என் மலர்
சினிமா செய்திகள்
பாலிவுட்டில் பிரபல நடிகையான கஜோல், நான் நடித்த அந்த படம் மட்டும் என் மகளுக்கு பிடிக்காது என்று சமீபத்தில் நடந்த ஷோ ஒன்றில் கூறியிருக்கிறார்.
மின்சார கனவு உள்ளிட்ட படங்களில் நடித்த கஜோல் மீண்டும் நடிக்க வந்துள்ளார். கரீனா கபூர் `வாட் விமன் வான்ட்' ரேடியோ ஷோவில், `நீங்கள் நடித்த படங்களில் உங்கள் குழந்தைகளுக்கு பிடிக்காத படம் எது?' என்ற கேள்விக்கு, ``விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட `வீ ஆர் ஃபேமிலி' படம், என் மகள் நைஸாவுக்குப் பிடிக்காத படம்.
அந்தப் படத்தில் நான் மூன்று குழந்தைகளுக்கு அம்மா. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, படத்தின் இறுதியில் இறந்துவிடுவேன். மிகவும் உருக்கமான படம் அது. இந்தப் படம் ரிலீஸானபோது, என் மகன் சின்ன குழந்தை. நைஸாவுக்கு விவரம் தெரிகிற வயது. படத்தின் இறுதியில் நான் மரணமடைகிற காட்சியின்போது அவள் அலறியபடி வெளியே ஓடிவிட்டாள். தவிர, `என்னை ஏன் இந்தப் படத்துக்கு அழைத்து வந்தீர்கள்' என கோபப்படவும் செய்தாள்'' என்று நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் கஜோல்.

`சரி, அப்பா அஜய்தேவ்கன் நடித்ததில் உங்கள் பிள்ளைகளுக்குப் பிடிக்காத படம் எது?' என்ற கேள்விக்கு, ``அஜய் நடித்த படங்களை இருவருமே விரும்பிப் பார்ப்பார்கள். எனக்குத் தெரிந்து அஜய்யின் எந்தப் படத்தையும் அவர்கள் வெறுக்கவில்லை'' என்று கூறினார்.
விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் வானம் கொட்டட்டும் டீசர் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘வானம் கொட்டட்டும்’. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தனா இயக்கி வரும் இப்படத்திற்கு சித் ஸ்ரீராம் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் டீசரை வரும் ஜனவரி 8ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘தமிழரசன்’ படத்திற்காக வீட்டிலேயே பின்னணி இசையை உருவாக்கி வருகிறார் இளையராஜா.
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தமிழரசன்’. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்து வரும் இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். எஸ்.என்.எஸ் மூவிஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. தற்போது பின்னணி இசை கோர்ப்பு நடந்து வருகிறது. இதுவரை இளையராஜா ஒரு இசை அமைப்பாளர் ஹீரோவாக நடித்த படத்திற்கு இசை அமைத்ததில்லை. விஜய் ஆண்டனிக்குத் தான் அந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.

தமிழரசன் படத்திற்காக இளையராஜா முதன்முதலாக பின்னணி இசையை தன் வீட்டில் வைத்து செய்து வருகிறார். அவர் இத்தனை ஆண்டுகால இசைப் பயணத்தில் பின்னணி இசையை தன் வீட்டில் நடத்தியதே இல்லை. ஒட்டுமொத்த வாத்தியக் கலைஞர்களையும் வீட்டுக்கு வரவழைத்து பின்னணி இசையை உருவாக்கி வருகிறார்.
தமிழ், மலையாளம் படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் ஜெயராம், எடையை குறைத்து வித்தியாசமான தோற்றத்திற்கு மாறியிருக்கிறார்.
மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தகி இருக்கும் ஜெயராம், சமஸ்கிருத மொழியில் உருவாகும் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். ‘நமோ’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை விஜீஷ் மணி என்பவர் இயக்குகிறார்.
‘நமோ’ படத்தில் ஜெயராம் குசேலனாக நடிக்கிறார். இதற்காக ஜெயராம் கிட்டத்தட்ட 20 கிலோ எடையை குறைத்து, மொட்டை அடித்து வித்தியாசமான கெட்-அப்பில் நடித்து வருகிறார். கிருஷ்ணனுக்கும், குசேலனுக்கும் இடையில் உள்ள நட்பு பற்றி பேசும் படமாம் ‘நமோ’.

இந்த படத்தின் படத்தொகுப்பை பல முறை தேசிய விருது பெற்ற பி.லெனின் கவனிக்கிறார். எஸ்.லோகநாத் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் ஜெயராமுடன் மமா நயான், சர்கார் தேசாய், மைதிலி ஜாவேகர், ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ’நமோ’ படத்தை இயக்கி வரும் விஜீஷ் மணி, இதற்கு முன் ஸ்ரீநாராயண குரு பற்றி ‘விஷ்வகுரு’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கியுள்ளார்.
அத்துடன் ‘இருள’ மொழியில் ‘நேதாஜி’ என்ற படத்தையும் இயக்கி உள்ளார். இதில் ‘விஷ்வகுரு’ படம் மூலம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த விஜீஷ் மணியின் ‘நேதாஜி’ படம் கின்னஸ் சாதனையும் படைத்தது. இதனால் நமோ படத்தின் மீதும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே, ஏர்ப்போர்ட்டில் ரசிகருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.
பாலிவுட்டில் கலக்கி வரும் தீபிகா படுகோனுக்கு நேற்று 34வது பிறந்த நாள். ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், ராம் லீலா, பத்மாவத் என பல படங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி பாலிவுட்டின் நம்பர் ஒன் நாயகியாக வலம் வருகிறார் தீபிகா.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மியின் கதையை அடிப்படையாகக் கொண்டு சபாக் எனும் படத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார். வரும் ஜனவரி 10ம் தேதி சபாக் திரைப்படம் ரிலீசாகிறது. அந்த படத்திற்கான புரொமோஷன் வேலைகளில் படுபிசியாக பல இடங்களுக்கு சுற்றி திரிந்து வருகிறார் தீபிகா படுகோனே.
வின் டீஸல் நடிப்பில் வெளியான டிரிப்பிள் எக்ஸ் 3 படத்தில் நாயகியாக நடித்த தீபிகா படுகோனே, டிரிப்பிள் எக்ஸ் 4ம் பாகத்திலும் அவருக்கு ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் 34வது பிறந்த நாளை மும்பையில் கொண்டாட அவரும் அவரது கணவர் மற்றும் நடிகரான ரன்வீர் சிங் இருவரும் மும்பை விமான நிலையத்திற்கு அதிகாலை வந்து இறங்கினர்.
#DeepikaPadukone celebrates her birthday with the media before she took off to Lucknow with #RanveerSingh. #HappyBirthdayDeepikaPadukonepic.twitter.com/j3hlXaXt2e
— Filmfare (@filmfare) January 5, 2020
தீபிகா படுகோனே வருவதை முன்னதாக அறிந்திருந்த பத்திரிகையாளர் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் அவர்களை பேட்டி எடுக்க ஏர்ப்போர்ட்டில் காத்திருந்தனர். அப்போது, அவருக்காக காத்திருந்த ஒரு புகைப்படக் கலைஞர் சர்ப்ரைஸாக கேக் ஒன்றை தீபிகா படுகோனே வந்து இறங்கியதும் நீட்டினார்.
அந்த புகைப்படக் கலைஞரின் அன்பை பார்த்து ஆச்சர்யமடைந்த தீபிகா படுகோனே, ஏர்போர்ட்டிலே கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். தீபிகாவின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் ரசிகர் ஒருவர் கேக்கை வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய தீபிகாவுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தயாரித்த 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதேபோல் கார்த்தி நடித்து வெற்றி பெற்ற `கடைக்குட்டி சிங்கம்' படத்தையும் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது.

அந்த படம் வெற்றிகரமாக ஓடியதை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் புதிய படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் பரவியுள்ளன. கார்த்தியின் `கொம்பன்' படத்தை இயக்கிய முத்தையா, இந்த படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரத்னசிவா இயக்கத்தில் ஜீவா, ரியா சுமன் நடிப்பில் உருவாகி வரும் ‘சீறு’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதியின் றெக்க படத்தை இயக்கிய ரத்ன சிவா, அடுத்ததாக இயக்கி இருக்கும் படம் ‘சீறு’. ஜீவா நாயகனாக நடித்துள்ள இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்திருக்கிறார். ஜீவாவிற்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் செவ்வந்தியே பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இது உருவாகியுள்ளது. இப்படம் கடந்தாண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீசாகும் என கூறப்பட்டது. ஆனால் படத்தின் பின்னணி வேலைகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், இப்படம் பிப்ரவரி 7-ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதேபோல் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படம் வருகிற 24-ந் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ஜீவன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘பாம்பாட்டம்’ திரைப்படத்தின் முன்னோட்டம்.
6.2, ஓரம்போ, வாத்தியார் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த வி.பழனிவேல் தனது வைத்தியநாதன் பிலிம் கார்டன் என்ற பட நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மளையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரமாண்டமான முறையில் ‘பாம்பாட்டம்’ என்ற படத்தை தயாரிக்கிறார்.
காக்க காக்க, திருட்டுப்பயலே, நான் அவனில்லை போன்ற படங்களில் நடித்த ஜீவன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ஹாரர் கலந்த திரில்லர் கதையை மையமாக வைத்து மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் உருவாகும் இந்த படத்தை வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். அம்ரீஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு இனியன் ஜே.ஹரீஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.
பிரபல நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி, அடுத்ததாக நடிக்கும் படம் 7 மொழிகளில் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் படங்களில் போராளியாகவும், நல்ல ஆசிரியராகவும், விவசாயியாகவும் நடித்து தனக்கென ஒரு நல்ல இமேஜை உருவாக்கி வைத்திருக்கும் சமுத்திரகனி, தெலுங்கில் அடுத்தடுத்து வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். பாகுபலி படத்திற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் சமுத்திரகனி வில்லனாக நடித்து வருகிறார். இதேபோல், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அல வைகுந்தபுராமுலு’ படத்திலும் அவர் வில்லனாக நடித்திருக்கிறார். இப்படம் வருகிற 12-ந் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில், சமுத்திரகனி மேலும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். உபேந்ரா நடிப்பில் உருவாகி வரும் கப்சா படத்தில் சமுத்திரகனி வில்லனாக நடிக்க உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, மராத்தி உள்ளிட்ட 7 மொழிகளில் உருவாக்கப்பட உள்ளது. இப்படம் யஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கே.ஜி.எஃப் படத்தை போன்று பிரம்மாண்டமாக உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தர்பார் சிறப்பு காட்சிக்கு இதுவரை யாரும் விண்ணப்பிக்கவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகையின் போது வெளியாகும் பெரிய ஹீரோக்களின் படங்களை ரசிகர்கள் முதல் காட்சியிலேயே படத்தை பார்க்க விரும்புவார்கள் இதற்காக அதிகாலை சிறப்பு காட்சி திரையிடப்படும். ரஜினி, விஜய் இருவரது படங்களின் முதல் காட்சிக்கும் கடுமையான போட்டி நிலவும்.
ரஜினிகாந்த் காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் தர்பார் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. தர்பார் படத்தில் நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் தர்பார் படம் ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வருகிறது. 9, 10, 11, 12, 13 ஆகிய 5 நாட்களும் சிறப்பு காட்சியில் தர்பார் படத்தை திரையிட திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தர்பார் படத்தின் அனுமதி பெறாத கூடுதல் காட்சிகளுக்கு, தடைவிதிக்க வலியுறுத்தி தேவராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தமிழக அரசு விதிமுறைப்படி விடுமுறை காலங்களில் அனுமதி பெற்று 5வது காட்சியை காலை 9 மணிக்கு மட்டுமே திரையரங்குகளில் திரையிட முடியும்.

ஆனால் சென்னையில் உள்ள திரையரங்குகள் 6-வது காட்சி மற்றும் 7-வது காட்சி என்று நள்ளிரவு 1.00 மணி முதல் விடியற்காலை 4 மணி, 5 மணி, 6 மணி, 7 மணி என்று திரையிட உள்ளார்கள். இதனை தடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இதனால் தர்பார் சிறப்பு காட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது.
இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பேட்டி அளித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விடம் தர்பார் படம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:- ‘தர்பார்‘ திரைப்படம் வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது. அந்த திரைப்படத்துக்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி கேட்டு, தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இதுவரையிலும் அரசிடம் விண்ணப்பிக்கவில்லை. வழக்கமாக ஓரிரு நாட்களுக்கு முன்னதாக சிறப்பு காட்சி திரையிட அனுமதி கேட்டு விண்ணப்பிப்பார்கள்.
நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட அனைவரின் திரைப்படங்களுக்கும் சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதில் அரசு எந்த பாகுபாடும் பார்த்தது கிடையாது. ‘தர்பார்’ திரைப்படத்துக்கு சிறப்பு காட்சி திரையிட அதன் தயாரிப்பாளர் அரசுக்கு விண்ணப்பிக்கும்போது, முதல்அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று ஆலோசித்து பரிசீலிக்கப்படும்.
‘தர்பார்‘ திரைப்படத்தில் பின்னணி இசை சேர்ப்புக்கு தமிழக கலைஞர்களை புறக்கணித்து, வெளிநாட்டு கலைஞர்களை சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு திரைப்படத்தில் யார் பணி புரியலாம்? என்பது அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனரின் விருப்பம் ஆகும். இதில் அரசு தலையிடுவது திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் உரிமைகளை பறிப்பதாக அமைந்து விடும்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்திற்கு ’கர்ணன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள பட்டாஸ் திரைப்படம் வருகிற ஜனவரி 16-ந் தேதி திரைக்கு வருகிறது. இதை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள தனுஷின் 40-வது படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தனுஷின் 41-வது படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இப்படத்திற்கு கர்ணன் என பெயரிடப்பட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கலைப்புலி எஸ். தாணு இப்படத்தை தயாரிக்கிறார்.
தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், சூர்யா ஆகியோரது படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முந்தைய வருடத்தை விட இந்த வருடம் பெரிய நடிகர்கள் படங்கள் அதிகம் திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அந்த பட்டியலில் ரஜினிகாந்தின் தர்பார், கமல்ஹாசனின் இந்தியன்-2, விஜய்யின் மாஸ்டர், அஜித்குமாரின் வலிமை, சூர்யாவின் சூரரை போற்று கார்த்தியின் சுல்தான் படங்கள் உள்ளன.
இவற்றில் மாஸ்டர், சூரரை போற்று ஆகிய 2 படங்களையும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் 25-ந்தேதி ஒன்றாக வெளியான விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய 2 படங்களுமே நல்ல வசூல் பார்த்தன.
இதுபோல் தமிழ் புத்தாண்டில் விஜய்-சூர்யா படங்கள் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மாஸ்டர் படப்பிடிப்பு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது சென்னையில் ஜெயில் அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர். ஜெயில் அரங்கில் விஜய்-விஜய் சேதுபதி மோதும் சண்டை காட்சிகளை படமாக்குகின்றனர். அடுத்த மாதம் முதல் வாரத்துக்குள் முழு படப்பிடிப்பையும் முடித்து விட திட்டமிட்டுள்ளனர்.

இதில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சூரரை போற்று படம் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகி உள்ளது. இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டனர். ஆனால் தொழில்நுட்ப பணிகள் முடியாததால் தமிழ் புத்தாண்டுக்கு தள்ளி வைத்துள்ளனர்.






