என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் ஐப்பசி திருவிழாவில் நேற்று ஆராட்டு விழா நடந்தது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், சாமி பவனி வருதல், கதகளி போன்றவை நடந்தன.
    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், சாமி பவனி வருதல், கதகளி போன்றவை நடந்தன.

    விழாவில் நேற்று முன்தினம் சாமி தளியல் வேட்டை சிவன் கோவிலுக்கு வேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, பக்தர்கள் வழி நெடுக நின்று வரவேற்பு அளித்தனர்.

    விழாவின் இறுதி நாளான நேற்று காலை பெருமாள் வேட்டைக்கு சென்ற நிகழ்வை புனிதப்படுத்தும் திருவிலக்கம் எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீ பூதபலி நடைபெற்றது. இரவு ஆதிகேசவப்பெருமாளும், ஸ்ரீகிருஷ்ணசாமியும் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் ஆராட்டுக்காக எழுந்தருளினர். அப்போது கோவில் பிரகாரத்தை 2 முறை வலம் வந்தனர்.

    சாமி மேற்கு நடை வழியாக வந்தபோது போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். பின்னர் திருவிதாங்கூர் மன்னரின் பிரதிநிதி வாள் ஏந்தி முன்செல்ல கோவிலில் இருந்து தளியல் நோக்கி சாமி பவனி நடந்தது. அப்போது, பக்தர்கள் வரவேற்பு கொடுத்தனர். தளியல் பரளியாற்றில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் ஆராட்டு நடைபெற்றது.

    ஆராட்டுக்கு பின்னர் சாமி கோவிலுக்கு வந்த பின்னர் கொடி இறக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவட்டார் போலீசார் செய்திருந்தனர்.
    குருவித்துறை குரு பகவான் கோவில் குருப்பெயர்ச்சி விழாவில் 13-ந்தேதி மற்றும் 14-ந்தேதி ஆகிய 2 நாட்கள் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    சோழவந்தான் அருகே குருவித்துறை குரு பகவான் குரு பெயர்ச்சி விழா நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு் பாஸ்கரன் உத்தரவின்பேரில் சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தர் ஆலோசனையின் பேரில் குருப்பெயர்ச்சி விழாவில் 13-ந்தேதி மற்றும் 14-ந்தேதி ஆகிய 2 நாட்கள் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதனை சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன், காடுபட்டி சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் காவல்துறை சார்பாக அறிவித்துள்ளனர்.
    குழந்தை வரம் மற்றும் கருவில் இருக்கும் குழந்தையை காக்கும் கடவுளாக விளங்கும் கர்ப்பரட்சாம்பிகை அன்னையின் 108 போற்றிகள் இந்த பதிவில் உள்ளது.
    1. ஓம் கருகாக்கும் நாயகியே போற்றி
    2. ஓம் கர்ப்ப ரக்ஷாம்பிகையே போற்றி
    3. ஓம் கருகாவூர் தேவியே போற்றி
    4. ஓம் கஷ்டங்கள் தீர்ப்பாய் போற்றி
    5. ஓம் ஈஸ்வரனின் இதயக்கனியே போற்றி
    6. ஓம் கருகாவூர் எந்தையின் கண்மணியே போற்றி
    7. ஓம் முல்லைவனநாதரின் சுந்தரியே போற்றி
    8. ஓம் மூவுலகும் காக்கும் அன்னையே போற்றி
    9. ஓம் மைந்தன் வேண்ட வரம் தருவாய் போற்றி
    10. ஓம் மாதர் மனம் மகிழ்ச் செய்வாய் போற்றி
    11. ஓம் எங்கும் தீராத குறை தீர்ப்பவளே போற்றி
    12. ஓம் எங்களை என்றும் காப்பவளே போற்றி
    13. ஓம் பிள்ளைக் கலி தீர்க்கும்பேரொளியே போற்றி
    14. ஓம் பிறவிப் பயன் தந்து அருள்வாய் போற்றி
    15. ஓம் பிண்டமாய் இருக்கும் கருவளர்ப்பாய் போற்றி

    16. ஓம் பிரம்மனின் படைப்புக்கு உயிர் தருவாய் போற்றி
    17. ஓம் முல்லைவனத்தில் அரசாள்வாய் போற்றி
    18. ஓம் நித்திருவர் தொழுத நித்திலமே போற்றி
    19. ஓம் நற்றவத்திற்கு அருளும் நாயகியே போற்றி
    20. ஓம் நாடிவரும் பக்தர் துயர்களைவாய் போற்றி
    21. ஓம் சர்வ வல்லமை பெற்ற ஈஸ்வரியே போற்றி
    22. ஓம் சர்வேஸ்வரனின் சரிபாதியே போற்றி
    23. ஓம் சங்கடங்கள் தீர்க்கும் சங்கரியே போற்றி
    24. ஓம் சார்ந்து நிற்போரை ரஷிப்பாய் போற்றி
    25. ஓம் பெண்கள் கருவறையை காப்பவளே போற்றி
    26. ஓம் பிரியமுடன் எங்களை வாழ்த்துவாய் போற்றி
    27. ஓம் பாதியில் கலையாத கரு தந்தாய் போற்றி
    28. ஓம் பாரினில் மகிழ்வான் வாழ்வளிப்பாய் போற்றி
    29. ஓம் நெய்யாலே படிமெழுக நீ மகிழ்வாய் போற்றி
    30. ஓம் மெய்யான பக்திக்கு உருகிடுவாய் போற்றி

    31. ஓம் தூய்மையுடன் வணங்குவோர் துயர்துடைப்பாய் போற்றி
    32. ஓம் வாய்மையுடன் வரம் தந்து வளம் தருவாய் போற்றி
    33. ஓம் வேதிகைக்கு அருள் சுரந்த அன்னையே போற்றி
    34. ஓம் வேண்டுபவர் அருகினில் வந்திடுவாய் போற்றி
    35. ஓம் வனிதையரின் வாழ்விற்கு வரமாளாய் போற்றி
    36. ஓம் வாழ்நாளில் வழிகாட்டும் வடிவழகே போற்றி
    37. ஓம் கலைந்த கர்ப்பம் உருவாக்கி உயிர் கொடுத்தாய் போற்றி
    38. ஓம் காமதேனு அழைத்து தாய்ப்பால் தந்தாய் போற்றி
    39. ஓம் தம்பதியாய் வருவோர்க்கு தஞ்சமளிப்பாய் போற்றி
    40. ஓம் தாயே உன் அருள் என்றும் தர வேண்டும் போற்றி
    41. ஓம் வலக்கரத்தால் அபயமளிக்கும் வனிதாமணியே போற்றி
    42. ஓம் இடக்கரத்தால் கர்ப்பத்தைக் காத்து நிற்ப்பாய் போற்றி
    43. ஓம் பத்ம பீடத்தில் அமர்ந்திருக்கும் பார்வதியே போற்றி
    44. ஓம் பிரசவத்தில் துணையிருக்கும் பெரிய நாயகியே போற்றி
    45. ஓம் கருகாமல் கருகாக்கும் கண்மணியே போற்றி

    46. ஓம் கர்ப்புரியில் வசிக்கும் கற்பகமே போற்றி
    47. ஓம் அகில உலகம் காக்கும் லோகநாயகியே போற்றி
    48. ஓம் அன்னை என்ற அருள் தந்து துயர்தீர்ப்பாய் போற்றி
    49. ஓம் மாதவிவநேச்வரரின் மாதரசியே போற்றி
    50. ஓம் முல்லைக் கொடி இடையே வந்த மெல்லியனே போற்றி
    51. ஓம் ஈஸ்வரனின் இதயத்தில் வீற்றிருப்பாய் போற்றி
    52. ஓம் ஈரேழு லோகத்தையும் என்றும் காப்பாய் போற்றி
    53. ஓம் கடம்பவன சுந்தரியே கற்புக்கரசியே போற்றி
    54. ஓம் காலம் பூராவும் கர்ப்பை காப்பவளே போற்றி
    55. ஓம் கல்லாக நின்று கருணைபொழிவாய் போற்றி
    56. ஓம் கதிரொளியே கனகமே கண்மணியே போற்றி
    57. ஓம் மலடி என்ற பெயர் நீக்கும் மங்களமே போற்றி
    58. ஓம் மங்கையர்க்கு அருகிலிருக்கும் மந்திரமே போற்றி
    59. ஓம் மருத்துவர்க்கும் சக்தி தரும் மாதவியே போற்றி
    60. ஓம் மறுமையிலும் உடனிருந்தும் மகிழ்விப்பாய் போற்றி

    61. ஓம் அசையும் கருவை அலுங்காமல் காப்பாய் போற்றி
    62. ஓம் அகிலத்தின் இயக்கத்தில் ஆனந்திப்பாய் போற்றி
    63. ஓம் அம்மா என்றுன்னை ஆராதிப்பேன் போற்றி
    64. ஓம் அம்மாவாய் என்னை ஆக்கினாய் போற்றி
    65. ஓம் மகேஸ்வரி உலகையே ஆள்கிறாய் போற்றி
    66. ஓம் மங்கலங்கள் பல தரும் மாதாவே போற்றி
    67. ஓம் ஸ்ரீ சக்ர வாசினி ஸ்திரீ தனமே போற்றி
    68. ஓம் சத்ரு பயம் நீங்க சரண்டைந்தேன் போற்றி
    69. ஓம் பிள்ளையில்லா தவிப்புக்கு பிரசாதமளிப்பாய் போற்றி
    70. ஓம் பிரபஞ்சத்தில் பெண்களை காப்பவளே போற்றி
    71. ஓம் பகவானின் ப்ரீதியே பரதேவதையே போற்றி
    72. ஓம் லிரத்யனாமாய் என்னுடன் இருப்பவளே போற்றி
    73. ஓம் உற்சாகமாய் தோன்றும் கர்ப்பம் காப்பாய் போற்றி
    74. ஓம் ஓழுங்காய் என் பிள்ளை பிறக்கச் செய்வாய் போற்றி
    75. ஓம் உன்னையன்றி யாருமில்லை சரணடைந்தேன் போற்றி

    76. ஓம் ஊரார் மெச்ச நான் வாழ வாழ்த்துவாய் போற்றி
    77. ஓம் காந்த கண்ணழகி முத்துப்போல் பல்லழகியே போற்றி
    78. ஓம் மின்னும் மூக்கழகி புன் முறுவற் சிரிப்பழகி போற்றி
    79. ஓம் சொர்ணமும், வைரமும் மின்ன ஜொலிக்கும் அழகியே போற்றி
    80. ஓம் ஒய்யார வடிவழகி அருள் மணக்கும் பேரழகியே போற்றி
    81. ஓம் துக்கங்கள் தீர்க்கும் துணையே போற்றி
    82. ஓம் துன்பமில்லாத வாழ்வருளும் தேவியே போற்றி
    83. ஓம் சங்கடம் தீர்க்கும் சங்கரியே போற்றி
    84. ஓம் சலனமில்லா வாழ்வருளும் சாம்பவியே போற்றி
    85. ஓம் மழலைச் செல்வம் தர மனமிரங்குவாய் போற்றி
    86. ஓம் மாதர்க்கு நீ என்றும் அரணாவாய் போற்றி
    87. ஓம் கதியென்று நம்பினவருக்கு கருணைசெய்வாய் போற்றி
    88. ஓம் கண்டவுடன் கஷ்டம் தீர்க்கும் கெளரியே போற்றி
    89. ஓம் நெஞ்சிற் கவலைகள் நீக்குவாய் போற்றி
    90. ஓம் செஞ்சுடர் குங்குமம் தரித்தாய் போற்றி

    91. ஓம் அஞ்சுமென் மனத்துக்கு ஆறுதலே போற்றி
    92. ஓம் தஞ்சம் நீயே தாமரையே போற்றி
    93. ஓம் சக்தியின் வடிவமே போற்றி
    94. ஓம் பக்தியுடன் தொழுவோரின் பரதேவி போற்றி
    95. ஓம் நித்தமுன் அருள்வேண்டி நமஸ்கரித்தேன் போற்றி
    96. ஓம் நீயிருக்க பூவுலகில் பயமில்லை போற்றி
    97. ஓம் மனமெல்லாம் நீ நிறைந்தாய் மகேஸ்வரி போற்றி
    98. ஓம் மங்கள வாழ்வுதந்து மகிழ்விப்பாய் போற்றி
    99. ஓம் மங்கையரின் கர்ப்பை காக்கின்றாய் போற்றி
    100. ஓம் கருகாவூர் அரசியே கருணாரசமே போற்றி
    101. ஓம் தலைமுறை தழைக்கச் செய்யும் தாயே போற்றி
    102. ஓம் குலம் வாழ மகருளும் மாதே போற்றி
    103. ஓம் சகலரும் உன் சக்தி சார்ந்தோம் போற்றி
    104. ஓம் சோர்வு நீங்க உன் பாதம் சரணடைந்தோம் போற்றி
    105. ஓம் ஜயம் வேண்டும் ஜயம் வேண்டும் போற்றி
    106. ஓம் ஜகத்தினில் எங்கள் சக்தி ஓங்க வேண்டும் போற்றி
    107. ஓம் ஜீவனை ஜனிக்க வைக்கும் ஜகன்மாதா போற்றி
    108. ஓம் ஜயமங்களம் ஜயமங்களம் ஜனனியே போற்றி…
    இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சி விழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா நாளை நடக்கிறது.
    குருபகவான் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சி விழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. நாளை மதியம் 2.48 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா நாளை நடக்கிறது.

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் நாளை அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு தீபாராதனை நடைபெறும். மாலை 4.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து பக்தர்கள் தங்களது பரிகாரங்களை நிவர்த்தி செய்யும் வகையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை, வெள்ளை அரளி மாலை, மஞ்சள் துண்டு, முல்லைப்பூ மாலை, மற்றும் தங்களது ராசி பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்துகொள்வார்கள். மேலும் பரிகார பூஜைகளும் செய்வார்கள்.

    இதைப்போல் சுசீந்திரம் தாளகுளம் பிள்ளையார் கோவில், களியல் மகாதேவர் கோவில், நாகர்கோவில் வடசேரி சோழராஜா கோவில், காசி விஸ்வநாதர் கோவில், பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில், தெரிசனங்கோப்பு ராகவேஸ்வர் கோவில், கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில், தாழக்குடி ஜெயந்தீஸ்வரர் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், களியங்காடு சிவன் கோவில், ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் குமரி மாவட்டத்தில் குருபகவான் சன்னதிகள் உள்ள கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா மற்றும் சிறப்பு வழிபாடுகள் நாளை நடக்கிறது.
    ரெங்கநாச்சியார் தங்ககிரீடம், வைரத்தோடு, வைர அபயஹஸ்தம், காசு மாலை, நெல்லிக்காய் மாலை, முத்துச்சரம், அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்களை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நிகழ்வு டோலோத்ஸவம் என்றும் அழைக்கப்படுகிறது. ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 12-ந் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்க நாச்சியார் ஊஞ்சல் உற்சவசம் நடைபெற்று வருகிறது. 2-ம் நாளான 7-ம்தேதி உற்சவர் ரெங்கநாச்சியார் முத்துசாய் கிரீடம், வைரத்தோடு, ரத்தின அபயஹஸ்தம், காசுமாலை, முத்துச்சரம், பவளமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.

    3-ம் நாளான 8-ம்தேதி உற்சவர் ரெங்கநாச்சியார் தங்க கிரீடம், வைரத்தோடு, வைர அபயஹஸ்தம், காசுமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.

    4-ம் நாளான 9-ம்தேதி உற்சவர் ரெங்கநாச்சியார் ரத்தினகிரீடம், வைரத்தோடு, வைர அபயஹஸ்தம், காசுமாலை, பெரிய பவள மாலை, முத்துச்சரம், அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.

    6-ம் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் தங்ககிரீடம், வைரத்தோடு, வைர அபயஹஸ்தம், காசு மாலை, நெல்லிக்காய் மாலை, முத்துச்சரம், அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்களை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

    ஊஞ்சல் உற்சவ நாட்களில் காலை 6.30 மணிமுதல் காலை 7.30 மணிவரை, காலை 9 மணிமுதல் நண்பகல் 12.30 மணிவரை, மாலை 5.30 மணிமுதல் இரவு 8.30 மணிவரை மூலவர் சேவை உண்டு. மாலை 3 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 2 நாட்களுக்கு பிறகு சாமி தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி வழிபட்டனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கடந்த 9-ந் தேதி மாலையில் கோவில் கடற்கரை நுழைவு பகுதியில் நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கோவில் உள் பிரகாரத்தில் உள்ள 108 மகா தேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்கபெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடந்தது.

    கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த 2 நாட்களும் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் அன்றைய தினங்களில் கோவில் வளாகம் மற்றும் நகரப்பகுதியில் ஆங்காங்கே போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதி பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    2 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் கோவிலில் பக்தர்கள் வழக்கம்போல் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் நேற்று கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

    அவர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    இந்தக் கோவிலில் தரிசனம் செய்தால் நிலம், வீடு உள்ளிட்ட சொத்து பிரச்சினைகள் தீரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.
    தஞ்சை கீழவாசல் குறிச்சி தெருவில் உள்ளது, பாலதண்டாயுதபாணி கோவில். இங்கு வள்ளி- தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கருவறைக்கு முன்பாக விநாயகரும், எதிரில் மயிலும், பலிபீடமும் காணப்படுகிறது.

    இந்த கோவில் கட்டப்பட்டு 150 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இங்கு முதலில் வேல் மட்டும் வைத்து வழிபட்டு வந்துள்ளனர். பிற்காலத்தில்தான் வள்ளி - தெய்வானையுடன் கூடிய சிலை பிரதிஷ்டை செய்துள்ளனர். முருகப்பெருமானின் கலியுக அவதாரமான திருஞானசம்பந்தருக்கும் இங்கு தனி சன்னிதி உள்ளது. தவிர விநாயகர், விசாலாட்சி, பைரவர், பஞ்சமுக ஆஞ்சநேயர், துர்க்கை, நவக்கிரக தலங்கள் உள்ளிட்ட சன்னிதிகள் உள்ளன.

    இங்கு முருகனுக்கு நடைபெறும் கந்தசஷ்டி உள்பட அனைத்து விழாக்களும் விமரிசையாக நடைபெறும். இந்தக் கோவிலில் தரிசனம் செய்தால் நிலம், வீடு உள்ளிட்ட சொத்து பிரச்சினைகள் தீரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். திருத்தணியில் முருகன் இருப்பதை போல இங்கும் காணப்படுவதால் இத்தலம் திருத்தணி என்று அழைக்கப்படுகிறது. தஞ்சை மாநகரில் ஈசானிய மூலையில் இத்தலம் அமைந்துள்ளது.
    பரிகார யாகத்தில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் மகா அபிஷேகம் நடைபெறும். இதையொட்டி கோவில் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடு செய்துள்ளனர்.
    சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரதவல்லப பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் குருபகவான் சுயம்புவாக வீற்றிருக்கிறார். அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார். இங்கு ஒவ்வொரு குருபெயர்ச்சி விழாவும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு குருபெயர்ச்சி விழாவையொட்டி நேற்று காலை ஸ்ரீதர் பட்டர், ரெங்கநாத பட்டர், சடகோப பட்டர், ஸ்ரீபாலாஜி பட்டர், ராஜா பட்டர் உள்பட 21 பேர் லட்சார்ச்சனை நடத்தினர். லட்சார்ச்சனையுடன் குருபெயர்ச்சி விழா தொடங்கியது.

    விழாவை வெங்கடேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை உதவிஆணையர் விஜயன், செயல்அலுவலர் சுரேஷ்கண்ணன், ஆய்வாளர் மதுசூதனன்ராயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவை முன்னிட்டு வெளியூரில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து குருபகவானை தரிசித்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் பசும்பொன்மாறன், ரேகா வீரபாண்டி, இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் வெற்றிச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கர்நாடக கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமன் லட்சார்ச்சனை விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். இவரை முன்னாள் ஊராட்சி தலைவர் கர்ணன், தொழில் அதிபர் எம்.கே.எம்.ராஜா, மணிவேல் உட்பட பலர் வரவேற்றனர். சமயநல்லூர் துணைசூப்பிரண்டு பாலசுந்தர், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.குருவித்துறை ஊராட்சி சார்பாக கூடுதல் தெருவிளக்கு, கூடுதல் குடிநீர் வசதி, முழு சுகாதார பணி செய்யப்பட்டது. மன்னாடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இன்று லட்சார்ச்சனை தொடர்ந்து நடைபெறும். இரவு நிறைவுபெற்று நாளை பகல் 3 மணி அளவில் பரிகார மகா யாகம் நடைபெறும். 6.10 மணி அளவில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு குரு பெயர்ச்சி ஆவதால் குருபகவானுக்கு 21 அபிஷேகம் நடைபெறும்.

    பின்னர் பரிகார யாகத்தில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் மகா அபிஷேகம் நடைபெறும். இதையொட்டி கோவில் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடு செய்துள்ளனர். காவல்துறை, சுகாதாரத் துறை, வருவாய் துறை, தீயணைப்புத் துறை, அரசு போக்குவரத்து துறை மற்றும் அறநிலையத்துறை இணைந்து கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக அரசு உத்தரவின்படி அனைத்து விழிப்புணர்வு ஏற்பாடுகளும் செய்துள்ளனர். வரக்கூடிய பக்தர்கள் முககவசம் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
    நாகர்கோவில் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் கிறிஸ்துநகரில் கிறிஸ்து அரசர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 10 நாட்கள் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    இதனையொட்டி இன்று காலை 7 மணிக்கு முன்னோர்கள் நன்றி திருப்பலி, மாலை 6 மணிக்கு திருக்கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு திருச்செபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது. குழித்துறை மறை மாவட்ட செயலாளர் ரசல்ராஜ் தலைமை தாங்குகிறார். புதுக்குடியிருப்பு பங்கு அருட்பணியாளர் ஜெயசந்திர ரூபன் மறையுரையாற்றுகிறார்.

    14-ந் தேதி காலை 7.30 மணிக்கு நடைபெறும் முதல் திருவிருந்து திருப்பலிக்கு மறை மாவட்ட முதன்மை அருட்பணியாளர் கில்லாரியுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலையில் நடைபெறும் திருச்செபமாலை, புகழ்மாலை, திருப்பலிக்கு தேவசகாயம் மவுண்ட் வட்டார முதன்மை அருட்பணியாளர் பிரான்சிஸ் சேவியர் தலைமை தாங்குகிறார். எட்டாமடை பங்கு அருட்பணியாளர் ஸ்டீபன் மறையுரையாற்றுகிறார்.

    இதேபோல் விழா நாட்களில் தினமும் திருச்செபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது.

    20-ந் தேதி அன்று காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலிக்கு பார்வதிபுரம் பங்கு அருட்பணியாளர் அருள் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். காலை 10 மணிக்கு நடைபெறும் குணமளிக்கும் திருப்பலிக்கு வடசேரி பங்கு அருட்பணியாளர் ஆரோக்கிய ரமேஷ் தலைமை தாங்குகிறார். இளங்கடை பங்கு அருட்பணியாளர் ஜோஸ் ஜே.பெஸ்க் மறையுரையாற்றுகிறார்.

    மாலை 5.45 மணிக்கு திருச்செபமாலை, புகழ்மாலை, சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.

    21-ந் தேதி காலை 7.30 மணிக்கு கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலி நடக்கிறது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலை, புகழ்மாலை, திருப்பலி, கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. கொரோனா பரவல் விதிமுறையை பின்பற்றி நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் டோனி ஜெரோம், இணை பங்கு அருட்பணியாளர் மைக்கேல் ஐன்ஸ்டீன், அருட்சகோதரிகள், பங்கு பேரவை உறுப்பினர்கள் மற்றும் பங்கு மக்கள் இணைந்து செய்துள்ளனர்.
    சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் 19-ந்தேதி திருக்கார்த்திகை அன்று இரவு 8 மணிக்கு தீபக்காட்சியும், அதைத்தொடர்ந்து சுவாமி புறப்பாடும் உள் பிரகாரத்தில் நடைபெற உள்ளது.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாக திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இக்கோவிலில் முருகப்பெருமான் தனது தந்தை சிவனுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசித்த சிவகுருநாதனாக அருள்பாலிப்பது சிறப்பம்சம் ஆகும்.

    பிரபவ முதல் அட்சய முடிய 60 தமிழ் ஆண்டுகளின் தேவதைகளும் இக்கோவிலின் திருப்படிகளாக அமையப்பெற்று தமிழ்க்கடவுளான முருகனுக்கு சேவை செய்து வருவதாக ஐதீகம்

    பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தின்போது சுப்பிரமணியசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மங்களவாத்தியம் முழங்க விழா கொடியேற்றம் நடைபெற்றது.

    விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) ஆகிய தேதிகளில் ஊஞ்சல் உற்சவமும், 15-ந் தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடும், 19-ந் தேதி திருக்கார்த்திகை அன்று இரவு 8 மணிக்கு தீபக்காட்சியும், அதைத்தொடர்ந்து சுவாமி புறப்பாடும் உள் பிரகாரத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து, சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 8-ந்தேதி வேல்வாங்குதலும், 9-ந்தேதி சூரசம்ஹாரமும் நடந்தது. பக்தர்கள் கோவிலுக்குள் காப்புகட்டி விரதமிருக்க அனுமதிக்கப் படாததையொட்டி கிரிவலத்தில் சட்ட தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. அதன்படி கந்தசஷ்டி திருவிழா 10-ம் தேதி நிறைவு பெற்றது.

    இந்நிலையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா நேற்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் 10.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 18-ந்தேதி பட்டாபிஷேகம், 19-ந்தேதி வழக்கம்போல் மலையில் மகாதீபம் ஏற்றுதல், 20-ந்தேதி தீர்த்த உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
    வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் செய்யும் பூஜையால் தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும். மகப்பேறு கிட்டும். வாரிசுகள் வாழ்வில் தடைகள் நீங்கும். பொன், பொருள் சேரும்.
    ராகு கால நேரத்தில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்பது பலரது பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் இது விசேஷ பூஜைகள் செய்து, வேண்டிய வரத்தினை பெறுவதற்கான உகந்த நேரம் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

    சர்ப்ப கிரகங்களான ராகுவும்–கேதுவும், துர்க்கை தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு நாளில் உள்ள இருபத்தி நாலு மணி நேரத்தில் 1½ மணி நேரம் ராகுவும், 1½ மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர். அதில் ராகு வழிபாடு செய்யும் நேரம் ‘ராகு காலம்’ என்றும், கேது வழிபாடு செய்யும் நேரம் ‘எமகண்டம்’ என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் அந்த நேரத்தில் குறைந்திருக்கும் என்பதால்தான், ராகு காலத்தில் சுப காரியங் களைத் தவிர்க்கச் சொன்னார்கள்.

    அதே சமயம் ராகு காலத்தில் விரதம் இருந்து அம்மனை ஆராதிப்பது, குறிப்பாக சண்டிகையாகவும், துர்க்கையாகவும் தேவியை வணங்குவது சிறப்பான பலனைத் தரும் என்கிறது தேவி பாகவதம்.

    ராகு காலம் என்பது ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட 1½ மணி நேரமாகும். ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜை சிறப்புமிக்கது. செவ்வாய்க் கிழமைகளில் வரும் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை அதிலும் சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் அந்த தினத்தில் ராகுவோடு இணைந்து செவ்வாயும் அம்பிகையை மங்கள சண்டிகையாக வணங்குகிறார். இதனால் கூடுதல் பலன் கிடைக்கும்.

    மங்களன் என்ற பெயர், அங்காரகனாகிய செவ்வாய்க்கு உரியது. பொதுவாக ஒருவரது வாழ்வில் மங்கல காரியங்கள் நடப்பதற்கு செவ்வாய் மற்றும் சர்ப்ப தோஷங்களே காரணமாகச் சொல்லப்படுகின்றன. செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் தோஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும், துன்பங்களும் தொடர்ந்தாலோ ராகு கால வழிபாட்டினை மேற்கொண்டு, துர்க்கையையும் மங்கள சண்டிகையையும் வழிபடுவது நற் பலன் தரும். துர்க்கையை நோக்கியவாறு தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. அதிலும் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றுவது என்பது சிறப்பு மிகுந்தது.

    வீட்டில் பூஜை செய்வது எப்படி?

    ராகு கால துர்க்கை பூஜையை இயன்றவரை கோவிலில் செய்வதே நல்லது. முடியாத நேரத்தில் அவரவர் வீட்டிலும் செய்யலாம். ராகு கால பூஜை செய்பவர்கள் பூஜை முடியும் வரை விரதம் அனுஷ்டிப்பது நன்மை தரும். முடியாதவர்கள் சிறிது பால், பழம் அருந்தலாம்.

    வீட்டு பூஜை அறையை மெழுகி கோலமிட வேண்டும். சுத்தமான மணைப் பலகை ஒன்றின் மீது நுனி வாழை இலையை வைத்து (நுனி வடக்கு பார்த்து இருப்பது நல்லது), அதன் நடுவே சிறிது பச்சரிசியைப் பரப்பி, அதன் மையத்தில் சிறிது துவரம் பருப்பைப் பரப்புங்கள். இந்த அமைப்பின் நடுவே குத்துவிளக்கு அல்லது காமாட்சி அம்மன் விளக்கை வைத்து, அதனை துர்க்கையாக பாவித்து, பொட்டு வைத்து, பூ போட்டு பின்னர் விளக்கேற்ற வேண்டும். அதன் முன் எலுமிச்சைப் பழத்தின் சாறை ஒரு பாத்திரத்தில் பிழிந்து விட்டு, மூடியில் திரி போட்டு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து வணங்குங்கள்.

    செவ்வரளி மற்றும் மஞ்சள் நிறப் பூக்களைப் பயன்படுத்துங்கள். தெரிந்த துர்க்கை துதிகளைச் சொல்லுங்கள். துர்க்கை போற்றியினை சொல்லி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். தூப, தீபம் காட்சி வணங்க வேண்டும். தயிர் சாதம், பால் பாயாசம் என உங்களால் இயன்ற நிவேதனங்களோடு, பிழிந்து வைத்த எலுமிச்சை சாறினை சேர்த்து பானம் தயாரித்து அதையும் நைவேத்தியம் செய்யுங்கள். பூஜை முடிந்த பின்னர் யாரேனும் பெண்மணிக்கு பிரசாதங்களோடு இயன்ற மங்கள பொருட்களைக் கொடுத்து, நீங்களும் பிரசாதம் சாப்பிடுங்கள். ராகு காலம் முடிந்த பின்னர், பூஜித்த விளக்கு அமைப்பினை சற்று வடக்காக நகர்த்தி வைத்து பூஜையை நிறைவு செய்யுங்கள்.

    எந்த நாளில்.. எப்படி பலன்

    வாரத்தில் அனைத்து நாட்களுமே ராகு காலத்தில் தேவி வழிபாடு செய்வது சிறந்த பலனைத் தரும். இருப்பினும் குறிப்பிட்ட பிரச்சினைகள் தீர பிரத்தியேக தினங்களில் வணங்குவது சிறப்பு என்பது ஐதீகம்.

    அதன்படி செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கினால், திருமணத் தடை, முன்னேற்றத் தடை, கடன் பிரச்சினைகள், சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை, வீடு, மனை தொடர்பான பிரச்சினைகள், விபத்து பாதிப்புகள் ஆகியவை நீங்கச் செய்யும்.

    வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் செய்யும் பூஜையால் குடும்ப பலம் சீராகும். தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும். மகப்பேறு கிட்டும். மனைவி ஆயுள் பலம் கூடும். வாரிசுகள் வாழ்வில் தடைகள் நீங்கும். பொன், பொருள் சேரும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.

    ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் செய்யும் வழிபாட்டினால், தீராத நோய்களின் தாக்கம் குறையும். எதிரிகள் பயம் நீங்கும். பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.

    ×