search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிறிஸ்து அரசர்
    X
    கிறிஸ்து அரசர்

    நாகர்கோவிலில் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

    நாகர்கோவில் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் கிறிஸ்துநகரில் கிறிஸ்து அரசர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 10 நாட்கள் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    இதனையொட்டி இன்று காலை 7 மணிக்கு முன்னோர்கள் நன்றி திருப்பலி, மாலை 6 மணிக்கு திருக்கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு திருச்செபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது. குழித்துறை மறை மாவட்ட செயலாளர் ரசல்ராஜ் தலைமை தாங்குகிறார். புதுக்குடியிருப்பு பங்கு அருட்பணியாளர் ஜெயசந்திர ரூபன் மறையுரையாற்றுகிறார்.

    14-ந் தேதி காலை 7.30 மணிக்கு நடைபெறும் முதல் திருவிருந்து திருப்பலிக்கு மறை மாவட்ட முதன்மை அருட்பணியாளர் கில்லாரியுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலையில் நடைபெறும் திருச்செபமாலை, புகழ்மாலை, திருப்பலிக்கு தேவசகாயம் மவுண்ட் வட்டார முதன்மை அருட்பணியாளர் பிரான்சிஸ் சேவியர் தலைமை தாங்குகிறார். எட்டாமடை பங்கு அருட்பணியாளர் ஸ்டீபன் மறையுரையாற்றுகிறார்.

    இதேபோல் விழா நாட்களில் தினமும் திருச்செபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது.

    20-ந் தேதி அன்று காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலிக்கு பார்வதிபுரம் பங்கு அருட்பணியாளர் அருள் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். காலை 10 மணிக்கு நடைபெறும் குணமளிக்கும் திருப்பலிக்கு வடசேரி பங்கு அருட்பணியாளர் ஆரோக்கிய ரமேஷ் தலைமை தாங்குகிறார். இளங்கடை பங்கு அருட்பணியாளர் ஜோஸ் ஜே.பெஸ்க் மறையுரையாற்றுகிறார்.

    மாலை 5.45 மணிக்கு திருச்செபமாலை, புகழ்மாலை, சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.

    21-ந் தேதி காலை 7.30 மணிக்கு கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலி நடக்கிறது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலை, புகழ்மாலை, திருப்பலி, கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. கொரோனா பரவல் விதிமுறையை பின்பற்றி நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் டோனி ஜெரோம், இணை பங்கு அருட்பணியாளர் மைக்கேல் ஐன்ஸ்டீன், அருட்சகோதரிகள், பங்கு பேரவை உறுப்பினர்கள் மற்றும் பங்கு மக்கள் இணைந்து செய்துள்ளனர்.
    Next Story
    ×