என் மலர்
சினிமா செய்திகள்
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் பட்டியல் வெளியாகி வைரலாகி வருகிறது.
தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பல பிரபலங்கள் இன்று முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் 15 பிரபலங்கள் கலந்து கொண்டு, 100 நாட்கள் ஒரே வீட்டில் வசிப்பார்கள். இறுதியில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டு, பல லட்ச ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும்.
இந்தியில் ஆரம்பித்த இந்நிகழ்ச்சி தமிழ் ரசிகர்கள் மத்தியில் மெல்ல, மெல்ல தீயாய் பற்றிக் கொண்டது. மக்களின் மனதை எளிதாக வெல்ல இந்த நிகழ்ச்சி பிரபலங்களுக்கு ஒரு பாலமாக அமைகிறது. இதன் காரணமாக திரையுலகில் இருந்து ஓரம் கட்டப்பட்ட நடிகர், நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சி சீசன் 1, சீசன் 2, என்ற இரண்டு பாகமும் பெரிய வெற்றி பெற்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் வரும் 23-ந்தேதி ஞாயிறு (நாளை) தொடங்க இருக்கிறது. சமீபத்தில் பிக்பாஸ்-3 சீசனுக்கான பணிகள் துவங்கி கமல் பங்குபெறும் புரோமோ வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் 15 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டாலும் கூட அந்த பட்டியலை மிகவும் ரகசியமாக வைத்துள்ளார்கள். இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் என்று ஒரு பட்டியல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நடிகைகள் கஸ்தூரி, விசித்ரா, பூனம் பாஜ்வா, சாந்தினி, காமெடி நடிகை மதுமிதா, நடிகர்கள் மோகன் வைத்யா, சக்திசரண், ராதாரவி, பிரேம்ஜி, சந்தான பாரதி, ஸ்ரீமன், ரமேஷ் திலக், டப்மாஷ் மிருணாளினி, மாடல் ஸ்ரீகோபிகா, விஜே ரம்யா, பாடகர் கிரிஷ் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக ஒரு பட்டியல் பரவுகிறது.
முன்னதாக இந்த பட்டியலில் சாக்ஷி அகர்வால், மாஸ்டர் மகேந்திரன் உள்பட சிலர் இருந்தனர். இப்போது பரவும் பட்டியல் உண்மையான பட்டியலா என்பது நாளை தெரியவரும்.
தமிழில் சில படங்களிலும் மலையாளத்தில் பல படங்களிலும் நடித்த விஷ்ணு பிரியா, இயக்குனர், தயாரிப்பாளர் மகனை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
தமிழில் செல்வா இயக்கிய ‘நாங்க’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் விஷ்ணுபிரியா. புதுமுகங்கள் தேவை என்ற படத்திலும் நடித்துள்ளார். மலையாளத்தில் ஸ்பீடு டிராக் படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். ராத்திரி மழா, மகர மன்சு, கிரைம் ஸ்டோரி, பெண் பட்டினம், நாட்டி பிரபொசர், காட்ஸ் ஓன் கண்ட்ரி உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மலையாள டி.வி. தொடர்களிலும் நடிக்கிறார்.
விஷ்ணுபிரியாவுக்கும், பிரபல மலையாள இயக்குனரும் தயாரிப்பாளருமான ஈஸ்ட் கோஸ்ட் விஜயன் மகன் வினய்க்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்கள் திருமணம் ஆழப்புழையில் நடந்தது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர். நடிகைகள் பாமா, ஸ்ருதி லட்சுமி, இயக்குனர் சித்திக் உள்பட பலர் மணமக்களை நேரில் வாழ்த்தினார்கள். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று விஷ்ணுபிரியா அறிவித்து உள்ளார்.
நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி அஜித்தின் ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருவது இணையத்தில் இப்போது டிரெண்டிங் ஆகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிப்பில் மட்டுமின்றி ரசிகர்களிடம் அன்பு காட்டுவதிலும், மரியாதையுடன் பழகுவதிலும் ஜாம்பவானாக இருப்பவர் விஜய். இவரை ரசிகர்கள் தளபதி என அன்போடு அழைப்பதும் உண்டு.

திரைப்படங்களில் நடிக்க தொடங்கியது முதல் இன்று வரை தனது குணத்தினால் அனைவரையும் கவர்ந்துள்ளார் என்றால் சந்தேகம் இல்லை. விஜய்க்கு இன்று 45வது பிறந்தநாள்.

இதனை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக சில தியேட்டர்களில் விஜய்யின் தெறி, போக்கிரி, துப்பாக்கி ஆகிய மெகா ஹிட் திரைப்படங்களை திரையிடுகின்றன.
ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக விஜய்யின் 63வது படமான பிகில் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. வெளியான நொடி முதல் ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பு மக்களிடமும் உற்சாக வரவேற்புப் பெற்றது.
மேலும் சமூக வலைத்தளங்களில் உலக அளவில் டிரெண்டிங் ஆனது. இதையடுத்து விஜய்க்கு, அஜித் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக் கூறி டிரெண்டாக்கி இருக்கிறார்கள்.
Ajith Fans Celebrating Vijay Birthday#HBDvijay_THALAfanspic.twitter.com/mxXsPzmnDU
— Maalai Malar News (@maalaimalar) June 22, 2019
பொதுவாக விஜய், அஜித் ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் சண்டையிடுவது வழக்கம். ஆனால், விஜய்யின் பிறந்தநாளான இன்று, அஜித்தின் ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தும், விஜய் ரசிகர்களை டேக் செய்தும் புகைப்படங்களை பகிர்ந்து தெறிக்கவிட்டு வருகின்றனர்.
தமிழில் திமிரு, சிலம்பாட்டம் படங்களில் நடித்த வில்லன் நடிகர் விநாயகன், மீடூ புகாரில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தமிழில் விஷால் நடித்து திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய ‘திமிரு’ படத்தில் வில்லனாக நடித்தவர் விநாயகன். சிம்புவின் சிலம்பாட்டம், தனுசின் மரியான் படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் அதிகமான படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் விநாயகன் பா.ஜனதாவுக்கு எதிராக பேசி சர்ச்சையில் சிக்கினார். அவரை நிறம், சாதி ரீதியாக சமூக வலைத்தளத்தில் தாக்கினர். இந்த நிலையில் விநாயகன் மீது கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர் மிருதுளா தேவி மீடூவில் பாலியல் குற்றச்சாட்டு சொன்னார்.

அவர் கூறும்போது, “நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக விநாயகனை செல்போனில் தொடர்புகொண்டு அழைத்தேன். அப்போது என்னிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்தார். என்னை மட்டுமின்றி எனது தாயும் அவர் விருப்பத்துக்கு ஏற்ப ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் பாலியல் ரீதியாக வற்புறுத்தினார் என்றார்.
இதுகுறித்து போலீசிலும் புகார் அளித்தார். இந்த குற்றச்சாட்டு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் வழக்குப்பதிவு விநாயகனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் கூறும்போது “விநாயகனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினோம். அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தோம். அதன்பிறகு விநாயகனை கைது செய்தோம். அவர் செய்த குற்றச்செயல் ஜாமீனில் விடுவிக்க கூடியதுதான். எனவே ஜாமீனில் விடுதலை செய்தோம்” என்றனர்.
விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தளபதி 63 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட படக்குழுவினர் தற்போது இரண்டாவது லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
விஜய் - அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் 'தளபதி 63'. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு பிகில் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த போஸ்டர் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இரண்டாவது லுக் போஸ்டரை நள்ளிரவு 12 மணிக்கும் வெளியிட இருப்பதாக தெரிவித்த நிலையில் படத்தின் 2-வது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தளபதி 63 படத்திற்கு தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
‘தெறி', 'மெர்சல்' படங்களுக்கு பிறகு விஜய் - அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் 'தளபதி 63'. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டனர்.
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டனர். பிகில் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரை தற்போது படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இரண்டாவது லுக் போஸ்டரை இன்று நள்ளிரவு 12 மணிக்கும் வெளியிட இருக்கிறார்கள்.
Kalpathi S Aghoram proudly presents our very own #Thalapathy@actorvijay as #BIGIL@Atlee_dir@arrahman@Ags_productionpic.twitter.com/cRqu3EHI01
— Archana Kalpathi (@archanakalpathi) June 21, 2019
இப்படத்தில் விஜய்யுடன், நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, சவுந்தரராஜா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
திருமணத்திற்குப் பிறகு ஆர்யா, சாயிஷா இருவரும் இணைந்து நடித்து வரும் ‘டெடி’ திரைப்படம் ஐரோப்பாவில் படமாக்கப்பட்டு வருகிறது.
கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவும் சாயிஷாவும் முதன்முறையாக இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கிடையே காதல் மலர்ந்தது. திருமணத்துக்கு பின்னரும் இந்த ஜோடி தற்போது ‘டெடி’ படத்தில் நடித்து வருகிறது.
மே மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. சென்னை மட்டுமல்லாமல் ஐரோப்பாவிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது. படப்பிடிப்புக்காக அஸர்பைஜான் சென்றுள்ள ஆர்யாவும் சாயிஷாவும் இரவு நேரத்தில் நகர வீதிகளை சுற்றி வரும் புகைப்படத்தை சாயிஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

டிக் டிக் டிக் படத்துக்குப் பின் சக்தி சவுந்தரராஜன் ‘டெடி’ படத்தை இயக்குகிறார்.
லக்ஷ்மன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் தனது 16வது ஆண்டை கேக் வெட்டி நடிகர் ஜெயம் ரவி கொண்டாடி இருக்கிறார்.
ஜெயம் ரவி அடுத்ததாக லக்ஷ்மன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இது ஜெயம் ரவியின் 25-வது படமாக உருவாகிறது. இதில் லக்ஷ்மனும் ஜெயம் ரவியும் ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் படங்களுக்கு பின் மூன்றாவது முறையாக இணைகிறார்கள்.
இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நித்தி அகர்வால் நடிக்கிறார். தம்பி ராமையா, ராதாரவி, சதீஷ், சரண்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டட்லி ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஜெயம் ரவி சினிமாவுக்கு வந்து 16 ஆண்டுகள் ஆன நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.
கென் ஸ்காட் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ஹாலிவுட் படம் தமிழில் பக்கிரி என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது.
குற்றம் செய்துவிட்டு போலீசில் சிக்கிக்கொண்ட மூன்று இளைஞர்களை சந்திக்கிறார் தனுஷ். அவர்களை நல்வழிப் படுத்துவதற்காக தன் வாழ்க்கை கதையை கூறுகிறார்.
சிறுவயதில் இருக்கும் போது சிறுசிறு திருட்டுகள் செய்து போலீஸ் மாட்டிக் கொள்கிறார் தனுஷ். வெளியே வந்த பிறகும் திருட்டை தொடர்ந்து செய்து வருகிறார். அப்போது மேஜிக் செய்து பணம் சம்பாதிப்பவர்களை பார்த்த தனுஷ், தனது கூட்டாளிகளுடன் சென்று பணத்தை திருடுகிறார்.

அப்பா யார் என்றே தெரியாமல் இருக்கும் தனுஷை, அம்மா தான் சிரமப்பட்டு வளர்க்கிறார். அம்மாவின் இறப்புக்கு பிறகு தன் தந்தை பாரீசில் இருப்பதை அறிந்து அங்கே செல்கிறார். பாரீஸ் சென்ற தனுஷ் வாழ்க்கையில் என்ன நடந்தது? தன் கதை மூலம் மூன்று இளைஞர்களை நல்வழிப் படுத்தினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் தனுஷின் நடிப்பு சிறப்பு. அவரது திறமைக்கு தீனி போடும் விதத்தில் நகைச்சுவை, எமோஷனல், காதல் எல்லாம் கலந்த கதையாக இப்படம் அமைந்திருக்கிறது. சண்டைக்காட்சிகள், பஞ்ச் வசனங்கள் இல்லாமல், மிகவும் இயல்பான தனுஷை இப்படத்தில் பார்க்க முடிகிறது. வாழ்க்கை ஓட்டத்தில் பல்வேறு விதமான சூழ்நிலைகளிலும் மனிதர்களிடமும் சிக்கி தவிக்கும் காட்சிகளில் கலக்கி இருக்கிறார்.

ஒரே காட்சியில் தனுஷுடன் காதலில் விழும் எரின் மொரியாட்டி அழகு பதுமையாக வருகிறார். நடிகையாகவே வரும் இன்னொரு நாயகி பெரினைசி பெஜோவும் படத்திற்கு சிறப்பான தேர்வு.
தனுஷின் கூட்டாளியாக வரும் பர்காத் அப்டி, கஸ்டம்ஸ் ஆபிசராக வந்து காமெடி செய்யும் பென் மில்லர், தனுஷின் அம்மாவாக வரும் அம்ருதா ஆகியோரும் படத்தை சுவாரசியமாக நகர்த்துகிறார்கள்.

பல நாடுகளில் நடக்கும் கதை என்பதால் வின்சென்ட்டின் ஒளிப்பதிவு அந்தந்த நாட்டின் சிறப்பான இடங்களை அழகாக காட்டியுள்ளது. பாராசூட்டில் தனுஷ் பறக்கும் காட்சிகளும் ஈபிள் டவர் காட்சிகளும் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. நிக்கோலஸ், அமித் திரிவேதி கூட்டணியின் இசை ரசிக்க வைத்திருக்கிறது.
மிகவும் எளிமையான கதையை ஆர்ப்பாட்டம் இல்லாமல் மிகவும் ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார் இயக்குனர் கென் ஸ்காட். வாழ்க்கையின் தத்துவத்தை எளிய கதை மூலம் உணர்த்தியிருக்கிறார். ஆங்கில படங்களுக்கே உரித்தான சில லாஜிக் மீறல்கள் இப்படத்திலும் காண முடிகிறது.
மொத்தத்தில் ‘பக்கிரி’ வாழ்க்கை தத்துவம்.
விஜூ, பல்லவி டோரா, அஜெய் குமார், என்சிபி.விஜயன் நடிப்பில் ஜெகதீசன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘மோசடி’ படத்தின் விமர்சனம்.
விஜூ தனது நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு மோசடிகளில் ஈடுபடுகிறார். மனிதர்களின் பேராசையை தூண்டி அவர்களை ஏமாற்றும் விஜூ குறுகிய காலத்தில் 100 கோடி ரூபாய் பணத்தை சேர்ப்பதை லட்சியமாக கொண்டு இருக்கிறார். 100 கோடி ரூபாய் சேரும் நேரத்தில் போலீசில் நண்பர்களுடன் சிக்கிக் கொள்கிறார் விஜூ.
போலீஸ் விசாரணையில் விஜூவின் பிளாஷ்பேக் தொடங்குகிறது. பண மதிப்பிழக்கத்தின் போது ஆளூங்கட்சி அமைச்சருக்காக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை புது 2000 ரூபாய் நோட்டுகளாக மாற்றும் பணியில் ஈடுபடுகிறார். அப்படி மாற்றப்படும் 100 கோடி பணத்தை விஜூ வசம் வைத்துக்கொள்ள சொல்கிறார் அமைச்சர். சிலகாலம் கழித்து வாங்கிக்கொள்வதாக கூறுகிறார்.

ஆனால் அந்த பணம் காணாமல் போகிறது. எனவே 30 நாட்களில் அந்த 100 கோடியை திருப்பி தரும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார். இவை எல்லாம் தெரிய வந்ததும் போலீஸ் என்ன செய்தது? விஜூவின் பணம் எப்படி காணாமல் போனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
விஜூவுக்கு மோசடிகள் செய்யும் கதாநாயகன் வேடம் பொருத்தமாக இருக்கிறது. முதல் பாதியில் நண்பர்களுடன் சேர்ந்து அவர் செய்யும் மோசடிகள் சுவாரசியமாக இருக்கின்றன. மோசடி செய்வதற்காக பல கெட் - அப்புகள் போட்டு முடிந்த அளவுக்கு நடித்துள்ளார்.

நாயகி பல்லவி டோரா விஜூவின் மனைவியாக வருகிறார். குறைவான காட்சிகளில் வந்தாலும் புது மனைவிக்கே உரிய வெட்கத்தையும் காதலையும் வெளிப்படுத்துகிறார். அமைச்சராக வரும் விஜயனும் அவரது தம்பியாக வருபவரும் வில்லத்தனமான நடிப்பில் கவனிக்க வைக்கிறார்கள்.
முதல் பாதி முழுக்க மோசடி காட்சிகளை மட்டுமே வைத்திருக்கிறார் இயக்குனர் ஜெகதீசன். இது ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், இரண்டாம் பாதியை உணர்வுபூர்வமாக மாற்றி இருக்கிறார். பணமதிப்பிழக்கத்தின் போது எப்படி எல்லாம் பணத்தை மாற்றினார்கள் என்று காட்டியது ஆச்சர்யப்பட வைக்கிறது.
ஆர்.மணிகண்டனின் ஒளிப்பதிவும் ஷாஜகானின் இசையும் படத்தை ஓரளவிற்கு ரசிக்க வைக்கிறது.
மொத்தத்தில் ‘மோசடி’ நிதானமான அடி.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு எம்.ஜி.ஆர் பட தலைப்பை வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்தை ‘கடைக்குட்டி சிங்கம்‘ திரைப்படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்குகிறார். இந்த படத்துக்கு ‘எங்க வீட்டு பிள்ளை’ என பெயர் வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி, சமுத்திரக்கனி, அனு இம்மானுவேல், நடராஜ், ஆர்.கே.சுரேஷ் என பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

‘எங்க வீட்டு பிள்ளை’ படத்தின் தலைப்பு உரிமை விஜயா புரொடக்ஷன் நிறுவனத்திடம் உள்ளது. இதன் காரணமாக ‘எங்க வீட்டு பிள்ளை’ தலைப்பை படத்துக்கு வைக்க அனுமதி கேட்டு படக்குழுவினர் விஜயா புரொடக்ஷன் நிறுவனத்தை அணுகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அஜித்துடன் ஆசை, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்த பூஜா பத்ரா இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார்.
அஜித்தின் ஆசை படத்தில் ஒரு பாடலுக்கும், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தவர் பூஜா பத்ரா. மலையாளம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். பூஜா பத்ராவுக்கு தற்போது 42 வயது ஆகிறது.
பூஜா பத்ராவுக்கும், டாக்டர் சோனு அலுவாலா என்பவருக்கும் 2002-ல் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திருமணம் நடந்தது. அதன்பிறகு அமெரிக்காவிலேயே தங்கி குடும்பம் நடத்தினார். 2010-ல் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்தார். அதன்பிறகு இந்தியா திரும்பிவிட்டார்.

இந்த நிலையில் பிரபல இந்தி நடிகரான நவாப் ஷாவுக்கும், பூஜா பத்ராவுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் ஜோடியாக சுற்றினார்கள். நவாப் ஷா தமிழில் கஜேந்திரா, போஸ், யான் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். பூஜா பத்ராவும், நவாப் ஷாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பின.
தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் பூஜா பத்ராவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நவாப் ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, “அதில் உன்னைப்போல் ஒரு பெண்ணை கண்டுபிடிக்க எனக்கு 46 வருடங்கள் ஆகியிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக இந்தி பட உலகில் தகவல் பரவி உள்ளது.






