என் மலர்
சினிமா செய்திகள்
சவுதி அரேபியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகர்களுடன் சந்திப்பு மேற்கொண்ட ஷாருக்கான், அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.
சவுதி அரேபியாவில் பல ஆண்டுகாலமாக நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகளை இளவரசர் முகமது பின் சல்மான் தளர்த்தி சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கும், ஸ்டேடியங்களில் விளையாட்டு போட்டிகளை நேரில் காண்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
சினிமா மீதான தடையும் நீக்கப்பட்டது. 40 வருடங்களுக்கு பிறகு அங்கு தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. நாட்டின் பொழுதுபோக்கு துறையை மேம்படுத்தும் வகையில் ரியாத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரை அழைத்து விழா நடத்தினர்.

இதில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், கேம் ஆப் த்ரோன்ஸ் நடிகர் ஜேசன் மோமோ, பெல்ஜியம் நடிகர் ஜீன் கிளாட் வான்டேம் பிரபல அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளர் டேவிட் லெட்டர்மேன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து நடிகர் ஷாருக்கான் பங்கேற்றார். அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில் ஜாக்கிசான் பேசும்போது, “எனது படத்தின் படப்பிடிப்பை ரியாத்தில் நடத்த ஆர்வமாக இருக்கிறேன். படக்குழுவினருடன் விரைவில் இங்கு வருவேன்” என்றார். அங்கு ஜாக்கிசான் உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்களை ஷாருக்கான் சந்தித்து பேசினார். அவர்களுடன் செல்பி எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு எனது கதாநாயகர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார். இதே படங்களை ஜாக்கிசானும் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா, ரியா சுமன் நடிப்பில் உருவாகி வரும் ’சீறு’ படத்தின் முன்னோட்டம்.
விஜய் சேதுபதி நடித்த றெக்க படத்தின் இயக்குனர் ரத்ன சிவா அடுத்ததாக இயக்கும் படம் ‘சீறு’. ஜீவா நாயகனாக நடித்து வரும் இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ‘சீறு’ குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது.
ரியா சுமன் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். நவ்தீப் வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்ய லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்கிறார். கே சம்பத் திலக் கலை இயக்கம் செய்துள்ளார். ராஜு சுந்தரம் நடன அமைப்பு செய்ய பாடலகள் விவேகா எழுதியுள்ளார். படத்தின் இறுதிப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள தல 60 படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் அஜித்குமார் வக்கீலாக நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படம் சமீபத்தில் திரைக்கு வந்து வசூல் குவித்தது. இதைத்தொடர்ந்து “அஜித் சிறந்த நடிகர், அவருடன் மீண்டும் பணியாற்ற தயாராக இருக்கிறேன்” என்று போனிகபூர் அறிவித்தார். தற்போது புதிய படத்தில் மீண்டும் அவர்கள் இணைந்துள்ளனர். இந்த படத்தை நேர்கொண்ட பார்வை படத்தை டைரக்டு செய்த வினோத் இயக்குகிறார்.
மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேசுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் வேறு சில படங்களில் நடிப்பதால் கால்ஷீட் ஒதுக்குவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

இது அஜித்குமாருக்கு 60-வது படமாகும். அதிரடி சண்டை படமாக தயாராகிறது. இதில் அஜித்குமார் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகள் படத்தில் இடம்பெறுகின்றன. படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க உள்ளனர்.
விஜய்யின் பிகில் படத்தை இயக்கிய அட்லீ அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ எனும் தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர், அட்லீ. இந்த படம் ரூ.50 கோடி வசூல் குவித்தது. அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’ என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகித்தார், அட்லீ. தற்போது விஜய்யை வைத்து பிகில் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், அட்லீயின் அடுத்த படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி, அட்லீ ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்தை ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் ஷூட்டிங் வருகிற டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாகவும், தமிழ், இந்தி மொழிகளில் இப்படம் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்னி சிறகுகள் படத்திலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடிகை மீராமிதுன் இயக்குனர் நவீனுடன் டுவிட்டரில் காரசார விவாதம் நடத்தியுள்ளார்.
விஜய் ஆண்டனி, அருண் விஜய் இணைந்து அக்னி சிறகுகள் என்ற படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை மூடர் கூடம் படத்தை இயக்கி பிரபலமான நவீன் இயக்குகிறார். கதாநாயகியாக மீரா மிதுனை ஒப்பந்தம் செய்ததாகவும், பிறகு அவரை நீக்கி விட்டு அக்ஷரா ஹாசனை தேர்வு செய்துள்ளதாகவும் தகவல் பரவியது.
இதனை மீராமிதுனும் உறுதிப்படுத்தி படக்குழுவை சாடினார். இதற்கு டுவிட்டரில் பதில் அளித்த இயக்குனர் நவீன், “அக்னி சிறகுகள் படத்தில் ஷாலினி பாண்டேவுக்கு பதிலாகத்தான் அக்ஷராஹாசன் நடிக்கிறார். மீரா மிதுனை நாயகியாக ஒப்பந்தம் செய்யவில்லை. எனக்கு தெரியாமலேயே படத்தில் நடிப்பதாக அவர் சொல்லி வருகிறார்” என்றார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள மீரா மிதுன், “ஏஞ்சலினா ஜோலி போல நடிப்பதற்கு என்னிடம் சில காட்சிகளை காட்டி பேசினீர்களே மறந்து விட்டதா?. தொடர்ச்சியாக பொய் சொன்னால் என்னிடம் உள்ள வீடியோ ஆதாரத்தை வெளியிடுவேன். நீங்கள் ஒரு பொய்யர். ஞாபக மறதி நோய்க்காக மருத்துவரை பாருங்கள்.

உங்களுக்கும் எனக்கும் படம் தொடர்பாக நடந்த உரையாடல் இருக்கிறது. அதை வெளியிட்டால் உங்கள் குடும்ப பெண்களையும் பாதிக்கும் அதை வெளியிடட்டுமா? அதை எதிர்கொள்ளும் துணிச்சல் உள்ளதா?” என்றார்.
இதற்கு பதில் அளித்த நவீன், “உங்களுக்குத்தான் பிரச்சினை உள்ளது. எனவே மருத்துவரை பாருங்கள்” என்றார். இவர்கள் மோதல் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டுபிள்ளை படத்தில் நடித்த தனது காட்சிகளை நீக்கி விட்டதாகவும் மீராமிதுன் குற்றம்சாட்டி உள்ளார்.
நடிகை ஹன்சிகா மோத்வானி அஷோக் இயக்க உள்ள புதிய வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹன்சிகா தற்போது `மஹா' என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார். எக்ஸட்ரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தை யு.ஆர்.ஜமீல் என்கிற அறிமுக இயக்குநர் இயக்குகிறார். ஹன்சிகா நடிக்கும் 50வது படம் இதுவாகும். இதே போன்று சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ஹன்சிகா வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெப் தொடரை அஷோக் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்த பாகமதி படத்தை இயக்கியிருந்தார். இந்த வெப் தொடரில் நடிக்க உள்ள பிற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடித்துள்ள பிகில் படத்திற்கு தடை கோரி கே.பி.செல்வா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
‘தெறி’, ‘மெர்சல்’ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் விஜய், இயக்குனர் அட்லீ வெற்றிக் கூட்டணியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படமாக ‘பிகில்’ உருவாகியுள்ளது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.

இதனிடையே உதவி இயக்குனர் கே.பி.செல்வா என்பவர், தன்னுடைய கதையை திருடி பிகில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், படத்திற்கு தடை கோரியும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கே.பி.செல்வா தாக்கல் செய்த இந்த மனுவை நீதிபதி சுரேஷ்குமார் இன்று விசாரிக்க இருக்கிறார்.
நடிகர் விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகரை பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் சந்தித்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. 16 பேர் கலந்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் முகேன் ராவ், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் இறுதிப்போட்டி வரை சென்றனர். இதில் முகேன் ராவ் முதல் பரிசை தட்டிச்சென்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததையடுத்து, அதில் கலந்துகொண்டவர்களை பல்வேறு பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் சாண்டி மற்றும் தர்ஷனை நடிகர் சிம்பு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களான தர்ஷனும், அபிராமியும் விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகரை சந்தித்துள்ளனர். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தங்களது சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிகில் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்குவதில் எந்த அரசியல் கட்சியும் நெருக்கடி கொடுக்கவில்லை என அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’. இந்த படம், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்த படத்தில் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், விவேக், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியது. வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு இதுவரை அறிவிக்கவில்லை. படத்திற்கு தணிக்கை சான்றிதழ் இன்னும் வழங்கப்படாததால் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக செய்திகள் பரவி வந்தன. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறுகையில், “பிகில் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்குவதில் எந்த அரசியல் கட்சியும் நெருக்கடி கொடுக்கவில்லை. நாங்கள் சுதந்திரமாக செயல்படுகிறோம்” என்றார்.
ஆங் லீ இயக்கத்தில் வில் ஸ்மித் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ‘ஜெமினி மேன்’ திரைப்படத்தின் விமர்சனம்.
டிஐஏ ஏஜெண்டாக இருக்கும் வில் ஸ்மித், தீவிரவாதிகளை அளிக்கும் நபராக இருந்து வருகிறார். மிகவும் திறமையான இவர் ஒரு கட்டத்தில் ஓய்வு பெற விரும்புகிறார். இந்நிலையில், இறுதியாக தான் சுட்டுக் கொன்றவர் தீவிரவாதி இல்லை என்பதை நண்பர் மூலம் அறிந்துக் கொள்கிறார்.
ஓய்வு முடிவை அறிவித்தவுடன் வில் ஸ்மித்தை கொலை செய்ய முயற்சி நடக்கிறது. இதில் வில் ஸ்மித்துக்கு நிகராக ஒருவன் அவரை எதிர்த்து சண்டை போடுகிறான். அவர் யார் என்று பார்க்க, வில் ஸ்வித்தின் உருவம் போல் மிகவும் இளமை உள்ளவனாக இருக்கிறான்.

இறுதியில் வில் ஸ்மித்தை கொலை செய்ய வந்த அந்த நபர் யார்? எதற்காக கொலை செய்ய முயற்சிக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
வயதான ஏஜெண்டாகவும் இளமையான ஜூனியராகவும் துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் வில் ஸ்மித். கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்யும் இவர், இந்த படத்திலும் கச்சிதமாக கொடுத்த வேலையை செய்திருக்கிறார். இவரது நடிப்பு ஒன்றே படத்திற்கு பெரிய பலம்.

லைப் ஆஃப் பை போன்ற படங்களை எடுத்த ஆங் லீ இப்படத்தை இயக்கியுள்ளார். விறுவிறுப்பாக தொடங்கும் திரைக்கதை, பின்னர் மெதுவாக செல்கிறது. சுவாரஸ்யமே இல்லாமல் காட்சிகள் நகர்ந்தாலும், வில் ஸ்மித் மோதிக்கொள்ளும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. மிகவும் எதிர்பார்த்து செல்லும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் ஏற்படும்.
டியான் பீபேவின் ஒளிப்பதிவு ஒரு சில காட்சிகளை ரசிக்க வைக்கிறது. லார்ன் பால்ஃப்பின் பின்னணி இசை சிறப்பு.
மொத்தத்தில் ‘ஜெமினி மேன்’ காமன் மேன்.
தர்பார் படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் ‘தலைவர் 168’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை அடுத்து ரஜினி, இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் ஆக்ஷன் கலந்த குடும்பம் மற்றும் ரசிகர்கள் கொண்டாடக் கூடிய படமாக இருக்கும் என்று இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஜோதிகாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரஜினியுடன் ‘சந்திரமுகி’ படத்தில் ஜோதிகா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தை தொடர்ந்து ரியோ நடிக்கும் படத்திற்கு ரம்யா நம்பீசன் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து ரியோ ராஜ், தற்போது பத்ரி வெங்கடேஷ் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் எல்.சிந்தன் இருவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்க இருக்கின்றனர். கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கவிருக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
அக்டோபர் 17ஆம் தேதியிலிருந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இப்படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகையர் குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு சாம் ஆர்.டி.எக்ஸ். படத்தொகுப்பு செய்கிறார். ஆர்.கே.வசனம் எழுத, ஸ்டன்னர் சாம் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார்.






