என் மலர்
சினிமா செய்திகள்
அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கும் புதிய படத்தை பிரபல தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்க இருக்கிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் ‘அசுரன்’. தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. வணிக ரீதியாக ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

வெற்றி மாறன் அடுத்ததாக எல்ரெட் குமார் ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். வெகு விரைவில் இந்தப் படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் பட்டியலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருக்கும் ‘விக்ரம் 58’ படத்தின் கதாநாயகி யார் என்பது பற்றி படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’விக்ரம்-58’ படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
ஆக்ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கிறது. பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தனர்.

இந்நிலையில், இப்படத்தில் கேஜிஎப் படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
நடிகர் ராணா தயாரிக்கும் தெலுங்கு படத்தில் நடிகை நயன் தாரா போலீஸ் வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய பட உலகில் தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் இருக்கும் நயன்தாரா நடிப்பில் இந்த வருடம் விஸ்வாசம், ஐரா, மிஸ்டர் லோக்கல், கொலையுதிர் காலம் ஆகிய தமிழ் படங்களும், லவ் ஆக்ஷன் டிராமா என்ற மலையாள படமும், சைரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு படமும் திரைக்கு வந்தன. ரஜினிகாந்த் ஜோடியாக தர்பார் படத்திலும் விஜய்யுடன் பிகில் படத்திலும் நடித்து முடித்துள்ளார். பிகில் தீபாவளிக்கும், தர்பார் பொங்கல் பண்டிகையிலும் வெளியாகிறது.

இந்த நிலையில் பாகுபலி படத்தில் நடித்து பிரபலமான ராணா தயாரிக்கும் புதிய தெலுங்கு படத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேசியுள்ளனர். இந்த படத்தில் கதையை கேட்டதும் நயன்தாரா ஒப்புக்கொண்டார். இதில் நயன்தாரா போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். முதலில் கீர்த்தி சுரேஷை தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அணுகினர். ஆனால் படக்குழுவினர் கேட்ட தேதிகளை அவரால் ஒதுக்க முடியாததால் நயன்தாரவை தேர்வு செய்துள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் சியான் 58 படத்தில் இணைந்துள்ள இர்பான் பதான் தமிழில் டுவிட் செய்துள்ளார்.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’விக்ரம்-58’ படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
ஆக்ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கிறது. இப்படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் இர்பான் பதான் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘என் அன்பான புள்ளைங்கோ எல்லாத்துக்கும் வணக்கம். நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி. நடிகர் விக்ரம், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இயக்குனர் அஜய் ஞானமுத்து உடன் சியான் 58-ல் இணைய ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்களுடைய ஆதரவு தொடரட்டும், நன்றி. மஜா பன்றோம்’ என்று பதிவிட்டுள்ளார்.
தர்பார் படத்தின் வெற்றிக்காக கேதார்நாத் கோவிலில் பிரார்த்தனை செய்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தர்பார்’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினிகாந்த் 10 நாட்கள் ஆன்மிக பயணமாக இமயமலை சென்றுள்ளார். கடந்த 13-ந் தேதி காலை விமானத்தில் புறப்பட்டு உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் சென்றார். அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷும் உடன் சென்றுள்ளார்.
திங்கட்கிழமை கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்தில் உள்ள கோயில்களில் பிரார்த்தனை செய்த ரஜினி, தரிசனத்துக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘தர்பார்’ படப்பிடிப்பை முடித்துவிட்டோம். படத்தின் வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்ய இங்கு வந்தேன்” என்றார்.

இதேபோன்று பல்வேறு கோயில்களுக்கும் சென்று தரிசனம் செய்யவுள்ள ரஜினி, துவாராகாட்டில் தான் கட்டியுள்ள குருசரண் ஆசிரமத்தில் 2 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியின் இந்த இமயமலை சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை ரஜினியின் நண்பர் ஹரி செய்துள்ளார்.
200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் 15 ஆண்டுகளுக்கு பின் தன் கணவர் கிருஷ்ணா வம்சியுடன் இணைந்துள்ளார்.
ரம்யா கிருஷ்ணன் 1983-ஆம் ஆண்டு வெளியான ’வெள்ளை மனசு’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 30 ஆண்டுகளாகத் திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2003-ம் ஆண்டு இயக்குனர் கிருஷ்ணா வம்சியை திருமணம் செய்து கொண்ட ரம்யா கிருஷ்ணன், திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் வெளியான பாகுபலி படத்தில் சிவகாமிதேவி வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார்.

தற்போது இவர் நடிக்க உள்ள அடுத்த படத்தை அவரது கணவர் கிருஷ்ணா வம்சி இயக்க உள்ளார். ஏற்கனவே கிருஷ்ணா வம்சி இயக்கத்தில் சந்திரலேகா(1998), ஸ்ரீ ஆஞ்சநேயம்(2004) ஆகிய படங்களில் நடித்திருந்த ரம்யா கிருஷ்ணன், தற்போது 15 ஆண்டுகள் கழித்து ’வந்தே மாதரம்’ படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அசுரன் படம் 100 கோடி வசூல் செய்துள்ளதன் மூலம் தனுஷ் புதிய சாதனை படைத்துள்ளார்.
2002 ஆம் ஆண்டில் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமான தனுஷ், தொடர்ந்து 17 வருடங்களாக பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் 100 கோடி கிளப்பில் இதுவரை அவரது படங்கள் இடம்பெறாமல் இருந்தது. தற்போது, அசுரனின் வெற்றி அதை சாத்தியமாக்கி இருக்கிறது.
பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் உருவாக்கிய அசுரன் படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர், அபிராமி, பசுபதி, பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், கருணாஸ் மகன் கென், ‘ஆடுகளம்’ நரேன், டி.ஜே, பவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த அக்டோபர் 4ந்தேதி வெளியான அசுரன் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
தீண்டாமை உள்ளிட்ட அடக்குமுறைக்கு எதிராக பேசிய இப்படம் சமூக வலைதளங்களில் விவாதக்களமாக மாறியது. இந்நிலையில், அசுரன் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. தனுஷ் நடிப்பில் 100 கோடி கிளப்பில் இணையும் முதல் படம் அசுரன். அசுரனின் பாக்ஸ் ஆபிஸ் குறித்த தகவல்கள் அறிந்ததும் இந்த வெற்றியை பெரிய அளவில் கொண்டாட முடிவெடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் எஸ்.தாணு.

மேலும் அசுரன் 100 கோடி வசூலித்ததன் மூலம் தனுஷ் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் ஆகிய மூன்று திரையுலகிலும் ரூ.100 கோடி வசூல் படங்களை கொடுத்த ஒரே நடிகர் என்ற பெருமையை தனுஷ் பெற்றுள்ளார். தனுஷ் நடித்த ஹாலிவுட் படமான ’பக்கிரி’, பாலிவுட் படமான ‘ராஞ்சனா’ ஆகிய திரைப்படங்கள் ஏற்கனவே ரூ.100 கோடி வசூல் செய்துள்ள நிலையில், கோலிவுட்டில் தற்போது அசுரன் படமும் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தோட்ட கிருஷ்ணா இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ், மதுபாலா நடிப்பில் உருவாகி வரும் கைலாசகிரி படத்தின் முன்னோட்டம்.
தமிழகத்தில் சமீபகாலங்களில் உலுக்கிய சிலை திருட்டு விவகாரம் கைலாசகிரி என்ற பெயரில் படமாகிறது. ஆர்.கே.சுரேஷ் முதன் முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில், மதுபாலா, சாகர், முரளி கிருஷ்னா, கண்டா சீனிவாசராவ், பூமாரெட்டி, மேகனா ஸ்ரீ லட்சுமி, பேபி ஹர்ஷீதா, மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் வசனம் மற்றும் பாடல்களை சாய்மோகன் குமார் எழுத, கன்ஷியாம் இசையமைக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் இப்படத்தை ராவூரி வெங்கடசாமி மிகுந்த பொருட் செலவில் தயாரித்துள்ளார். தெலுங்கில் 18 வெற்றிப் படங்களை இயக்கியுள்ள தோட்ட கிருஷ்ணா கைலாசகிரி படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். நவம்பரில் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

படத்தின் இயக்குநர் தோட்டா கிருஷ்ணா கூறியதாவது:- ஆயிரம் வருடம் பழமையானதும் அதீத சக்தி கொண்டதுமான மரகதலிங்கம் உள்ள கோவிலில் அந்த லிங்கத்தை திருடி விற்க ஒரு திருட்டு கும்பல் ஈடுபடுகின்றது. அதை தடுத்து லிங்கத்தை காப்பாற்ற ஆர்.கே.சுரேஷ் முயல்கிறார். எப்படி முறியடிக்கிறார் என்பதே கதை’ என்றார்.
ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் குறித்த முக்கிய அப்டேட்டை படத்தின் இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ‘தர்பார்’. பேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி நடிப்பதாலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடிப்பதாலும் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தர்பார் படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். தர்பார் படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்துவிட்டது. பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தர்பார் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தர்பார் படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். தர்பார் படத்தின் தீம் மியூசிக்குடன் கூடிய மோஷன் போஸ்டர் வருகிற நவம்பர் 7-ந் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். அனிருத்தின் இந்த திடீர் அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தர்பார் படம் பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பிகில் திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்ததையடுத்து, படத்தை தீபாவளி நாளில் வெளியிடுவதற்கான பணிகளை படக்குழுவினர் தொடங்கி உள்ளனர்.
ஏஜிஎஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளிவர காத்திருக்கும் படம் பிகில். இந்த படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் பெறுவதற்காக இரண்டு நாட்களாக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த சூழ்நிலையில் பிகில் படத்தை பார்த்து ஆய்வு செய்த சென்சார் போர்டு உறுப்பினர்கள், தற்போது இப்படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளனர். இதையடுத்து படத்தை வெளியிடுவதற்கான பணிகளை படக்குழுவினர் தொடங்கி உள்ளனர். பிகில் படம் சுமார் இரண்டு மணி நேரம் 58 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக உருவாகி இருக்கிறது.

யுஏ சான்றிதழ் என்பதால் விஜய் ரசிகர்கள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் படத்தின் ஆக்சன் காட்சிகள் அதிகம் இருக்கும் என்று சொல்லலாம். எனவே இந்த தீபாவளி விஜய் ரசிகர்களுக்கும் ஆக்சன் தீபாவளியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சமீபத்தில் பிகில் படத்தின் டிரெய்லர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. தற்பொழுது யுஏ சான்றிதழ் கொடுத்து இருப்பதால் படம் தீபாவளிக்கு வெளிவருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்து வரும் ‘ஓ மை கடவுளே’ படத்தில் சின்னத்திரை நடிகை இணைந்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஓ மை கடவுளே’. இப்படத்தை திரைப்படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும், ரித்திகா சிங் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து புகழ் பெற்ற வாணி போஜன், இப்படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தாரை தப்பட்டை படம் மூலம் நடிகராக அறிமுகமான ஆர்.கே.சுரேஷ், தற்போது இரு வேடங்களில் கைலாசகிரி என்ற படத்தில் நடித்துள்ளார்.
ஸ்ரீமதி ராவூரி அல்லி கேஸ்வரி வழங்கும் ஸ்ரீ அப்போலோ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய படத்தின் பெயர் ‘கைலாசகிரி’. ஆர்.கே.சுரேஷ் முதன் முறையாக இரு வேடங்களில் நடித்துள்ள இதில் மதுபாலா, சாகர், முரளி கிருஷ்னா, கண்டா சீனிவாசராவ், பூமாரெட்டி, மேகனா ஸ்ரீ லட்சுமி, பேபி ஹர்ஷீதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் வசனம் பாடல்களை சாய்மோகன் குமார் எழுத, கன்ஷியாம் இசையமைக்க, முகமது ரபி ஒளிப்பதிவையும், ஜெகதீஷ் பாபு படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் இப்படத்தை ராவூரி வெங்கடசாமி மிகுந்த பொருட் செலவில் தயாரித்துள்ளார்.
தெலுங்கில் 18 வெற்றிப் படங்களை இயக்கி உள்ள தோட்ட கிருஷ்ணா ‘கைலாசகிரி’ படத்தின் கதை திரைக்கதை எழுதி
இயக்கி உள்ளார். படம் பற்றி இவர் கூறும்போது, ‘கோவிலில் ஆயிரம் வருடம் பழமையானதும் அதீத சக்தி கொண்டதுமான மரகதலிங்கத்தை திருடி விற்க ஒரு திருட்டுக் கும்பல் ஈடுபடுகின்றது. அதை தடுத்து லிங்கத்தை காப்பாற்ற ஆர்.கே.சுரேஷ் முயல்கிறார். எப்படி முறியடிக்கிறார். சிவனின் சக்தி எவ்வாறு வெளிப்படுகின்றது என்பதை கிராபிக் காட்சிகள் மூலம் சிறப்பாக படமாக்கி இருக்கிறோம்’ என்றார்.






