என் மலர்
சினிமா செய்திகள்
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆக்ஷன்’ படத்தில், மரணத்தை கண்முன்னால் பார்த்தேன் என்று நடிகர் விஷால் கூறியிருக்கிறார்.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, அகன்ஷாபூரி, ஷாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆக்ஷன். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால் கூறியதாவது:- 'சமூக சிந்தனைகள் இருந்தாலும் சம்பாத்தியம் தான் முதலில் முக்கியம் என்று எனக்கு புரிய வைத்தது இயக்குநர் சுந்தர்.சி தான். அதற்காக நன்றி.
‘சங்க மித்ரா’ தான் சுந்தர்.சி-யின் கனவு திரைப்படம். ஆனால், அப்படம் தாமதமாவதால் இப்படத்தை எடுத்து விட்டோம். என் கேரியரிலேயே அதிகமான சண்டைக் காட்சிகள் கொண்ட திரைப்படமும், அதிகமாக அடிப்பட்ட திரைப்படமும் ‘ஆக்ஷன்’ தான். ஏனென்றால், ஒரு கணத்தில் என் மரணத்தை என் கண் முன்னால் பார்த்தேன்.
ஒரு காட்சியில் என் கைகளை தடுக்க கொண்டு வரும்போது கையிலும், காலிலும் அடிப்பட்டு 5 மாதங்கள் படப்பிடிப்பு நடக்க விடாமல் செய்தது. எனக்காக காத்திருந்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தினார்கள். வருடம் ஒருமுறை சுந்தர்.சியுடன் பணியாற்றினால் உடல்நிலை நன்றாக இருக்கும்.

சினிமாவில் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் ஈகோ பார்க்காமல் சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டும். ஒரு சாதாரண இடத்தையும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்துவார். 90 நாட்களில் இப்படத்தை முடித்தது சவாலான விஷயம். உதவி இயக்குநராக நான் அவரிடம் நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இப்படத்தின் மூலம் எனக்கு அமைந்தது. அவரிடம் கற்றுக் கொண்டதை இனி வரும் என் படங்களில் பயன்படுத்துவேன்.
சண்டை காட்சிகளில் எனக்கும் தமன்னாவுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கிறது. நான் இதுவரை பெண்களை அடித்ததே கிடையாது. ஆனால், இந்த படத்தில் வரும் காட்சிக்காக அகன்ஷாவை பல தடவை அடித்தேன். அதற்காக இந்த இடத்தில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ இவ்வாறு அவர் பேசினார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ படத்தில் ஆண்ட்ரியாவை தொடர்ந்து மேலும் ஒரு பிரபல நடிகை இணைந்திருக்கிறார்.
பிகில் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் தற்போது ‘தளபதி 64’ திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். வில்லனாக விஜய் சேதுபதியும், முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் நடிகை ஆண்ட்ரியா இணைந்திருப்பதாக சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. தற்போது இப்படக்குழுவுடன் பிரபல தொகுப்பாளினி மற்றும் நடிகை ரம்யா இணைந்திருக்கிறார்.

விஜய்யின் ‘மெர்சல்’, ‘பிகில்’ படங்களில் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரம்யாவிற்கு, தற்போது விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
விருமாண்டி, சண்டக்கோழி, ஜேஜே, வாகை சூடவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் தென்னவன், உடல்நலம் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்.
பாரதிராஜாவின் ‘என்னுயிர் தோழன்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தென்னவன். பின்னர் கமல்ஹாசனின் ‘விருமாண்டி’ படத்தில் நடித்து பிரபலமானார்.
தொடர்ந்து திவான், ஜெமினி, சண்டக்கோழி, ஜேஜே, வாகை சூடவா, கத்திச் சண்டை உள்பட பல படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வருகிறார்.

52 வயதாகும் தென்னவனுக்கு திடீரென்று மூளையில் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தென்னவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல்நிலை கலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்திய அமலாபால், சமீபத்தில் குளியலறை புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். ஆனால் அவரது முதல் படமே சர்ச்சையை ஏற்படுத்தியது. மைனா படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னர் விஜய், ஜெயம் ரவி, தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்த அமலாபால் பிரபல இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார்.
அதனை தொடர்ந்து விளம்பரங்கள், படங்கள் என்று பிசியாக இருந்த அமலா பால் சமீபத்தில் ஆடை என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. தற்போது படவாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் அமலா பால் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார். அங்கு எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ போன்றவற்றையும் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் தற்போது பூக்கள் நிரப்பப்பட்ட குளியல் தொட்டியில் மேலாடை இல்லாமல், ஜன்னல் வழியாக அருகில் செல்லும் ஓடையை வேடிக்கை பார்த்தப்படி போஸ் கொடுத்த படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
தர்பார் படத்தின் இந்தி மோஷன் போஸ்டரை வெளியிட்ட சல்மான் கான், ரஜினிதான் ஒரே சூப்பர் ஸ்டார் என தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, பிரதீக் பார்பர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தர்பார்'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் தீம் மியூசிக் உடன் கூடிய வீடியோ போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.
இதனை தமிழில் கமல்ஹாசன், தெலுங்கில் மகேஷ் பாபு, மலையாளத்தில் மோகன்லால் மற்றும் இந்தியில் சல்மான் கான் ஆகியோர் வெளியிட்டனர். இதன் தீம் மியூசிக் மற்றும் ரஜினியின் ஸ்டைலான லுக் ஆகியவற்றுக்கு ரஜினி ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்தி போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சல்மான் கான், "என் வாழ்த்துகள் வெறும் சூப்பர் ஸ்டாருக்கு அல்ல, ஒரே சூப்பர் ஸ்டாருக்கு" என்று தெரிவித்துள்ளார்.

தர்பார் வரும் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் ஆதித்யா அருணாச்சலம் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். ஆதித்யா என்பது படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசின் மகன் பெயர். அருணாச்சலம் என்பது முருகதாசின் அப்பா பெயர். 'தர்பார்' படத்தை தொடர்ந்து ரஜினி, சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.
பிரபுதேவா அடுத்ததாக இயக்கி வரும் இந்தி படத்தில், நடிகர் பரத் பிரபல பாலிவுட் நடிகருக்கு வில்லனாக நடித்து வருகிறார்.
ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பரத். இதையடுத்து வெயில், காதல், பழனி, பட்டியல், 555 போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றார். இருப்பினும் சமீப காலமாக அவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சரிவர ஓடாததால், பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. தற்போது காளிதாஸ் என்ற தமிழ் படமும், 6 ஹவர்ஸ் என்ற மலையாள படமும் பரத் கைவசம் உள்ளன.
இந்நிலையில், பரத் ராதே எனும் இந்தி படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிரபுதேவா இயக்கும் இந்த படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடித்து வருகிறார். ராதே படத்தில் நடிப்பது மூலம் சல்மான் கானுடன் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவு நனவாகியிருப்பதாக பதிவிட்டு, சல்மான் மற்றும் பிரபுதேவாவுடன் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படத்தையும் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

2020 ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ராதே திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இதன் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
சீமான், வசி, பூஜாஸ்ரீ நடிப்பில் ஆர்.விஜயானந்த் ஏ.ஆர்.சூரியன் இயக்கத்தில் வெளியாகி உள்ள தவம் படத்தின் விமர்சனம்.
பூஜாஸ்ரீ தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர். நிறுவனத்தின் நிர்வாகி வீட்டு திருமணத்துக்காக அன்னவயல் கிராமத்துக்கு அலுவலக நண்பர்களுடன் செல்கிறார். அங்கு ஏடூஇசட் என்ற நிறுவனம் நடத்தி திருமண ஏற்பாடுகள் செய்து வரும் வசியை சந்திக்கிறார். ஊரில் சமூக விரோத செயல்களை செய்துவரும் விஜயானந்தை பார்த்து கிராமமே பயப்படுகிறது. பூஜாஸ்ரீயோ துணிந்து அவரை போலீசில் சிக்க வைக்கிறார்.
இதனால் பூஜாஸ்ரீயை கொல்ல வில்லன் கும்பல் துரத்துகிறது. இந்நிலையில் வசியின் தந்தையும் அந்த ஊரின் விவசாய போராளியுமான சீமான் மகன் கண் எதிரிலேயே கொலை செய்யப்பட்டது தெரிய வருகிறது. சீமான் கொல்லப்பட என்ன காரணம்? பூஜாஸ்ரீக்கும் வசிக்கும் என்ன தொடர்பு என்ன? பூஜாஸ்ரீக்கு அந்த கிராமத்துடனான பூர்வீக தொடர்பு என்ன? என்பதை படத்தின் இரண்டாம் பாதி விளக்குகிறது.

அறிமுக நாயகன் வசி பார்ப்பதற்கு வசீகரமாக இருக்கிறார். நடிப்பில் அறிமுகம் என்பது தெரியவில்லை. கிராமத்து கதாபாத்திரத்துக்கு நன்றாக பொருந்துகிறார். பூஜாஸ்ரீக்கு கதையை தாங்கும் வேடம். சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் இன்னொரு கதாநாயகனே சீமான் தான். இடைவேளையில் இவருக்கு தரப்படும் பில்டப்புகளுக்கு தனது கம்பீரமான நடிப்பால் நியாயம் சேர்க்கிறார். விவசாயத்தின் அருமை பற்றி சீமான் பேசும் வசனங்கள் இன்றைய சமூகத்துக்கு அவசியமான பாடங்கள். சீமான் வரும் காட்சிகள் படத்தை வலுவாக்குகின்றன.
அர்ச்சனா சிங், சிங்கம்புலி, போஸ் வெங்கட், சந்தானபாரதி, பிளாக்பாண்டி, கூல் சுரேஷ், தெனாலி, கிளி ராமச்சந்திரன், வெங்கல்ராவ் ஆகியோர் படத்தை கலகலப்பாக நகர்த்துகிறார்கள். வில்லனாக வரும் விஜயானந்தும் குறை வைக்கவில்லை. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் ரசிக்கவும் முணுமுணுக்கவும் வைக்கின்றன. வேல்முருகனின் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் ரம்மியம். எஸ்.பி.அகமது படத்தின் நீளத்தை சிறிது குறைத்து இருக்கலாம்.

எளிமையான கிராமத்து கதையில் சீமானை வைத்து வலிமையான வசனங்கள் மூலம் விவசாயத்தின் பெருமையையும் அவசியத்தையும் பேச வைத்து இருக்கிறார்கள். கிளைமாக்ஸ் காட்சி உருகவைக்கிறது. விவசாயத்தின் வலிமையை உணர்த்திய விதத்தில் தவம் கவனம் பெறுகிறது.
மொத்தத்தில் ’தவம்’ விவசாயப்புரட்சி
நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் முடிவடைந்து விட்டாலும், வாக்குகள் இன்னும் எண்ணப்படாமல் இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தனி அதிகாரியாக பத்திரப்பதிவுத்துறை உதவி ஐ.ஜி. கீதா என்பவரை தமிழக அரசு நேற்று நியமித்தது.
இதையடுத்து நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் கார்த்தி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனி அதிகாரி நியமிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதில், நடிகர் சங்க நிர்வாக பணிகளை கவனிக்க எந்த குழுவும் இல்லாததால் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் வழக்கில் தீர்ப்பு வரும் வரை அல்லது ஓராண்டு வரை தனி அதிகாரியை நியமித்திருக்கிறோம் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை அரசு நியமித்ததற்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை நவம்பர் 14-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
கேரள மாநிலம் பரவூர் பகுதியை சேர்ந்த மம்முட்டியின் ரசிகர் ஒருவர் பட ரிலீசுக்காக திருமண தேதியை மாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கேரள மாநிலம் பரவூர் பகுதியை சேர்ந்தவர் மேமன் சுரேஷ். இவர் நடிகர் மம்முட்டியின் தீவிர ரசிகர். மம்முட்டி படம் வெளியாகும் போதெல்லாம் முதல் நாள் முதல் ஷோ பார்ப்பது இவரது வழக்கம். மேமன் சுரேசுக்கு வருகிற 21-ந் தேதி திருமணம் செய்ய அவரது வீட்டாரால் தேதி குறிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மம்முட்டி நடிப்பில் மாமாங்கம் என்ற புதிய திரைப்படம். மேமன் சுரேசுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட தேதியில் வெளியாக இருந்தது. தன்னுடைய திருமண நாளிலேயே தனக்கு பிடித்த நடிகரின் திரைப்படமும் வெளியாக உள்ளது என்பதால் தனது திருமணத்தை மேமன் சுரேஷ் கடந்த மாதம் 30-ந் தேதிக்கு மாற்றி வைத்திருக்கிறார்.

மேமன் சுரேசுக்கு கடந்த மாதம் 30-ந்தேதி அவருக்கு நிச்சயம் செய்த பெண்ணுடன் நல்ல முறையில் திருமணம் நடைபெற்றது. புது மனைவியுடன் தனக்கு பிடித்த மம்முட்டியின் திரைப்படத்தை வருகிற 21-ந்தேதி முதல் நாளே பார்க்கலாம் என்று சந்தோஷமாக காத்திருக்கிறார்.
நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் நடிகர் விஷால் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் சங்கத்தின் தேர்தல் தொடர்பான வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கல்யாணசுந்தரம் விசாரித்து வருகிறார். இந்த நிலையில், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தனி அதிகாரியாக பத்திரப்பதிவுத்துறை உதவி ஐ.ஜி. கீதா என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்தும், இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் நடிகர் விஷால் வழக்கு தொடர முடிவு செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக இன்றே (வெள்ளிக்கிழமை) விசாரிக்க வேண்டும் என்று நடிகர் விஷால் தரப்பில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆதிகேசவலு முன்பு முறையிடப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நீதிபதி, ‘ஏற்கனவே தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் வழக்கை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கல்யாணசுந்தரம் விசாரித்து வருகிறார். எனவே, நடிகர் சங்கத் துக்கு தனி அதிகாரி நியமனம் தொடர்பாக அவரிடம் தான் முறையிட வேண்டும்’ என்று கூறினார். பின்னர் இந்த வழக்கை நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து நீதிபதி ஆதிகேசவலு உத்தரவிட்டார்.
என்னையும் ரஜினியையும் யாராலும் பிரிக்க முடியாது என கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலையை திறந்து வைத்தனர். கமல் இந்த விழாவில் பேசத் தொடங்கியதும் ரஜினியை ஆர்.கே அவர்களே என்று அழைத்து தொடங்கினார்.
அவர் பேசியதாவது:- இந்திய திரைப்பட துறையில் ரஜினியை தாமதமாக கவுரவித்து இருந்தாலும் சரியான நபரை தான் கவுரவித்து இருக்கிறார்கள். அவர் சினிமா வாழ்க்கைக்காக எடுத்துக்கொண்ட சிரத்தை எனக்கு சற்றும் குறையாதது. எங்களது பாணி தான் வெவ்வேறு. நாங்கள் அப்போதே ஏ.வி.எம். மரத்தடியில் பேசி தெளிவாக முடிவு எடுத்தோம்.
ஒருவருக்கு ஒருவர் நட்பாகவும் மரியாதையாகவும் இருந்துகொள்ள வேண்டும் என்பது நாங்கள் பேசி முடிவெடுத்தது தான். எங்களுக்கு ரசிகர்கள் உருவாவதற்கு முன்பு எங்களது முதல் ரசிகர்கள் நாங்கள் தான். எனக்கு அவரும், அவருக்கு நானும் ரசிகர்களாக இருப்போம். என்றும் நாங்கள் தெளிவாக இருப்போம். ஹேராம் போன்ற படங்கள் ஏன் எடுக்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

நானும் ரஜினியும் பேசியதை எல்லாம் காசு வந்த பிறகு எடுக்காமல் விட்டால் தான் தவறு. நான் மட்டும் அல்ல மணிரத்தினமும் அவற்றை எடுத்து வருகிறார். முதல் படத்திலேயே மணிரத்தினத்தை பார்த்து வியந்தது உண்டு. அதே வியப்பு ரஜினிக்கும் இருந்தது தெரியும். தளபதி டைட்டிலை ரஜினி சொன்னபோது என் காதுகளுக்கு முதலில் கணபதி என்று விழுந்துவிட்டது. எனவே பிடிக்கவில்லை என்றேன்.
விநாயகருக்கான டைட்டிலாக இருக்கிறதே என்று கேட்டேன். பின்னர் தெளிவாக சொன்னதும் தான் அற்புதமான டைட்டில் என்றேன். எங்கள் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்வார்கள். ஆனால் நாங்கள் தனிமையில் பேசிக்கொள்வதை கேட்டால் அவர்கள் அதிர்ச்சியடைவார்கள். ஆச்சர்யப்படுவார்கள்.
பாலச்சந்தர் சிலையாக இங்கே இருக்கிறார். நிலையாக என்றுமே இருப்பார். பாலச்சந்தர், அனந்து இரண்டு பேர் தொலைபேசி எண்களும் என் போனில் இருந்து அழிக்க முடியாதவை. கடந்த மாதம் கூட தனிமையாக நினைத்தபோது அனந்து சார் எண்ணுக்கு அழைத்தேன். அது அவரது வீடு என்றதும் கண்கலங்கிவிட்டேன்.
அப்போது அவர்கள் 8-ந்தேதி பிறந்தநாள் என்றார்கள். தெரியும் என்றேன். அந்த தேதியில் பாலச்சந்தருக்கு சிலை திறப்பது சிறப்பான ஒன்று. பாலச்சந்தர் சார் சிலை இங்கே வைத்ததால் அவர் என்னை கண்காணித்துக்கொண்டே இருக்கிறார் என்ற எண்ணம் எனக்குள் இருக்கும்.

ராஜ்கமல் நிறுவனத்தின் 50-வது படம் கூடிய விரைவில் அறிவிக்கப்படும். அதில் நான் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. பிறரை வைத்து படங்கள் தயாரிக்கும் அளவுக்கு நீங்கள் இந்த நிறுவனத்தை வளர்த்து விட்டிருக்கிறீர்கள். அவ்வை சண்முகி ராஜ்கமலுக்காக ஓகே சொல்லி வைத்து இருந்த கதை. வேறு ஒரு தயாரிப்பாளர் கேட்டதும் கொடுத்தோம். தசாவதாரம் படமும் அப்படி தான். மணிரத்தினத்துக்கும் எனக்கும் எண்ண ஓட்டம் ஒன்றுதான்.
வைரமுத்துவின் முதல் பாடலை கேட்டு அவர்தான் வேண்டும் என்று அடம் பிடித்து அழைத்தவன் நான். பின்னர் அவரது புத்தகம் ஒன்றை அவருக்கே மனப்பாடமாக வாசித்து காண்பித்து அசத்தினேன். இவர்கள் எல்லாம் சேர்ந்து தூக்கி நிறுத்திய ராஜ்கமல் தான் இன்று நடைபோட்டுக்கொண்டு இருக்கிறது. எங்களின் பயணம் அற்புதமான பயணம். சினிமா துறையில் கோபம், அவமானம், அவமரியாதை எல்லாமும் வரும். இருந்தும் எங்களை யாராலும் பிரிக்க முடியவில்லை.
முக்கியமாக நானும் ரஜினியும். இத்தனை ஆண்டுகளாக இணைபிரியாத நண்பர்களாக இருக்கிறோம். எங்கள் கைகளை யாராலும் பிரிக்க முடியாது. நாங்கள் சந்தித்தால் எல்லாவற்றையும் பேசிக் கொள்வோம். இருவருக்கும் இடையே போட்டு கொடுப்பது இதனாலேயே குறைந்துவிட்டது. இந்த நிறுவனத்தை தாங்கி பிடித்தது நிறைய பேர். ராஜ்கமலை நடத்தியவர்கள் நடத்துபவர்கள் தான் இந்த விழாவுக்கு காரணம்.
நான் பிறந்த விழாவை விட அதிகம் கொண்டாடும் விழா ராஜ்கமல் பிறந்தநாள் விழா. ரஜினி ஐகான் விருது பெறுவதற்கு போனில் வாழ்த்து சொல்லி விட்டேன். நேரிலும் சொல்லிக் கொள்கிறேன். அவர் திரைப்படத்துறைக்கு வந்த முதல் ஆண்டே ஐகான் ஆகிவிட்டார். சிவாஜி போல அறிமுகமான முதல் ஆண்டே ஐகான் ஆனவர் அவர். 44 ஆண்டுகள் தாமதமாக செய்து இருந்தாலும் செய்தவர்களுக்கு நன்றி. ராஜ்கமலை கவனிப்பவர்கள் தொடர்ந்து கவனியுங்கள். தொடர்ந்து இணைந்து பயணிப்போம்.
இங்கே அன்பு இருக்கிறது அது வெல்லும். நான் அலுவலகம் அமைக்க போகிறேன் என்றதும் இங்கே படம் எடுக்க போகிறேன் என்றார் பாலச்சந்தர். அவர் படப்பிடிப்புக்காக காத்திருந்து பின்னர் தான் அலுவலகம் திறந்தோம். அவர் தடம் பதித்த இடத்தில் அலுவலகம் அமைவது எனக்கு சிறப்பு.
இவ்வாறு கமல் பேசினார்.

சத்தி என் பிலிம்ஸ் சார்பில் மிஸ்டர் சத்தி தயாரிப்பில் எஸ்.பி.சித்தார்த், வாணி போஜன் நடிப்பில் உருவாகி வரும் மிஸ்டர் டபிள்யூ படத்தின் முன்னோட்டம்.
சத்தி என் பிலிம்ஸ் சார்பில் மிஸ்டர் சத்தி தயாரிக்கும் புதிய படத்தின் பெயர் தான் ‘மிஸ்டர் டபிள்யூ’. எஸ்.பி.சித்தார்த் கதையின் நாயகனாக அறிமுகமாக சின்னத்திரை புகழ் வாணி போஜன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் இதில் லிவிங்ஸ்டன், எம்.எஸ்.பாஸ்கர், பைனலிபாரத், வி.ஜே.சித்து, அனுபமா பிரகாஷ், அருள்கோவன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
மிலன் கலையையும், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பையும், அருள்கோவன் - அசார் நடன பயிற்சியையும், தமிழ் - நிரன்சந்தர் ஒளிப்பதிவையும், தினேஷ் - ரகு தயாரிப்பு நிர்வாகத்தையும், வல்லவன் - அருண் பாரதி,கோசேஷா மூவரும் பாடல்களையும் கவனிக்கின்றனர்.
சென்னை, பெங்களூர் பகுதிகளில் உள்ள முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ள இதன் இணைத்தயாரிப்பு பொறுப்பை அருள்கோவன் ஏற்றுள்ளார். பிரபல முன்னனி இயக்குனர்கள் பலரிடம் உதவியாளராக பணியாற்றிய அனுபவத்தை கொண்டு "மிஸ்டர் டபிள்யூ" என்கிற கதையை எழுதி வசனம் தீட்டி திரைக்கதை அமைத்து தானே இசையமைத்து தமது முதல் படமாக டைரக்டு செய்து வருகிறார் நிரோஜன் பிரபாகரன்.