என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சிந்துபாத்’ திரைப்படத்தின் முன்னோட்டம்.
    கே ப்ரொடக்ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் வான்சன் மூவீஸ் ஷான் சுதர்ஷன் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘சிந்துபாத்’. 

    ‘பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதியும், இயக்குனர் எஸ்.யூ.அருண் குமாரும், இணைந்து பணியாற்றும் மூன்றாவது அதிரடி திரைப்படம் ‘சிந்துபாத்’.

    முதன் முறையாக இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தனது தந்தையுடன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க, அது ரசிகர்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தந்தையும் மகனுமாக நடிக்கவில்லை என்றாலும், இருவரின்  கதாபாத்திரமும் அவர்களிடையே நிலவும் ஒரு உன்னதமான தனித்துவ உறவுநிலையை பிரதிபலிக்கிறது.

    விஜய் சேதுபதி இப்படத்தில் சற்றே காதுகேளாத சிறுசிறு திருட்டுகளில் ஈடுபடுபவராக, ஒரு முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். ஒரு பெண்ணை மையப்படுத்தியே இப்படத்தின் கதை சுழலுதால், அஞ்சலியின் கதாபாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது.

    எடிட்டிர் - ரூபன், இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் - விஜய் கார்த்திக் கண்ணன் 
    எம்.ஐ.பி-யின் வெற்றி பாகங்கள் வரிசையில், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், டெஸ்ஸா தாம்சன் நடிப்பில் வெளியாகி இருக்கும் மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் படத்தின் விமர்சனம்.
    சிறுமி டெஸ்ஸா தாம்சன் சிறு வயதில் இருக்கும் போது ஏலியன்களை பார்க்கிறார். பெற்றோர்கள் இவளது நினைவுகளை அழிக்காமல் விட்டுவிடுகிறார்கள். வளர்ந்தவுடன் எம்.ஐ.பி குழுவில் சேர நினைத்து அவர்களையும் கண்டு பிடிக்கிறாள். ஏற்கனவே அதற்கான பயிற்சியில் தேர்ச்சி பெற்றதால் எம்.ஐ.பி ஏஜென்ட் ஆக வேலை கிடைக்கிறது.

    லண்டனில் வன்கஸ் என்னும் ஏலியனை சந்திப்பதற்காக கிறிஸ் ஹெம்ஸ்வார்துடன் செல்கிறார் டெஸ்ஸா. அங்கு வன்கஸை இரட்டை ஏலியன்கள் தாக்குகிறார்கள். இதில் வன்கஸ் உயிரிழக்கும் நிலையில், ரத்தினகல் ஒன்றை கொடுத்து, எம்.ஐ.பி-யில் ஒரு பிரச்சனை இருப்பதாகவும் சொல்லி இறக்கிறார்.



    இறுதியில் எம்.ஐ.பி.-யில் இருக்கும் பிரச்சனையை கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், டெஸ்ஸா இருவரும் கண்டுபிடித்தார்களா? வன்கஸை கொலை செய்த இரட்டை ஏலியன்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    அவெஞ்சர்ஸ்: எண்ட் கேமில் தொப்பையும், பீருமாக காட்சியளித்த கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் இந்தப் படத்தில் ஸ்டைலிஷ், ஹேண்ட்சம் லுக்கில் கவர்ந்திருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் டெஸ்ஸா அவருக்கான கதாபாத்திரத்தில் சிறப்பாக நின்று விளையாடுகிறார். தாடி போல் அமர்ந்திருக்கும் குட்டி ஏலியன், இரட்டை ஏலியன் என பட முழுக்க 3டி விருந்து படைத்திருக்கிறார்கள். ஆக்‌ஷன் காட்சிகள் அனைத்தும் சிலிர்க்க வைக்கிறது.



    இதற்கு முன், மென் இன் பிளாக் மூன்று பாகங்கள் வெளியாகி இருக்கிறது. நான்காவது பாகமாக இந்த படம் வெளியாகி இருக்கிறது. வேற்றுக் கிரக உயிரினங்களுடன் நடக்கும் அதிரடி சண்டைக் காட்சிகளும் நகைச்சுவையும் கலந்து இப்படத்தை கொடுத்திருக்கிறார்கள்.

    முந்தைய பாகங்கள் வரிசையில் இந்தப் படமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவும், பின்னணியும் அருமை. எம்.ஐ.பி ரசிகர்களுக்கு ஏற்றவாறு சுவாரஸ்யமாக அமைந்திருப்பது சிறப்பு.

    மொத்தத்தில் ‘மென் இன் பிளாக் இன்டர்நேஷனல்’ மைண்ட் ப்ளோயிங்.
    பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே, கவுரவ வேடத்தில் நடிப்பதற்காக ரூ.13 கோடி வரை சம்பளம் பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    தீபிகா படுகோவின் கணவரும் நடிகருமான ரன்வீர் சிங் நடிக்கும் 83 படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இது 1983ல் இந்தியா கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்ற சம்பவத்தை தழுவி உருவாகும் படம்.

    இதில் கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர் சிங் நடிக்கிறார். ரன்வீரின் மனைவியாக நடிக்க தீபிகா படுகோனேவிடம் பேசப்பட்டது. சிறு வேடம் என்பதால் அவர் நடிக்க மறுத்தார்.



    இந்நிலையில் ரூ.13 கோடி வரை இந்த படத்துக்கு சம்பளமாக தர பட நிறுவனம் தீபிகாவை கேட்டுள்ளதாக தெரிகிறது. சில நிமிடங்கள் வரும் காட்சிக்கு இத்தனை கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதால் தீபிகா சம்மதிப்பார் என்கிறார்கள்.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை ரஜினியுடன் மோத இருக்கிறார்.
    பேட்ட படத்தின் வெற்றிக்கு பின் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘தர்பார்’. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முதன் முறையாக ரஜினிகாந்துடன் இணைந்துள்ளார்.

    ரஜினிகாந்த், நயன்தாரா நடித்து வரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. 2வது கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

    விரைவில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.



    ரஜினியின் அறிமுக காட்சியில் யோக்ராஜ் சிங் நடிப்பதாகவும், ரஜினியுடன் பயங்கரமான சண்டைகாட்சி அவருக்கு இருக்கிறது என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    யோக்ராஜ் சிங்கும் ஒரு கிரிக்கெட் வீரர் தான். ஒரு டெஸ்ட், 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதன் பின்னர் நடிகராக அறிமுகமான யோக்ராஜ் பஞ்சாபி படங்களிலும் சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
    சினிமா மற்றும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை நிலானிக்கு திருமண ஆசை காட்டி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார்.
    சினிமா மற்றும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருப்பவர் நடிகை நிலானி. இவருக்கும் சின்னத்திரை உதவி இயக்குனரான காந்திக்கும் காதல் இருந்து வந்தது. இந்த நிலையில் காந்தி திடீரென கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு நடிகை நிலானிதான் காரணம் என்று பரபரப்பான தகவல் வெளியானது.

    இதனால் மனமுடைந்த நிலானி வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவர் உயிர் பிழைத்தார்.

    இந்த நிலையில் நடிகை நிலானி சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் பாலியல் ரீதியாக தனக்கு தொல்லை வருவதாக குறிப்பிட்டுள்ளார். நிலானி தனது புகாரில் கூறி இருப்பதாவது:- 

    கடந்த ஆண்டு என்னை பற்றி பரபரப்பான செய்திகள் வெளியான நேரத்தில் எனது செல்போன் எண்களும் வெளியானது. அப்போது பலர் என்னிடம் போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் அளிக்கும் வகையில் பேசினர். ஒரு சிலர் ஆபாசமாகவும் பேசினர்.



    இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து பேசுவதாக கூறி மஞ்சுநாதன் என்பவர் என்னிடம் பேசினார். தனக்கு திருமணம் ஆக வில்லை என்றும், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறினார். இதற்கு நானும் சம்மதித்தேன். இதன் பின்னர் அடிக்கடி போனில் பேசினோம். நேரிலும் சந்தித்தோம். ஆனால் அவருக்கு திருமணம் ஆகி மனைவி இருக்கிறார். இதனால் நான் அவரை திருமணம் செய்ய முடியாது என்று கூறிவிட்டேன். இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சுநாதன் உன்னை ஆபாசமாக படம் எடுத்து வைத்துள்ளேன் என்று மிரட்டுகிறார்.

    நான் சொல்வது போல் கேட்காவிட்டால் உனது ஆபாச படங்களை இணைய தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதுவரை 10 ஆயிரம் செல்போன்களில் இருந்து எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போனில் பேசும் போது எனது விருப்பத்திற்கு மாறாக ஆபாசமாக பேசுகிறார். அவரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    எனவே போலீசார் என்னை மிரட்டும் மஞ்சுநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நிலானியின் காதல் விவகாரம் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீண்டும் அவர் பாலியல் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    போலீஸ் உதவி கமி‌ஷனர் சீருடையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து பேசி அவர் வெளியிட்ட வீடியோவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக போலீசார் குன்னூரில் பதுங்கி இருந்த நிலானியை கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது.
    நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோரால்தான் நடிகர் சங்கத்தில் பிரச்சினை ஏற்பட்டது என்று ஐசரி கணேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
    நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று காலை கவர்னரை சந்தித்தனர். கவர்னரை சந்தித்த பின் அந்த அணியின் அமைப்பாளர் ஐசரி கணேஷ் அளித்த பேட்டி விபரம்:-

    ‘விஷால் அணியினர் கவர்னரின் நேரத்தை வீண் செய்துவிட்டனர். அவர்கள் கவர்னரை சந்தித்ததால் நாங்களும் சந்தித்தோம். எங்கள் அணி எந்த தவறும் செய்ய வில்லை என்று கூறியுள்ளோம். நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோரால்தான் நடிகர் சங்கத்தில் பிரச்சினை ஏற்பட்டது.



    விஷால் மட்டும் நடிகர் சங்க பிளவுக்கு காரணம் இல்லை. அவருக்கு உடந்தையாக செயல்பட்ட நாசர், கார்த்தி ஆகியோரும் காரணம். இந்த தேர்தலுக்கும் எனக்கும் தொடர்பு கிடையாது. இது தமிழக அரசு சம்மந்தப்பட்டது. இதில் நான் சம்மந்தப்பட்டு பேச ஒன்றுமில்லை என்று ஆளுநர் கூறினார்’.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது டிரெட்ஸ்டோன் என்னும் தொலைக்காட்சி தொடரில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
    தமிழில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது டிரெட்ஸ்டோன் என்னும் தொலைக்காட்சி தொடரில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    இத்தொடர் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான CIA வின் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படும் பிளாக் ஆப்ஸ் புரோக்ராம் ஆன டிரெட்ஸ்டோனை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. 



    இந்த தொலைக்காட்சி தொடரில் ஸ்ருதி, நீரா படெல் என்கிற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இக்கதாப்பாத்திரம் டெல்லியில் ஒரு ஹோட்டல் பணியாளராக வேலை பார்த்து கொண்டே மறைமுகமாக கொலையாளியாகவும் உலவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தத் தொடர் ஹெரோஸ்ஸை உருவாக்கிய டிம் கிரிங் என்பவரால் எழுதப்பட்டதாகும். இத்தொடரில் ஜெரிமி ஐர்வின்‌, பிரயன் ஸிமித் ஒமார் மெட்வாலி மற்றும் டிரேஸி இபிஈயகார்ரும் நடிக்கின்றனர்.
    தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரெஜினா, ரகசியமாக நிச்சயதார்த்தம் முடித்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
    தமிழில் கண்ட நாள் முதல் படத்தில் அறிமுகமானவர் ரெஜினா கசான்ட்ரா. கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து பிரபலமானார். சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமவுலி, சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். பார்ட்டி படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது சிம்புதேவன் இயக்கும் கசட தபற படத்தில் நடித்து வருகிறார்.

    தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். ‘ஏக் லட்கி கோ தேக்கா’ என்ற படம் மூலம் இந்தியிலும் அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில் ஓரின சேர்க்கையாளர் கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ரெஜினாவுக்கு தற்போது 28 வயது ஆகிறது.



    இந்த நிலையில் ரெஜினாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது. குடும்பத்தினர் மட்டுமே இதில் கலந்துகொண்டதாகவும், மிகவும் ரகசியமாக நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்ததாகவும் பேசுகின்றனர். கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு விரைவில் அவர் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ரெஜினாவுக்கு சமீப காலமாக பெரிய பட வாய்ப்புகள் இல்லை. இதனால் திருமணம் செய்துகொண்டு குடும்பத்தோடு செட்டில் ஆக அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நிச்சயதார்த்தம் பற்றி பரவும் தகவலுக்கு ரெஜினா இதுவரை பதில் சொல்லவில்லை.
    விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தளபதி 63 படக்குழுவினர் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்க உள்ளனர்.
    ‘தெறி', 'மெர்சல்' படங்களுக்கு பிறகு விஜய் - அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் 'தளபதி 63'. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை 21ம் தேதி மாலை 6 மணிக்கும், இரண்டாவது லுக் போஸ்டரை 21ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கும் வெளியிட இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா அறிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமைய இருக்கிறது.



    இப்படத்தில் விஜய்யுடன், நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, சவுந்தரராஜா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
    நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கும் அஜித் படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
    இயக்குனர் சிவாவுடன் நான்கு படங்களில் இணைந்து பணியாற்றிய அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் அடுத்தடுத்து இரு படங்களில் நடிக்க உள்ளார். பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகும் நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 10-ந்தேதி வெளியாக உள்ளது.

    இந்தப் படத்தை தொடர்ந்து அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் இணைந்து புதிய படத்தை உருவாக்க உள்ளது. இந்தப் படத்தின் பணிகள் ஆகஸ்டு 29-ந்தேதி பூஜையுடன் தொடங்க உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் வாரம் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.



    ஆக்‌‌ஷன், திரில்லர், அட்வெஞ்சர் ஆகியவை கலந்து இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கபடவுள்ள நிலையில் எச்.வினோத், போனி கபூர் இருவரும் தற்போது படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    ராட்சசன் படத்திற்குப் பிறகு அமலாபால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஆடை’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
    மேயாத மான் படத்தை இயக்கிய ரத்ன குமாரின் இயக்கத்தில் அமலா பால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆடை படத்தின் டீசர் வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ‘ஆடை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

    தணிக்கை குழுவால் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள இந்த படத்தில் சவாலான, துணிச்சல் மிக்க காட்சிகளில் அமலா பால் நடித்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ராட்சசன் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இந்தப் படத்தில் அவர் நடித்துள்ளார்.



    ஹீரோயினை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இதில் சில காட்சிகளில் அமலா பால் ஆடையின்றி நடித்துள்ளார். அவ்வாறு ஆடை இல்லாமல் அமலா பால் நிர்வாணமாக நடித்த காட்சிகள் டீசரில் இடம்பெற்றுள்ளன. ஆபாசமோ விரசமோ இல்லாமல் இந்த காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த டீசர் வெளியாகி 22 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. பெரிய ஹீரோக்களுக்கு நிகராக ‘ஆடை’ டீசர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றுள்ளது.
    பட விழாவில் கலந்துக் கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் அரை வாளி தண்ணீருக்கு அரை மணி நேரம் காத்திருக்கிறேன் என்று வேதனையுடன் பேசியிருக்கிறார்.
    யோகிபாபு நடிப்பில் வெளியாக இருக்கும் ‘கூர்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பேசியதாவது:-

    ‘தங்கம், பிளாட்டினத்தை விட தண்ணீர் மிகவும் விலை உயர்ந்தது. தண்ணீர் பற்றாக்குறை தற்போது அதிக அளவில் உள்ளது. அதற்கு காரணம் நாம் தான். இப்போதாவது தண்ணீர் சேகரிப்பது தொடர்பாக நல்ல வி‌ஷயங்களை நாம் செய்ய முயற்சி செய்ய வேண்டும்.

    தண்ணீரை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். சின்ன சின்ன பயன்படுத்தும் முறைகள் உள்ளன. அவற்றை அன்றாடம் நாம் பயன் படுத்தினால் போதும். நம் தட்டில் சாப்பிடுவதை விட வாழை இலையில் சாப்பிடலாம். அதனால் தண்ணீர் மிச்சமாக வாய்ப்புள்ளது.



    தினமும் வெவ்வேறு ஆடைகளை பயன்படுத்தாமல் வாரத்திற்கு இரண்டு ஆடைகளை மட்டும் மாற்றி மாற்றி பயன்படுத்தினால் சலவைக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் மிச்சமாகும். நாம் அடுத்த தலைமுறைக்கு தண்ணீரை சேமித்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அடுத்த தலைமுறையினருக்கு பணம், சொத்து கொடுக்கலாம்.

    ஆனால் அதை விட முக்கியம் தண்ணீர். அதனால் அவர்களுக்கு தண்ணீர் சேமித்து கொடுக்க வேண்டும். நான் குளிப்பதற்கு ஒரு அரை வாளி தண்ணீருக்காக அரை மணி நேரமாக வீட்டில் காத்து கொண்டு இருந்தேன்’.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×