என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஜெய், அறிமுக நாயகி பானு நடிப்பில் அண்ட்ரோ பாண்டியன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
    ஜிகுனா படத்தை தயாரித்தவர் திருக்கடல் உதயம். இவர் தனது மூன்றாவது தயாரிப்பான ‘பிரேக்கிங் நியூஸ்’ என்ற படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறார், இந்த படத்தை அந்நியன், முதல்வன், சிவாஜி போன்ற படங்களுக்கு விஷுவல் எஃபெக்ட்ஸ் துறையில் இருந்து பணியாற்றிய அண்ட்ரோ பாண்டியன் டைரக்ட்டு செய்கிறார்.

    இப்படம் குறித்து இயக்குனர் கூறுகையில், ‘ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஆக்ஷ்ன் படம், மிக  பிரமாண்டமாக பொருள் செலவில் தயாராகிறது, இதில் சண்டை காட்சிகளில் ரோபோட்ரானிக், அனிமேட்ரோனிக்  என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறோம். மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸின் பங்கு அதிகமாக உள்ளது என்பதால் பாதி படத்திற்கு மேல் கிரீன் மற்றும் புளூ மேட்டிலேயே படமாக்கி வருகிறோம், காதல், எமோஷன், சென்டிமென்டுடன் கலந்த கமர்சியல் படமாக தயாராகிறது’ என்றார்.

    பிரேக்கிங் நியூஸ்

    ஜெய், அறிமுக நாயகி பானு, சுறா படத்தில் வில்லனாக நடித்த தேவ்கில், வேதாளம் படத்தில் வில்லனாக நடித்த ராகுல் தேவ், இருவரும் இந்த படத்தில் வில்லன்களாக வருகிறார்கள், ஜெ பிரகாஷ், இந்தரஜா, சந்தானா பாரதி, மோகன் ராம், பழ கருப்பையா, பி.எல்.தேனப்பன், மானஸ்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    பாரி.கே.விஜய் இயக்கத்தில் வைபவ், பார்வதி, முனிஷ்காந்த் நடிப்பில் உருவாகும் பேண்டஸி திரைப்படம் ஆலம்பனா படத்தின் முன்னோட்டம்.
    தமிழ் சினிமாவில் அரிதாக வரும் பேண்டஸி படங்கள் எல்லாம் பெரிதாக கவனம் ஈர்ப்பதுண்டு. அப்படி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் தயாராகும் படம் ஆலம்பனா.

    அலாவுதீன் சம்பந்தப்பட்ட படங்களை குழந்தைகளும் குடும்பங்களும் கொண்டாடி இருக்கிறார்கள். அதைப் போன்ற ஒரு அபூர்வ கதையம்சத்தில் இன்றுள்ள குழந்தைகளுக்கும் இப்போதுள்ள ட்ரெண்டுக்கும் ஏற்ற வகையில் ஆலம்பனா எனும் படம் தயாராகிறது. ஆலம்பனா எனும் பெயரிடப்பட்டுள்ள இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கவனம் ஈர்க்கக்கூடிய படமாக பேண்டஸி கான்செப்ட்டோடும் பிரம்மாண்டமாக தயாராகிறது.

    விஸ்வாசம் படத்தை பெரியளவில் வெளியீட்டு பெரு வெற்றியை கண்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸும் தயாரிப்பாளர் சந்துருவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். முற்றிலும் மாறுபட்ட கமர்சியல் பேண்டஸி படமாக இப்படத்தை எழுதி இயக்குகிறார் பாரி.கே.விஜய். இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய தரமான படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிவர். 

    மக்களை எண்டெர்டெயின்மெண்ட் பண்ணும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் வைபவ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பார்வதி நடிக்கிறார். முனிஷ்காந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பல வருடங்களுக்குப் பிறகு பட்டிமன்றங்களின் ஹீரோ திண்டுக்கல் ஐ லியோனி இப்படத்தில் நடிக்கிறார். மேலும் படத்தின் கலகலப்பிற்கு உத்திரவாதம் தருவது போல காளிவெங்கட், ஆனந்த்ராஜ் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். முரளிசர்மா ஒரு கேரக்டரில் நடிக்க, வேதாளம் படத்தில் வில்லனாக மிரட்டிய கபீர்துபான் சிங் வில்லன் வேடமேற்றிருக்கிறார்.

    மிக வித்தியாசமான இந்தக்கதை களத்தில் பலம் வாய்ந்த டெக்னிக்கல் டீமும் இணைந்துள்ளது. சமீபத்தில் வெளியான கோமாளி படத்தில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் கவர்ந்த ஹிப்ஹாப் ஆதி இசை அமைக்கிறார். நெடுநால்வாடை படத்தில் கிராமத்தின் அழகை துளியும் குறையாமல் தன் கேமராவிற்குள் கொண்டு வந்த வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவை கவனிக்கிறார். ராட்சசனில் தன் இமலாய உழைப்பைக் கொடுத்த எடிட்டர் ஷான் லோகேஷ் எடிட்டிங் பொறுப்பை கவனிக்கிறார். மாஸான சண்டைக்காட்சிகளால் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் பீட்டர் கெய்ன் ஸ்டண்ட் பொறுப்பை கவனிக்க, ஆர்ட் டைரக்டராக கோபி ஆனந்த் பங்கேற்கிறார்.
    விஜய்யை வைத்து ‘தளபதி 64’ படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக பிரபல நடிகரை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இப்படம் ரசிகர்களை கவர்ந்த நிலையில், கார்த்தியை வைத்து ‘கைதி’ படத்தை இயக்கினார். தீபாவளியை முன்னிட்டு வெளியான இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

    தற்போது விஜய்யை வைத்து ‘தளபதி 64’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். மேலும் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

    கமல் - லோகேஷ் கனகராஜ்

    இப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கமல் நடிப்பில் தற்போது இந்தியன் 2 உருவாகி வருகிறது. இப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ் மற்றும் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
    இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இரண்டாவது தயாரிப்பான 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. 

    தினேஷ், ஆனந்தி நடிப்பில் பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் டென்மா இசையமைத்திருக்கிறார். கிஷோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விரைவில் பாடல்கள் வெளியீடு நடைபெற இருக்கிறது.

    குண்டு படத்தின் சென்சார் ரிசல்ட்

    நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்த முதல் படமான பரியேறும் பெருமாள் படத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது, இரண்டாவது தயாரிப்பான குண்டு திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் யூ சான்றிதழ் கொடுத்து படக்குழுவினரை பாராட்டி இருக்கிறார்கள். 
    நடிகர் விஜய், இயக்குனர் அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியாகியுள்ள 'பிகில்' படம் வசூலில் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.
    விஜய்-அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியாகியுள்ள படம் 'பிகில்'. 180 கோடி ரூபாய் பொருட்செலவில் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்தப் படம் வெளியானது. ஆனால், விமர்சன ரீதியாக கலவையாக இருந்தாலும், வசூல் ரீதியாகப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    மெர்சல் மற்றும் சர்க்காருக்குப் பிறகு விஜய்யின் ரூ.200 கோடியை எட்டிய மூன்றாவது படம் பிகில். இந்த திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக மாறுவதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறது. 

    பிகில் படத்தில் விஜய் - நயன்தாரா

    இந்நிலையில் தற்போது, பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் நடப்பாண்டில் அதிக வசூல் செய்த தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
    பாரி.கே.விஜய் இயக்கத்தில் உருவாக இருக்கும் பேண்டஸி படத்தில் வைபவுக்கு ஜோடியாக பார்வதி நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் அரிதாக வரும் பேண்டஸி படங்கள் எல்லாம் பெரிதாக கவனம் ஈர்ப்பதுண்டு. அப்படி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் தயாராகும் படம் ஆலம்பனா.

    அலாவுதீன் சம்பந்தப்பட்ட படங்களை குழந்தைகளும் குடும்பங்களும் கொண்டாடி இருக்கிறார்கள். அதைப் போன்ற ஒரு அபூர்வ கதையம்சத்தில் இன்றுள்ள குழந்தைகளுக்கும் இப்போதுள்ள ட்ரெண்டுக்கும் ஏற்ற வகையில் ‘ஆலம்பனா’ எனும் படம் தயாராகிறது. 

    விஸ்வாசம் படத்தை பெரியளவில் வெளியிட்டு வெற்றியை கண்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸும் தயாரிப்பாளர் சந்துருவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். முற்றிலும் மாறுபட்ட கமர்சியல் பேண்டஸி படமாக இப்படத்தை எழுதி இயக்குகிறார் பாரி.கே.விஜய். இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய தரமான படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிவர்.

    வைபவ் - பார்வதி

    மக்களை என்டெர்டெயின்மென்ட் பண்ணும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் வைபவ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பார்வதி நடிக்கிறார். இதுவரை வந்த வைபவ் படங்களிலே ஆலம்பனா தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. முனிஷ்காந்த், திண்டுக்கல் ஐ லியோனி, காளிவெங்கட், ஆனந்த்ராஜ், முரளிசர்மா, கபீர் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 

    ஹிப்ஹாப் ஆதி இசை அமைக்க, வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவை கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. 
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த மாநாடு திரைப்படம் பல பிரச்சனைகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்க இருக்கிறது.
    சிம்பு நடிப்பில் கடந்த வருடம் செக்க சிவந்த வானம், காற்றின் மொழி படங்களும், அதைத்தொடர்ந்து வந்தா ராஜாவாதான் வருவேன் படமும் திரைக்கு வந்தன.

    இப்படங்களை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவித்து பட வேலைகளை தொடங்கினர். ஆனால் அந்த படம் திடீரென்று கைவிடப்பட்டது. 

    குறிப்பிட்ட தேதியில் சிம்பு நடிக்க வராமல் தாமதம் செய்ததால் படத்தை நிறுத்தியதாக கூறப்பட்டது. சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. அதோடு வேறு நடிகரை வைத்து மாநாடு பட வேலைகளை தொடங்கவும் திட்டமிட்டனர். இந்த பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. 

    மாநாடு

    மாநாடு படத்தில் சிம்பு நடித்து கொடுப்பார் என்று அப்போது உறுதி அளிக்கப்பட்டது. படப்பிடிப்புக்கு உரிய நேரத்தில் வரவேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் படத்தை முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட உறுதிமொழி ஒப்பந்தத்தில் சிம்பு கையெழுத்திட்டால் படப்பிடிப்பை தொடங்க தயார் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறினார்.

    அவரது கோரிக்கையை ஏற்று சிம்பு தற்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மாநாடு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    முன்னணி நடிகர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை இஷா கோபிகர் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் நெஞ்சினிலே, ஜோடி, என் சுவாச காற்றே, நரசிம்மா, காதல் கவிதை போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் இஷா கோபிகர். தமிழ், இந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பிசியாக நடித்து வந்த இஷா தன்னுடைய திருமணத்திற்கு பின்பு நடிப்பில் இருந்து சற்று விலகி இருந்தார். இப்போது மீண்டும் திரைத்துறையில் ரீஎண்ட்ரி தருவதற்கு வந்திருக்கிறார்.

    இஷாவின் இந்த ரீ எண்ட்ரி செய்தி பல்வேறு ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்டது. இதனை அடுத்து பேட்டி ஒன்றில் பங்கேற்று பேசிய இஷா திரைத்துறையில் தான் சந்தித்த பல சவால்களையும் கஷ்டங்களையும் பற்றி பகிர்ந்து கொண்டார். இஷா கோபிகர் தான் நடித்துக் கொண்டிருந்த போது சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறியிருக்கிறார். அதனை தான் மறுத்ததால் பல பட வாய்ப்புகளையும் இழந்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

    இஷா கோபிகர்

    மேலும் அதனை பற்றி விரிவாக பேசியவர், சூப்பர்ஸ்டாருக்கு இணையாக இருக்கும் நடிகர் ஒருவருடன் உல்லாசமாக இருப்பதற்காக தயாரிப்பாளர் ஒருவர் இஷாவை அணுகியதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் அவருடன் அட்ஜஸ்ட்மென்டில் இருந்தால் ஏராளமான படம் குவியும் எனவும் இஷாவிடம் கூறினாராம் அந்த தயாரிப்பாளர். ஆனால் இதை எதையும் காதில் போட்டுக் கொள்ளாத இஷா தன்னிடம் தவறாக அணுகியதாக கூறப்படும் தயாரிப்பாளரை போன் செய்து கண்டபடி திட்டி தீர்த்துள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திரைத்துறையினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் மீது நடிகைகள் மீடூ என்ற இயக்கம் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் பற்றியும் கூறிவந்தனர். இந்த பிரச்சினை தற்போது அடங்கியிருக்கும் நிலையில் மீண்டும் இஷா இவ்வாறாக கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இஷாவை படுக்கைக்கு அழைத்த அந்த முன்னணி நடிகர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நடிகை அமலா அக்கினேனி 28 ஆண்டுகளுக்கு பின் நேரடி தமிழ் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    கைதி படத்துக்கு பிறகு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக சர்வானந்த் நடிக்க, அறிமுக இயக்குனர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் தயாரித்து வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சர்வானந்துடன் கதாநாயகியாக ரிதுவர்மா நடிக்கிறார். இவர்களுடன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அமலா அக்கினேனி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். 

    அமலா

    1991-ல் பாசில் இயக்கத்தில் வெளியான கற்பூரமுல்லை படம்தான் அமலா தமிழில் நடித்த கடைசி படம். இந்த  படம் வெளியாகி கிட்டத்தட்ட 28 வருடங்களுக்கு பிறகு இப்போது அவர் தமிழில் ரீஎன்ட்ரியாகிறார். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார், சுஜித் சாரங்  ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
    நடிகர் விஜய் கொடுத்த அறிவுரைதான் தற்போது தன்னை முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கவைத்துள்ளது என நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
    நடிகர் அருண் விஜய்யின் ஆரம்பகால சினிமா வாழ்க்கை எதிர்பார்த்தபடி இல்லாத போதும், தனது விடாமுயற்சியால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருண் விஜய், அடுத்ததாக பாக்ஸர், மாபியா, சினம், அக்கினிச் சிறகுகள் என பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 

    சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது: தான் சினிமாவில் நடிகராக திணறிய போது சினிமா தயாரிப்பாளராக மாறி முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுங்கள் என்று குடும்பத்தில் இருப்பவர்களே சொன்னார்கள். அதனால் நடிகர் விஜய்யை சந்தித்து பேச சொன்றேன். “ஏன் இப்படி ஒரு முடிவை எடுக்கிறீர்கள். நல்லா நடிக்கிறீங்க, லவ்லி டான்சர், சண்டை போடுறீங்க. தொடர்ந்து செய்ங்க. நிறுத்திடாதீங்க” என்று கூறினார் விஜய். 

    விஜய், அருண் விஜய்

    அவரது வீட்டில் இருந்து வெளியில் வந்து காரை நிறுத்தி ஒரு நிமிடம் யோசித்தேன். அவர் கொடுத்த நம்பிக்கையால் நான் வீட்டுக்கு வந்து நான் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறினேன். விஜய் கொடுத்த அறிவுரைதான் தற்போது என்னை முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்க வைத்துள்ளது” என்று அருண் விஜய் கூறியுள்ளார்.
    தமிழ் சினிமாவில் கலக்கிய கலாபவன் மணியைப் போலவே கலாபவனிலிருந்து உருவான நடிகர் ஒருவர் ஆபரேஷன் அரபைமா, படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகிறார்.
    தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகராக வில்லன்கள் கொடி கட்டிப் பறந்திருக்கிறார்கள். அன்றைய நம்பியார், அசோகன், வீரப்பாவில் ஆரம்பித்து இன்றைய ரகுவரன், சத்யராஜ், பிரகாஷ்ராஜ் வரை வில்லன் நடிகர்களுக்கென ஒரு பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அப்படி ரசிகர்கள் கொண்டாடப்போகும் ஒரு வில்லன் நடிகராக “ஆபரேஷன் அரபைமா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார், டினி டாம்.

    பஞ்ச பாண்டவர், பட்டாளம், பிராஞ்சியேட்டன் அண்ட் தி செயின்ட், இன்டியன் ருபி, பியூட்டிஃபுல், ஸ்பிரிட் உள்பட பல மலையாளப் படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் டினி டாம், ஆபரேஷன் அரபைமா படத்தில் ரகுமானுக்கு வில்லனாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    டினி டாம்

    மலையாள சினிமாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் கலக்கிய “கலாபவன் மணி”யைப் போலவே கலாபவனிலிருந்து உருவான திறமையான நடிகர் மற்றும் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் டினி டாம். எனவே ஆபரேஷன் அரபைமா படத்திற்கு பின் தமிழ் சினிமாவின் வில்லன் நடிகர்கள் வரிசையில் டினி டாம் முக்கிய இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆபரேஷன் அரபைமா, படத்தின் இயக்குநர் ப்ராஷ், முன்னாள் கடற்படை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
    அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிம்பு, ஆன்மீகத்தில் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் 'மாநாடு' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு. சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த படம் தொடர்பான அனைத்து முன் தயாரிப்பு பணிகளுமே முடிந்துவிட்டன. சிம்புவின் தேதிகளுக்காக காத்திருந்தது படக்குழு. ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சிம்புவுக்கு பதிலாக வேறு ஒருவர் நடிப்பார் என்று படக்குழு அறிவித்தது. அதனை தொடர்ந்து நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. 

    தற்போது அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, 'மாநாடு' ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு நடிக்க சிம்பு முடிவு செய்துள்ளார். கடந்த வாரம் இதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டு விட்டார். மேலும், இன்று ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடவுள்ளார். 40 நாட்கள் விரதம் இருந்து கோயிலுக்கு செல்லவும் முடிவு செய்துள்ளார். 

    சிம்பு

    1992-ஆம் ஆண்டு 'எங்க வீட்டு வேலன்' படத்துக்காக ஐயப்பனுக்கு மாலை போட்டார் சிம்பு. அதனை தொடர்ந்து சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மாலை போட்டு விரதமிருந்து ஐயப்பன் கோயிலுக்கு செல்லவுள்ளார். சிம்புவின் இந்த மாற்றம் திரையுலகினர் மட்டுமல்லாது, அவரது நண்பர்கள், குடும்பத்தினர் என அனைவரது மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.
    ×