என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ராஜாவுக்கு செக் படவிழாவில் பேசிய சேரன், பெண் குழந்தைகளோடு இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
    பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராஜாவுக்கு செக்’. இப்படத்தில் சேரன் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சராயூ மோகன், நந்தனா வர்மா நடிக்க, முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். ’ஜெயம்’ ரவி நடித்த ‘மழை’ என்கிற படத்தை இயக்கிய சாய்ராஜ் குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். 

    இதில் இயக்குநர் சேரன் பேசியதாவது: "இந்தத் திரைப்படத்தில் என்னைத் தவிர அத்தனைப் பேரும் மிக அதிகமாக உழைத்திருக்கிறார்கள். இப்படத்தின் இயக்குநர் உள்பட பலரும் ஒரு அங்கீகாரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நிச்சயம் அந்த அங்கீகாரம் கிடைக்கும். நான் படத்தைப் பார்த்துவிட்டேன். உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருந்தால் நிச்சயம் அந்தக் குழந்தைகளோடு வந்து படத்தைப் பார்க்க வேண்டும். 

    ராஜாவுக்கு செக் படத்தில் சேரன்

    என் நண்பர் எம்.எஸ்.பிரபு, கதைக்குள் அடங்குகிற கேமராமேன். அவர் இப்படத்தின் அசோஸியட் டைரக்டர் போல வேலை செய்துள்ளார். இப்படத்திற்கு தியேட்டர்கள் சரியாக கிடைக்க வேண்டும். இப்படத்தைப் பார்த்ததும் நம் உறவுகளின் கையைப் பிடிப்பதைப் போல் உணர்வீர்கள்" என்றார்.
    சித்து பிளஸ் 2 படத்தில் நடிகையாக அறிமுகமான சாந்தினி, தற்போது பிரபல இயக்குனர்கள் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
    நீண்ட காலம் தமிழ் சினிமாவில் தாக்கு பிடிக்கும் நடிகைகள் வெகு சிலரே, அந்த வகையில் தன் திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை சாந்தினிக்கு தனி இடம் உண்டு.

    சித்து பிளஸ் 2 வில் திரைக்கதை பாக்யராஜ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு சமீபத்தில் வெளியான ‘ராஜா ரங்குஸ்கி’ வரை இவரின் கலைப் பயணம் தொய்வின்றி தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

    ராஜா ரங்குஸ்கி படத்தில் இவர் ஏற்று நடித்த வில்லி கதாபாத்திரம் பலரின் புருவங்களை உயர்த்தியது. இவருக்கு நடிப்பில் பெரிய நல்ல பெயரையும் பெற்று கொடுத்தது. இவரது நடிப்பை கண்டு வியந்த பாலாஜி சக்திவேல், இவரை அணுகி ஒரு கதை சொல்ல, அந்த கதை சாந்தினிக்கு மிகவும் பிடித்த விட. உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அந்த படம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

    சாந்தினி

    இப்படத்தை அடுத்து ராதாமோகன் இயக்கும் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக சாந்தினி நடிக்கிறார். சாந்தினியின் படங்கள் வரிசையில் இந்தப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும் என்கிறார்கள். ஒரு புறம் பாலாஜி சக்திவேல் படம், மறுபுறம் ராதாமோகன் படம் என சாந்தினியின் வரிசையான படங்கள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. 
    சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடித்து வரும் ‘டெடி’ படத்தில் பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் நடித்து வருகிறார்.
    `கஜினிகாந்த்', `காப்பான்' படங்களில் இணைந்து நடித்த ஆர்யா - சாயிஷாவுக்கு காதல் மலர்ந்தது. இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். நிஜத்தில் ஜோடியான இவர்கள் தற்போது, மீண்டும் திரையில் இணைந்து ‘டெடி’ என்ற படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்.

    `டிக் டிக் டிக்' படத்தை இயக்கிய சக்தி சவுந்தர்ராஜன் `டெடி' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான சாக்‌ஷி அகர்வால் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    டெடி படக்குழுவினருடன் சாக்‌ஷி அகர்வால்

    இவர்களுடன் சதீஷ், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
    தமிழில் பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சுனைனா, தற்போது ட்ரிப் படத்திற்காக காட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் சுனைனா. அதனை தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். 

    தனுஷ் நடிப்பில் வெளிவர உள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் சுனைனா தற்போது ட்ரிப் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்காக அவர் மிகவும் கொடூரமான நாயான பிட்புலுடன் காட்டிற்குள் வலம் வந்துள்ளார். 

    ட்ரிப் படத்தில் சுனைனா

    அந்த புகைப்படங்களை சுனைனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் உங்களுக்கு மிகவும் தைரியம் தான் என பாராட்டி வருகின்றனர். மேலும் படக்குழுவினர் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க, மிகவும் பாதுகாப்பாக கவனித்து படத்தை எடுத்து வருவதாகவும் சுனைனா குறிப்பிட்டுள்ளார். 
    அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிகில்’ படம் பற்றி பரவிய வதந்திக்கு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
    அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'பிகில்'. தீபாவளிக்கு வெளியாகும் இந்த படத்தின் டிரெய்லர் அக்டோபர் 12ந்தேதி மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து சாதனை படைத்து வருகிறது. 

    'பிகில்' டிரெய்லர் வெளியாகி 2 நாட்களே ஆவதால், இன்னும் சில நாட்களில் மேலும் பல சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 'பிகில்' படத்தை தணிக்கை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

    பிகில் பட டிரைலரில் இடம் பெறும் காட்சி

    இந்த நிலையில் பிகில் டிரெய்லரில் வரும் ஒரு காட்சி சக்தே இந்தியா படத்தை போலவே இருக்கிறது என வீடியோ பரவியது. அதனால் சக்தே படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி தான் பிகில் படம் எடுக்கின்றனர் எனவும் செய்திகள் பரவியது. 

    இந்த நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அளித்துள்ள பேட்டியில் “சக் தே படத்தின் ரீமேக் உரிமையை நாங்கள் வாங்கவில்லை. அப்படி வந்த செய்தி வதந்தி” என்று கூறியுள்ளார்.
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்திருக்கிறது.
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அசுரன்’. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை தாணு தயாரித்துள்ளார். 

    பூமணியின் வெக்கை நாவலை மையமாக வைத்து உருவான இந்த படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அக்டோபர் 4ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

    அசுரன்

    இந்நிலையில், இப்படத்தின் வசூல் ரூ.100 கோடியை ஏட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள். அசுரன் படம் தான் தனுஷ் நடிப்பில் வெளியாகி ரூ.100 கோடி வசூல் செய்த முதல் படம் என்று கூறப்படுகிறது.
    பிக்பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான யாஷிகா ஆனந்துடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று அவருடைய நெருங்கிய தோழி ஐஸ்வர்யா தத்தா கூறியுள்ளார்.
    பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் மூலம் யாஷிகா ஆனந்தும் ஐஸ்வர்யா தத்தாவும் நெருங்கிய தோழிகள் ஆனார்கள். தொடர்ந்து இருவரும் இணைந்து ஊர் சுற்றி அந்த படங்களை வெளியிடுகின்றனர். இருவரும் இணைந்து நடிப்பார்களா? என்று ஐஸ்வர்யா தத்தாவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:- 

    ’யாஷிகா சூப்பரான படங்கள்ல நடிச்சுக்கிட்டிருக்கா. அவ நடிச்ச 'ஜாம்பி' பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ரொம்ப கஷ்டப்பட்டு இந்த அளவுக்கு வந்திருக்கா. நல்ல கதைகள் வந்தா ரெண்டுபேரும் சேர்ந்து நடிக்கலாம்னு நினைச்சிருந்தோம். ஆனா, இப்போ அது வேண்டாம்னு தோணுது. 

    யாஷிகா ஆனந்த் - ஐஸ்வர்யா தத்தா

    காரணம், நாங்க ரெண்டுபேரும் ரொம்ப ரொம்ப நெருக்கமான தோழிகள். ஒரே படத்துல நடிக்கும்போது, போட்டி போட்டு நடிக்கவேண்டி இருக்கும். அது எங்க நட்பை பாதிக்க வாய்ப்பிருக்கு. நாங்க ரெண்டு பேரும் இப்போ இருக்கிற மாதிரி நல்ல தோழிகளா இருக்கவே விரும்புறோம். அதனால, சேர்ந்து நடிக்கிற எண்ணம் இல்லை". இவ்வாறு அவர் கூறினார்.
    கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான நடிகை ஒருவர் தற்போது டப்பிங் கலைஞராக அவதாரம் எடுத்துள்ளார்.
    நடிகை சாக்‌ஷி ரஜினியுடன் காலா, அஜித்துடன் விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். இவர் தற்போது டப்பிங் கலைஞராக அவதாரம் எடுத்துள்ளார். 

    சாக்‌ஷி

    சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ஆக்‌ஷன் படத்தில் இவர் டப்பிங் பேசியுள்ளார். டப்பிங் பேசியபோது எடுத்த புகைபடத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். மேலும் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். 
    சவுதி அரேபியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகர்களுடன் சந்திப்பு மேற்கொண்ட ஷாருக்கான், அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.
    சவுதி அரேபியாவில் பல ஆண்டுகாலமாக நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகளை இளவரசர் முகமது பின் சல்மான் தளர்த்தி சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கும், ஸ்டேடியங்களில் விளையாட்டு போட்டிகளை நேரில் காண்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    சினிமா மீதான தடையும் நீக்கப்பட்டது. 40 வருடங்களுக்கு பிறகு அங்கு தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. நாட்டின் பொழுதுபோக்கு துறையை மேம்படுத்தும் வகையில் ரியாத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரை அழைத்து விழா நடத்தினர்.

    ஷாருக்கான், ஜாக்கிசான், ஜீன் கிளாட் வான்டேம்,

    இதில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், கேம் ஆப் த்ரோன்ஸ் நடிகர் ஜேசன் மோமோ, பெல்ஜியம் நடிகர் ஜீன் கிளாட் வான்டேம் பிரபல அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளர் டேவிட் லெட்டர்மேன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து நடிகர் ஷாருக்கான் பங்கேற்றார். அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் ஜாக்கிசான் பேசும்போது, “எனது படத்தின் படப்பிடிப்பை ரியாத்தில் நடத்த ஆர்வமாக இருக்கிறேன். படக்குழுவினருடன் விரைவில் இங்கு வருவேன்” என்றார். அங்கு ஜாக்கிசான் உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்களை ஷாருக்கான் சந்தித்து பேசினார். அவர்களுடன் செல்பி எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு எனது கதாநாயகர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார். இதே படங்களை ஜாக்கிசானும் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
    ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா, ரியா சுமன் நடிப்பில் உருவாகி வரும் ’சீறு’ படத்தின் முன்னோட்டம்.
    விஜய் சேதுபதி நடித்த றெக்க படத்தின் இயக்குனர் ரத்ன சிவா அடுத்ததாக இயக்கும் படம் ‘சீறு’. ஜீவா நாயகனாக நடித்து வரும் இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ‘சீறு’ குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது. 

    ரியா சுமன் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். நவ்தீப் வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்ய லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்கிறார். கே சம்பத் திலக் கலை இயக்கம் செய்துள்ளார். ராஜு சுந்தரம் நடன அமைப்பு செய்ய பாடலகள் விவேகா எழுதியுள்ளார். படத்தின் இறுதிப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள தல 60 படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் அஜித்குமார் வக்கீலாக நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படம் சமீபத்தில் திரைக்கு வந்து வசூல் குவித்தது. இதைத்தொடர்ந்து “அஜித் சிறந்த நடிகர், அவருடன் மீண்டும் பணியாற்ற தயாராக இருக்கிறேன்” என்று போனிகபூர் அறிவித்தார். தற்போது புதிய படத்தில் மீண்டும் அவர்கள் இணைந்துள்ளனர். இந்த படத்தை நேர்கொண்ட பார்வை படத்தை டைரக்டு செய்த வினோத் இயக்குகிறார். 

    மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேசுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் வேறு சில படங்களில் நடிப்பதால் கால்ஷீட் ஒதுக்குவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

    அஜித், நயன்தாரா

    இது அஜித்குமாருக்கு 60-வது படமாகும். அதிரடி சண்டை படமாக தயாராகிறது. இதில் அஜித்குமார் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகள் படத்தில் இடம்பெறுகின்றன. படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க உள்ளனர்.
    விஜய்யின் பிகில் படத்தை இயக்கிய அட்லீ அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ எனும் தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர், அட்லீ. இந்த படம் ரூ.50 கோடி வசூல் குவித்தது. அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’ என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகித்தார், அட்லீ. தற்போது விஜய்யை வைத்து பிகில் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. 

    அட்லீ, ஷாருக்கான்

    இந்நிலையில், அட்லீயின் அடுத்த படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி, அட்லீ ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்தை ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் ஷூட்டிங் வருகிற டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாகவும், தமிழ், இந்தி மொழிகளில் இப்படம் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ×