என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இயக்குனர் விஷ்ணுவர்தன் தயாரிக்கும் வெப் சீரிசில் பிரபல நடிகைகளான அக்‌ஷரா, காயத்ரி சுனைனா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
    தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகள் திரைப்படங்களைப் போலவே இணைய தொடர் பக்கமும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். ஹாலிவுட், பாலிவுட் போன்று தமிழில் வெப் சீரிஸ் அதிகம் உருவாகிவிடவில்லை. இருப்பினும் தமிழ் ரசிகர்கள் முன்னணி ஆன்லைன் ஒளிபரப்பு தளங்கள் மூலம் வேற்றுமொழி வெப் சீரிஸ்களைத் தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.

    தற்போது வெப் சீரிஸை நோக்கி பிரபல நாயகிகள் வரத்தொடங்கியுள்ளனர். காஜல் அகர்வால், வைபவ் இணைந்து நடிக்கும் வெப் சீரிசை வெங்கட் பிரபு இயக்குகிறார். குரு சோமசுந்தரம் நடிக்கும் டாப்லெஸ் வெப் சீரிசை அறிமுக இயக்குநர் தினேஷ் மோகன் இயக்க சினிஷ் தயாரிக்கிறார்.

    பிங்கர்டிப் இணைய தொடர்

    இயக்குநர் விஷ்ணுவர்தன் தயாரிக்கும் வெப் சீரிஸ் பிங்கர்டிப். அறிமுக இயக்குநர் ஷிவகர் இயக்க, காயத்ரி, சுனைனா, அக்‌ஷரா ஹாசன், அஸ்வின் கக்குமானு, மதுசுதன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த வெப் சீரிஸ் ஜீ5 தளத்தில் ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
    லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் ’பிகில்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இதனையடுத்து விஜய் நடிக்கும் 64-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இப்படத்திற்கான நடிகர்கள் தேர்வு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் வில்லனாக பிரபல மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கியாரா அத்வானி

    இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பி.வி. கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்திலிருந்து துவங்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து ஷங்கர், மோகன் ராஜா ஆகியோரது இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 
    ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக திரை பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக மத்திய மந்திரி அமித்ஷா மாநிலங்களவையில் அறிவித்தார். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும் ஆதரவும் கலந்த குரல்கள் ஒலிக்கின்றன. சினிமா சார்ந்த பிரபலங்களும் தங்கள் ஆதரவையும் எதிர்ப்பையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    அமலா பால் தனது டுவிட்டர் பதிவில், “எனது கருத்துப்படி, இது ஒரு ஆரோக்கியமான, நம்பிக்கையான, மிகவும் தேவையான மாற்றம். இது ஒரு எளிதான பணி அல்ல. நமது மதிப்புமிக்க நரேந்திர மோடி போன்ற ஒரு தைரியமான தலைவரால் தான் இவ்வாறான முடிவுகளை செயல்படுத்த முடியும். எதிர்காலத்தின் அமைதியான நாட்களுக்காக பிரார்த்திக்கிறேன்” என மோடிக்கு ஆதரவு தெரித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

    அமலா பால், சித்தார்த்

    நடிகர் சித்தார்த் கூறுகையில், ‘‘இந்த நாடானது அழிவை நோக்கிப் பயணிக்கும் ஒருவரின் தலைமையை கொண்டுள்ளது. இதெல்லாம் திசைதிருப்பும் வேலை. இதையெல்லாம் தெரிந்துகொண்டேதான் செய்கிறார்கள்" என்றார்.

    கங்கனா ரணாவத் கூறுகையில், 370-வது பிரிவை அகற்றுவது குறித்து நீண்ட காலமாக போராட் டம் இருந்து வந்துள்ளது. பயங்கரவாதம் இல்லாத ஒரு தேசமாக, நாம் செல்லப்போகும் திசைக்கு இது ஒரு வரலாற்று ரீதியான நடவடிக்கையே. நான் இதை மிக நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறேன். இந்த சாத்தியமற்ற சாதனையை மோடியால் மட்டுமே சாதிக்க முடியும் என்றெனக்குத் தெரியும் என்றார்.

    அனுபம் கேர், சஞ்சய் சூரி, அனுராக் கஷ்யப்

    நடிகர் அனுபம் கேர் கூறுகையில், காஷ்மீருக்கான தீர்வு ஆரம்பமாகியுள்ளது என்றார்.

    நடிகர் சஞ்சய் சூரி கூறுகையில், “ஜம்மு காஷ்மீரில் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்றார்.

    இந்திப்பட இயக்குனர் அனுராக் கஷ்யப் கூறுகையில், ‘ஒரு மனிதன் 120 கோடி மக்களின் நலனுக்காக செய்ய வேண்டிய சரியான வி‌ஷயம் என்னவென்று, தனக்குத் தெரியும் என்று நினைக்கிறான். இருப்பதிலேயே இது தான் அச்ச மூட்டுவதாக இருக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.
    எஸ். ஏ. சந்திரசேகரன் இயக்கும் ‘கேப்மாரி’ படத்திற்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கில் 50-க்கும் மேற்பட்ட மும்பை அழகிகளுடன் ஜெய் நடனமாடியுள்ளார்.
    எஸ். ஏ. சந்திரசேகரன் இயக்கும் 70-வது படம் “கேப்மாரி”. இப்படத்தில் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார். இது அவரது 25-வது படமாகும். ஜெய்க்கு ஜோடியாக வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். காதல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    அதுல்யா ரவி, வைபவி சான்ட்லியா

    இந்நிலையில், இப்படத்தின் பாடல் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன. இதற்காக பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்ட மும்பை அழகிகளுடன் இப்பாடல் கலர் புல்லாக படமாக்கப்பட்டது. இந்த பாடலுக்காக ஜெய் மிக சிரந்தை எடுத்து சிறப்பாக நடனமாடியுள்ளார். ஷெரீப் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

    அதுல்யா, ஜெய்

    படத்தின் ஒவ்வொரு காட்சியும் இளைஞர்களை விசிலடிக்க வைக்கும் என்று இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகரன் கூறுகிறார். இவர் நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். ஜீவன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். 
    பாகுபலி புகழ் பிரபாஸ் நடித்துள்ள படமும், பார்த்திபன் இயக்கி, நடித்துள்ள படமும் ஒரே நாளில் ரிலீசாக உள்ளது.
    பாகுபலி வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘சாஹோ’. சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 30-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படம் அன்று ரிலீசவதால் சூர்யாவின் காப்பான் உட்பட சில படங்கள் ரிலீஸ் தேதியை மாற்றினர். இதற்கு பிரபாசும் நன்றி தெரிவித்திருந்தார். 

    சாஹோ, ஒத்த செருப்பு பட போஸ்டர்

    இந்நிலையில், பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படம் ஆகஸ்ட் 30-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சாஹோ படத்துடன் ஒத்த செருப்பு படமும் மோத உள்ளது உறுதியாகியுள்ளது. பயோஸ்கோப் பிலிம் ப்ரேமர்ஸ் சார்பில் இயக்குநர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 
    நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள 2 படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    தெலுங்கில் வெற்றிபெற்ற '100 சதவீத லவ்' திரைப்படத்தில் நாக சைதன்யா, தமன்னா நடித்திருந்தனர். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள '100 சதவீத காதல்' திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷும் ஷாலினி பாண்டேவும் நடித்துள்ளனர். இந்தப் படம் தற்போது திரைக்கு வர தயாராகி வருகிறது. 

    கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவருக்கும், மாணவிக்கும் இடையே நடக்கும் போட்டியை காதலும், நகைச்சுவையும் கலந்து படமாக உருவாக்கி இருக்கிறார்கள். எம்.எம்.சந்திரமௌலி இயக்கியுள்ள இந்தப்படம் செப்டம்பர் 6ம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

    100 சதவீதம் காதல், சிவப்பு மஞ்சள் பச்சை பட போஸ்டர்

    இதேபோல் சசி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - சித்தார்த் நடித்துள்ள ’சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படமும் அதே தேதியைக்
    குறிவைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அக்காள்-தம்பி பாசத்தை ஒரு புதிய கோணத்தில் சொல்லும் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக சித்தார்த்தும், பைக் ரேசராக ஜி.வி.பிரகாஷும் நடித்துள்ளனர். 
    விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் அடுத்ததாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பிரபல கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
    ‘சகாப்தம்,’ ‘மதுரை வீரன்’ ஆகிய படங்களில் நடித்த சண்முக பாண்டியன் அடுத்து நடிக்கும் படத்துக்கு, ‘மித்ரன்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இது, கிராமிய பின்னணியிலான பொழுதுபோக்கு குடும்ப படமாக இருக்கும் என்கிறார், படத்தின் டைரக்டர் ஜி.பூபாலன். 

    இவர் மேலும் கூறியதாவது:- “மித்ரன் வணிக ரீதியான படம். ஒரு கிராமத்து இளைஞனை சுற்றி கதை அமைக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு போலீஸ்காரராகி தனது பக்கத்து ஊருக்கு வந்து கடமையில் சேருகிறார். காதல், அதிரடிச் சண்டை காட்சிகள், நகைச்சுவை, தாய்-மகன் பாசம் என அனைத்து தரப்பினரின் ரசனைகளை பூர்த்தி செய்யும். படத்தின் சிறப்பு அம்சமாக ஒரு பாடல் இடம் பெறுகிறது. அதை ரசிகர்கள் எப்படி ரசிக்கப் போகிறார்கள் என்பதை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    மித்ரன் படக்குழு

    படத்தில் வில்லனாக வம்சி கிருஷ்ணா நடிக்க, அழகம்பெருமாள், சாய் தீனா, பவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கதாநாயகனுடன் படம் முழுக்க வருகிற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் முனீஷ்காந்த் நடிக்கிறார். தேசிய விருது பெற்ற அர்ச்சனா, கதாநாயகனின் தாயாக நடிக்கிறார். கதாநாயகியாக நடிக்க பிரபல கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.”
    எச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் உருவாகி உள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் முன்னோட்டம்.
    எச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். 

    இதில் அஜித் ஜோடியாக வித்யா பாலன், முக்கிய வேடங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    அஜித், வித்யா பாலன்

    யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு- கோகுல் சந்திரன், கலை- K.கதிர், சண்டைப்பயிற்சி- திலீப் சுப்பராயன், பாடல்கள்- பா.விஜய், நாகார்ஜுன், உமாதேவி, யூநோஹு, நடனம்- கல்யாண், பிருந்தா, தயாரிப்பு ஒருங்கிணைப்பு- S.P. சொக்கலிங்கம், நிர்வாக தயாரிப்பு- ஜெயராஜ் P பிச்சைய்யா
    பிரபாஸ் நடிப்பில் வெளியாக இருக்கும் 'சாஹோ' படத்திற்கு உதவிய சூர்யாவுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
    பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள 'சாஹோ' திரைப்படம் முதலில் ஆகஸ்ட் 15ந் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தின் பின்னணி பணிகள் தாமதம் ஆனதால் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 30-ந் தேதிக்கு மாற்றப்பட்டது. இதேபோல் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள 'காப்பான்' படமும் முதலில் ஆகஸ்ட் 15ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் ஆகஸ்ட் 30-ந் தேதிக்கு மாற்றப்பட்டது. 

    காப்பான், சாஹோ பட போஸ்டர்

    இதனிடையே ஆகஸ்ட் 30ந் தேதி சூர்யாவின் 'காப்பான்' உள்பட ஒரு சில தென்னிந்திய மொழிப் படங்கள் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்ததால் 'சாஹோ' படக்குழுவினர் சூர்யாவின் 'காப்பான்' படக்குழு உள்பட ஒருசில படங்களில் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க வேண்டுகோள் விடுத்தனர்.

    'சாஹோ'  படக்குழுவினர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட 'காப்பான்' படக்குழுவினர் உள்பட ஒருசில படக் குழுவினர் தங்களது படங்களின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர். இதில் 'காப்பான்' செப்டம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. இதனனயடுத்து பிரபாஸ் உள்பட 'சாஹோ' படக்குழுவினர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

    பிரபாஸின் வலைப்பதிவு

    இதுகுறித்து பிரபாஸ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: எங்களின் வேண்டுகோளை ஏற்று ரிலீஸ் தேதியை தள்ளி வைத்த அனைத்து படக் குழுவினருக்கும் எனது நன்றிகள் என்று தெரிவித்துள்ளார். 
    காஜல் அகர்வால் படத்துக்கு சென்சாரில் 25 இடங்களில் வெட்டியுள்ளதால் படக்குழுவினர் மறு சீராய்வுக் குழுவுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
    கங்கணா ரணாவத் நடிப்பில் இந்தியில் வெளியான ‘குயின்’ படம் தென்னிந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் ரீமேக் ஆகிறது. காஜல் அகர்வாலை நாயகியாகக் கொண்டு தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ எனவும், தமன்னாவை நாயகியாகக்கொண்டு தெலுங்கில் ‘தட் இஸ் மகாலெட்சுமி’ எனவும் மஞ்சிமா மோகனை நாயகியாகக் கொண்டு மலையாளத்தில் ‘ஜம் ஜம்’ எனவும் பருல் யாதவ்வை கதா நாயகியாகக்கொண்டு கன்னடத்தில் ‘பட்டர்பிளை’ எனவும் உருவாகியுள்ளது. 

    நான்கு மொழிகளிலும் மனுகுமரன் தயாரித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னட பதிப்பை நடிகரும் இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் இயக்கி உள்ளார். ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தை நிறைவு செய்து சென்சாருக்கு அனுப்பிய படக்குழுவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சென்சார் துறை பல இடங்களில் காட்சிகளின் சில பகுதிகளை மங்க செய்துள்ளனர். 

    பாரிஸ் பாரிஸ் பட போஸ்டர்

    சில காட்சிகளில் ஆடியோவை மட்டும் வெட்ட, சில காட்சி ஆடியோ, வீடியோ இரண்டையும் வெட்டி உள்ளனர். மொத்தமாக 25 இடங்களில் வெட்டியுள்ளதால் படக்குழுவினர் மறு சீராய்வுக் குழுவுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் மலையாள, கன்னட பதிப்புகளுக்கு தணிக்கைத் துறை யு/ஏ சான்றிதழ் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழ் சினிமாவில் தற்போது ஒரே சமயத்தில் பல படங்கள் கபடியை மையமாகக் கொண்டு உருவாகி வருகின்றன.
    விக்ராந்த் நடிப்பில் ‘வெண்ணிலா கபடிக்குழு 2’ சமீபத்தில் வெளியான நிலையில், சசிகுமார் நடிப்பில் கென்னடி கிளப், அதர்வா நடிப்பில் குருதி ஆட்டம் ஆகிய படங்கள் கபடியை மையமாகக் கொண்டு உருவாகிவருகின்றன.

    இந்த வரிசையில் தற்போது இணைந்துள்ள படம் அருள்நிதி, ஜீவா இணைந்து நடிக்கும் ‘களத்தில் சந்திப்போம்’. ராஜசேகர் இயக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டு படக்குழுவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பிரியா பவானி சங்கர், மஞ்சிமா மோகன் என இரு கதாநாயகிகள் இணைந்துள்ளனர்.

    கென்னடி கிளப்

    நட்பை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தில் ஜீவா, அருள்நிதி இருவரும் கபடி வீரர்கள். சிறுவயது முதலே நண்பர்கள். இருப்பினும் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள். காரைக்குடி பகுதியின் பின்னணியில் கதை நடைபெறுகிறது.
    பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் லண்டனை சேர்ந்தவருடன் திருமணம் செய்து விட்டதாக கூறியிருக்கிறார்.
    இந்தி நடிகை ராக்கி சாவந்த் கடந்த சில வாரங்களாகவே தனது சமூக வலைதளப் பக்கங்களில் திருமண அலங்காரத்துடன் கூடிய புகைப்படங்கள் பகிர்ந்து வந்தார்.

    திருமணமாகிவிட்டதா என்று பலரும் கேட்டதற்கு “அது போட்டோ ஷூட் படங்கள். 2020-ல் தான் திருமணம். இன்று எல்லா திருமணங்களும் முடியும் தேதியுடனே நடக்கின்றன. எனவே நான் அதுகுறித்து பயத்துடன் தான் இருக்கிறேன்” என்று சொல்லிவந்தார்.

    தற்போது குடும்பத்தினர் மட்டும் பங்குகொண்ட திருமண வைபவம் நடந்து முடிந்துவிட்டதென்று ஒப்புக்கொண்டுள்ளார்.

    இது குறித்து அவர் பேசுகையில், “நான் பயத்தில் இருந்தேன். எனக்குத் திருமணமாகிவிட்டது. இப்போது அதை உங்களிடம் உறுதி செய்கிறேன். அவர் பெயர் ரிதேஷ். லண்டனில் இருக்கிறார். அவர் திருமணம் முடிந்து அங்கு சென்றுவிட்டார்.

    நடிகை ராக்கி சாவந்த்

    எனது விசா வந்தவுடன் நானும் சென்றுவிடுவேன். இந்தியாவில் வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பாகத் தொடர்ந்து பணிபுரிவேன். எனக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிக்க ஆசை. எனது நீண்ட நாள் கனவு தற்போது நனவாகவுள்ளது என நினைக்கிறேன். அற்புதமான கணவரைத் தந்ததற்கு ஏசுவுக்கு நன்றி.

    பிரபு சாவ்லாவுடனான எனது முதல் பேட்டியிலிருந்தே ரிதேஷ் என் ரசிகர். என்னிடம் வாட்ஸ் அப்பில் பேசி வந்தார். தொடர்ந்து உரையாடினோம். நண்பர்களானோம். இது ஒன்றரை வருடங்களுக்கு முன் நடந்தது. அவரை நன்றாகத் தெரிந்த பிறகு அவரது மனைவியாகவேண்டும் என்று ஏசுவிடம் கடுமையாக பிரார்த்தனை செய்தேன். அது இப்போது நிறைவேறிவிட்டது. கடவுள் இதுவரை என்னிடம் கருணையாகவே இருந்துள்ளார்” என்று கூறியுள்ளார்.
    ×