என் மலர்
சினிமா செய்திகள்
என்ஜிகே படத்தை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் அடுத்ததாக தனுஷ் படத்தின் வேலைகளை தொடங்கி இருக்கிறார்.
காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் செல்வராகவன். இதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் ஆகிய படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி இருக்கிறார் செல்வராகவன்.
சமீபத்தில் வெளியான சூர்யாவை வைத்து என்ஜிகே படத்தை இயக்கிய செல்வராகவன், அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்நிலையில் தனது அடுத்த படத்தின் வேலைகள் துவங்கியிருப்பதாக செல்வராகவன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவைப் பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் தனுஷ் படம் தொடங்கிவிட்டதாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
செல்வராகவன் இயக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4 வயது குழந்தை தன்னை ஆண்டி என அழைத்ததால் அவனை மோசமான வார்த்தையால் திட்டியதாக நடிகை ஸ்வாரா பாஸ்கர் கூறியுள்ளார்.
சோன் ஆப் அபிஷின் விவாத நிகழ்ச்சியில் நான்கு வயது குழந்தை நட்சத்திரத்திற்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக நடிகை ஸ்வாரா பாஸ்கர் சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு உள்ளார். இந்த வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது,
சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல் பரவிய ஒரு வீடியோ, திரைத்துறையில் தனது ஆரம்ப நாட்களில் ஒரு சோப்பு விளம்பரத்தில் நடித்த ஒரு குழந்தை நட்சத்திரத்திற்கு எதிராக மோசமான வார்த்தைகளை ஸ்வாரா பயன்படுத்தி உள்ளார். தன்னை "ஆண்டி" என்று அழைக்கும் குழந்தை தன்னை கோபப்படுத்தியது என்று கூறினார்.
வீடியோவில் குழந்தையை இந்தியில் இரண்டு கடும் சொற்களை கூறி திட்டி உள்ளார். ஸ்வாராவைப் பொறுத்தவரை, அவர் குழந்தையின் முன்னால் வார்த்தைகளைச் சொல்லவில்லை, என்று செய்தி நிறுவனம் ஐஏஎன்எஸ் தெரிவித்துள்ளது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் நடிகையின் செயல் "வெட்கக்கேடான" மற்றும் "பரிதாபகரமானது" என்று கூறியுள்ளனர். #Swara_aunty மற்றும் #SwaraAunty என்ற ஹேஷ்டேக்குகளை டிரெண்டாகி இருக்கிறார்கள்.
ஸ்வாரா பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், சிறுவர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தில் புகார் அளித்ததாக சர்வதேச வர்த்தக டைம்ஸ் தெரிவித்துள்ளது.
வேணு உடுகுலா இயக்கத்தில் உருவாகும் விரத பர்வம் 1992 படத்தில் நடிகை சாய் பல்லவி சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழில் சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்த சாய் பல்லவி, அதன்பிறகு தெலுங்கில் ராணாவுடன் விரத பர்வம் 1992, நாகசைதன்யாவுடன் லவ் ஸ்டோரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் விரத பர்வம் 1992 படத்தில் ராணா போலீஸ் அதிகாரியாகவும், சாய் பல்லவி நாட்டுப்புற பாடகராக இருந்து பின்னர் நக்சலைட்டாக மாறும் வேடத்திலும் நடிக்கிறார்.

வேணு உடுகுலா இயக்கும் இந்த படத்தில் பாபர் மசூதி இடிப்பு, ஏக்தா யாத்திரை எதிர்ப்பு போன்ற சர்ச்சைக்குரிய பிரச்னைகளும் இடம் பெற்றுள்ளதாம். இந்த செய்திகள் வெளியானதை அடுத்து விரத பர்வம் 1992 படம் பரபரப்பு வளையத்திற்குள் வந்துள்ளது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்த திவ்யா ஸ்பந்தனா, தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.
குத்து படத்தில் அறிமுகமானவர் ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா. தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்த திவ்யா ஸ்பந்தனா, இப்போது சினிமாவுக்கு திரும்பியிருக்கிறார். சமீபத்தில் கன்னடத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். தில் கா ராஜா என்ற கன்னட படத்தில், பிரஜ்வால் தேவராஜ் ஜோடியாக அவர் நடித்துள்ளார். இப்படத்தை சோம்நாத் இயக்கியுள்ளார்.

இனி தமிழ், தெலுங்கிலும் நடிப்பில் தீவிர கவனம் செலுத்த திவ்யா முடிவு செய்துள்ளாராம். அதற்காக தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளார். இவர் ஏற்கனவே தனுஷுடன் பொல்லாதவன், சிம்புவுடன் குத்து, ஜீவாவுடன் சிங்கம்புலி போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
4 வயது குழந்தையை மோசமான வார்த்தையால் திட்டிய தனுஷ் பட நடிகைக்கு சமூக வலைதளத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தனு வெட்ஸ் மனு, தனுஷின் ராஞ்சனா போன்ற இந்தி படங்களில் நடித்தவர் ஸ்வரா பாஸ்கர். இவர் 4 வயது குழந்தை நட்சத்திரத்தை மோசமான வார்த்தைகளில் விமர்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒரு நிகழ்ச்சியில் அந்த சிறுவன் ஸ்வரா பாஸ்கரை ஆண்டி என அழைத்ததால் அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில் ’அந்த குழந்தையின் முகத்திற்கு முன் இழிவான சொற்களைப் பயன்படுத்தவில்லை. ஆனால் மனதில் இழிவான சொற்களை முணுமுணுத்த தாக அவர் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக டுவிட்டரில் ஸ்வரா பாஸ்கரை விமர்சித்து கண்டனங்களை பதிவு செய்ய தொடங்கினார்கள். ‘ஸ்வரா ஆண்டி’ எனும் ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
ரஜினியின் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன், மோகன்லால், சல்மான் கான் போன்ற உச்ச நடிகர்கள் வெளியிட உள்ளனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ‘தர்பார்’. பேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி நடிப்பதாலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடிப்பதாலும் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தர்பார் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். தர்பார் படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்துவிட்டது. பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக இருக்கும் தர்பார் மோஷன் போஸ்டரை, அந்தந்த மொழி பட பிரபலங்கள் வெளியிட இருக்கின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு மோஷன் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட உள்ளார். மலையாளத்தில் மோகன்லாலும், இந்தியில் சல்மான் கானும் வெளியிட இருக்கின்றனர். வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக "தர்பார்" திரைக்கு வருகிறது.
திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட பிரபலத்துக்கு பிகில் பட நடிகை இந்துஜா சம்மதம் தெரிவித்துள்ளார்.
தமிழில் மேயாத மான், மெர்குரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் இந்துஜா. சமீபத்தில் வெளியான மகாமுனி, பிகில் போன்றா படங்கள் இந்துஜாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்துள்ளது. கதாபாத்திரமாகவே மாறி விடுகிறார் என்ற பாராட்டுகளை பெற்று தந்துள்ளது. திரைப்படங்களை போல் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கும் இந்துஜா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதற்கு ஏராளமான லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வந்தன. இந்துஜாவின் புகைப்படத்தை பார்த்த நடிகை மகிமா நம்பியார், திருமணம் செய்து கொள்ளலாமா என கமெண்ட் செய்திருந்தார். அதற்கு பதிலளித்துள்ள நடிகை இந்துஜா, திருமணம் செய்து கொள்ளலாம் என்று சம்மதம் தெரிவித்துள்ளார். இதேபோல் நடிகை அதுல்யாவும் இந்துஜாவை திருமணம் செய்ய காத்திருப்பதாக பதிவிட்டுள்ளார். நடிகை இந்துஜா, மகிமா நம்பியார் மகாமுனி படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக நடிகர் பிரபாஸ் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் நடித்த பாகுபலி, பாகுபலி-2 படங்கள் பிரபாசுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிக பெரிய அளவில் மார்க்கெட்டை ஏற்படுத்தி கொடுத்தன. இதை அடுத்து அவர் நடித்த சாஹோ படமும் வசூல்ரீதியாக வெற்றி பெற்றது. குறிப்பாக தென்னிந்திய நடிகர்களில் பாலிவுட்டில் பிரபாஸின் படங்கள்தான் அதிகமாக வசூலித்து வருகின்றன.
அதனால் அடுத்து அவர் பாலிவுட் இயக்குனர்களின் படங்களிலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், லண்டன் ஆல்பர்ட் ஹாலில் பாகுபலி படத்தின் திரையிடல் மற்றும் இசை நிகழ்ச்சியில் பாகுபலி குழுவினருடன் கலந்து கொண்டார் பிரபாஸ். அதையடுத்து அங்குள்ள ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது ஒரு ரசிகர் ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வமா? என்று கேட்டபோது, ஆர்வமாக இருக்கிறேன். எனக்கு பிடித்தமான கதைகள் கிடைத்தால் கண்டிப்பாக எதிர்காலத்தில் ஹாலிவுட் படங்களிலும் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
உபர் காரில் மிகவும் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்ததாக பிக்பாஸ் பிரபலம் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரித்விகா. பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அதன் டைட்டில் வெற்றியாளராகவும் ஆனார்.
இந்நிலையில் நடிகை ரித்விகா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஊபர் நிறுவனத்தின் கார் ஓட்டுநரான ஜெய்னுலாப்தீன் என்பவர் மீது புகார் கூறி பதிவு ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் ரித்விகா வெளியிட்டுள்ளார். மிகவும் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்ததாகவும் ஓட்டுனர் மிகவும் ராஷ் டிரைவிங் செய்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

வண்டியின் எண்ணையும் காரின் பெயர் டாட்டா இன்டிகா என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த உபர் நிறுவனம் ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உள்ளது. தற்போது ரித்விகா, “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு” என்ற படத்தில் நடித்து வருகிறார்.
Very unsafe journey in Uber @Uber driver is so so rude & the car condition is worst, terrible.
— Riythvika✨ (@Riythvika) November 5, 2019
Tata indica TN07AR4798 UBER pic.twitter.com/In35IKLwzL
கிரிசய்யா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் ஆதித்ய வர்மா படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'ஆதித்ய வர்மா'. தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள ஆதித்ய வர்மா படத்தில் துருவ்க்கு ஜோடியாக பனித்தா சந்து நடிக்கிறார். பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிடம் உதவியாளராக பணியாற்றிய கிரிசய்யா இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, அர்ஜூன் ரெட்டி புகழ் ரதான் இசையமைத்துள்ளார்.

இப்படம் நவம்பர் 8-ந் தேதி ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் நவம்பர் 21-ந் தேதி ரிலீசாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படம் நவம்பர் 8-ந் தேதி ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் நவம்பர் 21-ந் தேதி ரிலீசாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மிக மிக அவசரம் படத்தில் பெண் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்கா, அவர்கள் பாராட்டியது மறக்க முடியாத அனுபவம் என்று கூறியிருக்கிறார்.
சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள மிக மிக அவசரம் என்ற படத்தில், பெண் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்துள்ளார் ஸ்ரீபிரியங்கா. சினிமாவுக்கு வந்து 5 வருடங்களுக்கு மேலாகி விட்டது என்றாலும், நினைத்த இடத்துக்கு இன்னும் வர முடியவில்லை என்று கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: மிக மிக அவசரம் படம், ஒரு பெண் காவலரின் வலியை சொல்லும் படம். பவானி பாலத்தில் 22 நாட்கள் கடும் வெயிலில் நின்று நடித்தேன். படத்தை பார்த்துவிட்டு பெண் காவலர்கள் பாராட்டியது மறக்க முடியாத அனுபவம். நான் சினிமாவுக்கு வந்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

ஆனால், நான் நினைத்த இடத்துக்கு இன்னும் வர முடியவில்லை. காரணம், நான் தமிழ் பெண். தமிழ் பேசத் தெரிந்த, தமிழ்நாட்டில் பிறந்த நடிகைகளை ஏன் புறக்கணிக்கிறார்கள் என்று புரியவில்லை’ என்றார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ படத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, பழ.கருப்பையா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
துப்பாக்கி, கத்தி படத்தை தொடர்ந்து விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் சர்கார் திரைப்படம் உருவானது. ஒருவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஓட்டாக போட்டால், 49 பி என்ற தேர்தல் விதிப்படி வாக்களிக்க அனுமதி வழங்க வேண்டும் என்பதை சொல்லியிருந்தார்கள்.

இப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ம் தேதி வெளியானது. தற்போது ஒரு வருடம் கடந்ததையொட்டி, விஜய் ரசிகர்கள் #1YearOfBBSarkar என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி கொண்டாடி வருகிறார்கள்.






