என் மலர்
சினிமா செய்திகள்
எம்.டி.ஆனந்த் இயக்கத்தில் ரிஷி ரித்விக், ஆஷா பாத்தலோம் நடிப்பில் உருவாகி வரும் ’மரிஜுவானா’ படத்தின் முன்னோட்டம்.
தமிழில் 2017ல் வெளிவந்த அட்டு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ரிஷி ரித்விக். இவர் எம்.டி.ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள படம் மரிஜுவானா. இது ஒரு சைக்கோ திரில்லர் கதை கொண்ட படம். 'தேர்டு ஐ கிரியேஷன்' எம்.டி.விஜயிடம் இருந்து தமிழ் தாய் கலைக் கூடத்தின் எஸ்.ராஜலிங்கம் மற்றும் மைதீன் ராஜா இருவரும் வாங்கி வெளியிடுகிறார்கள்.

படம் குறித்து இயக்குனர் கூறியதாவது:- ”ஒரு மனிதன் உச்சக்கட்ட போதைக்கு ஆளானால் என்ன நடக்கும் என்பது தான் இந்த படம். கதை உண்மையான சம்பவமே. மரிஜுவானா என்றால் கஞ்சா என்று அர்த்தம் தரும் .பெண்ணுக்கான பாதுகாப்பை சமூகம் கொடுக்க வேண்டுமா? இல்லை பெற்றோரின் பொறுப்பா? தவறுக்கு யார் காரணம்? என்னை பொறுத்தவரை பெற்றோர்களே. 40 வயது கடந்த பெண்கள் நிச்சயமாக இந்த படத்தை காண வேண்டும்” என கூறினார்.
பட விழாக்கள் எதிலும் கலந்துகொள்ளாமல் இருக்கும் நயன்தாரா, விருது விழாவில் மட்டும் பங்கேற்பதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நயன்தாரா. இவர் கடந்த ஆண்டு சிரஞ்சீவியுடன் ‘சைரா நரசிம்மா ரெட்டி’, விஜய்யுடன் ‘பிகில்’, அஜித்துடன் ‘விஸ்வாசம்‘, தனி கதாநாயகியாக ‘ஐரா’, சிவகார்த்திகேயனுடன் ‘மிஸ்டர்.லோக்கல்’ ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் எந்த படத்தின் நிகழ்ச்சியிலும் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை.
சீரஞ்சிவி நடித்த ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையாக மாறியது. கோடிகளில் சம்பளம் வாங்குபவர் விளம்பர நிகழ்ச்சிகளில் எப்படி கலந்து கொள்ளாமல் இருக்கலாம் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், எதற்குமே நயன்தாராவோ படக்குழுவினரோ பதில் அளிக்கவில்லை.
ஆனால் நயன்தாரா விருது நிகழ்ச்சிகள் என்று வரும்போது, அதை மறுக்காமல் வாங்குவதற்கு கலந்து கொள்கிறார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கும் படங்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதவர், எப்படி விருது நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொள்ளலாம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

நயன்தாரா பட விழாக்களை புறக்கணிப்பது சமூகவலைதளங்களில் விவாதமாக மாறி இருக்கிறது. பேட்டிகள், சமூக வலைதளம் என அனைத்திலும் இருந்து ஒதுங்கியிருக்கும் நயன்தாரா இந்த கேள்விக்கும் பதில் அளிக்க மாட்டார் என்கிறார்கள். இந்த ஆண்டு அவர் நடிக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தின் விழாவில் கலந்து கொள்வார் என்று திரையுலகினர் கருதுகிறார்கள். ஏனென்றால், மிலந்த் ராவ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அவருடைய காதலர் விக்னேஷ் சிவன் என்பது தான் இதற்கு காரணம்.
மோகன் இயக்கத்தில் ரிச்சர்டு, ஷீலா ராஜ்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘திரெளபதி’ படத்தை தடை செய்யக்கோரி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராம கிருஷ்ணன் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த 2-ந் தேதி ‘திரெளபதி’ என்ற திரைப்படத்தின் முன்னோட்டம் யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த திரைப்படத்தை மோகன் என்பவர் இயக்கியுள்ளார்.
மிகவும் அதிர்ச்சியளிக்கும் விதமாக சாதி மறுப்பு திருமணங்கள் அனைத்துமே நாடக காதலாக நடக்கிறது. சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை ஆணவப்படுகொலை செய்வதை ஒரு வேலையாகவே செய்ய வேண்டும் என்று வசனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 90-க்கும் மேற்பட்ட ஆணவக்கொலைகள் நடைபெற்றுள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கிற்கே ஊறு விளைவிக்கும் மிக பெரும் பிரச்சினையாக ஆணவப்படுகொலை கடந்த சில ஆண்டுகளாக மாறியுள்ள நிலையில், ஆணவப்படுகொலைகளை நியாயப்படுத்தி ஒரு திரைப்படம் வெளியாக உள்ளது. எனவே இந்த திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சாதிய ரீதியிலான பிரிவினைகள் குறித்து கருத்து வெளியிட்டதால், சமூக வலைதளங்களில் தன்னை கேலி செய்வதாக இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பார்த்திபன், கவுதம் மேனன், வெற்றி மாறன், செழியன், ரத்னகுமார், லட்சுமி ராமகிஷ்ணன் ஆகியோர் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் சினிமா பின்னால் உள்ள சாதிய ரீதியிலான பிரிவினைகள் குறித்து லட்சுமி ராமகிருஷ்னன் கருத்து வெளியிட்டார். இது இணையதளத்தில் பரவி சர்ச்சையானது. லட்சுமி ராமகிருஷ்ணனை கண்டித்தும் கேலி செய்தும் பலர் கருத்துக்கள் பதிவிட்டனர்.
இந்த நிலையில் தான் பேசிய கருத்துக்கு விளக்கம் அளித்து லட்சுமி ராமகிருஷ்ணன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது:- “இயக்குனர்களுடனான கலந்துரையாடலுக்கு பிறகு எனது சமூக வலைத்தளத்தள பக்கத்தில் தேவையற்ற கருத்துக்கள் வருகின்றன. கிண்டல் செய்கிறார்கள். உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? இதற்கு யாராவது பணம் அளிக்கிறார்களா? யாருக்கு சாதி வெறி எனக்கா அல்லது இதுமாதிரி கருத்துக்கள் வெளியிடுகிறார்களே அவர்களுக்கா?

சாதிக்கும் மதத்துக்கும் பேதம் தெரியாமல்தான் என்னை வளர்த்து இருக்கிறார்கள். சாதி வெறி ஊட்டி வளர்க்கவில்லை. வெற்றிமாறன் முன்னிலையில்தான் அவருடைய படங்களில் இருக்கும் வன்முறைகள் பற்றி சொன்னேன். வன்முறை காட்சிகளால் சமுதாயம் பாதிக்காதா என்று கேட்டேன். இதில் என்ன தவறு இருக்கிறது. சினிமாவில் பணம் இருப்பவர்கள், இல்லாதவர்கள் என்ற இரண்டு சாதிகள் மட்டுமே இருக்கிறது. என்னை கிண்டல் செய்வதை விட்டு சாதிக்க பாருங்கள்.”
இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நாயகனாக நடித்து வரும் படம் 'பட்டாஸ்'. இப்படத்தை எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி வரும் இப்படத்தில், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள, இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் பர்ஸ்ட் லுக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனிடையே பட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு குறித்த தகவலை படக்குழு நேற்று மாலை திடீரென அறிவித்தது. அதன்படி இப்படத்தின் டிரைலர் இன்று காலை 10.31 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில் இடம்பெறும் ”நமக்கு எது நல்லதுனு நம்ம மண்ணுக்கு தான் தெரியும்”, ”நம்ம மண்ணோட ஈரத்த காயாம காப்பாத்தி அடுத்த தலைமுறைக்கு கொண்டுபோய் சேர்க்குறது நம்ம கடமை இல்லையா” போன்ற வசனங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் பொங்கல் விடுமுறையையொட்டி வருகிற 16-ந் தேதி ரிலீசாக உள்ளது.
Pattas trailer https://t.co/9pMnHu6hk6
— Dhanush (@dhanushkraja) January 7, 2020
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வரும் ஹிப்ஹாப் ஆதியின் புதிய படம் காதலர் தினத்தன்று திரைக்கு வருகிறது.
‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சுந்தர்.சி-யின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி நடித்திருக்கும் படம் ‘நான் சிரித்தால்’. ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ராணா என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்கி மிகவும் பிரபலமான ‘கெக்க பெக்க’ எனும் குறும்படத்தின் தழுவலாக இப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதன் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் இந்தாண்டு காதலர் தினத்தன்று (பிப்ரவரி 14) ரிலீசாக உள்ளது. ஏற்கனவே 2 ஹிட் படங்களை கொடுத்த ஹிப்ஹாப் ஆதி, இப்படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றி அடையும் முனைப்பில் உள்ளார். இப்படத்தில் கே.எஸ்.ரவிகுமார், முனீஸ்காந்த், படவா கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை ஒருவர், தான் நடித்த படம் ஹிட் ஆனதால் ரூ.1 கோடிக்கு சொகுசு கார் வாங்கியுள்ளார்.
தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக பூமி படத்தில் நடிப்பவர் நிதி அகர்வால். இந்த படத்தை ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லட்சுமண் டைரக்டு செய்கிறார். நிதி அகர்வால் இந்தியில் மைக்கேல் என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கில் சவ்யாசாச்சி, மிஸ்டர் மஞ்சு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும் அவர் நடித்த படங்கள் எதுவுமே வெற்றி பெறவில்லை. இதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்யவும் தயங்கினார்கள்.
இதனிடையே பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் நிதி அகவர்வால் நடித்த ஐ ஸ்மார்ட் சங்கர் என்ற தெலுங்கு படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. நிதி அகர்வால் நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்தன. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகே ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது.

இந்த நிலையில் வெற்றியை கொண்டாடும் விதமாக நிதி அகர்வால் சொந்தமாக ‘போர்ச்சே’ என்ற சொகுசு காரை வாங்கி உள்ளார். இதன் விலை ரூ.1 கோடி ஆகும். அந்த காரை ஓட்டி செல்லும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். ஐ ஸ்மார்ட் சங்கர் படத்தின் தயாரிப்பாளரான நடிகை சார்மி ஆடி கார் வாங்கி இருக்கிறார்.
படத்தின் கதையை சொன்னதும் அஜித் சிக்ஸ் பேக் வைக்கிறேன்னு சொன்னதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், அஜித் நடித்த தீனா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இப்படம் அஜித்தை ஆக்ஷன் ஹீரோவாக தரம் உயர்த்தியது என்றே சொல்லலாம். அதேபோல் அஜித்தை அவரது ரசிகர்கள் செல்லமாக தல என அழைப்பர். அதுவும் இந்த படத்தில் இருந்து வந்ததுதான். இப்படி அறிமுக படத்திலேயே அசர வைத்த முருகதாஸ், மீண்டும் அஜித்தை வைத்து மிரட்டல் என்ற படத்தை இயக்க இருந்தார். ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக அஜித் அப்படத்தில் இருந்து விலகினார். இந்த கதையை தான் சூர்யாவை வைத்து கஜினி என்ற பெயரில் படமாக எடுத்தார் முருகதாஸ்.

இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்பார் படம் வருகிற 9-ந் தேதி திரைக்கு வருகிறது. அதற்கான புரமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள முருகதாஸ் அஜித் குறித்த சுவாரஸ்யமான தகவலை தெரிவித்துள்ளார். மிரட்டல் படத்தின் கதையை அஜித்திடம் சொன்னதும், அவர் இந்த கதாபாத்திரத்திற்கு சிக்ஸ் பேக் வைத்தால் தான் சரியாக இருக்கும் என யோசனை கூறியுள்ளார். அதுவரை எனக்கு அந்த ஐடியாவே இல்லை, அவர் சொன்ன பிறகு தான் அது சரியாக இருக்கும் என எண்ணினேன். இருப்பினும் இந்த கூட்டணி அமையாத போதிலும், அதே கதையில் நடித்த சூர்யா மற்றும் அமீர்கான் இருவரும் சிக்ஸ் பேக் வைத்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க பிரபல நடிகரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிம்பு நடிப்பில் தற்போது ‘மஹா’ திரைப்படம் உருவாகியுள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் ஹன்சிகா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவித்து பட வேலைகளை தொடங்கினர். ஆனால் அந்த படம் திடீரென்று கைவிடப்பட்டது. பின்னர் சமரசமாகி மாநாடு படத்தை மீண்டும் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, மாநாடு படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பை பொங்கல் தினத்தில் வெளியிட இருப்பதாக அறிவித்தார். தற்போது இப்படத்தில் சிம்புக்கு வில்லனாக நடிக்க அரவிந்த் சாமியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில் ஒன்று இரண்டு படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, ரசிகர்களின் எதிர்ப்பால் தனது மனதை மாற்றி இருக்கிறாராம்.
ஆபாச படத்தில் நடித்து பெயர் பெற்ற நடிகை, பெரிய முதலாளி வீட்டிற்கு சென்று மிகவும் பிரபலமானாராம். வெளியே வந்த ஒரு வருட காலம் ஆகியும் பெரியதாக பட வாய்ப்புகள் அமையவில்லையாம். இதற்காக நடிகை அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வந்தாராம்.
நடிகையின் கவர்ச்சி பதிவுக்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்களாம். மேலும் ஆபாச நடிகை ஒருவரை ஒப்பிட்டும் கூறிவந்தார்களாம். இதனால் மனம் மாறிய நடிகை புடவையுடன் ஒரு போட்டோ ஷூட் எடுத்து பதிவு செய்தாராம். இதற்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்களாம்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கதில் ரஜினி நடித்திருக்கும் ‘தர்பார்’ படத்தை வேற லெவலில் கொண்டாட ரசிகர்கள் திட்டம் போட்டுள்ளனர்.
ரஜினி நடித்த தர்பார் படம் வருகிற 9-ந்தேதி வெளிவருகிறது. பொங்கல் பண்டிகை தினத்தை முன்னிட்டு வெளிவருவதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இதை கொண்டாட இப்போதே உற்சாகமாகி விட்டார்கள். சேலம் மாவட்டம் ரசிகர்கள் தர்பார் படம் திரையிடப்படும், தியேட்டர் மற்றும் கட்அவுட் மீது ஹெலிகாப்டரில் மலர் தூவ அனுமதி கேட்டிருக்கிறார்கள்.
சேலம் மாவட்டம் பாப்பரபட்டியை சேர்ந்த கனகராஜ் என்பவர் சேலம் மேற்கு மாவட்டம் மெய்யனூரில் உள்ள ஏஆர்ஆர்எஸ் என்ற தியேட்டரில் ஹெலிகாப்டரில் மலர் தூவ அனுமதி கேட்டிருக்கிறார்.

இது தொடர்பாக சேலம் வருவாய் கோட்டாட்சியர், சேலம் மேற்கு வட்டாட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மனுதாரர் கனகராஜ் ஹெலிகாப்டரில் மலர் தூவ கேட்டுள்ள இடத்தை பார்வையிட்டு விரிவான அறிக்கை அனுப்பு மாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார். வட்டாட்சியிரின் அறிக்கை அடிப்படையில் அனுமதி வழங்கப்படுமா? மறுக்கப்படுமா? என்பது தெரிய வரும்.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பட்டாஸ்’ படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நாயகனாக நடித்து வரும் படம் 'பட்டாஸ்'. இப்படத்தை எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சாடா நடித்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள, இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர். பொங்கல் விடுமுறையையொட்டி இப்படம் வெளியாக உள்ளது.
#PattasTrailerTomorrow at 10.31am ! @SathyaJyothi_pic.twitter.com/4WNM7fpe8q
— Dhanush (@dhanushkraja) January 6, 2020
இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை நாளை காலை 10.31 மணிக்கு வெளியிட இருப்பதாக தனுஷ் அறிவித்திருக்கிறார். இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.






