என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகர் சங்க தேர்தல் சென்னையில் நடைபெற்று வரும்நிலையில், நடிகர் மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வருகிறது.

    இதற்கு தேவையான பாதுகாப்பை மயிலாப்பூர் துணை போலீஸ் கமிஷனர் தலைமையிலான போலீசார் வழங்குகின்றனர். தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக நடிகர், நடிகைகள் காலை முதலே வந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். 



    இந்த நிலையில், தேர்தலில் வாக்களிப்பதற்காக வந்த மைக் மோகன் பெயரில் ஏற்கனவே வாக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் நடிகர் மைக் மோகன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நடிகர் மைக் மோகன் பெயரில் கள்ள வாக்கு பதிவானது என்ற தகவல் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
    நடிகர் சங்க கட்டிடத்திற்காக தான் இவ்வளவு போராட்டம் என்று நடிகர் விஷால் வாக்களித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
    தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்தலை பாண்டவர் அணி, சுவாமி சங்கரதாஸ் அணி என இரு அணிகளாக பிரிந்து திரையுலகினர் சந்திக்கின்றனர்.



    தேர்தலை முன்னிட்டு நடிகர், நடிகைகள் ஓட்டுப்பதிவு நடைபெறும் இடத்திற்கு காலை முதல் வர தொடங்கியுள்ளனர்.  இந்த தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், நடிகர் சங்க கட்டிடத்திற்காக தான் இவ்வளவு போராட்டம் நடக்கிறது. எதிரணிக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். தேர்தல் நியாயமாக நடைபெறும் என்றும் அவர் பேட்டியளித்து உள்ளார்.
    நடிகர் சங்க தேர்தல் இன்று சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ஆர்யா சைக்கிளில் வந்து வாக்களித்திருக்கிறார்.
    நடிகர் சங்க தேர்தல் புனித எப்பாஸ் பள்ளியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பல நடிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். விஷால், குஷ்பு, சார்லி, சங்கீதா உள்ளிட்ட பலர் வாக்களித்தனர். நடிகர் ஆர்யா சைக்கிளில் வந்து வாக்களித்தார்.

    காலையில் சைக்கிளிங் சென்ற ஆர்யா, அப்படியே இங்கு வந்து வாக்களிக்க வந்ததாக கூறினார். மேலும், இந்த தேர்தலை தவிர்த்திருக்கலாம். அனைவரும் உட்கார்ந்து பேசி நல்ல முடிவை எடுத்திருக்கலாம். நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் கட்டிடம் உருவாக மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார்கள் என்று ஆர்யா கூறினார்.



    இந்த தேர்தலில் விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகிறார்கள். 
    நடிகர் சங்க தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், நியாயம் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த அணி ஜெயிக்கும் என்று குஷ்பு கூறியுள்ளார்.
    நடிகர் சங்க தேர்தல் புனித எப்பாஸ் பள்ளியில் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகிறார்கள். அனைத்து நடிகர்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.



    இதில் வாக்களிக்க வந்த குஷ்பு கூறும்போது, ‘நடிகர் சங்க தேர்தல் நடக்குமா என்று கேள்வி குறியாக இருந்தது. இன்று வெற்றிகரமாக நடந்து வருகிறது. நியாயம் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த அணி ஜெயிக்கும். நிறைய பேருக்கு தேர்தல் எங்கு நடக்கிறது என்றே தெரியவில்லை. கடந்த முறை எங்கு நடந்ததோ அங்குதான் தேர்தல் நடந்து வருகிறது. இந்த தேர்தலில் 80 சதவிகிதம் வாக்குப்பதிவு நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். 
    நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில் நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.
    சென்னை:

    தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 23-ம் தேதி எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு கருதி அந்த கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியது.

    இதை எதிர்த்து விஷால் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நடிகர் சங்க தேர்தல் புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற நேற்று அனுமதி வழங்கியது. கடந்த 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலும் இந்த பள்ளியில்தான் நடந்தது.



    நடிகர் சங்க தேர்தலில் விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகிறார்கள். 

    இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து நடிகர்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். தேர்தலை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்கு தாமதமாக கிடைத்ததால் வாக்களிக்க இயலாமல் போனதற்கு வருந்துகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
    நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்கு தாமதமாக கிடைத்ததால் நான் வாக்களிக்க இயலாமல் போனதற்கு வருந்துகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    நடிகர் சங்கத் தேர்தல் ஏற்கனவே அறிவித்தப்படி சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில்  நாளை காலை 7 மணிக்கு தேர்தல் நடைபெறுகிறது.

    இந்நிலையில், நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்கு தாமதமாக கிடைத்ததால் நான் வாக்களிக்க இயலாமல் போனதற்கு வருந்துகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக, நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் கூறியதாவது:

    மும்பையில் படப்பிடிப்பில் உள்ள நிலையில் நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்கு எனக்கு தாமதமாக கிடைத்தது. தபால் வாக்கு படிவம் இன்று மாலை 6.45 மணிக்கு வந்ததால் வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

    தபால் வாக்கு படிவத்தை முன் கூட்டியே பெற முயற்சித்தும் தாமதமாக கிடைத்தது. இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான நிலை வரும் காலங்களில் ஏற்படக்கூடாது. தாமதமாக தபால் வாக்கு கிடைத்ததால் வாக்களிக்க இயலாமல் போனதற்கு வருந்துகிறேன் என பதிவிட்டுள்ளார். 
    லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் பசங்க கிஷோர் மற்றும் லவ்லின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் முன்னோட்டம்.
    தமிழ் சினிமாவின் மிக பிரமாண்டமான மற்றும் பெருமைமிகு தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சினிமாஸ் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியிருக்கிறது.

    படத்தை பற்றி லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் கூறுகையில், "படம் மனித உறவுகளை பற்றி பேசுவதோடு, ஒரு அழகான காதல் கதையையும் கொண்டிருக்கிறது. எளிய மற்றும் யதார்த்தமான படமான இதை பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என நான் நம்புகிறேன்" என்றார்.

    லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் எழுதி இயக்க, பசங்க கிஷோர் மற்றும் லவ்லின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தை மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க, கிருஷ்ணா சேகர் டி.எஸ். ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நாளை நடைபெற இருக்கும் இடத்தை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
    தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் 23-ந்தேதி தேர்தல் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு கருதி அந்த கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியது.

    தற்போது நடிகர் சங்க தேர்தல் புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலும் இந்த பள்ளியில்தான் நடந்தது.



    நடிகர் சங்க தேர்தலில் விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகிறார்கள். 
    கங்கை அமரன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கூடாது என்று நடிகர் ராமராஜன் கூறியிருக்கிறார்.
    கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் நடிப்பில் வெளியான படம் கரகாட்டக்காரன். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தின் 30வது ஆண்டு விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருப்பதாக கங்கை அமரன் தெரிவித்தார். 

    இது குறித்து ராமராஜன் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:- கரகாட்டக்காரன் 2 பற்றி என்னிடமும் கங்கை அமரன் பேசினார். ஆனால், எனக்கு அதில் உடன்பாடு இல்லை. சில வி‌ஷயங்களை திரும்ப தொடக்கூடாது. திரும்ப தொட்டா சரியா வராது. 



    இப்போ இவங்க சொல்ற ‘கரகாட்டக்காரன் 2’ படம் கரகாட்டக்காரனைவிட 500 நாள் அதிகமா ஓடப்போற படம்னாலும் நான் பண்ணமாட்டேன். பொதுவா, இந்த ‘பார்ட் டூ’ல எனக்கு உடன்பாடு கிடையாது. முருகனோட அறுபடை வீடு இருக்குன்னா, பழநி, திருச்செந்தூர்னு வேற வேற பெயர்லதான் இருக்கு. ஏன், ‘பழநி 1’, ‘பழநி 2’னு அது இல்லைன்னு யோசிக்கணும். அதுமாதிரிதான் இதுவும். சில வி‌ஷயங்களை ‘பார்ட் டூ’ பண்ணக்கூடாது’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    இந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை தனது ரசிகர் மன்றம் மூலம் நடிகர் விஜய் சேதுபதி நிறைவேற்றியுள்ளார்.
    தேனி மாவட்டம் அல்லி நகரத்தை சேர்ந்தவர் மாணவி உதய கீர்த்திகா. இவர் தேனியில் அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர்.
    தனது ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினியரிங் படிப்பை உக்ரைன்-கார்கிவ் இல் உள்ள நேஷனல் ஏர் போர்ஸ் யுனிவர்சிட்டியில் படித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் 'இஸ்ரோ" சார்பாக விண்வெளிக்கு அனுப்பப்படுகிற விண்வெளி வீரர்கள் குழுவில் இடம் பிடித்து இந்தியாவுக்கான விண்வெளி வீராங்கனை ஆவதே இவர் லட்சியம்.

    தற்போது, போலந்து நாட்டில் உள்ள விண்வெளி "Analog austronaut training centre" என்ற விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுவதற்கு இடம் கிடைத்துள்ளது. பயிற்சிச் கட்டணம், தங்குமிடம் கட்டணம், உணவுச் செலவுகள், விமானக் கட்டணம் ஆகிய வகையில், இப்பயிற்சிக்கு, 8 லட்சம் ரூபாய்க்கும் மேல் தேவைப்படுகிறது.



    மாணவியின் பயிற்சிக்காக தேவைப்படும் தொகையை விஜய் சேதுபதி தன் ரசிகர் மன்றத்தின் சார்பாக அவரின் ரசிகர் மன்ற தலைமை செயலாளர் குமரன் மற்றும் தேனி நகர தலைவர் விக்னேஷ் ஆகியோர் மூலம் வழங்கியுள்ளார். 

    மேலும் விஜய் சேதுபதி படப்பிடிப்பில் இருப்பதால் தொலைபேசியின் மூலம் உதயகீர்த்திகாவிடம் பேசி பாராட்டியுள்ளார்.
    தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமானவர் வாணி போஜன், தான் அறிமுகமாக இருக்கும் முதல் படத்தில் இருந்து விலகி இருக்கிறார்.
    தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமானவர் வாணி போஜன். இவர் லோகேஷ் இயக்கும் ‘என் 4’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். சுயாதீன படமாக உருவாக உள்ள இப்படம் காசிமேடு பகுதியை மையமாக கொண்டு திரில்லர் ஜானரில் கதை அமைக்கப்பட்டு இருந்தது. 

    தற்போது வெளியான தகவலின்படி, வாணி போஜன் கால்ஷீட் பிரச்சினை தொடர்பாக இப்படத்திலிருந்து விலகியுள்ளார். அதனால் என் 4 படத்தில் வாணி போஜனுக்கு பதிலாக ‌ஷரன்யா துராதி கதாநாயகியாக நடிக்க உள்ளார். 



    தற்போது வாணி போஜன் வைபவ் நடிக்கும் புதிய படத்திலும், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் முதல் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
    விஜய்யின் பிறந்தநாளை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வந்தாலும், அஜித் ரசிகர்கள் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளார்கள்.
    பொதுவாக விஜய், அஜித் ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் சண்டையிடுவது வழக்கம். ஆனால், விஜய்யின் பிறந்தநாளான இன்று, அஜித்தின் ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை விஜய்க்கு தெரிவித்தும், விஜய் ரசிகர்களை டேக் செய்தும் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகின்றனர். 

    விஜய்யின் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடினாலும், ஒரு பக்கம் #என்றும்_தலஅஜித் என்று அஜித் ரசிகர்கள், அஜித் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக்கை இந்தியளவில் டிரெண்டாக்கி உள்ளனர்.



    முன்னதாக விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ‘பிகில்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×