என் மலர்
சினிமா செய்திகள்
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமான அமலாபால், தற்போது அப்படத்தில் இருந்து விலகி இருக்கிறார்.
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தவர் வெங்கட கிருஷ்ண ரோகநாத். இவர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க அமலா பால் ஒப்பந்தமாகி இருந்தார்.
விஜய் சேதுபதியின் 33-வது படமான இப்படத்திற்கு இன்னும் தலைப்பிடப் படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் பழனியில் தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் கால்சீட் பிரச்சினை காரணமாக அமலா பால் படத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு பதில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்க இருப்பதும் தெரிய வந்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ படத்தில் திருநங்கை ஜீவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில் அதில் இணைந்து நடிப்பவர்கள் பற்றிய அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினி நீண்ட இடைவெளிக்குப் பின் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். மும்பையை கதைக்களமாக கொண்டிருப்பதால் பெரும்பாலான காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன.

யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் திருநங்கை ஜீவா முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.
திருநங்கை ஜீவா இதற்கு முன் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘தர்மதுரை’ படத்தில் அறிமுகமானவர். பல குறும்படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை அமலாபாலை வைத்து ‘ஆடை’ படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர் ரத்னகுமார், அவரிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஆடை படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். தமிழ் படங்களில் எந்த நடிகையும் இதுபோல் துணிச்சலாக நடித்தது இல்லை. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் அமலாபால் ஆடை இல்லாமல் நடித்த காட்சிகள் இருந்தன.
இந்த டிரெய்லரை அதிகமானோர் பார்த்துள்ளனர். நிர்வாண காட்சியை 20 நாட்கள் படமாக்கியதாகவும், அத்தனை நாளும் ஆடை இல்லாமலேயே நடித்ததாகவும் கூறப்படுகிறது. அமலாபாலின் துணிச்சலை வலைத்தளத்தில் பலரும் பாராட்டுகின்றனர். இதுபோல் அமலாபாலின் அம்மா பேசும் செல்போன் நம்பர் டிரெய்லரில் இருந்தது.
அந்த நம்பருக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் போன் செய்து நீங்கள் அமலாபால் அம்மாவா? அமலாபாலின் போன் நம்பர் கிடைக்குமா? என்று பேசி வருகிறார்கள். அந்த நம்பர் உதவி இயக்குனருடையது என்பது குறிப்பிடத்தக்கது. ஆடை படத்தை ரத்னகுமார் இயக்கி உள்ளார்.

இந்த நிலையில் ஆடை டிரெய்லரில் இருந்த காட்சிகளை வைத்து அமலாபாலை கேலி செய்வதுபோல் வடிவேலுவை இணைத்து மீம்ஸ்களை உருவாக்கி உள்ளனர். இந்த மீம்ஸ்கள் வலைத் தளத்தில் வைரலாகி வருகின்றன. இதற்காக அமலாபாலிடம் ரத்னகுமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, “மீம்ஸ்களை உருவாக்குவது அவரவர் கருத்து சுதந்திரம். இப்போது எல்லா விஷயங்களையுமே வடிவேலு மீம்ஸ்களில் வெளியிடுகிறார்கள். அதற்கு ஆடை படமும் விதிவிலக்கு அல்ல. ஆடை படம் தனிமனித சுதந்திரத்தையும், சுயஒழுக்கத்தையும் பற்றி பேசுகிறது. சாரி அமலாபால்” என்றார்.
நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டியிடம் ரூ.86 லட்சம் மோசடி செய்த கல்குவாரி அதிபர் வடிவேலு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பிரபல நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி சென்னை அண்ணாநகரில் வசித்து வருகிறார். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகார் மனுவில், மதுரையைச் சேர்ந்த கல்குவாரி அதிபர் வடிவேலு (வயது 56) என்பவர் தனது குவாரியில் இருந்து கருங்கல் ஜல்லி தருவதாக ரூ.86 லட்சம் வாங்கினார் என்றும், கருங்கல் ஜல்லி தராமல், பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி விட்டதாகவும், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் மல்லிகா ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கிளாஸ்டின் டேவிட் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
புகார் கூறப்பட்ட வடிவேலு நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
ராஜராஜ சோழன் குறித்து பேசியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் கேட்ட பா ரஞ்சித்திடம் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
மதுரை:
சினிமா டைரக்டர் பா.ரஞ்சித், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
ஜூன் 5-ந் தேதி நீலப்புலிகள் அமைப்பின் சார்பில், அதன் நிறுவனர் டிஎம் மணி என்ற உமர் பாரூக்கின் நினைவு தினத்தையொட்டி பொதுக்கூட்டம் நடந்தது.
அதற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் கூட்டத்தில் பேரரசர் ராஜராஜ சோழனின் வரலாற்று உண்மைகள் சிலவற்றை குறிப்பிட்டேன்.
சாதியத்தை எவ்வாறு நீக்குவது? சாதி இல்லாத சமூகத்தை உருவாக்குவது எப்படி? போன்றவை குறித்தும், நிலமற்ற மக்கள் குறிப்பாக டெல்டா பகுதியில் நிலமற்றவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த உமர் பாரூக்கின் “செந்தமிழ் நாட்டு சேரிகள்” எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளவை குறித்தும் பேசினேன்.
நான் ஒரு இந்திய குடிமகன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 19 பிரிவு 1-ன் படி பேச்சுரிமை எனக்கு உள்ளது. ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமலும் முதற்கட்ட விசாரணையை மேற்கொள்ளாமலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எனது கருத்து எந்த சமூகத்திற்கும் எதிராக அமையவில்லை. நில உரிமை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலேயே பேசினேன்.
எனது பேச்சு எந்த தரப்பு மக்களிடையேயும் பிளவை ஏற்படுத்தும் வகையில் அமையவில்லை. ஆகவே என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தடை விதிப்பதோடு, வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல்வேறு புத்தகங்கள் குறிப்பாக தமிழக அரசு வெளியிட்ட புத்தகம் ஒன்றிலேயே பா.ரஞ்சித் பேசியது தொடர்பான குறிப்புகள் இருப்பதாகவும், ஜூன் 5-ந் தேதி பேசிய நிலையில் எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாத நிலையில் 11-ந் தேதியே வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி பேச்சுரிமை உள்ளது, ஆகவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கோரினார்.

அதற்கு நீதிபதி பாரதிதாசன், பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் தமிழக அரசு பதிப்பித்த புத்தகத்தில் பயிர் செய்வோர் நிலத்தை சொந்தமாக வைக்கலாம் எனவும், பயிர் செய்யாதோர் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும், ராஜராஜ சோழன் காலத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜராஜ சோழன் தலித் மக்களின் நிலங்களை கையகப்படுத்தினார் என கூறியதற்கான ஆதாரம் எங்குள்ளது? எந்த நோக்கத்தில் இவ்வாறு பேசினீர்கள்? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து நீதிபதி, பா.ரஞ்சித் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஆதாரங்கள், ஆவணங்களுடன் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய தஞ்சை திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூலை 8-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

சிந்துபாத் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துவரும் அஞ்சலி தமிழ் பையனை திருமணம் செய்ய போவதாக பேட்டி அளித்துள்ளார்.
அஞ்சலி விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள சிந்துபாத் படம் வரும் வாரம் வெளியாக இருக்கிறது. அதையொட்டி அவர் அளித்த பேட்டி:
மிக இயல்பான ஒரு கதாபாத்திரம். படத்தில் விஜய் சேதுபதி சற்று காது கேளாதவராக நடித்துள்ளார். எனவே அவரை காதலிக்கும் நான் சத்தமாக பேசவேண்டும். இயல்பாகவே நான் சற்று சத்தமாக பேசுவேன். எனவே என்னை தேர்வு செய்து இருக்கிறார்கள். என்னை கடத்தி சென்று விடுகிறார்கள். அவர்களிடம் இருந்து 36 மணி நேரத்தில் விஜய்சேதுபதி எப்படி மீட்கிறார் என்பதே கதை.
இறைவி படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து இருந்தாலும் இந்த படத்தில் நடித்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது. காரணம் இதன் கதைக்களம் புதிது. அவரது மகன் சூர்யா சேதுபதி துருதுருவென இருப்பான். ஆனால் காட்சிகளில் சிறப்பாக நடித்து அசரடிப்பான். அவன் என்னை அஞ்சலி அக்கா என்று அன்புடன் அழைப்பான்.

என் அம்மா என்னை தான் பேய் என்று சொல்வார்கள். ஐதராபாத்தில் ஒரு படப்பிடிப்பில் நாங்கள் தங்கி இருந்த இடத்தில் பேய் இருப்பதாக சொன்னார்கள். நான் பார்க்கவில்லை. பேய் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
ஹீரோக்கள் யாராவது உங்களிடம் காதலை சொல்லி இருக்கிறார்களா?
இல்லை. நான் நடித்த ஹீரோக்களில் பெரும்பாலானவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டதே... ஜெய்க்கு தான் இன்னும் ஆகவில்லை. எப்போது பண்ணப்போகிறார் என்று தெரியவில்லை.
தினமும் பேசுவதில்லை. எப்போதாவது பேசுவேன். யாருடனும் தினசரி பேசும் வழக்கம் எனக்கு இல்லை. எனக்கு சினிமாவை விட வெளியில் தான் நண்பர்கள் அதிகம்.
வீடு ஐதராபாத்தில் இருந்தாலும் பெரும்பாலும் சென்னையில் தான் இருக்கிறேன்.
ஆமாம். இந்தியில் மாதவன், அனுஷ்கா நடிக்கும் சைலன்ஸ் படத்தில் போலீசாக நடிக்கிறேன்.
இல்லவே இல்லை.
எப்போது திருமணம்? தமிழ் பையனை திருமணம் செய்துகொள்வீர்களா?
நிச்சயமாக. தமிழ் பையனை திருமணம் செய்துகொள்ள தான் விருப்பம்.

ஆமாம் படத்தின் ஒளிப்பதிவாளரும், இயக்குனரும் என்னை சின்ன டச்சப் கூட பண்ணவிடவில்லை. ஊரில் இருக்கும் சாதாரண பெண் போல இருக்க வேண்டும் என்று உடை, அலங்காரம் எல்லாமே சாதாரணமாக இருக்க வேண்டியதாகி விட்டது. பாடல்களில் மட்டும் வேறு உடைகளில் வருவேன்.

என் அம்மா என்னை தான் பேய் என்று சொல்வார்கள். ஐதராபாத்தில் ஒரு படப்பிடிப்பில் நாங்கள் தங்கி இருந்த இடத்தில் பேய் இருப்பதாக சொன்னார்கள். நான் பார்க்கவில்லை. பேய் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
ஹீரோக்கள் யாராவது உங்களிடம் காதலை சொல்லி இருக்கிறார்களா?
இல்லை. நான் நடித்த ஹீரோக்களில் பெரும்பாலானவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டதே... ஜெய்க்கு தான் இன்னும் ஆகவில்லை. எப்போது பண்ணப்போகிறார் என்று தெரியவில்லை.
தினமும் பேசுவதில்லை. எப்போதாவது பேசுவேன். யாருடனும் தினசரி பேசும் வழக்கம் எனக்கு இல்லை. எனக்கு சினிமாவை விட வெளியில் தான் நண்பர்கள் அதிகம்.
வீடு ஐதராபாத்தில் இருந்தாலும் பெரும்பாலும் சென்னையில் தான் இருக்கிறேன்.
ஆமாம். இந்தியில் மாதவன், அனுஷ்கா நடிக்கும் சைலன்ஸ் படத்தில் போலீசாக நடிக்கிறேன்.
இல்லவே இல்லை.
எப்போது திருமணம்? தமிழ் பையனை திருமணம் செய்துகொள்வீர்களா?
நிச்சயமாக. தமிழ் பையனை திருமணம் செய்துகொள்ள தான் விருப்பம்.
விஜய் சேதுபதி, அஞ்சலி நடித்துள்ள சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம் என இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜூன் 21-ந்தேதி வெளியாக இருந்த விஜய் சேதுபதி, அஞ்சலி நடித்துள்ள சிந்துபாத் படத்தின் தயாரிப்பாளர், பாகுபலி தயாரிப்பாளருக்கு தர வேண்டிய தொகையைச் செலுத்தாததால் வெளியிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.
சமரசப் பேச்சுவார்த்தைக்கு பின் சிந்துபாத் படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 28-ந்தேதி என அறிவிக்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகும் சிந்துபாத் படத்தால், ஏற்கனவே இதே ரிலீஸ் தேதியை அறிவித்து காத்திருந்த படங்கள் தியேட்டர் கிடைக்காமல் அல்லது குறைவாகக் கிடைக்கலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டன.

‘பெரிய படங்களை சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகள் சிறியவற்றை மூழ்கடிக்கின்றன. விஜய் சேதுபதி சிப்பாயாக எங்கள் சிறிய படத்தை காப்பாற்ற வேண்டும். ஏற்கனவே திட்டமிடப்பட்ட படங்களுக்கு நேரத்தை கொடுக்க தயாரிப்பாளர்களிடம் கூறுங்கள். தேதியை 15 நாட்களுக்கு முன்னால் அறிவிக்கவும்’ என கூறியுள்ளார்.

இதனால் யோகி பாபுவின் தர்மபிரபு, வெற்றியின் ஜீவி, லட்சுமி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் போன்ற படங்களின் தயாரிப்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதிக்கு தனது நிலையை விளக்கி கோரிக்கை விடுத்துள்ளார்.

‘பெரிய படங்களை சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகள் சிறியவற்றை மூழ்கடிக்கின்றன. விஜய் சேதுபதி சிப்பாயாக எங்கள் சிறிய படத்தை காப்பாற்ற வேண்டும். ஏற்கனவே திட்டமிடப்பட்ட படங்களுக்கு நேரத்தை கொடுக்க தயாரிப்பாளர்களிடம் கூறுங்கள். தேதியை 15 நாட்களுக்கு முன்னால் அறிவிக்கவும்’ என கூறியுள்ளார்.
சென்னை புனித எப்பாஸ் பள்ளியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.
நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இதில் நடிகர்கள் கமல், விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பல நடிகர்களும், லதா, அம்பிகா, ராதா, குஷ்பு, சங்கீதா, வரலட்சுமி, மும்தாஜ், ஜனனி ஐயர் உள்ளிட்ட பல நடிகைகளும் வாக்குபதிவு செய்தார்கள்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. 1604 பேர் வாக்குகளை பதிவு செய்தனர். இந்த வாக்குப்பதிவுகள் பத்திரமாக வைக்கப்பட இருக்கிறது. 8ம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
ஹோலி ரெடிமர்ஸ் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் முசோலினி ஹிட்லர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து, நாயகனாக நடிக்கும் நீர்முள்ளி படத்தின் முன்னோட்டம்.
ஹோலி ரெடிமர்ஸ் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் முசோலினி ஹிட்லர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து, நாயகனாக நடிக்கும் படத்திற்கு “ நீர்முள்ளி“ என்று பெயரிட்டுள்ளார்.
நாயகியாக சுமா பூஜாரி நடிக்கிறார். மற்றும் ரேகா, மெய்வாரா, பொன்னம்பலம், வாகை சந்திரசேகர், இமான் அண்ணாச்சி, நளினி, வீரலட்சுமி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் அகத்தியன் நடிக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் நடிகர் முசோலினி ஹிட்லர் கூறியதாவது...
இந்த படம் கிரைம் மற்றும் காதல் கலந்த கமர்ஷியல் படம். இன்றைய சூழ்நிலையில் சமுதாயத்தில் பெண்கள் தங்களை சார்ந்த ஆண் உறவுகளை எப்படி கையாள்கிறார்கள், அதன் மூலம் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. காலத்திற்கேற்ப பெண்களின் எண்ண ஓட்டம் மாறுபடுவதால் ஏற்படும் சீர்கேடு பற்றி கதை இருக்கும். பெண்களுக்கான ஒரு விழிப்புணர்வை இந்த படம் கொடுக்கும்’ என்றார்.
கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி உலகமெங்கும் வசூல் சாதனை புரிந்த அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் மீண்டும் வெளியாக இருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி உலகமெங்கும் வசூல் சாதனை புரிந்த படம் அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம். இது அவெஞ்சர்ஸ் படத்தின் நான்காவது மற்றும் கடைசி பாகமாகும். ரசிகர்கள் விமர்சகர்கள் என அனைத்து தரப்பினரையும் மகிழ்வித்த இந்தத் திரைப்படம் வெளியான அனைத்து நாடுகளிலும் வசூல் சாதனை புரிந்து பாக்ஸ் ஆபீசில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இதற்கு முன் வசூல் சாதனையில் உலகின் முதல் மூன்று திரைப்படங்களாக வரிசையில் இருந்தவை அவதார், டைட்டானிக், ஸ்டார் வார்ஸ்: தி போர்ஸ் அவேக் கன்ஸ் போன்றவை. அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் திரைப்படம் மூன்றாவது மற்றும் இரண்டாவது இடத்திலுள்ள ஸ்டார் வார்ஸ் மற்றும் டைட்டானிக் படங்களை முந்தி தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், தற்போது புதிய காட்சிகளுடன் மீண்டும் ரிலீசாக இருக்கிறது அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம். ஸ்கீரீன் ரேண்ட் என்ற ஆங்கிலப் பத்திரிகைக்கு பேட்டி அளித்த மார்வெல் மேலாளர் கெவின் பெய்ஜி, ஜூன் 28-ம் தேதி அவெஞ்சர்ஸ் மீண்டும் வெளியாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். மேலும் ‘ஒரு நீக்கப்பட்ட காட்சி, சிறிய புகழ் அஞ்சலி மற்றும் சில ஆச்சரியங்கள் படம் முடிந்த பின் இணைக்கப்பட்டுள்ளன’ என்றார்.
தபால் வாக்கு தாமதமாக கிடைத்ததால் ரஜினி வாக்களிக்க இயலாமல் போனதற்கு நடிகர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடந்து வருகிறது. இதில் பல நடிகர்கள், நடிகைகள் அனைவரும் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் தனது வாக்கை பதிவு செய்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘நடிகர் சங்க தேர்தல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு பதிவு செய்தது சந்தோஷமாக இருக்கிறது. நாங்கள் எல்லோரும் ஒரு குடும்பம். போஸ்டல் ஓட்டு இல்லாமல் போனது வருத்தத்திற்குரியது. அடுத்த முறை இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ரஜினியின் ஓட்டு மிக முக்கியமானது. அது இல்லாதது வருத்தமளிக்கிறது. வெற்றியாளர்களுக்கு எனது வாழ்த்துகள்.

நடிகர் சங்க தேர்தலில் அரசியல் இருப்பதாக தெரியவில்லை. இருந்தால் அது இருக்க கூடாது என்பது எனது விருப்பம்’ இவ்வாறு கமல் கூறினார்.
புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற்று வரும் நடிகர் சங்க தேர்தலில் தன்னுடைய வாக்கை நடிகர் விஜய் பதிவு செய்திருக்கிறார்.
நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வருகிறது.

காலை 7 மணி முதல் தொடங்கிய இந்த வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பல முன்னணி நடிகர்கள், நாடக கலைஞர்கள், பழம் பெரும் நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பலர் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் தன்னுடைய வாக்கை பதிவு செய்திருக்கிறார்.