என் மலர்tooltip icon

    சினிமா

    இளையராஜா
    X
    இளையராஜா

    வீட்டிலேயே பின்னணி இசையை உருவாக்கி வரும் இளையராஜா

    விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘தமிழரசன்’ படத்திற்காக வீட்டிலேயே பின்னணி இசையை உருவாக்கி வருகிறார் இளையராஜா.
    விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தமிழரசன்’. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்து வரும் இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். எஸ்.என்.எஸ் மூவிஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரித்து வருகிறார்.

    இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. தற்போது பின்னணி இசை கோர்ப்பு நடந்து வருகிறது. இதுவரை இளையராஜா ஒரு இசை அமைப்பாளர் ஹீரோவாக நடித்த படத்திற்கு இசை அமைத்ததில்லை. விஜய் ஆண்டனிக்குத் தான் அந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. 

    விஜய் ஆண்டனி - ரம்யா நம்பீசன்

    தமிழரசன் படத்திற்காக இளையராஜா முதன்முதலாக பின்னணி இசையை தன் வீட்டில் வைத்து செய்து வருகிறார். அவர் இத்தனை ஆண்டுகால இசைப் பயணத்தில் பின்னணி இசையை தன் வீட்டில் நடத்தியதே இல்லை. ஒட்டுமொத்த வாத்தியக் கலைஞர்களையும் வீட்டுக்கு வரவழைத்து பின்னணி இசையை உருவாக்கி வருகிறார்.
    Next Story
    ×