது.
இந்த நிலையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை 16-ம் தேதி திறக்கப்பட்டது. அன்றைய தினம் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. நேற்று அதிகாலை முதல் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் நடை திறப்பதற்கு முன்னதாகவே ஐயப்ப பக்தர்கள் திரண்டனர்.
அதிகாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார்.
அப்போது சன்னிதானத்தில் கூடி இருந்த திரளான பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என சரண கோஷம் எழுப்பினர். தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் நெய்யபிஷேகம், உஷபூஜை, களபாபிஷேகம் நடந்தது.
இவற்றை தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன், உதயாஸ்தமன பூஜை, கலச பூஜையும் நடத்தப்பட்டது. உச்ச பூஜைக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. மீண்டும் கோவில் நடை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 6 மணிக்கு சிறப்பு தீபாராதனை, தொடர்ந்து அபிஷேகம், படிபூஜை நடந்தது. பின்னர் இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது.
கொரோனா கட்டுப்பாடுகளுடன் 5 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கர்நாடக ஆதிதிராவிடர் நலத்துறை மந்திரி ஸ்ரீராமுலு சபரிமலையில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியார்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தங்ககவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இவர்கள் அனைவரும் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதைப் போலவே முருகப் பெருமானின் ஆறாவது படை வீடு சோலைமலை முருகன் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும், விநாயகர், ஆதிவேல்சன்னதியிலும் விசேஷ பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. இங்கும் பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.
பைரவர்விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அதிலும் செவ்வாய்க் கிழமையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகின்றது. பைரவர் விரதம் தொடர்ச்சியாக 21 அஷ்டமி திதிகளில் கடைப்பிடிப்பது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகின்றது.
1. தலை குனியா வாழ்க்கை.
2. சுப மங்களம் ஊர்ஜிதம்.
3. தீயவினைகள் முற்றிலும் அழிவு.
4. பிறவியின் பலனை முழுவதுமாக உணர்தல்.
5. தடையில்லாமல் சவுகரியம் ஏற்படுதல்.
6. கர்வம் இல்லாமல் சமயோஜித பாக்கியம்.
7. கிரகன தோஷங்களின் பாதிப்பு விலகுதல்.
8. வாழ்ந்த ஜனனங்களின் பிறவியை புனிதப்படுத்துதல்.
9. இறைவனை எளிதாக உணர்தல்.
10. உலக உயிரினங்களின் காவல் தெய்வம் என்பதை உலகுக்கு உணர்த்தி விடுதல்.
அதேபோல் திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் நேற்று மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை ஆனி வார ஆஸ்தானம் நடந்தது. அதையொட்டி கோதண்டராமர், சீதா, லட்சுமணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உள்ளே வலம் வந்தனர். நிகழ்ச்சியில் கோவில் சிறப்பு நிலை துணை அதிகாரி பார்வதி, கண்காணிப்பாளர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
புஷ்ப பல்லக்கு 6 வகையான பாரம்பரிய மலர்கள், 6 வகையான கொய் மலர்கள் (கட் பிளவர்கள்) என ஒரு டன் மலர்களால் ஹம்ச உருவத்தில் வடிவமைக்கப்பட்டதாகும். புஷ்ப பல்லக்கின் முன்பக்கம் ராமர், கிருஷ்ணர் உருவமும், மைய பகுதியில் சென்னகிருஷ்ணா, பின் பக்கம் பாலஆஞ்சநேயர் ஆகியோர் பொருத்தப்பட்டனர். புஷ்ப பல்லக்ைக 15 அலங்கார வடிவமைப்பாளர்கள் 3 நாட்களாக உருவாக்கினர்.
புஷ்ப பல்லக்கு வீதிஉலாவை தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, உதவி அதிகாரி ரமேஷ்பாபு, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சீனிவாஸ், சுகாதாரத்துறை அலுவலர் டாக்டர் சுனில், பேஷ்கர் ஸ்ரீஹரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற அவள் பூமிக்கு வந்தாள். தாயைக் காணாத இந்திரன், அவள் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து, இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டான். அவள் தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில், இந்த கோவிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திரலோகம் இழுத்து செல்ல முயற்சித்தான். கோவிலை இழுத்ததுமே பார்வதி குயில் போல இனிமையாக கூவினாள். (எனவே தான் அம்மனுக்கு “குயிலினும் இனிமொழியம்மை’ என்ற திருநாமம் ஏற்பட்டது) உடனே சிவன் தோன்றி, இந்திரா! இந்த கோவிலை தேவலோகம் கொண்டு சென்று வழிபடவேண்டும் என்று நினைக்காமல், இங்கு வந்து வழிபட்டு நலமடைவாயாக, என அருள்புரிந்தார்.
இத்தலத்திற்கு தமிழில் திருச்சாய்க்காடு என்று பெயர். ‘சாய்” என்றால் கோரை என்று பொருள். பசுமையான கோரைகள் மிகுந்திருந்த தலமாதலால் இத்தலம் ‘சாய்க்காடு” எனப்பட்டது. சோழ மன்னன் கோச்செங்கட் சோழனால் கட்டப்பெற்ற மாடக்கோவில்களுள் இத்தலத்தில் உள்ள சாயாவனேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். மாடக்கோவில் என்றால் ‘யானையால் புக முடியாத கோவில்” என்பதாகும். இல்லை என்று சொல்லாத இயற்பகை நாயனார் பிறந்து, முக்தி அடைந்த தலம். இங்குத் தனியே வைக்கப்பட்டுள்ள வில்லேந்திய வேலவர் பஞ்சலோகத் திருமேனி மிகச்சிறப்புடையதும், தொழுது நிறைவு பெறத்தக்கதுமாகும்.
நான்கு கரங்களுடன் வில்லையேந்திக் கம்பீரமாக வேலவரும், உயர்ந்த மயிலும் திகழ்ந்து காண்போர் கண்களுக்குப் பெரு விருந்தாகின்றன. இவை நெடுங்காலம் முன்பு கடலில் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த கோவிலுக்கு அருகில் பூம்புகார் காவல் தெய்வமாகிய சம்பங்கி அம்மன் கோவில் உள்ளது.
சித்திரை பௌர்ணமியில் தொடங்கி இந்திர விழா 21 நாட்கள் நடைபெறுகிறது. ஆடி அமாவாசையில் அன்னமளிப்பு விழா, சித்திரை, வைகாசி மாதங்களில் இயற்பகை நாயனார் பெயரில் தண்ணீர்ப்பந்தல், மார்கழியில் இயற்பகை நாயனாருக்கு 5 நாள் விழா, அதில் நான்காம் நாள் அவருக்கு இறைவன் காட்சி கொடுக்கும் ஐதீகம் ஆகிய விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. எதிரி பயம் இருப்பவர்கள் வில்லேந்திய வேலவரை வழிபட்டு நலம் பெறலாம். வேண்டுதல் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்தும், புத்தாடை அணிவித்தும், சிறப்பு பூஜைகள் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
இந்த ஆண்டுக்கான ஆடி முளைக்கொட்டு திருவிழா 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 22-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
விழாவின் முதல் நாளில் உற்சவர் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் எழுந்தருளினார். அங்கு திருவிழாவுக்கு காப்பு கட்டிய ரவி பட்டரால் விநாயகர் பூஜை, கும்ப பூஜையுடன் யாகம் வளர்க்கப்பட்டது.
விழா நாட்களில் மீனாட்சி அம்மன் காலை, இரவு நேரங்களில் ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
2-ம் நாளான 13-ம் தேதி அன்ன வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
3-ம் நாளான 14-ம்தேதி காமதேனு வாகனத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும். சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
4-ம் நாளான 15-ம்தேதி யானை வாகனத்தில் அருள்பாலித்தார்..
5-ம் நாளான நேற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
6-வது நாளான இன்று கிளி, 7-வது நாள் மாலை மாற்றுதல், 8-ம் நாள் குதிரை, 9-ம் நாள் இந்திர விமானம், 10-ம் நாள் கனகதண்டியல் வாகனத்தில் அம்மன் எழுந்தருள்கிறார்.
ஆடி மாதத்தின் முதல் நாளில் சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களில் சில கிராமப்பகுதிகளில் தேங்காய் சுடும் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகை கொண்டாடப்படும் நிகழ்ச்சி மகாபாரதக் கதையுடன் தொடர்புடையதாக சொல்லப்படுகிறது.
அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1-ந் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று ஆடி18-ந் நாளன்று முடிவுக்கு வந்தது. இந்த போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி முதல்நாளில் மக்கள் அனைவரும் வேண்டி அதற்காக விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்கிறார்கள். இந்த பூஜையின்போது படைக்கும் வகையில் இதுபோல் தேங்காய் சுட்டு அதனை பிரசாதமாக படைத்து வழிபட்டதாக ஒரு ஐதீகம் உள்ளது.
இந்த பண்டிகையின்போது புதிய தேங்காயை எடுத்து அதன் மேல் உள்ள நார்களை அகற்றிவிட்டு ஓடு மெலிதாகும் அளவுக்கு அதை தரையில் தேய்ப்பார்கள். அதன் ஒரு கண்ணில் துளையிட்டு உள்ளே இருந்த தேங்காய் தண்ணீரை வெளியேற்றி, துளையின் வழியாக பச்சரிசி, பாசி பருப்பு, நாட்டு சர்க்கரை, அவல், எள், ஏலக்காய் கலந்த கலவையை இடுவார்கள்.
பின்பு முனை கூராக சீவப்பட்ட நீண்ட அழிஞ்சி மரக்குச்சியில் தேங்காயை செருகி, குச்சி, தேங்காய் மீது மஞ்சளை பூசி தீயிலிட்டு சுடுவார்கள்.குச்சிகளுக்கும் மஞ்சள் அலங்காரம் உண்டு. கிராமங்களில் பொதுவாக அழிஞ்சில் குச்சிகள் இதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
தேங்காய் நன்றாக வெந்த பின்னர் டப் என்று வெடிக்கும். பின்பு சுடப்பட்ட தேங்காய்யை குச்சியுடன் எடுத்து சென்று விநாயகருக்கு முன்பு நிறுத்தி, உலகில் நன்மைகள் செழித்தோங்கவும், தீமைகள் அழிந்திட வேண்டும் எனவும் பொதுமக்கள் வழிபாடு நடத்துவார்கள்.
ஓடுகளை அகற்றி விட்டு அந்த தேங்காயை சரி சமமாக இரண்டாக உடைத்து வணங்கி பிரசாதமாக சாப்பிடுவார்கள். ஆடி மாதத்தின் முதல்நாளில் இன்றைக்கும் பாரம்பரியமாக தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சுட்ட தேங்காய்க்குள் உள்ள எள்ளு, பாசிப்பயறு, நாட்டுவெல்லம், அவல், பொட்டுக்கடலையுடன் தேங்காயின் சுவையும் இணைந்து அலாதியான ருசியைத் தரும்.
இந்த தேங்காய் உணவு வயிற்றுப் புண்களை ஆற்றும். புரதக்கூறுகள் நிறைந்த இந்த உணவு, உடலுக்கு வலிமை அளிக்கும். தேங்காய் சுடுவதற்குப் பயன்படும் அழிஞ்சில் குச்சியும் மருத்துவக் குணம் நிறைந்தது. சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டது.
பண்டிகை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஜாதி, மத, பேதம் இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் தேங்காய் சுட்டு மகிழ்ந்தனர். நெருப்பில் சுட்ட பின்பு அருகில் உள்ள விநாயகர் கோயில் படைத்து குடும்பத்தினர் ஒன்றுகூடி மிகுந்த மகிழ்ச்சியுடன் நெருப்பில் சுட்ட தேங்காயை அதனுள் இருக்கும் பூரணமும் உண்டு மகிழ்ந்தனர்.
திருச்செங்கோட்டில் ஆடி பிறப்பை முன்னிட்டு இன்று பக்தர்கள் தேங்காய் சுட்டு வழிபாடு நடத்தினார்கள். முன்னதாக தேங்காய் சுடுவதற்காக அழிஞ்சி குச்சிகள், பூரணம் எனப்படும் பச்சரிசி, பாசி பருப்பு, நாட்டு சர்க்கரை, அவல், எள், ஏலக்காய் கலந்த கலவைவைகள் விற்பனைமும்முரமாக நடைபெற்றது. நேற்றே இவற்றை பக்தர்கள் வாங்கி அதிகாலையில் தேங்காய் சுட்டனர். சிலர் இன்று காலையில் இவற்றை வாங்கி தேங்காய் சுட்டு வழிபாடு நடத்தினார்கள்.






