search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்வரா பாஸ்கர்"

    பட உலகில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் படுக்கைக்கு அழைப்பதாக புகார்கள் கிளம்பி வரும் நிலையில், நடிகை சுவரா பாஸ்கரும் புகார் கூறியுள்ளார். #SwaraBhaskar
    தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி செக்ஸ் தொல்லை கொடுத்தவர்கள் பெயர்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். மலையாள பட உலகிலும் பாலியல் தொல்லைகள் இருப்பதாக அங்குள்ள நடிகைகள் குற்றம்சாட்டி உள்ளனர். 

    இந்தி நடிகைகளும் பாலியல் தொல்லை குறித்து பேச ஆரம்பித்துள்ளனர். தனுசுடன் ‘ராஞ்சனா’ இந்தி படத்தில் நடித்த ஸ்வரா பாஸ்கரும் தனக்கு தயாரிப்பாளர் ஒருவரால் பாலியல் தொல்லை ஏற்பட்டதாக புகார் கூறியுள்ளார். ராஞ்சனா படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வந்தது. இந்தி பட உலகில் வளரும் கதாநாயகியாக அவர் இருக்கிறார்.

    இதுகுறித்து பாஸ்கர் பாஸ்கர் கூறியதாவது:-

    ‘‘பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கிறது. எனக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டது. பெரிய தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். எனக்கு முத்தமிடவும் முயற்சித்தார். நான் அதை அனுமதிக்கவில்லை. திரையுலகில் இதுமாதிரி செக்ஸ் தொல்லைகள் இருக்கும் என்று முன்பே எனக்கு தெரியும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கிறேன். 



    ஆண்களுக்கு இணையாக பெண்களை நடத்த வேண்டும். நடிகைகள் விருப்பம் என்ன என்பதை கேட்ட பிறகே அவர்களை அணுக வேண்டும். விருப்பம் இல்லாதவர்களை தொந்தரவு செய்யக்கூடாது’’

    இவ்வாறு ஸ்வரா பாஸ்கர் கூறினார்.
    பிரபல நடிகை ஸ்வரா பாஸ்கர், சமூக வலைத்தளத்தில் எனக்கு பாலியல் மிரட்டல்கள் அதிகமாக வருவதாக புகார் கூறியுள்ளார். #SwaraBhaskar
    சினிமா வாய்ப்பு தர படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று தெலுங்கு, இந்தி நடிகைகள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். நடிகைகள் பாதுகாப்புக்கு புதிய அமைப்புகளும் முளைத்துள்ளன. இதனால் செக்ஸ் தொல்லைகள் கொடுக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் அடங்கி இருப்பதாக பேசப்படுகிறது.

    இந்த நிலையில் இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கர் தனக்கு கற்பழிப்பு மிரட்டல்கள் வருவதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    “தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கும், நடிகைகளுக்கும் பாலியல் தொந்தரவுகள் இருக்கின்றன. படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளை வைக்கிறார்கள். பெண்மையை கேவலப்படுத்தும் வசனங்களும் உள்ளன. இதை கடுமையாக நான் எதிர்த்து வருகிறேன். சமூக வலைத்தளத்திலும் கருத்து பதிவிடுகிறேன்.

    இதனால் என்மீது பலர் ஆத்திரத்தில் உள்ளனர். சமூக வலைத்தளத்தில் மோசமாக திட்டுகிறார்கள். உன்னை கற்பழிக்கிற நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் மிரட்டுகிறார்கள். மோசமான வலைத்தள கருத்து பதிவுகளை கட்டுப்படுத்த அமைப்புகள் உருவாக்க வேண்டியது அவசியம். ஆன்லைனில் குடும்பம், பெயர், பிறந்ததேதி சாதி, மதம் போன்ற சொந்த விவரங்களையும் திரட்டி பதிவு செய்து மிரட்டுகிறார்கள். இதனால் சுயகவுரவம் பாதிக்கிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் உள்ளது. ஆனால் அதை அமல்படுத்துவது இல்லை. புகார் அளிக்க சென்றால் உனக்கு ஏன் அவர்களுடன் வம்பு. ஒதுங்கிப்போ என்கிறார்கள். இதுபோன்ற ஆன்லைன் பாலியல் தொல்லைகள் தடுக்கப்பட வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.
    ×