என் மலர்
சினிமா செய்திகள்
வடசென்னைக்கு பின் புதிய திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தது ஏன் என்பது குறித்து ஆண்ட்ரியா விளக்கம் அளித்துள்ளார்.
ஆண்ட்ரியா வருடத்துக்கு 4, 5 படங்களில் நடித்தார். 2007-ல் 5 படங்களில் நடித்து இருந்தார். கடந்த வருடம் விஸ்வரூபம்-2, வடசென்னை ஆகிய படங்கள் வெளிவந்தன. அதன்பிறகு புதிய படங்களில் அவர் நடிக்கவில்லை. சமூக வலைத்தளத்திலும் கருத்துகள் பதிவிடாமல் இருந்தார். இதனால் சினிமாவை விட்டு விலகி விட்டாரா? என்று பேச்சுகள் கிளம்பின.
இந்த நிலையில் ஓய்வெடுத்த காரணங்களை இன்ஸ்டாகிராமில் விளக்கி அவர் கூறியிருப்பதாவது:- “எனக்கு இருந்த மன அழுத்தம் உடல் மற்றும் மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் நடிப்பதை நிறுத்திவிட்டு சில காலம் விலகி இருந்தேன். பிரச்சினைகளில் இருந்து விடுபட ஆயுர்வேத சிகிச்சை எடுத்தேன். காபி குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாக இருந்த எனக்கு ஆயுர்வேத சிகிச்சை எடுப்பது எளிதான காரியமாக தெரியவில்லை.

ஆனாலும் மருத்துவ சிகிச்சையில் கஷ்டப்பட்டு என்னை ஈடுபடுத்தினேன். காலையில் ஒரு கப் மூலிகை தேநீர் அருந்திவிட்டு யோகா செய்து அன்றைய நாளை தொடங்கினேன். அந்த சிகிச்சை முறை பலவீனமான இதயம் உள்ளவர்களால் கடைப்பிடிக்க முடியாது. நான் சிகிச்சையின்போது அங்கிருந்து வெளியேறி விட நினைத்தேன். ஆனாலும் அந்த உணர்வில் இருந்து மீண்டு மருத்துவர்கள் ஆலோசனையை பின்பற்றி நடந்தேன். இப்போது என்னை புதியவளாக உணர முடிகிறது. மருத்துவ குழுவினருக்கு நன்றி.
இவ்வாறு ஆண்ட்ரியா கூறினார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிரபல நடிகை வைல்ட் கார்டு மூலம் வீட்டுக்குள் சென்றுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிரபல நடிகை வைல்ட் கார்டு மூலம் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பல பிரபலங்கள் இன்று முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர்.
தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நடந்து வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 16 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர். அதில் பாத்திமா பாபு, நடிகை வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா ஆகிய 5 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வார தொடக்கத்தில் நடிகர் சரவணன் சில காரணங்களால் அதிரடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், பிரபல நடிகையான கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். சரவணன் திடீரென வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது கஸ்தூரி வைல்ட் கார்டு மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ஷில்பா ஷெட்டி 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் படத்தில் நடிக்க உள்ளார்.
தமிழில் பிரபு தேவாவுடன் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. சில வருடங்கள் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக 2007-ல் வெளியான அப்னே என்ற இந்தி படத்தில் தர்மேந்திரா, சன்னிதியோல், பாபி தியோல் ஆகியோருடன் நடித்து இருந்தார்.
அதன்பிறகு படங்களில் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கினார். ஷில்பா ஷெட்டியும் தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவும் 2009-ல் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. பிக் பிரதர்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இனவெறிக்கு ஆளான சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளராகவும் ஆனார். தற்போது டி.வி. நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ஷில்பா ஷெட்டி 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வருகிறார். இந்தியில் தயாராகும் பெயரிடப்படாத நகைச்சுவை படத்தில் நடிக்க ஷில்பா ஷெட்டியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்த படத்தை சபீர்கான் இயக்குகிறார். இதுகுறித்து ஷில்பா கூறும்போது, “இயக்குனர் சபீர்கான் சொன்ன கதை வித்தியாசமாக இருந்தது. இதில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.
பெண்கள் நினைத்தால் எந்த நிலைக்கும் செல்ல முடியும் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை டாப்சி கூறியுள்ளார்.
கேம் ஓவர் படத்துக்கு வரவேற்பு கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் டாப்சி. தற்போது 3 இந்தி படங்களில் நடிக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:- “நாம் வாழும் பூமியை ஆண்கள் உலகமாகவே பார்க்கின்றனர். சில வேலைகளை ஆண்களால் மட்டுமே செய்ய முடியும். பெண்களால் செய்ய முடியாது என்ற நிலைமைகள் ஒரு காலத்தில் இருந்தது உண்மைதான். ஆனால் இப்போது அப்படி இல்லை. கல்பனா சாவ்லா விண்வெளியில் அடி எடுத்து வைப்பதுவரை அந்த துறை ஆண்கள் உலகம் என்றே இருந்தது.
குதிரை சவாரி என்பதும் ரூபா சிங் வருவதற்கு முன்பு வரை ஆண்களால் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலைமையில்தான் இருந்தது. பெண்கள் நினைத்தால் எந்த நிலைக்கும் செல்ல முடியும் என்பதை இவைகள் நிரூபித்து உள்ளன. குதிரை சவாரி வீராங்கனை ரூபாசிங் வாழ்க்கை வரலாறு சினிமா படமாக தயாராகிறது. அதில் நான் நடிக்கிறேன். ரூபா சிங் கதாபாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று என்னை அணுகி டைரக்டர் கதை சொன்னார்.

நான் கவர்ச்சியான கதாபாத்திரங்கள் செய்துவிட்டு இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறேன். தோல்விகள் வந்தபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. சபானா, பட்லா, கேம் ஓவர் என்று பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நான் நடித்துள்ளதால் ரூபா சிங் வாழ்க்கை படமும் தேடி வந்துள்ளது. இந்த படத்துக்கு 100 சதவீத உழைப்பை கொடுப்பேன்.”
இவ்வாறு டாப்சி கூறினார்.
அஜித் திரைப்படத்தை பார்க்க, தமக்கு படப்பிடிப்பில் இருந்து விடுமுறை வழங்குமாறு தயாரிப்பாளரிடம் நடிகர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்து இந்தியில் வெற்றி பெற்ற ’பிங்க்’ படத்தை அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோரை வைத்து ’நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் எச். வினோத். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இந்த படம் இன்று ரிலீசாகி உள்ளது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மெட்ரோ , ராஜா ரங்குஸ்கி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர் சிரிஷ் சரவணன், இவர் தற்போது தான் நடித்துவரும் படங்களின் தயாரிப்பாளருக்கு கோரிக்கை ஒன்றை சமூக வலைத்தளத்தில் வைத்துள்ளார். அதில், தமக்கு தல காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், நேர்கொண்ட பார்வை படம் வெளியாவதால், தமக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த அஜித் ரசிகர்கள், நடிகர் சிரிஷ் சரவணனுக்கு தயாரிப்பாளர் விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐ, 2.0 படத்தில் நடித்து மிகவும் பிரபலமான எமி ஜாக்சன், தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், அரை நிர்வாண புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார்.
தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.
மீண்டும் லண்டன் பறந்த அவர் அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்தார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் எமி அறிவித்தார். இது தமிழ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. குழந்தை பிறந்த பின்னர் அவர்களது திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை, வீடியோக்களை பதிவு செய்து வரும் எமி, கர்ப்பமாக இருக்கும் சூழலிலும் அதே போன்ற புகைப்படங்களை தொடர்ந்து பதிவு செய்து வந்தார். இந்நிலையில், அரை நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார் எமி ஜாக்சன்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கும் அஜித்துக்கு வில்லனாக பிரபல நடிகர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. போனி கபூர் தயாரித்திருக்கும் இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தை அடுத்து மீண்டும் போனி கபூர், வினோத், அஜித் கூட்டணி இணைய இருக்கிறது. ஆக்ஷன் படமாக தயாராக இருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஓ பேபி’ திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.
சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் 'ஓ பேபி'. 'மிஸ் கிரானி' என்னும் கொரியன் படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பாட்டியாக லட்சுமியும் பேத்தியாக சமந்தாவும் நடித்திருந்தார்கள்.
10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், தெலுங்கில் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் படத்தின் ரிலீஸ் சமயத்தில் சமந்தாவிற்கு ரசிகர்கள் 60 அடி உயரத்துக்கு கட்அவுட் வைத்திருந்தனர்.

அதிக வரவேற்பைப் பெற்ற இப்படம், தற்போது தமிழில் டப் செய்யப்பட இருக்கிறது. மேலும், இம்மாதம் படத்தை வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து சில தினங்களுக்கு முன்பு வெளியான மீரா மிதுன், தற்போது இளைஞருடன் பப்பில் டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
தமிழில் சில படங்களில் நடித்த மீரா மிதுன், தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். வீட்டிற்குள் சென்ற சில நாட்களிலேயே வீட்டில் இருப்பவர்களுடன் முரண்பாடு ஏற்பட்டு சில தினங்களிலேயே வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், தனது சமூக வலைத்தள பக்கத்தில் பப்பில் இளைஞருடன் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
#swagger#bachata#LOVE 😻 pic.twitter.com/Nstmxzv41u
— Meera Mitun (@meera_mitun) August 6, 2019
சுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜா, சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கென்னடி கிளப்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுசீந்திரன். இவர் இயக்கத்தில் தற்போது ‘கென்னடி கிளப்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் சசிகுமார், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம் மகளிர் கபடியை கருவாக கொண்டு உருவாகி உள்ளது.
சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பாக தாய் சரவணன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த படம் வருகிற ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.
கைதி படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கலில் நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கைதி’ டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. முற்றிலும் வித்தியாசமான முறையில் இருந்த இந்த டீசரை பிரபலங்கள் பலரும் பாராட்டினர். தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து கார்த்தி தன் அடுத்த படத்தில் முழுக் கவனம் செலுத்தி வருகிறார். ‘ரெமோ’ படத்தினை இயக்கிய இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார்.

இப்படத்தில் ‘கீதா கோவிந்தம்’ தெலுங்கு படம் மூலம் இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த நடிகை ராஷ்மிகா மந்தனா முதல்முறையாக நேரடித் தமிழ்ப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் நெப்போலியன், யோகி பாபு, சதீஸ், லால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் தற்போது திண்டுக்கல்லில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கி இருக்கிறார்கள். தொடர்ந்து 50 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாக இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பதை அவர் உறுதி செய்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. இந்த படத்தில் பெரும் நட்சத்திரக் கூட்டணி இணைந்திருப்பது குறித்த தகவல்கள் வெளிவருகின்றன.
காஜல் அகர்வால் ஏற்கனவே படக்குழுவில் இணைந்துவிட்ட நிலையில் சித்தார்த், பிரியா பவானிசங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் பிரீத் சிங் என முன்னணி நடிகர், நடிகைகள் பலர் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியானது. தான் இந்தப் படத்தில் இணைந்ததை பிரியா பவானிசங்கர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஷங்கர் அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். படம் குறித்து இரண்டு மணி நேரம் எனக்கு விளக்கப்பட்டது. பிரதான கதாபாத்திரங்களில் ஒன்றாக எனது கதாபாத்திரம் இருக்க, உடனே நடிப்பதாக சம்மதம் தெரிவித்தேன். இதைத் தவறவிட நான் தயாராக இல்லை. ஷங்கர் கனிவுடன் பேசினார்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், “இந்தப் பெரிய காரியத்தை மிகவும் எதிர்பார்த்துள்ளேன். நான் பிரபஞ்சத்தை நம்புகிறேன். உங்கள் செயல்பாடுகளைப் பொறுத்து பிரபஞ்சம் உங்களுக்குத் திரும்பக் கொடுக்கும். கமல்ஹாசன், எனக்கு விருப்பமான சித்தார்த், குயின் லேடி காஜல் அகர்வாலுடன் ஷங்கர் இயக்கத்தில் நடிப்பதை ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.






