என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 3 படத்தில் வில்லனாக நடித்த ஓலா ஜேசன் என்பவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
    சூர்யாவின் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமாக தயாரான ‘சிங்கம்-3’ படத்தில் வில்லனாக நடித்தவர் ஓலா ஜேசன். அமீர்கானின் தங்கல், மன்மோகன் சிங் வாழ்க்கை கதையான ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர், கேரி ஆன் கேசார், ராக் தேஷ் உள்ளிட்ட சில இந்தி படங்களில் நடித்துள்ளார்.

    நைஜீரியாவை சேர்ந்த ஜேசன், டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றிக்கொண்டு இருந்தார். அவர் மீது விமான நிலைய பாதுகாப்பு படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து ஜேசனை அழைத்து விசாரணை நடத்தினர். உடமைகளையும் ஆய்வு செய்தனர். விமானத்தில் கோவா செல்வதற்கான டிக்கெட்டை அவர் வைத்து இருந்தார். பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது அவரது விசா கடந்த 2011-ம் ஆண்டிலேயே முடிந்து இருந்தது.

    நடிகர் ஓலா ஜேசன்

    விசா காலம் முடிந்த பிறகும் தொடர்ந்து இந்தியாவிலேயே அவர் வசித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஜேசனை தனி அறைக்கு அழைத்து சென்று அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் முரண்பட்ட பதிலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜேசனை கைது செய்தனர். அவரிடம் தற்போது உளவுத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பாப்பிலோன் என்ற படத்தில் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட கதாநாயகி, காதலன் டார்ச்சர் தாங்காமல் இரண்டாவது நாளே படப்பிடிப்பை விட்டு ஓடியிருக்கிறார்.
    ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. பாப்பிலோன் என்றால் தமிழில் வண்ணத்துப்பூச்சி என அர்த்தம்.

    கதாநாயகியாக ஸ்வேதா ஜோயல் என்பவர் நடித்துள்ளார். தங்கையாக சௌமியா மற்றும் அம்மாவாக ரேகா சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். பண்ணையார் கதாபாத்திரத்தில் பூராமு மற்றும் அவரது மகளாக அபிநயா நடிக்க, ‘மாரி’ புகழ் வினோத் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்தப் படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து இருக்கும் ஆறு ராஜா, கலை இயக்குநர் தோட்டா தரணியின் குழுவில் ஆர்டிஸ்ட் ஆகப் பணியாற்றியவர். ரஜினி நடித்த சந்திரமுகி படத்தில் சந்திரமுகியின் ஓவியத்திற்கு வர்ணம் தீட்டியவர் இவர்தான்.

    ஆறு ராஜா - ஸ்வேதா ஜோயல்

    இந்தப் படத்திற்கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் வேறு ஒரு கதாநாயகி. கொடைக்கானல் பகுதியில் படப்பிடிப்பு துவங்கிய இரண்டாவது நாளிலேயே, தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக் காரணம் காட்டி படப்பிடிப்பில் இருந்து கிளம்பி சென்றாராம். பின்னர்தான் அவர் தனது காதலனின் ஈகோ டார்ச்சர் தாங்காமல் இந்தப் படத்தை விட்டு விலகியிருக்கிறார் என தெரிய வந்துள்ளது. 

    உடனடியாக ஸ்வேதா ஜோயல் என்கிற இன்னொரு கதாநாயகியை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை நடத்தி உள்ளார்கள்.
    கேரளாவில் யானை தந்தங்களை வைத்திருந்த வழக்கில் பிரபல நடிகர் மோகன்லாலுக்கு பெரும்பாவூர் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.
    கேரள மாநிலம் தேவாராவில் உள்ள நடிகர் மோகன்லால் வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு வருமானவரி துறையினர் சோதனை நடத்தி 4 யானை தந்தங்களை கைப்பற்றினர். இது தொடர்பாக மோகன்லால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. யானை தந்தங்களை திருப்பி ஒப்படைக்கும்படி அரசிடம் மோகன்லால் கோரிக்கை விடுத்தார்.

    வனத்துறை சட்டப்படி யானை தந்தங்களை வீட்டில் வைக்க தடை உள்ளது. ஆனாலும் அப்போதைய வனத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் சட்டத்தில் திருத்தம் செய்து யானை தந்தங்களை மோகன்லாலிடம் திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. 

    மோகன்லால்

    இந்த வழக்கில் 7 வருடத்துக்கு பிறகு கொட நாடு வனத்துறையினர் பெரும்பாவூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கோரி கேரள ஐகோர்ட்டில் மோகன்லால் மனு தாக்கல் செய்தார். அதில் தந்தங்கள் வைத்துக்கொள்ள தன்னிடம் லைசென்ஸ் உள்ளது என்றும், தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் பெரும்பாவூர் கோர்ட்டு டிசம்பர் 6-ந்தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு மோகன்லாலுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையை மேலும் 3 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
    அட்டக்கத்தி மூலம் நடிகையாக அறிமுகமான நந்திதா ஸ்வேதா நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘ஐபிசி 376’ படத்தின் முன்னோட்டம்.
    நந்திதா ஸ்வேதா நடிப்பில் ஐபிசி 376 என்ற ஆக்‌ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படம் உருவாகி வருகிறது. நான்கு சண்டைக்காட்சிகள் உள்ள இப்படத்தில் பெரும்பாலும் டூப் இல்லாமலே துணிச்சலாக நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா. 

    ஹாரர் சேஸிங், சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் என கதை திரைக்கதை எழுதி படத்தை இயக்கி வருகிறார் ராம்குமார் சுப்பாராமன். இப்படம் பெண்களைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பில் உள்ள IPC 376 என்பது பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறிக்கிறது. இப்படி இப்படத்தின் தலைப்பிலே பெண்கள் மீதான அக்கறை தெரிகிறது. 

    விறுவிறுப்பாக தயாராகி வரும் இப்படத்தில் அண்ணாதுரை, தகாராறு படங்களில் பணியாற்றிய k.தில்ராஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். கோலமாவு கோகிலா படத்தின் எடிட்டர் நிர்மல் எடிட்டிங் பணியை கவனிக்கிறார். பவர்கிங் ஸ்டுடியோ சார்பாக S.பிரபாகர் படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிக வேகமாக  நடைபெற்று வருகிறது.
    தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால், தற்போது நடிக்கும் படத்தில் 85 வயது பாட்டியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து  கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் 'இந்தியன்'. இந்த படத்தில் சேனாபதி என்ற சுதந்திரப்போராட்டத் தியாகியாக கமல் நடித்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் பல வருடங்களுக்கு பிறகு 'இந்தியன் 2' என்ற பெயரில் உருவாகி வருகிறது. 

    லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், விவேக், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    காஜல் அகர்வால்

    இந்த படத்தில் கமல்ஹாசன் சம்மந்தப்பட்ட ஆக்சன் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் காஜல் அகர்வால் கமல்ஹாசனின் மனைவியாக 85 வயது மதிக்கத்தக்க வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிப்பில் உருவாகி வரும் ‘ஆக்‌ஷன்’ படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஆக்‌ஷன்’. இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 70 சதவிகிதம் வெளிநாடுகளிலும், ஜெய்ப்பூர், டெல்லி, ஐதராபாத் மற்றும் சென்னை என பல்வேறு பகுதிகளில் ஆக்‌ஷன் படம் படமாக்கப்பட்டுள்ளது.

    ஆக்‌ஷன் படத்தில் விஷால்

    இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. தற்போது இப்படத்தின் டிரைலரை தீபாவளி தினமான அக்டோபர் 27ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நவம்பர் மாதம் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    தமிழில் பல படங்களில் நடிகையாக நடித்து மிகவும் பிரபலமான பிரியா ஆனந்த், அடுத்த வருடம் எனக்கு தல தீபாவளி என்று கூறியிருக்கிறார்.
    தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை பிரியா ஆனந்த் கலந்துக் கொண்டு சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்களை வழங்கினார்.

    பின்னர் நடிகை பிரியா ஆனந்த் பேசும்போது, ‘நான் நிறைய விழாவில் கலந்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், இந்த விழா எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. நான் எப்போதும் தீபாவளி கொண்டாட மாட்டேன். என்னுடைய பெற்றோர்கள் அமெரிக்காவில் இருப்பதால் என்னுடைய பாட்டி கூடதான் மிகவும் எளிமையாக தீபாவளி கொண்டாடுவேன். ஆனால், இந்த வருடம் உங்களுடன் தீபாவளி கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் நானும் ஜர்னலிசம் படித்திருக்கேன்.

    நான் சினிமா துறைக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. வணக்கம் சென்னை படம் தான் நான் நடித்ததில் ரொம்ப பிடித்தது. ஹீரோவுக்கு நிகராக என்னுடைய கதாபாத்திரமும் இருக்கும். இந்த 10 வருசத்துல எனக்கு கிடைத்த மிகப்பெரிய சந்தோஷம் ஸ்ரீதேவி அவர்களுடன் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்ததுதான். அவரை ரொம்ப மிஸ் பண்றேன். இந்தி நடிகைகளுக்கு கூட ஸ்ரீதேவியுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

    பிரியா ஆனந்த்

    இந்த வருடம் என்னுடைய நடிப்பில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘ஆதித்ய வர்மா’ திரைப்படம் உருவாகி இருக்கிறது. இதில் நான் ஹீரோயினாக நடித்திருக்கிறேன். விக்ரம் சார் என்னை நன்றாக கவனித்துக் கொண்டார். தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி, இந்தியில் கபீர் சிங் பார்த்திருப்பீர்கள். ஆனால், ஆதித்ய வர்மா திரைப்படம் வித்தியாசமாக புதுமையாக இருக்கும்’ என்றார்.

    மிகவும் இளமையாக இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, நான் திரையில் பார்க்கும் போது பெரிய ஆளாக தெரிவேன். ஆனால், நேரில் பார்ப்பவர்கள் அப்படி தெரியவில்லை என்று சொல்லுவார்கள். சில நேரம் பிரியாணியை காலை உணவாக கூட சாப்பிடுவேன். ஆனால் நான் கடந்த ஒன்றரை வருடமாக சைவம் உணவை மட்டுமே சாப்பிட்டு வருகிறேன். அதனால் கூட நான் குண்டாகாமல் இருக்கலாம்’ உடற்பயிற்சி எதுவும் நான் செய்வதில்லை என்றார்.

    எப்போது திருமணம் என்ற கேள்விக்கு, நீங்கள் மனது வைத்தால் அடுத்த வருடம் எனக்கு தல தீபாவளி தான் என்று ஜாலியாக கூறினார்.
    விஜய்யை வைத்து மூன்று படங்களை இயக்கி இருக்கும் அட்லீ, ட்விட்டரில் அஜித் பற்றிய கேள்விக்கு அவர் மீது மரியாதை இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
    விஜய் - அட்லீ கூட்டணியில் ரிலீசாகியுள்ள படம் ‘பிகில்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்த படத்தில், ஜாக்கி ஷெராப், விவேக், இந்துஜா, வர்மா பொல்லம்மா, யோகி பாபு, ரெபா மோனிகா ஜான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் விஜய். 

    இந்தப் படத்தின் புரமோஷனுக்காக ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார் அட்லீ. அப்போது, ரசிகர்களுக்கு இடையே ‘பிகில்’ படத்தில் நடித்துள்ள கதிர், பாடலாசிரியர் விவேக், அட்லீ மனைவி பிரியா ஆகியோரும் கேள்விகள் கேட்டனர். அதற்கு அட்லீ அளித்த பதில்கள்...

    கதிர்: அண்ணா, என்னைப் பற்றி என்ன சொல்ல ஆசைப்படுறீங்க?
    அட்லீ: உன்னைப் பற்றி என்னடா சொல்றது? நீ என் செல்லக்குட்டி, என் பட்டு. நீ ஒரு ராக் ஸ்டார். வெறித்தனம் பண்றோம்.

    அட்லீ

    பாடலாசிரியர் விவேக்: புள்ளிங்களுக்கு ஒரு அப்டேட் கொடுக்கணும். கூடுதலாக உள்ள பாடலின் வரிகளைக் கொடுக்கலாமா? உங்களை நம்பி இருக்குற நம்ம புள்ளிங்களுக்கு என்ன சொல்லப் போறீங்க? சொல்லுங்க... சொல்லுங்க... சொல்லுங்க...
    அட்லீ: செஞ்சிட்டா போச்சு. நல்ல நேரம் பார்த்து இன்னைக்கு நீங்களே போட்டுடுங்க அண்ணா.

    பிரியா அட்லீ: ஏய் பாப்பா... நீ படம் முடிச்சிட்டு என்கூட நேரம் செலவழிக்காம இன்டர்வியூ கொடுத்துக்கிட்டு இருக்க?
    அட்லீ: இதோ வந்துட்டேன் பாப்பா... 5 நிமிடங்கள். இதோ... இதோ...

    கேள்வி: அஜித்தைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்க...
    அட்லீ: அஜித் சார் மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. என்னுடைய சமீபத்திய விருப்பங்கள் ‘விஸ்வாசம்’ மற்றும் ‘நேர்கொண்ட பார்வை’.

    இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
    துப்பறிவாளன் படத்தை அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சைக்கோ’ படத்தின் டீசர் இன்று வெளியாகி இருக்கிறது.
    சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய மிஷ்கின், தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கியுள்ளார். உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அதிதி ராவ், நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

    சைக்கோ படத்தில் உதயநிதி

    இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். மிஷ்கின் ஸ்டைலில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் தற்போது ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.



    பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    விஜய் நடித்திருக்கும் ‘பிகில்’ திரைப்படம் வெளியான சில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் ‘பிகில்’. அதிக எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி இருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. விஜய் ரசிகர்கள் திருவிழா போன்று கொண்டாடி வருகிறார்கள்.

    பிகில்

    இந்நிலையில், இப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிக பொருட் செலவில் பிகில் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பிகில் திரைப்படம் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
    பல படங்களுக்கு இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஜிவி பிரகாஷ், நினைச்சதைவிட அதிக ரெஸ்பான்ஸ் என்று கூறியிருக்கிறார்.
    இசையமைப்பாளராகத் தன்னை நிரூபித்த ஜி.வி.பிரகாஷ் குமார், ஒரு நடிகராக தனக்கான இடத்தைப் பிடிப்பதில் முனைப்போடு இருக்கிறார். ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தாலும், `அசுரன்', `சூரரைப் போற்று' மாதிரியான பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். 

    அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- "இசையிலும், நடிப்பிலும் எனக்கு தனி மார்க்கெட் உருவாக்கிக்கணும்னு நினைக்கிறேன். இந்த படம் பண்றேன், அந்த படம் பண்றேன்னு நானே கேட்கமாட்டேன். இந்த வருடம் நான் இசையமைச்ச படங்கள்ல 'அசுரன்' வெளியாச்சு. நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. என்டர்டெயின் பண்ற படங்கள்ல நடிக்கணும்னுதான் முடிவு பண்ணி வெச்சிருந்தேன். 

    ஜிவி பிரகாஷ்

    ஆனா, 'நாச்சியார்' படத்துல என் டிராக்கை மாத்திவிட்டார், பாலா சார். அந்தளவுக்கு என்னால நடிக்க முடியுமானு யோசிச்சேன். பாலா சார்தான் நம்பிக்கை கொடுத்தார். அப்புறம் 'சர்வம் தாளமயம்' படத்துல ராஜீவ் சார் இன்னும் என்னை மெருகேற்றினார். 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தைப் பொறுத்தவரை நல்ல கமர்ஷியல் படம்; சென்டிமென்ட் வொர்க் அவுட் ஆகும்னு நினைச்சேன். 

    ஆனா, நல்லா நடிச்சிருக்கேன்னு கமென்ட்ஸ் வந்தது. நினைச்சதைவிட அதிக ரெஸ்பான்ஸ் கிடைச்சது ரொம்ப சந்தோஷம். இருந்தாலும், நான் அதிகம் எதிர்பார்க்கிறது வசந்த பாலன் சாருடைய 'ஜெயில்'. இந்தப் படத்துக்குப் பிறகு அவர் இருக்கவேண்டிய இடத்துக்குப் போவார். முக்கியமான அரசியலைப் பேசியிருக்கார். படம் நிச்சயம் பேசப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.
    அமலாபால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஆடை’ படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்க வில்லை என்று பட நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
    ‘மேயாத மான்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவதாக ‘ஆடை’ படத்தை இயக்கினார். ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தில், முதன்மைக் கதாபாத்திரத்தில் அமலா பால் நடித்தார். கடந்த ஜூலை 19-ம் தேதி இந்தப் படம் வெளியானது.

    பல சர்ச்சைகளுடன் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடியது. இந்நிலையில், இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாகவும், அமலா பால் கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது.

    கங்கனா ரணாவத் - அமலாபால்

    ஆனால், ஆடை படத்தின் உரிமையை வைத்திருக்கும் அருண்பாண்டியன் குரூப் இதை மறுத்திருக்கிறது. ‘ஆடை’ இந்தி மொழி மாற்றத்தில் நடிக்க இதுவரை கங்கனா ரணாவத்துடன் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று கூறியிருக்கிறார்கள். மேலும் விரைவில் இப்படத்தில் நடிப்பவர்கள் பட்டியலை அறிவிப்போம் என்றும் கூறியிருக்கிறார்கள்.
    ×