என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கும் ராதிகா சரத்குமார், வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்க தயாராகி வருகிறார்.
    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியினால், ‘கலையரசி’ என்று பட்டம் சூட்டப்பட்ட ராதிகா சரத்குமார், 43 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் 375 படங்களில் நடித்து இருக்கிறார்.

    அவருடைய 375-வது படம், மணிரத்னத்தின் ‘வானம் கொட்டட்டும்.’ இதில் ராதிகா அவருடைய கணவர் சரத்குமாருடன் இணைந்து நடித்து இருக்கிறார். இருவரும் கணவன்-மனைவியாகவே வருகிறார்கள். படம், வருகிற பிப்ரவரி மாதம் திரைக்கு வர இருக்கிறது. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் உள்பட தமிழ் பட உலகின் பிரபல நாயகர்கள் அனைவருடனும் ராதிகா சரத்குமார் ஜோடியாக நடித்து இருக்கிறார். தெலுங்கு பட உலகின் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியுடன் மட்டும் 26 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.

    ராதிகா சரத்குமார்

    ‘சின்னத்திரை’யில் 23 வருடங்களாக நடித்து வருகிறார். இவருடைய அடுத்த தொடர், ‘சித்தி-2. இப்போது அவர், ‘கோடீஸ்வரி’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். தனது தந்தை ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது ராதிகா சரத்குமாரின் கனவு. இதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை அவர் தொடங்கி விட்டார்.
    மைண்ட் ட்ராமா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஒயிட் டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் நினைவோ ஒரு பறவை படத்தின் முன்னோட்டம்.
    மைண்ட் ட்ராமா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஒயிட் டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் நினைவோ ஒரு பறவை. இப்படத்தை ரிதுன் என்பவர் தயாரித்து இயக்குகிறார். 50 வயது நிரம்பிய கணவன் மனைவி பாரிஸ் பயணமே இப்படத்தின் கதை கரு. அவர் கடந்து வந்த பாதை நிகழ்கால சவால்களையும் மீறி அவர்கள் பயணத்தை மேற்கொள்கிறார்கள் அதன் அவசியம் என்ன என்பதை விளக்குகிறது இப்படம்.

    ஒளிப்பதிவாளர் மணி BK தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். இசையமைப்பாளர் தமனுக்கு அவரின் முந்தைய படங்களை போல் அல்லாமல் இப்படத்தில் புதுவிதமாக இசையைக் கொடுத்திருக்கிறார் இந்த பாடலைக் கேட்கும்போது இது தமனின் இசையா? என்றே கேட்க தோன்றும் அளவுக்கு இருக்கும்.

    இப்படத்தில் பள்ளிப்பருவ காதலர்களாக ஹரிபாஸ்கர், சஞ்சனா சாரதி நடித்துள்ளார்கள் வயதான காதலர்களாக நடிக்க முக்கிய நடிகர் நடிகை நடிக்க உள்ளனர் விரைவில் அதன் அறிவிப்பு வரும் இவர்கள் தான் கதையின் நாயகன் நாயகி.

    தற்போது மீனாமினிக்கி என்ற பாடல் மிகப்பெரிய சாதனையாக வெளிவந்த 6 நாட்களில் 7 இலட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.  இப்படலை இயக்குனர் ரிதுன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தில் விஜய் புதிய கெட்-அப்பில் தோன்ற இருக்கிறார்.
    விஜய் நடிக்கும் `மாஸ்டர்' படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்து வருகிறார். இவர், ‘மாநகரம்,’ ‘கைதி’ ஆகிய 2 படங்களை இயக்கியவர். சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம், இது. விஜய் மீசை இல்லாமல் நடிக்கும் முதல் படமும் இதுவே.

    விஜய்-மாளவிகா மோகனன் ஜோடியுடன் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். சாந்தனு, அழகம் பெருமாள் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். கர்நாடக மாநிலம் சிமோகாவில் ஜெயில் அரங்கு அமைத்து, அதில் படப்பிடிப்பு நடந்தது.

    மாஸ்டர் படத்தில் விஜய்

    விஜய் மீசையில்லாமல் நடித்த ஜெயில் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையடுத்து, சென்னையை அடுத்த பனையூரில், பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டது. அதில் நேற்று முதல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
    ஜெயலலிதாவை தொடர்ந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    இந்திய சினிமாவில் சமீபகாலமாக வாழ்க்கை வரலாற்று படங்கள் உருவாகி வருகின்றன. சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகளை விட அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு படங்களாக மாறும்போது சர்ச்சையாகின்றன. மன்மோகன் சிங், மோடி ஆகியோரின் வாழ்க்கையும் படமாக்கப்பட்டன.

    தமிழில் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை சினிமாக்களாக உருவாகி வருகிறது. இந்நிலையில் அடுத்து முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கையையும் படமாக்க முயற்சிகள் நடக்கின்றன. என் காதலி சீன் போடுறா படத்தை இயக்கிய ராம்சிவா இந்த தகவலை தெரிவித்துள்ளார். 

    கருணாநிதி - உதயநிதி

    ‘அரசியலில் வரலாற்றுச் சாதனை படைத்த கலைஞர் மு.கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். இந்தப் படத்தில் கலைஞராக அவரது பேரன் உதயநிதி ஸ்டாலினை நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளேன். இது குறித்து அவரிடம் நேர ஒதுக்கீடு பெற்று கட்டாயம் உதயநிதி ஸ்டாலின் மூலம் கலைஞரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் எடுக்கப்படும்’ என்று இயக்குனர் ராம்சிவா கூறியுள்ளார்.
    இங்கு கொஞ்சம் சுட்டு, அங்கு கொஞ்சம் சுட்டுப் படம் எடுத்தால் என்றைக்கும் தேறவே முடியாது என்று பாக்யராஜ் விழாவில் பேசியுள்ளார்.
    சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்‌ஷன், அர்ஜுன், அபய் தியோல், இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ஹீரோ’. இந்த படம் கதை சர்ச்சையில் சிக்கியது.

    இயக்குநர் அட்லியிடம் உதவியாளராக இருப்பவர் போஸ்கோ பிரபு. இவர் என் கதையைத் திருடி இயக்குநர் மித்ரன் ’ஹீரோ’ படத்தை எடுத்துவிட்டார் என்று தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

    இது தொடர்பான விசாரணைக்கு இயக்குநர் மித்ரன் ஒத்துழைப்பு தராததால், நீதிமன்றத்தை நாடவும் என்று எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் மூன்று பக்கக் கடிதம் ஒன்றை போஸ்கோ பிரபுவுக்கு எழுதினார். அதில் இரண்டு கதையும் ஒன்றே எனவும் குறிப்பிட்டார்.

    இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையில் இயக்குநர் மித்ரன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, வெறும் கதைச் சுருக்கத்தை மட்டுமே வைத்து இரண்டு கதையும் ஒன்று என எப்படிச் சொல்லலாம், எழுத்தாளர் சங்கம் எனக்குக் கடிதம் எழுதவே இல்லை உள்ளிட்ட தன் தரப்பு நியாயங்களைத் தெரிவித்தார்.

    இந்நிலையில், திரைக்கதை எழுத்தாளர் அஜயன் பாலா எழுதிய ‘தமிழ் சினிமா வரலாறு’ புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிவகுமார், ராஜேஷ், இயக்குநர் பாக்யராஜ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் பாக்யராஜ் தனது பேச்சில், ‘ஹீரோ’ இயக்குநர் மித்ரனுக்கு பதிலளிக்கும் விதமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாக்யராஜ்

    ராஜேஷ் பேசும் போது, நானெல்லாம் எடுத்தால் சொல்லிவிடுவேன் என்று சொன்னார். அதாவது 4 நாள் நீங்கள் ஊரில் இல்லை, ஆகையால் எடுத்தேன் என்று கூறிவிட்டால் திருட்டு ஆகாது என்று தெரிவித்தார். இப்போது எல்லாம் திருட்டு என்று சொன்னாலும் ஒப்புக் கொள்வதில்லை.

    திருட்டு என்று கூடச் சொல்லாமல் இதுவும், அதுவும் ஒத்துப் போகுதுப்பா என்றுதான் சொன்னேன். கொச்சைப்படுத்தக் கூடாது, கவுரவக் குறைச்சலாக நடத்தக் கூடாது என்பதால் அப்படிச் சொனேன். தெரிந்தோ, தெரியாமலோ உன்னை மாதிரியே ஒரு சிந்தனையில் எழுதியிருப்பதைச் சுட்டிக் காட்டினேன்.

    முதல் காட்சி, இடையில் உள்ள காட்சி, இறுதிக் காட்சி என அனைத்துமே ஒத்துப் போகிறது. அவன் உனக்கு முன்னால் பதிவு பண்ணிவிட்டான் என்றேன். அதற்கு நான் எப்படி ஒப்புக்கொள்ள முடியும் என்றார். இவர்களை எல்லாம் என்றைக்காவது ஒப்புக் கொள்ள வைக்க முடியும் என நினைக்கிறீர்கள். அது முடியவே முடியாது. ரொம்பவே கடினம்.

    முன்பு சினிமாவுக்குப் போவியா என்று எல்லாரும் அடிப்பார்கள். இன்று சரியான சினிமா எடுப்பியா என்று அடிக்கக் கூடிய சூழல். அடுத்தவர்களுடைய சட்டையை என்னதான் மாற்றிப் போட்டாலும், பொருத்தமாக இருக்கும். ஆனால், அது ஒரிஜினல் அல்ல. பழசு தான்.

    ஆகையால், வரும் தலைமுறையினர் அதைப் பண்ணாதீர்கள். படத்தின் கதையைத் தழுவி என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். இங்கு கொஞ்சம் சுட்டு, அங்கு கொஞ்சம் சுட்டுப் பண்ணினால் என்றைக்கும் தேறவே முடியாது. ரொம்ப நாள் நீடிக்கவும் முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    திரைப்பட வினியோகஸ்தர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள டி.ராஜேந்தர், சினிமா டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள டி.ராஜேந்தர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    “1979-ம் ஆண்டு ஒரு தலை ராகம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி 40 ஆண்டு கால அனுபவத்தை பெற்றுள்ளேன். இந்த அனுபவம் முழுமையாக சினிமாவிற்கு தேவை என்று பலர் வற்புறுத்தியதால் தேர்தலில் நின்று வெற்றி பெற்றேன். 

    டி.ராஜேந்தர்

    மத்திய அரசு விதிக்கும் ஜி.எஸ்.டி வரியை தவிர மற்ற எந்த வரியையும் மாநில அரசுகள் விதிப்பதில்லை. தமிழகத்தில் மட்டும் 8 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கப்படுகிறது. இதற்கு பல தரப்பட்ட சினிமா சங்கத்தினரிடம் கலந்து ஆலோசித்து ஒரு சிறப்பான முடிவை எடுத்து அரசிடம் கோரிக்கையை முன் வைப்போம்.

    டிக்கெட் கட்டணம் முடிந்தவரை குறைக்கப்பட்டு சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்கள் திரையரங்குக்கு வந்து படத்தை பார்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ள கோரிக்கை வைக்கப்படும். தமிழ் சினிமா தற்போது சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு கிடைக்க நாங்கள் முயற்சி செய்வோம்.”

    இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ திரைப்படம் கொரியன் படத்தின் கதை என்று தகவல் வெளியாகியுள்ளது.
    பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். மாளவிகா மோகனன் நாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு டெல்லியிலும் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியிலும் ஏற்கனவே நடந்துள்ளது.

    தற்போது கர்நாடகாவில் உள்ள சிறைச்சாலையில் முக்கிய காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். இந்த படத்துக்கு ‘மாஸ்டர்’ என்று பெயர் வைத்துள்ளதாக அறிவித்து விஜய்யின் முதல் தோற்றத்தையும் வெளியிட்டுள்ளனர். இந்த தோற்றம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. 

    இந்த நிலையில் மாஸ்டர் படம் ‘சைலன்ஸ்டு’ என்ற கொரிய படத்தின் சாயலில் தயாராவதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. மாஸ்டர் மற்றும் சைலன்ஸ்டு போஸ்டர்களை இணைத்தும் வைரலாக்கப்படுகிறது. சைலன்ஸ்டு படத்தின் கதையில், மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் நாயகன் வேலையில் சேருகிறார். அவரை பார்த்ததும் மாணவ-மாணவிகள் பயந்து ஓடுகிறார்கள்.

    மாஸ்டர்

    நாயகன் குழப்பமாகி விசாரணையில் ஈடுபட அவர்கள் பாலியல் துன்புறுத்தலில் சிக்கி இருப்பது தெரிய வருகிறது. குற்றவாளிகளுக்கு எதிராக நாயகன் களம் இறங்கி அவர்களை தண்டிப்பதுபோல் காட்சிகள் உள்ளன. இந்த படம் கொரியாவில் வெற்றிகரமாக ஓடி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனால்தான் விஜய் படப்பிடிப்பு மாற்றுத்திறனாளிகள் பள்ளியிலும் சிறையிலும் நடத்தப்படுகிறது என்றும் தகவல் பரவி வருகிறது.” ஆனால் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.
    இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பது குறித்து ஐதராபாத்தில் நடந்த தர்பார் பட விழாவில் ரஜினிகாந்த் சுவாரஸ்யமாக பேசினார்.
    ஐதராபாத்:

    ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் வருகிற 9-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் திரைக்கு வருகிறது. தெலுங்கு தர்பாரை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று இரவு ஐதராபாத்தில் நடந்தது. இதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு தெலுங்கில் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ‘‘தர்பார் படம் பெரிய வெற்றி பெறும் என்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. அதனால்தான இந்த விழா இங்கு விமரிசையாக நடக்கிறது. இப்போது எனக்கு 70 வயது ஆகிறது. இந்த வயதிலும் எப்படி சுறுசுறுப்பாக உங்களால் இருக்க முடிகிறது? என்று எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள்.

    அதற்கு நான் சொல்லும் பதில் ஒன்றுதான். கொஞ்சமாக ஆசைப்படுங்கள், கொஞ்சமாக சாப்பிடுங்கள், கொஞ்சமாக உடற்பயிற்சி செய்யுங்கள், கொஞ்சமாக தூங்குங்கள், கொஞ்சமாக பேசுங்கள். இதுதான் எனது சுறுசுறுப்புக்கு காரணம்.

    இந்த விழாவுக்கு வந்து இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் எனது முதல் படம் வெளியானபோது பிறந்துகூட இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அப்போது இருந்து தொடர்ந்து நடித்து வருகிறேன். 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டேன்.

    தமிழ்நாட்டில் ரசிகர்கள் என்மீது எந்த அளவுக்கு அன்பு காட்டுகிறார்களோ, அதே அளவுக்கு தெலுங்கு ரசிகர்களும் அன்பு காட்டுவதை எனது பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். தெலுங்கு மக்கள் சினிமா பிரியர்கள். என்னை ஆதரிக்கிறீர்கள்.

    தர்பார் பட விழாவில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், சுனில் ஷெட்டி

    தமிழில் நான் நடித்து வெற்றி பெற்ற படங்கள் தெலுங்கிலும் ரிலீசாகி வெற்றி பெற்றுள்ளன. அந்த படங்கள் நன்றாக இருக்கிறது என்று நீங்கள் பார்த்தாலும், ரஜினி இருக்கிறார் என்பதற்காகவும் பார்க்கிறீர்கள். இதற்காக உங்களுக்கு நன்றி.

    படப்பிடிப்பு நடக்கும்போதே ஒரு மேஜிக் நடக்க வேண்டும். அது தர்பார் படத்தில் நடந்து விட்டது. 15 வருடமாக ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். இப்போதுதான் அது நடந்து இருக்கிறது. இந்த படம் அதிரடி திரில்லர் படமாக தயாராகி உள்ளது.

    இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

    நிகழ்ச்சியில் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் சுனில் ஷெட்டி, நடிகை நிவேதா தாமஸ், தயாரிப்பாளர் சுபா‌‌ஷ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்துக்காக சென்னையில் பிரம்மாண்டமாக செட் ஒன்று உருவாக உள்ளது.
    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் இறுதி வரை நடைபெறும் என தெரிகிறது. இதில் பல்வேறு நடிகர்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 

    முக்கியமான நடிகர்கள் பட்டியலை படக்குழு வெளியிட்டுள்ளது. நேற்று மாலை 5 மணி அளவில் படத்தின் லோகோவை வெளியிட்டுள்ளனர். தாய்லாந்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோரின் காட்சிகளை படமாக்கி வந்தார் மணிரத்னம். 

    ஜெயம் ரவி-விக்ரம்-கார்த்தி

    தற்போது 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பிலிருந்து கிளம்பி 'பூமி' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் ஜெயம் ரவி. தாய்லாந்து படப்பிடிப்புக்குப் பிறகு சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து சில காட்சிகளைப் படமாக்க இப்போதைக்கு முடிவு செய்துள்ளார்கள். 

    ஜூன் மாதம் வரை 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோருடன் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின், விக்ரம் பிரபு, ரகுமான், ஜெயராம், கிஷோர், ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், சண்டைக் காட்சிகள் இயக்குநராக ஷாம் கவுஷல், எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
    டாக்டர் மாறன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி நடித்திருக்கும் பச்சை விளக்கு திரைப்படத்தின் விமர்சனம்.
    சாலை விதிகளை பற்றி பி.எச்.டி படித்திருக்கும் மாறன், சாலையில் சமூக சேவை செய்து வருகிறார். அப்போது ஹெல்மேட் அணியாமல் வரும் நாயகி தீஷாவிற்கு வித்தியாசமான முறையில் தண்டனை கொடுக்கிறார். இதிலிருந்து மாறன் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார் தீஷா. 

    ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வரும் நிலையில், தீஷாவின் சகோதரி ஆபாச படம் எடுத்து மிரட்டும் கும்பலிடம் சிக்குகிறார். இதையறிந்த மாறன், தீஷாவின் சகோதரியை காப்பாற்ற முயற்சி செய்கிறார். இறுதியில் அந்த கும்பலிடம் இருந்து தீஷாவின் சகோதரியை காப்பாற்றினாரா? இல்லையா? அந்த கும்பலை மாறன் என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    பச்சை விளக்கு விமர்சனம்

    நாயகனாக நடித்திருக்கும் டாக்டர் மாறனே இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார். முதல் பாதியில், சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் சொல்லியிருக்கிறார். பலருக்கும் தெரியாத விஷயத்தை சொன்னதற்கு பெரிய கைத்தட்டல். இரண்டாம் பாதியில் செல்போனால் ஏற்படும் தீமைகளையும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி சொல்லியிருக்கிறார். தவறாக செல்போனை உபயோகப்படுத்தினால் மற்றவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.

    படத்திற்கு பெரிய பலம் மாறனின் இயக்கம், வசனம், காட்சியமைப்பு என்றால், பலவீனம் இவரது நடிப்பு. இயக்கத்தில் காண்பித்த கவனத்தை நடிப்பில் கொஞ்சம் செலுத்தி இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். 

    பச்சை விளக்கு விமர்சனம்

    நாயகியாக நடித்திருக்கும் தீஷா, கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். டிராபிக் போலீசாக வரும் இமான் அண்ணாச்சி சிந்திக்க வைத்திருக்கிறார். தாரா, மனோபாலா, நெல்லை சிவா, நந்தகுமார், நாஞ்சில் விஜயன் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள். 

    வேதம் புதிது தேவேந்திரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ஒளிப்பதிவில் கவனிக்க வைத்திருக்கிறார் பாலாஜி.

    மொத்தத்தில் ‘பச்சை விளக்கு’ பார்க்கலாம்.
    சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தலைவர் 168’ படத்தில் அஜித்தின் விஸ்வாசம் ஸ்டைலில் ஒரு பாடல் உருவாக்கி இருக்கிறார்கள்.
    ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'தர்பார்' திரைப்படம் ஜனவரி 9-ந் தேதி வெளியாக உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

    தற்போது சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். முதல்கட்ட படப்பிடிப்பில் பாடல் ஒன்றை படமாக்கியிருக்கிறது படக்குழு. 

    ரஜினி - அஜித்

    இந்த பாடல் சிவா - அஜித் இணைப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'விஸ்வாசம்' படத்தின் 'தூக்குதுரை' பாடல் பாணியில், நாட்டுப்புற பாடல் பின்னணியில் உருவாக்கியிருக்கிறார் இமான். இந்த பாடல் படப்பிடிப்பில் ரஜினி மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தவுடன், புனேவில் சில முக்கியக் காட்சிகளை 20 நாட்களுக்குப் படமாக்க செல்ல இருக்கிறார்கள். 
    பிரபல நடிகர் விஷ்ணு விஷாலும், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா காட்டாவும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். ஜீவா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    விஷ்ணுவிஷால் 2018-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினி நட்ராஜ் என்பவரை கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து செய்து விட்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இதனை தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவும் விஷ்ணு விஷாலும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது.

    விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா

    புத்தாண்டு தினத்தன்று இவர்கள் கொண்டாடி மகிழ்ந்த சில புகைப்படங்களை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்ப தாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
    ×