என் மலர்
சினிமா செய்திகள்
லிபி சினி கிராப்ட்ஸ் தயாரிப்பில் கிருஷ்ணா சாய் இயக்கியுள்ள 50 /50 திரைப்படத்தில் யோகிபாபு ரொமாண்டிக் ரவுடியாக நடித்துள்ளார்.
யோகிபாபு மற்றும் சேது நடித்த 50 /50 திரைப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் மொத்தம் 6 பாடல்கள், அதிலும் குறிப்பாக யோகிபாபு பாடும் 'கோலமாவு கோகிலா' என்ற பாடலை சூப்பர் சிங்கர் பிரபலம் பூவையார் பாடியுள்ளார். படமும் அதே போன்று சிறப்பாக வந்துள்ளதாக படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சாய் தெரிவித்துள்ளார்.
அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருப்பதாகவும், ஒரு திகில் கலந்த முழுநீள நகைச்சுவையாக யோகிபாபு கலக்கி இருப்பதாகவும், அவர் இந்த படத்தில் ஒரு ரொமாண்டிக் ரவுடியாக வருகிறார் என்றும் இந்த படம் நிச்சயம் மக்கள் கொண்டாடும் ஒரு வெற்றி படமாக அமையும் என்று படத்தின் தயாரிப்பாளர் வி.என்.ஆர் தெரிவித்துள்ளார்.

நான்கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், பாலசரவணன், தீனா, நந்தா சரவணன், மயில்சாமி, சாமிநாதன், மதன் பாப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர், படத்திற்கு அலெக்சாண்டர் கதை எழுத, பிரதாப் ஒளிப்பதிவு, தரண் இசை அமைத்துள்ளார். டிசம்பர் மாதம் படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் லிபி சினி கிராப்ட்ஸ் அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான இந்துஜா, தன்னை பற்றி பரவி வரும் வதந்தியால் வேதனை அடைந்துள்ளார்.
விஜய்யின் பிகில் படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர் இந்துஜா. மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அவரை அடுத்து பல முன்னணி இயக்குனர்கள் அணுகி வருகிறார்கள். ஆனால் அவர் தனக்கு கமர்சியல் படங்கள் மட்டும் தான் வேண்டும்.

விருது வாங்கும் படங்கள் வேண்டாம் என்று கூறிவிட்டார் என செய்தி வந்தது. அதை பார்த்துவிட்டு அதிர்ச்சியான இந்துஜா டுவிட்டரில் அதை புகைப்படம் எடுத்து பதிவிட்டு தன் வேதனையை கூறியுள்ளார். “சினிமா மீது பைத்தியமாக இருக்கிறேன். நான் அப்படி கூறவே இல்லை. உங்கள் வார்த்தைகள் வேதனை அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் ஹீரோ படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹீரோ’. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் அர்ஜுன், இவானா, ஷ்யாம் கிருஷ்ணன், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் 13ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு சத்யம் திரையரங்கிலும், 11.03 மணிக்கு யூடியூபிலும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஹீரோ கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற டிசம்பர் 20ந் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மலையாள பட உலகில் முன்னணி நடிகராக இருக்கும் பாலா கருத்து வேறுபாடு காரணமாக தனது காதல் மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.
தமிழில் அன்பு படத்தில் அறிமுகமாகி காதல் கிசு, கலிங்கா, அம்மா அப்பா செல்லம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளவர் பாலா. வீரம் படத்தில் அஜித்குமாரின் தம்பியாக நடித்து இருந்தார். இவரது அண்ணன் தான் வீரம் படத்தை இயக்கிய சிவா என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள பட உலகிலும் பாலா முன்னணி நடிகராக இருக்கிறார். மோகன்லாலின் லூசிபர் படத்திலும் நடித்து இருந்தார்.
பாலாவும் கேரளாவை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி அம்ருதாவும் காதலித்தனர். 2010-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு அவந்திகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பாலாவுக்கும் அம்ருதாவுக்கும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2015-ல் பிரிந்து தனித்தனியாக வசித்தனர். இதுகுறித்து கிசுகிசு வெளியானபோது எங்கள் குடும்ப வாழ்க்கை குறித்து யாரும் பேசவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

பின்னர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு பாலா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இருவரையும் அழைத்து நீதிபதி விசாரித்தார். தற்போது அவர்களுக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மகள் அவந்திகா தாயுடன் வளர்வார் என்று கூறப்படுகிறது. பாலா மனைவியை விவாகரத்து செய்தது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆர்.மாதேஷ் இயக்கி வரும் ‘சண்டக்காரி’ படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை ஸ்ரேயா லண்டன் போலீசிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.
விஜய் நடித்த ‘மதுர,’ விஜயகாந்த் நடித்த ‘அரசாங்கம்,’ திரிஷா நடித்த ‘மோகினி’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், ஆர்.மாதேஷ். அடுத்து இவர், ‘சண்டக்காரி’ என்ற படத்தை டைரக்டு செய்கிறார். ‘சண்டக்காரி’ படத்தில் விமல்-ஸ்ரேயா காதல் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த படத்தை ஜெயபாலன், ஜெயக்குமார் தயாரித்து வருகிறார்.
படத்தை பற்றி டைரக்டர் ஆர்.மாதேஷ் கூறியதாவது:- “இந்த படத்தில், ஸ்ரேயா ஒரு சாப்ட்வேர் கம்பெனியின் உயர் அதிகாரியாகவும், விமல் என்ஜினீயராகவும் நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. முக்கிய காட்சிகள் லண்டன் விமான நிலையத்தில் படமாக்கப்பட்டன. விமல், ஸ்ரேயா, சத்யன் ஆகிய மூன்று பேர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமானது. அப்போது பாதுகாப்பு மிகுந்த குடியுரிமை பகுதியை ஸ்ரேயா தாண்டி போனார்.

உடனே அங்கிருந்த துப்பாக்கி ஏந்திய போலீசார் ஸ்ரேயாவை சூழ்ந்து கொண்டார்கள். “எப்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியுரிமை பகுதியை தாண்டி வந்தீர்கள்?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். உடனே விமல் உள்பட படக்குழுவினர் ஓடிவந்து, உரிய ஆவணங்களை காட்டி, படப்பிடிப்புக்காக வந்து இருக்கிறோம் என்று விளக்கிய பின், போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஸ்ரேயாவை விடுவித்தனர்.”
ஏ.எஸ்.மைக்கேல் சிவன் இயக்கத்தில் மகேஷ், கல்யாணி நாயர் நடிப்பில் உருவாகி வரும் நங்கூரம் படத்தின் முன்னோட்டம்.
டைரக்டர் ஏ.எஸ்.மைக்கேல் சிவன் இயக்கத்தில் ‘அங்காடி தெரு’ மகேஷ்-மலையாள நடிகை கல்யாணி நாயர் ஜோடியாக நடிக்கும் படம் ‘நங்கூரம்’. ரேகா, நிழல்கள் ரவி, பொன்னம்பலம், ‘மகாநதி’ சங்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இதில் நடிக்கிறார்கள். கா.கலைக்கோட்டுதயம் தயாரிக்கிறார்.
படத்தை பற்றி டைரக்டர் ஏ.எஸ்.மைக்கேல் சிவன் கூறும்போது, “இது, குற்றப்பின்னணி கதையம்சம் கொண்ட படம். நகரில், 35 வயதில் இருந்து 40 வயதுக்குள் இருக்கும் பெண்களை குறிவைத்து கொலைகள் நடைபெறுகின்றன. கொலைகாரன் யார்? கொலைகளுக்கான காரணம் என்ன? என்பதை ஒரு போலீஸ் அதிகாரி துப்பறிந்து கண்டுபிடிப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது” என்றார்.
ரூ. 1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சங்கத்தின் சிறப்பு அதிகாரியை எதிர் மனுதாரராக சேர்க்கவேண்டும் என சிம்புவுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சிம்பு நடித்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம், அன்பானவன், அடங்காதவன், அசராதவன். இந்த திரைப்படத்தை மைக் கேல் ராயப்பன் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிம்புக்கு ரூ.8 கோடி சம்பளம் பேசி, ரூ.1.51 கோடி முன்பணம் கொடுக்கப்பட்டது. பாக்கி சம்பளத்தை மைக்கேல் ராயப்பனிடம் இருந்து பெற்றுத்தரும்படி, நடிகர் சங்கத்தில் சிம்பு புகார் மனு அளித்தார்.
அதேநேரம், இந்த படத்தினால் தனக்கு ஏற்பட்ட பண இழப்பை நடிகர் சிம்புவிடம் இருந்து வசூலித்து தரும்படி தயாரிப்பாளர் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் செய்தார். இந்த விவகாரத்தில் தனக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக மைக்கேல் ராயப்பன் ஊடகங்களுக்கு அவதூறு பேட்டி கொடுத்ததாகவும்,
இதற்காக அவரிடம் இருந்து ரூ.1 கோடி மானநஷ்டஈடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் நடிகர் சிம்பு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷாலை எதிர்மனுதாரராக சிம்பு சேர்த்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நடிகர் சங்கத்தை நிர்வகிக்க தமிழக அரசு சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளதாகவும், நடிகர் விஷால் தற்போது நடிகர் சங்கத்தின் நிர்வாகியாக இல்லை என்றும் கூறப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் நடிகர் சங்கத்தின் சிறப்பு அதிகாரியை எதிர்மனுதாரராக சேர்க்கும்படி நடிகர் சிம்புவுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 3-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.
அதேநேரம், இந்த படத்தினால் தனக்கு ஏற்பட்ட பண இழப்பை நடிகர் சிம்புவிடம் இருந்து வசூலித்து தரும்படி தயாரிப்பாளர் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் செய்தார். இந்த விவகாரத்தில் தனக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக மைக்கேல் ராயப்பன் ஊடகங்களுக்கு அவதூறு பேட்டி கொடுத்ததாகவும்,
இதற்காக அவரிடம் இருந்து ரூ.1 கோடி மானநஷ்டஈடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் நடிகர் சிம்பு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷாலை எதிர்மனுதாரராக சிம்பு சேர்த்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நடிகர் சங்கத்தை நிர்வகிக்க தமிழக அரசு சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளதாகவும், நடிகர் விஷால் தற்போது நடிகர் சங்கத்தின் நிர்வாகியாக இல்லை என்றும் கூறப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் நடிகர் சங்கத்தின் சிறப்பு அதிகாரியை எதிர்மனுதாரராக சேர்க்கும்படி நடிகர் சிம்புவுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 3-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்வேதா பாசு, திருமணமான ஒரு வருடத்தில் கணவரை பிரிந்து விட்டதாக கூறியிருக்கிறார்.
இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தேசிய விருது பெற்றவர் ஸ்வேதா பாசு. தமிழில் உதயா ஜோடியாக ரா ரா, கருணாஸ் ஜோடியாக சந்தமாமா படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் பாலியல் வழக்கில் ஸ்வேதா பாசு கைதான சம்பவம் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்தி பட இயக்குனர் ரோகித் மிட்டலுக்கும் ஸ்வேதா பாசுவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 13-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். மகிழ்ச்சியாக நகர்ந்த இவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஒரு வருடத்திலேயே புயல் வீச தொடங்கி உள்ளது.

கணவரை பிரிந்து விட்டதாக ஸ்வேதா பாசு அறிவித்து உள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
“கணவர் ரோகித்தை நான் பிரிந்து விட்டேன். பல மாதங்களாக யோசனை செய்த பிறகே இந்த முடிவுக்கு நாங்கள் வந்தோம். பிரிய வேண்டும் என்ற முடிவை சேர்ந்தே எடுத்தோம். புத்தகத்தின் எல்லா பக்கங்களையும் படிக்க முடியவில்லை என்பதற்காக புத்தகம் மோசமாக இருக்கிறது என்று பொருள் அல்ல. ரோகித் எப்போதுமே என்னை ஊக்கப்படுத்தி வந்தார். அதற்காக அவருக்கு நன்றி. அவரை பற்றிய மறக்க முடியாத நினைவுகளும் எனக்குள் இருக்கும்.” இவ்வாறு ஸ்வேதா பாசு கூறியுள்ளார்.
பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தை பிரபலங்கள் பாராட்டியுள்ளார்கள்.
இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கியிருக்கும் படம் "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு". தினேஷ், ஆனந்தி, ரித்விகா, முனீஸ்காந்த் ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் சமீபத்தில் வெளியாகி, மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இப்படத்தினை பார்த்துவிட்டு பாராட்டி வருகிறார்கள். நல்லக்கண்ணு, ஜி.ராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி, வேல்முருகன், தமிழன் பிரசன்னா, ஆளூர் ஷா நவாஸ், மல்லை சத்யா ஆகிய அரசியல்வாதிகள் இப்படத்தை பாராட்டி இருக்கிறார்கள்.

மேலும் இயக்குநர் சேரன், படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரையையும், தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், ஒளிப்பதிவாளர் கிஷோர்குமாரையும் பாராட்டி வாழ்த்தினார்.
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் தலைவர் 168 படத்தின் பூஜை இன்று சன் ஸ்டூடியோவில் போடப்பட்டுள்ளது.
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தை அடுத்து சிவா இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். 28 வருடங்களுக்குப் பிறகு நடிகை குஷ்புவும், 24 வருடங்களுக்குப் பிறகு நடிகை மீனாவும் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்கள். மேலும் கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
#Thalaivar168Poojaipic.twitter.com/p1c70r7PD3
— Sun Pictures (@sunpictures) December 11, 2019
இப்படத்தின் பூஜை இன்று சன் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, இயக்குனர் சிவா, இசையமைப்பாளர் இமான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
தமிழில் விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து பிரபலமான நகைச்சுவை நடிகர் சதீஷுக்கு இன்று திருமணம் நடைபெற்றது.
விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர் நடிகர் சதீஷ். இவருக்கும் சிக்சர் பட இயக்குநரின் தங்கை சிந்துவுக்கும் சதீஷுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சிக்சர் படத்தில் நடிகர் வைபவ் உடன் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் காதல் திருமணம் என்று பேச்சு அடிபட்டது.
சிக்சர் பட இயக்குநரும் மணப்பெண்ணின் அண்ணனுமான இயக்குநர் சாச்சி சதீஷின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று கூறி சதீஷ் - சிந்து இருவரின் புகைப்படத்தையும் பதிவிட்டு அந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இருவருக்கும் இன்று திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் பிரபலங்களுக்கும் திரையுலகில் இருக்கும் தனது நண்பர்களுக்கும் சதீஷ் திருமன அழைப்பிதழ்களை கொடுத்து வந்தார்.
சதீஷ் - சிந்து திருமணம் இன்று காலை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நேற்று மாலை நடந்த திருமண வரவேற்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் சத்யராஜ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜீவா, ஜி.வி.பிரகாஷ், உதயநிதி ஸ்டாலின், கவுதம் கார்த்திக் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகைகள் இந்துஜா, அதுல்யா ஆகியோர் கலந்துகொண்டு மண மக்களை வாழ்த்தினார்கள்.
ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தர்பார் படக்குழு ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து கொடுக்க இருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்.
தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அதனைத் தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

தற்போது ரஜினியின் பிறந்தநாளை (12-12-2019) முன்னிட்டு இப்படத்தின் டிரைலரை வெளியிட இருப்பதாக இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் அறிவித்துள்ளார்.






