என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் விஜய் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (The Goat) திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (The Goat). லியோ திரைப்படத்தை தொடர்ந்து, விஜய் நடித்து வரும் இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    இந்தபடத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, விஜய்யின் 69-வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார். அதாவது விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன்.


    எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


    • நடிகர் விஜய் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார்.
    • இவர் சமீபத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார்.

    நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார். அரசியல் கட்சிகளில் இருப்பது போல் இயக்கத்தில் பல அணிகளும் உருவாக்கப்பட்டு மக்கள் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் புயல் மழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார். இதைத்தொடர்ந்து வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் விஜய் திடீர் ஆலோசனை நடத்தினார்.


    இந்நிலையில் நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

    இந்நிலையில், என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். "எண்ணித் துணிக கருமம்" என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, "தமிழக வெற்றி கழகம்" என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.


    வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின் வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்.

    இடைப்பட்ட காலத்தில், எமது கட்சியின் தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டுவரும் பணிகளும், கட்சியின் சட்டவிதிகளுக்குட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மற்றும் கட்சி விரிவாக்க


    பணிகளுக்கு தேவையான கால அவகாசத்தை கணக்கில் கொண்டே தற்போது எமது கட்சி பதிவிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழ, மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இறுதியாக, என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    நடிகராக இருந்த விஜய் இதன் மூலம் முழுநேர அரசியல்வாதியாக மாறியுள்ளார்.


    • நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் பல சேவைகளை செய்து வந்தார்.
    • இவர் தற்போது தன் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.

    நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார். அரசியல் கட்சிகளில் இருப்பது போல் இயக்கத்தில் பல அணிகளும் உருவாக்கப்பட்டு மக்கள் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் புயல் மழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் விஜய் திடீர் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடலாமா அல்லது வேறு கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கலாமா என ஆலோசனை நடத்தப்பட்டது.

    இந்நிலையில் நடிகர் விஜய் தொடங்க உள்ள அரசியல் கட்சியின் பெயர் இன்று அறிவிக்கப்படும் என்று செய்தி பரவி வந்தது. இதையடுத்து நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    • நடிகை பூனம் பாண்டே பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.
    • இவர் சமூக வலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.

    பாலிவுட் நடிகையான பூனம் பாண்டே, பிரபல மாடல் அழகி ஆவார். இவர் 2013-ஆம் ஆண்டு 'நஷா' எனும் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். பின்னர், "லவ் இஸ் பாய்சன்" எனும் கன்னட படத்திலும், "மாலினி அண்ட் கோ" எனும் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இவர் 'பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.


    நடிகை பூனம் பாண்டே சமூக வலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்நிலையில், சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வந்த நடிகை பூனம் பாண்டே, தனது 32 வயதில் இன்று உயிரிழந்தார். அதாவது, கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பூனம் பாண்டே இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகை பூனம் பாண்டே மரணமடைந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


    நடிகை பூனம் பாண்டே கடந்த 2020-ஆம் ஆண்டு தன் காதலர் சாம் பாம்பேவை திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஒரு மாதத்திலேயே தன் கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், குடும்ப வன்முறை செய்ததாகவும் புகாரளித்தார். இதனைத் தொடர்ந்து இவர்களது திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது.

    • நடிகர் பிரபாஸ் பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
    • இவர் நடித்த ‘சலார்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்த 'சலார்' திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலை குவித்தது. 'ஆதிபுருஷ்' போன்று 'சலார்' திரைப்படமும் சர்ச்சையை கிளப்பிவிடுமோ என்ற ரசிகர்களின் அச்சத்தை 'சலார்' தூக்கி எறிந்தது.


    இதைத்தொடர்ந்து நடிகர் பிரபாஸ், இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் 'கல்கி 2898- ஏடி' என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இதில் அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல், இயக்குனர் மாருதி இயக்கத்தில் 'தி ராஜா சாப்' ( The Raja Saab) எனும் படத்திலும் நடிக்கிறார்.



    இப்படி பல படங்களில் பிசியாக நடித்து வரும் பிரபாஸ் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துள்ளார். அதாவது, சமீபத்தில் பிரபாஸுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அதனால் ஏற்பட்ட வலி சரியாகாததால் ஒரு மாதம் நடிப்பிற்கு இவர் பிரேக் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் பிரபாஸ் இதுகுறித்து உறுதிப்படுத்துவார் என சொல்லப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் 'சைரன்'.
    • இந்த படத்தை ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ளார்.

    ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் 'சைரன்'. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், அனுபமா பரமேஸ்வரன், யோகிபாபு, சமுத்திரகனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    குடும்ப அம்சங்களுடன் ஆக்ஷன் திரில்லராக பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் பிப்ரவரி 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், 'சைரன்' படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.  



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகை ராஷ்மிகா பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகர்களாக வலம் வருபவர்கள் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா. இருவரும் தமிழ், தெலுங்கு, இந்தி என பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் படங்கள் இளம் ரசிகர்களை கவர்ந்தது.


    இதனிடையே ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா டேட்டிங் செய்வதாக பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும், இதுகுறித்து இருவரும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து, ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டாவுக்கு பிப்ரவரி மாத துவக்கத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த தகவல் பொய்யானது என விஜய் தேவரகொண்டா விளக்கம் அளித்தார்.

    இந்நிலையில் விஜய் தேவரகொண்டா குறித்து நடிகை ராஷ்மிகா மனம் திறந்து பேசியுள்ளார். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்மிகா, 'நானும் விஜய்யும் ஒன்றாகதான் வளர்ந்தோம். என்னுடைய வாழ்க்கையில் எது நடந்தாலும் விஜய்யிடம் ஆலோசனை கேட்டுதான் செய்வேன். நான் என்ன சொன்னாலும் அதற்கு ஆமாம் போடுபவர் கிடையாது விஜய். நல்லது, கெட்டதை அறிந்து சொல்லக்கூடியவர்.


    என் வாழ்வில் எல்லாரையும் விட எனக்கு ஆதரவாக அவர் இருக்கிறார். என் வாழ்க்கையில் அவர் ரொம்ப முக்கியம். உண்மையில் நான் மதிக்கும் ஒரு நபராக விஜய் தேவரகொண்டா உள்ளார்' என்று தெரிவித்து உள்ளார். இவரின் இந்த பேச்சு இவர்களின் காதல் கிசுகிசுக்களுக்கு மீண்டும் பிள்ளையார் சுழி போட்டுள்ளது.

    • மோகன்லால் இயக்கி நடிக்கும் திரைப்படம் 'பரோஸ்'.
    • இப்படம் டிசம்பரில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    'பரோஸ்' என்ற புதிய மலையாள படத்தை நடிகர் மோகன்லால் இயக்கி நடிக்கிறார். இந்த படத்தில் லிடியன் நாதஸ்வரம் இசைஅமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.படத்தின் பாடல்களுக்கு இசை அமைக்கிறார்.


    இந்த மலையாளமொழி படம் காவிய கற்பனை திரைப்படமாகும் . ஜிஜோ புன்னூஸ் எழுதிய ஒரு நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகுகிறது. இந்த படத்தை ஆசிர்வாத் ஆண்டனி தயாரிக்கிறார். இதில் மாயா, சீசர் லோரெண்டே ராடன், கல்லிரோய் சியாபெட்டா, துஹின்மேனன் மற்றும் குருசோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    இப்படத்திற்கு லிடியன் நாதஸ்வரம் இசையமைக்கிறார். இதன் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2021-ல் தொடங்கியது.கொரோனா ஊரடங்கின் போது இந்த படத்தின் திரைக்கதை மற்றும் நடிகர்கள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டது.


    மோகன்லாலும் டி.கே.ராஜீவ் குமாரும் இணைந்து காட்சிகள், கதாபாத்திரங்களை மாற்றி அமைத்தனர். அதன்பின் டிசம்பர் 2021-ல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. பெரும்பாலான படப்பிடிப்பு கொச்சி, கோவா பகுதியில் நடந்தது. 2 பாடல்கள் பாங்காக் மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டன. இப்படம் 3டியில் எடுக்கப்பட்டு உள்ளது. இந்தபடம் டிசம்பரில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    • நடிகர் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். இப்படம் நாளை (பிப்ரவரி 2) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.


    வடக்குப்பட்டி ராமசாமி போஸ்டர்

    இந்நிலையில், 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை நடிகர் சந்தானம் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார். மேலும், இப்படம் 600 திரையரங்களுக்கு மேல் ரிலீஸாக உள்ளது.


    • ஜீனத் பிரியா, முனீஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • ராஜ்கிரண், பிரியா என்னுடைய சொந்த மகளே அல்ல என கூறினார்.

    நடிகர் ராஜ்கிரண் மகள் ஜீனத் பிரியாவை நாதஸ்வரம் தொலைக்காட்சி தொடரிலும் சில திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான முனீஸ் ராஜா காதலித்து எதிர்ப்பை மீறி ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்கிரண், பிரியா என்னுடைய சொந்த மகளே அல்ல, இனிமேல் இவர்கள் இருவரில் யாராவது என் பெயரை எதற்காக பயன்படுத்தினாலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் இருவருக்கும் என் குடும்பத்திற்கும், எவ்வித சம்பந்தமும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.


    இதையடுத்து தன் கணவர் ராஜ்கிரண் மீது அவதூறு பரப்புவதாக வளப்பு மகள் ஜீனத் பிரியா மீது ராஜ்கிரண் மனைவி பத்மஜோதி (எ) கதீஜா புகாரளித்துள்ளார். இதைத்தொடர்ந்து முசிறி டி.எஸ்.பி. முன்னிலையில் ஜீனத் பிரியா அவரது கணவர் முனீஸ் ராஜா ஆஜராகி விளக்கமளித்தனர். இந்த பிரச்சனை சில மாதங்கள் சமூக வலைதளத்தில் பேசுப்பொருளானது.


    இந்நிலையில், தன் கணவர் முனீஸ் ராஜாவை பிரிந்துவிட்டதாக ஜீனத் பிரியா அதிர்ச்சி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "நான் 2022-ஆம் ஆண்டு நடிகர் முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டேன் என்பது அனைவரும் தெரிந்திருக்கும். ஆனால் நாங்கள் இப்போது பிரிந்துவிட்டோம். எங்கள் திருமணம் சட்டப்பூர்வமான திருமணம் இல்லை. அதுமட்டுமல்லாமல், இந்த திருமணத்திற்கு பிறகு என் அப்பாவை நிறைய கஷ்டப்படுத்திவிட்டேன். அப்படி நான் கஷ்டத்தை கொடுத்தும் எனக்கு ஒரு பிரச்சனை வரும் பொழுது என்னை கைவிடாமல் என்னை காப்பாத்தினீர்கள். இது நான் எதிர்பார்த்திராத கருணை. என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா" என்று பேசினார்.


    • நடிகர் ஜீவா திரையுலகில் அறிமுகமாகி 21 வருடங்களை நிறைவு செய்துள்ளார்.
    • வெற்றிகரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய அவர், அடுத்த கட்டமாக இசை தயாரிப்பில் இறங்கியுள்ளார்.

    இந்திய சினிமாவில் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிப்படங்களை வழங்கி வரும் நடிகர் ஜீவா, திரையுலகில் அறிமுகமாகி 21 வருடங்களை நிறைவு செய்துள்ளார். வெற்றிகரமாக தனது திரைப் பயணத்தை தொடங்கிய அவர், அடுத்த கட்டமாக இசை தயாரிப்பில் இறங்கியுள்ளார்.


    அவரது 'டெஃப் ஃப்ராக்ஸ்' ரெக்கார்ட்ஸ் மியூசிக் லேபிள் என்ற புதிய முயற்சியின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஆர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விஷ்ணு விஷால், மிர்ச்சி சிவா, விச்சு விஸ்வநாத், விவேக் பிரசன்னா, கலையரசன், ஆதவ் கண்ணதாசன், ஜெகன், இயக்குனர் மோகன் ஜி , நடிகர் மற்றும் இசை அமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, சித்தார்த் விபின், சந்தோஷ் நாராயணன் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.



    இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா பேசியதாவது, கடந்த ஒரு வருடமாக இந்த 'டெஃப் ஃப்ராக்ஸ்' மியூசிக் லேபிள் நிறுவனத்திற்காக என்னென்ன தயாரிப்புகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் என்பதை இன்று வெளியிடுகிறோம். மேலும் இந்த நிறுவனம் சுயாதீன கலைஞர்களுக்கான பாடல்கள் மற்றும் குறும்படங்களை தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. எங்களது தாய் நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் வாயிலாக 40-க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியது போல இந்த நிறுவனம் மூலம் சுயாதீன கலைஞர்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமைக் கொள்கிறோம்.

    ரஜினிகாந்த் அவர்கள் கூறிய சிறுகதையின் அடிப்படையில் 'யார் சொல்வததையும் கேட்காமல் நமது வேலையை நாம் செய்து கொண்டே முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்' என்பதை வைத்து இந்நிறுவனத்திற்கு 'டெஃப் ஃப்ராக்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் கலைக்கூடராமாக இருக்கும் என்று பேசினார்.

    • சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கங்குவா’.
    • இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. 'கங்குவா' திரைப்படத்தில் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளதாக சமீபத்தில் படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்தது.


    இந்நிலையில், 'கங்குவா' திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் மாஸ் லுக்கின் புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் சூர்யா இருக்கும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    ×