என் மலர்tooltip icon

    சினிமா

    அசுரன் படத்தில் தனுஷ்
    X
    அசுரன் படத்தில் தனுஷ்

    அசுரன் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர்

    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பிரபல நடிகர் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘அசுரன்’. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் அக்டோபர் 4ந்தேதி வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் வியாபாரம் ரூ.100 கோடியைக் கடந்துள்ளது.

    இந்த படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி, கமல் தொடங்கி பல்வேறு தமிழ் திரையுலகினரும் படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். மேலும், தெலுங்கு திரையுலகிலிருந்தும், இந்தி திரையுலகிலிருந்தும் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் ‘அசுரன்’ பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.

    தனுஷ் - வெங்கடேஷ்

    இதனிடையே, ‘அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீமேக் உறுதியாகியுள்ளது. தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கவுள்ளார். இது தொடர்பாக சுரேஷ் புரொடக்‌‌ஷன்ஸ் நிறுவனம் தங்களுடைய டுவிட்டர் பதிவில் “’அசுரன்’ தெலுங்கு பதிப்பில் வெங்கடேஷ் நாயகனாக நடிக்கவுள்ளார். தாணு மற்றும் சுரேஷ் பாபு இணைந்து தயாரிக்கவுள்ளோம்“ என்று தெரிவித்துள்ளது. ‘அசுரன்’ தெலுங்கு பதிப்பின் இயக்குநர் யார் என்பதை இன்னும் படக்குழுவினர் உறுதி செய்யவில்லை.
    Next Story
    ×