என் மலர்tooltip icon

    சினிமா

    கஜோல்
    X
    கஜோல்

    அந்த படம்தான் என் மகளுக்கு பிடிக்காது - கஜோல்

    பாலிவுட்டில் பிரபல நடிகையான கஜோல், நான் நடித்த அந்த படம் மட்டும் என் மகளுக்கு பிடிக்காது என்று சமீபத்தில் நடந்த ஷோ ஒன்றில் கூறியிருக்கிறார்.
    மின்சார கனவு உள்ளிட்ட படங்களில் நடித்த கஜோல் மீண்டும் நடிக்க வந்துள்ளார். கரீனா கபூர் `வாட் விமன் வான்ட்' ரேடியோ ஷோவில், `நீங்கள் நடித்த படங்களில் உங்கள் குழந்தைகளுக்கு பிடிக்காத படம் எது?' என்ற கேள்விக்கு, ``விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட `வீ ஆர் ஃபேமிலி' படம், என் மகள் நைஸாவுக்குப் பிடிக்காத படம். 

    அந்தப் படத்தில் நான் மூன்று குழந்தைகளுக்கு அம்மா. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, படத்தின் இறுதியில் இறந்துவிடுவேன். மிகவும் உருக்கமான படம் அது. இந்தப் படம் ரிலீஸானபோது, என் மகன் சின்ன குழந்தை. நைஸாவுக்கு விவரம் தெரிகிற வயது. படத்தின் இறுதியில் நான் மரணமடைகிற காட்சியின்போது அவள் அலறியபடி வெளியே ஓடிவிட்டாள். தவிர, `என்னை ஏன் இந்தப் படத்துக்கு அழைத்து வந்தீர்கள்' என கோபப்படவும் செய்தாள்'' என்று நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் கஜோல்.

    கஜோல்

    `சரி, அப்பா அஜய்தேவ்கன் நடித்ததில் உங்கள் பிள்ளைகளுக்குப் பிடிக்காத படம் எது?' என்ற கேள்விக்கு, ``அஜய் நடித்த படங்களை இருவருமே விரும்பிப் பார்ப்பார்கள். எனக்குத் தெரிந்து அஜய்யின் எந்தப் படத்தையும் அவர்கள் வெறுக்கவில்லை'' என்று கூறினார்.
    Next Story
    ×