என் மலர்

  ஆன்மிகம்

  கொடியேற்றம் நடந்ததையும், முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளியதையும் படத்தில் காணலாம்.
  X
  கொடியேற்றம் நடந்ததையும், முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளியதையும் படத்தில் காணலாம்.

  திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
  திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 8-ந்தேதி வேல்வாங்குதலும், 9-ந்தேதி சூரசம்ஹாரமும் நடந்தது. பக்தர்கள் கோவிலுக்குள் காப்புகட்டி விரதமிருக்க அனுமதிக்கப் படாததையொட்டி கிரிவலத்தில் சட்ட தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. அதன்படி கந்தசஷ்டி திருவிழா 10-ம் தேதி நிறைவு பெற்றது.

  இந்நிலையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா நேற்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் 10.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  கொடியேற்றத்தில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 18-ந்தேதி பட்டாபிஷேகம், 19-ந்தேதி வழக்கம்போல் மலையில் மகாதீபம் ஏற்றுதல், 20-ந்தேதி தீர்த்த உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
  Next Story
  ×