என் மலர்
சினிமா செய்திகள்
பிரபல நடிகர் சண்டை காட்சியில் நடித்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.
தமிழில் நான் ஈ, புலி, முடிஞ்சா இவன புடி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுதீப். கன்னட திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். பிரபுதேவா இயக்கத்தில் இந்தியில் தயாராகும் தபாங்-3 என்ற படத்தில் சுதீப் நடித்து வந்தார். இதில் அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் சமீபத்தில் படமாக்கி முடிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து கன்னடத்தில் தயாராகும் ‘கோட்டிகோபா-3’ என்ற புதிய படத்துக்கு சுதீப் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் சுதீப் பங்கேற்று நடித்து வந்தார். சண்டை காட்சியொன்றை படமாக்கினர்.

இதில் சுதீப் நடித்தபோது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு முதுகில் பலத்த அடிபட்டது. சுதீப் வலியால் துடித்தார். உடனடியாக அவரை அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில வாரங்கள் சுதீப் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
பி.மாரிமுத்து இயக்கத்தில் ஷமன் மித்ரு, சத்யகலா, சுந்தர்ராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தொரட்டி’ படத்தின் முன்னோட்டம்.
1980களில் நடக்கும் கதை. ஷமன் மித்ருவின் தந்தை அழகு ஊர் ஊராக சென்று ஆட்டு கிடை போடும் தொழில் செய்பவர். சொந்த ஊரோ வீடோ இல்லாமல் ஆட்டு கூட்டத்துடன் ஊர் ஊராக சென்று கிடை போடுவது அழகு குடும்பத்தின் வழக்கம். அழகுவின் தூரத்து சொந்தமான குமணனின் உதவியுடன் ஒரு ஊரில் கிடை போடுகிறார். குமணன் மகள் சத்யகலாவுக்கும் ஷமன் மித்ருவுக்கும் காதல் ஆகிறது.
அந்த ஊரில் திருடுவதையே வழக்கமாக வைத்திருக்கும் சுந்தர்ராஜ், சீலன், முத்துராமன் ஆகியோருடன் ஷமனுக்கு நட்பு ஏற்படுகிறது. குடிப்பழக்கத்துக்கும் அடிமையாகி விடுகிறார். தவறான வழியில் சென்ற ஷமனை திருத்துவதற்காகவே பெற்றோர் எதிர்ப்பை மீறி அவரை சத்யகலா திருமணம் செய்துகொள்கிறார். ஷமனால் அந்த 3 பேரின் நட்பை விட முடியவில்லை. கூடா நட்பின் காரணமாக ஷமனுக்கு என்ன ஆகிறது? அதற்கு அவர் கொடுக்கும் கூலி என்ன? ஷமன் சத்யகலா திருமண வாழ்க்கை என்ன ஆகிறது? என்பதே கதை.

ஆடு மேய்ப்பவர்களின் பின்புலத்தை மையமாக கொண்டு அவர்களது வாழ்வியலை அழகாக சொல்லும் படமாக தொரட்டி வந்துள்ளது. தொரட்டி என்பது அவர்கள் பயன்படுத்தும் குச்சி போன்ற ஒரு பொருள். பீரியட் படம், புதுமுகங்கள் இப்படி இடர்பாடுகள் எத்தனையோ இருந்தாலும் எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் அழகான ஒரு காவியத்தை பி.மாரிமுத்து கொடுத்துள்ளார்.
படம் பார்க்கும் உணர்வே எழவில்லை. பதிலாக அவர்களோடு வாழ்ந்த உணர்வு தான் ஏற்படுகிறது. படக்குழுவினருக்கு பாராட்டுகள். கதையின் நாயகனாக ஷமன் மித்ரு. சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார். சத்யகலாவுடனான காதல், தந்தை மீதான பாசம், நண்பர்களுடனான கேளிக்கை என வாழ்ந்து இருக்கிறார். சத்யகலாவும் சிறப்பாக நடித்துள்ளார். பெண் பார்க்க குடிபோதையில் வந்த ஷமனை அவர் குளிப்பாட்டும் இடம் கைதட்டல்களை பெறுகிறது.

அழகு, ஜானகி, ஸ்டெல்லா, குமணன், விஜய் பாலாஜி என மற்ற அனைவருமே அந்தந்த கதாபாத்திரங்களாக மட்டுமே தெரிகிறார்கள். நண்பர்களாக வரும் 3 பேரும் சரியான தேர்வுகள். வில்லத்தனமான நடிப்பால் கவர்கிறார்கள். குமார் ஸ்ரீதரின் ஒளிப்பதிவில் அவரது அபார உழைப்பு தெரிகிறது. ஜெயசீலனின் கலை இயக்கம் 1980களை அப்படியே கண்முன் கொண்டுவந்துள்ளது. வேத் சங்கரின் இசையில் பாடல்களும் ஜித்தனின் பின்னணி இசையும் படத்துடன் ஒன்ற வைக்கின்றன.

சினேகனின் பாடல் வரிகளும் நம்மை கிராம வாழ்க்கைக்கே கொண்டு செல்கிறது. ராஜா முகமது படத்தொகுப்பும் சிறப்பு. சில காட்சிகளின் நீளம் மட்டும் சின்ன குறை. முதல் பாதியில் கலைப்படம் போல் நகரும் படம் இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாக மாறுகிறது. கிராமத்து பின்னணியில் நம் பாரம்பரிய வாழ்க்கையை அழகாக சொல்லி இருக்கிறது தொரட்டி. குடி பழக்கமும் தீய நட்பும் ஒருவர் வாழ்க்கையை எப்படி சிதைக்கும் என்பதற்கு சாட்சியாகி இருக்கிறது. இதுபோன்ற படங்கள் சமூகத்துக்கு மிகவும் அவசியம்.
மொத்தத்தில் ‘தொரட்டி’ கொண்டாட வேண்டிய படைப்பு.
பிகில் படத்தில் விஜய்யுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபல நடிகர், விஜய் கட்டிப்பிடித்ததை என்னால் மறக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'பிகில்'. அட்லீ இயக்கி வரும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில், நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தன்னுடைய ஷூட்டிங்கை முடித்துவிட்டதாக நடிகர் சவுந்தரராஜா கூறியுள்ளார். மேலும் ‘இப்படத்தில் விஜய் அண்ணாவுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. கிட்டத்தட்ட 30 நாட்கள் அவருடன் நடித்துள்ளேன். அவரது எளிமையை சொல்ல வார்த்தைகளே இல்லை. குறிப்பாக அவர் என்னை கட்டிபிடித்ததையும், சிரிப்பையும் என்னால் மறக்க முடியாது. இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கிய இயக்குனர் அட்லீக்கு மிகப்பெரிய நன்றி’ என்று கூறியுள்ளார்.
ஜெகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பக்ரீத்’ படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் உரிமையை வாங்கி இருக்கிறார்.
விக்ராந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. ஜெகதீசன் சுபு இயக்கி வரும் இப்படத்தில் விக்ராந்த்துக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். எம்10 புரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் இப்படத்தினை தயாரித்துள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர், இமான் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தை நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் பார்த்து வியந்திருக்கிறார். மேலும் விக்ராந்த் உள்ளிட்ட படக்குழுவினரை வாழ்த்தி படத்தை தானே வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தமிழகம் முழுவதும் வெளியிடும் பக்ரீத் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் பிரபல நடிகர் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ‘சங்கத் தமிழன்’, கடைசி விவசாயி, லாபம், மாமனிதம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்திலும், துக்ளக் தர்பார் படத்திலும் நடிக்க இருக்கிறார்.
இதில் துக்ளக் தர்பார் படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார்.

இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் பிரபல நடிகர் பார்த்திபன் இணைந்து நடிப்பதாக தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் பட்டியலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்கள்.
நடிகர் விக்ரமின் மகனும் ஆதித்ய வர்மா படத்தின் நாயகனுமான துருவ் விக்ரம் கல்லூரி மாணவிகள் மத்தியில் பாட்டு பாடி அசத்தி இருக்கிறார்.
தன் படம் வெளிவரும் முன்பே தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற அந்தஸ்தைப் பெற்று வருகிறார் நடிகர் துருவ் விக்ரம். விக்ரமிற்கு என்று ஒரு தனி அடையாளம் உள்ளது போல் துருவ் விக்ரமிற்கும் தனி அடையாளம் உருவாகி வருகிறது. தெலுங்கில் பெரிய வெற்றிபெற்ற அர்ஜூன் ரெட்டி படம் தமிழில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரீமேக் ஆகி வருவது அனைவரும் அறிந்த செய்தி.
முழுதாக தயாரான அப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அந்த டீசர் இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் துருவ் விக்ரம் சில தினங்களுக்கு முன்பு சென்னை வைஷ்ணவா மகளிர் கல்லூரிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றார்.

அப்போது அவரை மாணவிகள் சூழ்ந்து கொண்டனர். மாணவிகள் மத்தியில் கலகலப்பாக உரையாடிய அவர், நிகழ்ச்சியில் ஒரு பாடலும் பாடி அசத்தினார். கோலமாவு கோகிலா படத்தில் இடம்பெற்ற "கல்யாண வயசு தான்" என்ற பாடலை அவர் பாட மாணவிகள் கைகள் தட்டி உற்சாகப்படுத்தினார்கள். மேலும் மாணவிகள் அனைவரும் துருவ் விக்ரமோடு செல்பி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக ஆதித்ய வர்மா படத்தின் டீசர் திரையிடப்பட்டது. அவ்வேளையில் மாணவிகள் சந்தோசக் கூச்சலிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
உலக அழகி பட்டம் வென்றவரும், பிரபல இந்தி நடிகையுமான சுஷ்மிதா சென், தன்னை விட 19 வயது குறைந்தவரை நவம்பர் மாதம் திருமணம் செய்ய இருக்கிறார்.
உலக அழகி பட்டம் வென்றவர் சுஷ்மிதா சென். இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் ரட்சகன் படத்தில் நடித்துள்ளார். நடிப்பு தவிர சமூக சேவைகளிலும் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். இரண்டு பெண் பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
அவர் பிரபல விளம்பர மாடல் ரோமன் ஷாலை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுஷ்மிதாவுக்கு 43 வயது. ரோமனுக்கு 24 வயது. ரோமனும் சுஷ்மிதாவும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். சுற்றுலா செல்லும் புகைப்படங்களை இருவரும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது வெளியிடுவது வழக்கம்.
தங்களுடைய உறவை அவர்கள் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல முடிவு செய்துள்ளார்கள். நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும் இதற்கு சுஷ்மிதாவின் மகள்கள் இருவரும் சம்மதம் கூறிவிட்டதாகவும் தெரிகிறது.

ரோமன் அவர்களுக்கு ஏற்கனவே நல்ல அறிமுகம் என்பதால், தங்களுடைய தாய் திருமணத்துக்கு மகள்கள் தடை விதிக்க வில்லை. இதனால் சுஷ்மிதா மகிழ்ச்சியில் இருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுஷ்மிதாவும், ரோமனும் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியானது. அதில் சுஷ்மிதா கையில் இருந்த மோதிரத்தை பார்த்து, இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது என செய்தி பரவியது. ஆனால் சுஷ்மிதா ரோமன் திருமணம் நவம்பரில் நடக்கும் என செய்தி வெளியாகி இருக்கிறது.
திரைப்பட விழாவில் ரஜினி, விஜய் பற்றி பேசியதற்கு, இயக்குனர் ராஜு முருகன் சமூக வலைத்தளத்தில் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் ராஜு முருகன். தோழா, மெஹந்தி சர்க்கஸ் படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். இவர் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள ‘ஜிப்ஸி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இவர் சமீபத்தில் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டு பேசும்போது, ‘யார் யாரோ சூப்பர்ஸ்டார், இளைய தளபதினு இருக்கும்போது நம்ம பையனுக்கு (படத்தின் கதாநாயகன்) ஒரு பேர் வச்சு விடுங்க... என்று கூறியிருக்கிறார்.

இது ரஜினி, விஜய் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் கண்டனங்களும் எழுந்தது. இதையடுத்து இயக்குனர் ராஜு முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒரு இசை வெளியீட்டு நிகழ்வில் எந்த உள்நோக்கமும் இல்லாமல் உற்சாகப்படுத்துவதற்காக பேசப்பட்ட விசயம் அது. வார்த்தைகள் தவறாக அமைந்ததற்கு வருந்துகிறேன். ரஜினி அவர்களும், விஜய் அவர்களும் தங்களது உழைப்பால், அர்ப்பணிப்பால் தமிழ் சினிவாவின் இந்த உச்சங்களைத் தொட்டவர்கள். கலைத்துறையில் அவர்களது பங்களிப்பின் மேல் உயர்ந்த மரியாதை எப்போதும் எனக்கிருக்கிறது’ என்று பதிவு செய்திருக்கிறார்.
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், பிரபல நடிகரை தொடர்ந்து அவரது மகனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
தென் இந்திய சினிமாவை பொறுத்தவரை கதாநாயகர்கள் தங்களுக்கு அடுத்த தலைமுறை கதாநாயகிகளுடனும் ஜோடி சேர்ந்து நடிப்பார்கள். ஆனால் கதாநாயகிகளோ சில வருடங்களில் ஓரம் கட்டப்பட்டுவிட்டு அந்த இடத்திற்கு வேறு இளம் நாயகிகள் கொண்டுவரப்படுவர்.
தற்போது இந்த நிலை மாறிவருகிறது. நாயகிகளுக்கான சினிமா வாழ்க்கை என்பது அதிகரித்துள்ளது. முன்னணி கதாநாயகிகள் பலரும் பத்தாண்டுகளைக் கடந்து வெற்றிநடை போடுகின்றனர். திருமணத்துக்கு பின்னும் கதாநாயகியாக நடிக்கிறார்கள். இதில் கீர்த்தி சுரேஷ் இன்னும் வித்தியாசமானவர். அறிமுகமான சில ஆண்டுகளிலேயே முன்னணி நடிகர்கள் பலருடனும், சாவித்திரி கதாபாத்திரம் ஏற்றும் இந்தியத் திரையுலகில் பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

கீர்த்தி மலையாளத்தில், மோகன்லால் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக தற்போது நடித்து வருகிறார். ‘மரக்கார் அராபிகளிண்டே சிம்ஹம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை பிரியதர்ஷன் இயக்கி வருகின்றார். மலையாளத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகின்ற வரலாற்று படம் இது.
இந்தப் படத்தின் பணிகள் நடைபெற்றுவரும் போதே அவர் மோகன்லாலின் மகனான பிரனவ் மோகன்லாலுடனும் இணைந்து நடிக்கஉள்ளார். 2016-ம் ஆண்டு வெளியான ‘ஜேக்கப்பிண்டே சுவர்க்கராஜ்ஜியம்’ படத்தை நிவின்பாலியை கதாநாயகனாகக் கொண்டு இயக்கியவர் வினீத். இவர் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் பிரனவ், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கஉள்ளதாக செய்தி வருகிறது.
தமிழ் சினிமாவில் சமீபத்தில் நடந்த கதை திருட்டு சம்பவங்களை மையப்படுத்தி படைப்பாளன் என்ற படம் உருவாகியுள்ளது.
பிரபுராஜா இயக்கி நடித்துள்ள இந்த படத்தை தியான் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.நட்சத்திரம் செபஸ்தியான், பிரபுலீன்பாபு, ஆண்டனி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் பிரபுராஜாவுடன் மனோபாலா, இயக்குனர் தருண்கோபி, ஜாக்குவார் தங்கம், பாடகர் வேல்முருகன், காக்கா முட்டை ரமேஷ் விக்கி, அஷ்மிதா, வளவன், திருச்சி வேலுச்சாமி ஆகியோர் நடித்துள்ளனர். வேல்முருகன் ஒளிப்பதிவு செய்ய கிருபாகரன் இசையமைத்துள்ளார்.
படைப்பாளன் படம் பற்றி எல்.எஸ்.பிரபுராஜா கூறியதாவது: ’சினிமாவில் இயக்குனராக துடிக்கும் ஒரு உதவி இயக்குனரின் கதை இது. முன்பெல்லாம் படத்தயாரிப்பாளர்கள் எளிமையான இடத்தில் இருந்து வந்தவர்களாக இருந்தார்கள். இப்போது பெரும்பாலான படங்களை தயாரிப்பது கார்ப்பரேட் நிறுவனங்கள் தான். கதை கேட்பது கிடையாது, பவுண்டட் ஸ்கிரிப்ட் கொடுங்கள் படித்து விட்டு சொல்கிறோம் என்று கதை வாங்கி கிடப்பில் போட்டு அவர்களை அழைக்கழிக்கிறார்கள். பிறகு சில நாட்களில் ஒரு பிரபலமான இயக்குனர்களை வைத்து அந்த கதையை படமாக்கி வெளியிடுகிறார்கள்.

அந்த உதவி இயக்குனரின் உழைப்பு, வலிகளுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. அப்படி கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றுக்கு கதை சொல்லப் போகும் ஒரு உதவி இயக்குநரின் சொந்த கதை பற்றியும் அவர் சொன்ன கதை பற்றியும் தான் இந்த படம். உதவி இயக்குநர்களின் வலிகளையும் இப்படம் வெளிச்சம் போட்டுக் காட்ட உள்ளது’. இவ்வாறு அவர் கூறினார்.
தியான் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரபுராஜா இயக்கி நடிக்கும் படைப்பாளன் படத்தின் முன்னோட்டம்.
தமிழ் சினிமாவில் சமீபத்தில் நடந்த கதை திருட்டு சம்பவங்களை மையப்படுத்தி படைப்பாளன் என்ற படம் உருவாகியுள்ளது. பிரபுராஜா இயக்கி நடித்துள்ள இந்த படத்தை தியான் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.நட்சத்திரம் செபஸ்தியான், பிரபுலீன்பாபு, ஆண்டனி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த படத்தில் பிரபுராஜாவுடன் மனோபாலா, இயக்குனர் தருண்கோபி, ஜாக்குவார் தங்கம், பாடகர் வேல்முருகன், காக்கா முட்டை ரமேஷ் விக்கி, அஷ்மிதா, வளவன், திருச்சி வேலுச்சாமி ஆகியோர் நடித்துள்ளனர். வேல்முருகன் ஒளிப்பதிவு செய்ய கிருபாகரன் இசையமைத்துள்ளார்.
பாலிவுட்டில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய தனுஷ் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாரி 2 படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை, துரை செந்தில் இயக்கும் பட்டாஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ், ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார், காலா பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரது படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.

மேலும் வடசென்னை 2, செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம், பாலிவுட்டில் ஒரு படம் என அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், பாலிவுட்டில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ’ஆர்டிகில் 15’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய தனுஷ் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தனுஷ் இதில் நடிப்பாரா? இல்லை தயாரிப்பாரா? என்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.






