என் மலர்
சினிமா செய்திகள்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சூரைப்போற்று’ படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
காப்பான் படத்திற்குப் பிறகு சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து பின்னணி வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நவம்பர் 10ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகும் வலிமை படத்தில் நடிக்க பிரபல நடிகை மறுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் உள்ள போனிகபூர் அலுவலகத்தில் ‘வலிமை’ பட பூஜை எளிமையாக நடந்தது.
இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது. அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை பரிணிதி சோப்ராவிடம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டிருக்கிறார்களாம். பிரபல டென்னிஸ் வீராங்கனை சாய்னாவின் வாழ்க்கை படத்தில் பரிணிதி சோப்ரா நடிப்பதால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக நடிக்க மறுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்து வருகிறது.
விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்துள்ளார். மேலும் அப்பா - மகன் என்று இரண்டு தோற்றங்களிலும் விஜய் நடித்திருக்கிறார்.
உலகம் முழுவதும் வெளியான இப்படம் 2 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததில் இது விஜய்யின் 7வது படமாகும். இதுவரை தீபாவளி தினத்தில் வெளியான துப்பாக்கி, கத்தி, மெர்சல், சர்கார், தற்போது வெளியான பிகில் ஆகிய படங்கள் அனைத்தும் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். நயன்தாரா, கதிர், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
கமல் நடிப்பில் 1997ம் ஆண்டு தொடங்கப்பட்ட மருதநாயகம் திரைப்படம், பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகும் என்று கூறப்படுகிறது.
கமல்ஹாசன் கனவு படமான மருதநாயகம் படவேலைகள் 1997-ல் தொடங்கப்பட்டு சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டது. பட்ஜெட் மற்றும் சர்வதேச அளவிலான வினியோக சந்தை நிலவரம் உள்ளிட்ட சில காரணங்களால் படப்பிடிப்பை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இப்போது அதில் நடித்தவர்கள் தோற்றம் மாறி இருக்கும் என்ற பிரச்சினையும் எழுந்தது. இதுகுறித்து கமல்ஹாசன் கூறும்போது, மருதநாயகம் படம் வரும். 30 நிமிட காட்சிகளை எடுத்து விட்டேன். அதுதான் கடினமான பகுதி. அதன்பிறகு 12 ஆண்டுகளுக்கு பிறகு என்றுதான் காட்சிகள் விரிகின்றன. எனவே தோற்றம் பற்றிய பிரச்சினை எழாது.” என்றார்.

இந்த நிலையில் மருதநாயகம் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் தற்போது பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது, “மருதநாயகம் படம் தயாராகும். எனக்கு அரசியல் பணிகள் இருப்பதால் மருதநாயகம் படத்தில் நான் இருக்க மாட்டேன். எனக்கு பதில் வேறு நடிகர் இருப்பார்” என்றார்.
இதன்மூலம் மருதநாயகம் படத்தில் இருந்து விலகுவதை கமல்ஹாசன் உறுதிப்படுத்தி உள்ளார். வேறு நடிகரை வைத்து பட வேலைகள் தொடங்கப்படும் என்று தெரிகிறது. கமலுக்கு பதில் விக்ரம் நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம் நடிப்பாரா? அல்லது வேறு நடிகர் தேர்வு செய்யப்படுவாரா? என்பது விரைவில் தெரிய வரும்.
ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்து, கதாநாயகனாக நடித்து இயக்கி இருக்கும் பாப்பிலோன் படத்தின் முன்னோட்டம்.
ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. பாப்பிலோன் என்றால் தமிழில் வண்ணத்துப்பூச்சி என அர்த்தம்.
அப்பா இல்லாத தனது குடும்பத்தை அன்பாகக் கவனித்து வருகிறார் ஹீரோ. எதிர்பாராமல் அவரது தங்கையின் வீடியோ ஒன்று கயவர்களின் கையில் சிக்குகிறது. அவர்கள் அதன்மூலம் தங்கையை பிளாக்மெயில் செய்து பணம் பறிப்பதுடன், ஒரு கட்டத்தில் அவரைக் கடத்தவும் முயற்சிக்கின்றனர்.
இதில் விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் செல்கிறார் தங்கை. கதாநாயகி மூலம் இந்த விபரம் அண்ணனுக்குத் தெரியவர, இதன் பின்னணியில் உள்ள கும்பலை நாயகன் எப்படி வேரறுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
கதாநாயகியாக ஸ்வேதா ஜோயல் என்பவர் நடித்துள்ளார். தங்கையாக சௌமியா மற்றும் அம்மாவாக ரேகா சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஷ்யாம் மோகன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அருள்செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுதர்சன் இப்படத்தின் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார்.
இந்தப் படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து இருக்கும் ஆறு ராஜா, கலை இயக்குநர் தோட்டா தரணியின் குழுவில் ஆர்டிஸ்ட் ஆகப் பணியாற்றியவர். சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த பிளாக் பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி படத்தில் சந்திரமுகியின் ஓவியத்திற்கு வர்ணம் தீட்டியவர் இவர்தான்.
கார்த்தி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் கைதி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்.
மாநகரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘கைதி’. இதில் கார்த்தி, நரேன், ஹரிஷ் உத்தமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார். கைதி உருவாக காரணமாக இருந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் கார்த்திக்கு நன்றி தெரிவித்த லோகேஷ், என்னிடம் பலரும் கேட்கும் கேள்விக்கு பதில் ‘டில்லி மீண்டும் வருவான்’ என்று கூறியிருக்கிறார்.

கைதி படத்தில் கார்த்தியின் கதாபாத்திரம் டில்லி. மேலும் இப்படத்தின் இறுதியில் அடுத்த பாகத்திற்கான லீட் கொடுத்திருப்பார். தற்போது அதை இயக்குனர் லோகேஷ் உறுதி செய்திருக்கிறார்.
ஷாருக்கான் தனது நடிப்புலக வாழ்க்கை பற்றி ஒரு நிகழ்ச்சியில், அவர்கள் முன் நடிக்கும் போது மிகவும் பதட்டம் அடைந்தேன் என்று கூறியிருக்கிறார்.
ஷாருக்கான் தனது நடிப்புலக வாழ்க்கை பற்றி ஒரு நிகழ்ச்சியில் கூறியதாவது:-
‘நீங்கள் ஒரு காட்சியில் நடித்து பின், அதிலுள்ள நெகட்டிவ் மட்டும் உங்களுக்குத் தெரியும். அப்போது, உங்களுக்குள் முழுமையான எதிர்மறையான எண்ணங்கள் மட்டுமே இருக்கும்.
நானா படேகர், அம்ரிதா சிங், ஜூஹி சாவ்லா போன்ற நடிகர்கள் முன் நடிக்கும்போது மிகவும் பதட்டம் அடைந்தேன். படத்தில் நான் நடித்த காட்சிகளை பார்த்ததும், `என்னால் நடிகனாக முடியாது’ என்று தோன்றியது. படத்தின் இயக்குநர் என்னை சமாதானப்படுத்தினார். படத்தின் இறுதி வடிவம் நன்றாக இருக்கும் என்று ஆறுதல் கூறினார்.

அஜய் பிஜிலி, `திரையரங்குகளில் வரவேற்பு பெறும்‘ என்றார். அவர்கள் இருவரும் என்னிடம் பொய் சொன்னார்கள். நான் பார்ப்பதற்கு நன்றாக இல்லை. வழக்கம்போலத்தான் இருந்தேன். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. காரணம் மக்கள் என் மீது அளவுகடந்த அன்பை வைத்துள்ளனர். என்னால் இன்றளவும் நான் ஒரு நடிகன் என்பதை நம்பமுடியவில்லை. சில நேரங்களில் நான் ஒரு நடிகனாக நடந்துகொள்ள வேண்டியிருக்கும். இது சுவாரஸ்யமானதல்ல. ஆனால், என்னுடைய பணியை நான் விரும்புகிறேன்” என்றார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பிரபல நடிகர் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘அசுரன்’. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் அக்டோபர் 4ந்தேதி வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் வியாபாரம் ரூ.100 கோடியைக் கடந்துள்ளது.
இந்த படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி, கமல் தொடங்கி பல்வேறு தமிழ் திரையுலகினரும் படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். மேலும், தெலுங்கு திரையுலகிலிருந்தும், இந்தி திரையுலகிலிருந்தும் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் ‘அசுரன்’ பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ‘அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீமேக் உறுதியாகியுள்ளது. தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கவுள்ளார். இது தொடர்பாக சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தங்களுடைய டுவிட்டர் பதிவில் “’அசுரன்’ தெலுங்கு பதிப்பில் வெங்கடேஷ் நாயகனாக நடிக்கவுள்ளார். தாணு மற்றும் சுரேஷ் பாபு இணைந்து தயாரிக்கவுள்ளோம்“ என்று தெரிவித்துள்ளது. ‘அசுரன்’ தெலுங்கு பதிப்பின் இயக்குநர் யார் என்பதை இன்னும் படக்குழுவினர் உறுதி செய்யவில்லை.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 3 படத்தில் வில்லனாக நடித்த ஓலா ஜேசன் என்பவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சூர்யாவின் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமாக தயாரான ‘சிங்கம்-3’ படத்தில் வில்லனாக நடித்தவர் ஓலா ஜேசன். அமீர்கானின் தங்கல், மன்மோகன் சிங் வாழ்க்கை கதையான ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர், கேரி ஆன் கேசார், ராக் தேஷ் உள்ளிட்ட சில இந்தி படங்களில் நடித்துள்ளார்.
நைஜீரியாவை சேர்ந்த ஜேசன், டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றிக்கொண்டு இருந்தார். அவர் மீது விமான நிலைய பாதுகாப்பு படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து ஜேசனை அழைத்து விசாரணை நடத்தினர். உடமைகளையும் ஆய்வு செய்தனர். விமானத்தில் கோவா செல்வதற்கான டிக்கெட்டை அவர் வைத்து இருந்தார். பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது அவரது விசா கடந்த 2011-ம் ஆண்டிலேயே முடிந்து இருந்தது.

விசா காலம் முடிந்த பிறகும் தொடர்ந்து இந்தியாவிலேயே அவர் வசித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஜேசனை தனி அறைக்கு அழைத்து சென்று அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் முரண்பட்ட பதிலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜேசனை கைது செய்தனர். அவரிடம் தற்போது உளவுத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாப்பிலோன் என்ற படத்தில் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட கதாநாயகி, காதலன் டார்ச்சர் தாங்காமல் இரண்டாவது நாளே படப்பிடிப்பை விட்டு ஓடியிருக்கிறார்.
ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. பாப்பிலோன் என்றால் தமிழில் வண்ணத்துப்பூச்சி என அர்த்தம்.
கதாநாயகியாக ஸ்வேதா ஜோயல் என்பவர் நடித்துள்ளார். தங்கையாக சௌமியா மற்றும் அம்மாவாக ரேகா சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். பண்ணையார் கதாபாத்திரத்தில் பூராமு மற்றும் அவரது மகளாக அபிநயா நடிக்க, ‘மாரி’ புகழ் வினோத் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து இருக்கும் ஆறு ராஜா, கலை இயக்குநர் தோட்டா தரணியின் குழுவில் ஆர்டிஸ்ட் ஆகப் பணியாற்றியவர். ரஜினி நடித்த சந்திரமுகி படத்தில் சந்திரமுகியின் ஓவியத்திற்கு வர்ணம் தீட்டியவர் இவர்தான்.

இந்தப் படத்திற்கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் வேறு ஒரு கதாநாயகி. கொடைக்கானல் பகுதியில் படப்பிடிப்பு துவங்கிய இரண்டாவது நாளிலேயே, தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக் காரணம் காட்டி படப்பிடிப்பில் இருந்து கிளம்பி சென்றாராம். பின்னர்தான் அவர் தனது காதலனின் ஈகோ டார்ச்சர் தாங்காமல் இந்தப் படத்தை விட்டு விலகியிருக்கிறார் என தெரிய வந்துள்ளது.
உடனடியாக ஸ்வேதா ஜோயல் என்கிற இன்னொரு கதாநாயகியை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை நடத்தி உள்ளார்கள்.
கேரளாவில் யானை தந்தங்களை வைத்திருந்த வழக்கில் பிரபல நடிகர் மோகன்லாலுக்கு பெரும்பாவூர் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.
கேரள மாநிலம் தேவாராவில் உள்ள நடிகர் மோகன்லால் வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு வருமானவரி துறையினர் சோதனை நடத்தி 4 யானை தந்தங்களை கைப்பற்றினர். இது தொடர்பாக மோகன்லால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. யானை தந்தங்களை திருப்பி ஒப்படைக்கும்படி அரசிடம் மோகன்லால் கோரிக்கை விடுத்தார்.
வனத்துறை சட்டப்படி யானை தந்தங்களை வீட்டில் வைக்க தடை உள்ளது. ஆனாலும் அப்போதைய வனத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் சட்டத்தில் திருத்தம் செய்து யானை தந்தங்களை மோகன்லாலிடம் திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் 7 வருடத்துக்கு பிறகு கொட நாடு வனத்துறையினர் பெரும்பாவூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கோரி கேரள ஐகோர்ட்டில் மோகன்லால் மனு தாக்கல் செய்தார். அதில் தந்தங்கள் வைத்துக்கொள்ள தன்னிடம் லைசென்ஸ் உள்ளது என்றும், தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் பெரும்பாவூர் கோர்ட்டு டிசம்பர் 6-ந்தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு மோகன்லாலுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையை மேலும் 3 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
அட்டக்கத்தி மூலம் நடிகையாக அறிமுகமான நந்திதா ஸ்வேதா நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘ஐபிசி 376’ படத்தின் முன்னோட்டம்.
நந்திதா ஸ்வேதா நடிப்பில் ஐபிசி 376 என்ற ஆக்ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படம் உருவாகி வருகிறது. நான்கு சண்டைக்காட்சிகள் உள்ள இப்படத்தில் பெரும்பாலும் டூப் இல்லாமலே துணிச்சலாக நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா.
ஹாரர் சேஸிங், சஸ்பென்ஸ், ஆக்ஷன் என கதை திரைக்கதை எழுதி படத்தை இயக்கி வருகிறார் ராம்குமார் சுப்பாராமன். இப்படம் பெண்களைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பில் உள்ள IPC 376 என்பது பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறிக்கிறது. இப்படி இப்படத்தின் தலைப்பிலே பெண்கள் மீதான அக்கறை தெரிகிறது.
விறுவிறுப்பாக தயாராகி வரும் இப்படத்தில் அண்ணாதுரை, தகாராறு படங்களில் பணியாற்றிய k.தில்ராஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். கோலமாவு கோகிலா படத்தின் எடிட்டர் நிர்மல் எடிட்டிங் பணியை கவனிக்கிறார். பவர்கிங் ஸ்டுடியோ சார்பாக S.பிரபாகர் படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது.






