என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரஷாந்த் நீல் - யஷ் கூட்டணியில் உருவாகி வரும் கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தில் கமல் பட நடிகை இணைந்துள்ளார்.
    பிரஷாந்த் நீல் - யஷ் கூட்டணியில் 2018ம் ஆண்டு வெளியான படம் கே.ஜி.எப். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி நல்ல வசூல் செய்தது. இப்படம் ஜப்பான், கொரியா முதலிய அயல் நாடுகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார். 

    கமல், ரவீணா டாண்டன்

    படம் 1970 -1980களில் நடக்கும் கதை என்பதால் படத்தில் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரமும் இடம்பெறுகிறது. அந்த கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் நடிக்க உள்ளார். அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டது குறித்து "தூக்கு தண்டனைக்கு உத்தரவிட்ட பெண் வந்துவிட்டார்" என்று இயக்குநர் பிரசாந்த் நீல் டுவிட் செய்துள்ளார். நடிகை ரவீணா டாண்டன் தமிழில் அர்ஜூனுடன் ‘சாது’, கமலுடன் ‘ஆளவந்தான்’ படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ராணா இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நான் சிரித்தால்’ படத்தின் முன்னோட்டம்.
    ‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சுந்தர்.சி-யின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி நடித்திருக்கும் படம் ‘நான் சிரித்தால்’. இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார்.

    ஹிப்ஹாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன்

    இப்படத்தில் கே.எஸ்.ரவிகுமார், முனீஸ்காந்த், படவா கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ராணா என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்கி மிகவும் பிரபலமான ‘கெக்க பெக்க’ எனும் குறும்படத்தின் தழுவலாக இப்படம் உருவாகி இருக்கிறது. 
    நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
    சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆண்டு, ஜூன் 23-ந்தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், தபால் ஓட்டுக்களை போட அனுமதிக்கவில்லை என்பதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் முடிந்த பின்பு எடுத்த எந்த முடிவுகளும் செல்லாது எனவும் அவர் அறிவித்தார். 

    நடிகர் சங்கத்திற்கான மறு தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமித்து, மூன்று மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட வேண்டும். அதுவரை நடிகர் சங்க நிர்வாகத்தை தனி அதிகாரி கவனிப்பார் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

    சென்னை ஐகோர்ட்டு

    இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழகத்தில் பல்வேறு சங்கங்கள் பதவிக்காலம் முடிந்த பின்பும் பழைய நிர்வாகிகள் அதை நிர்வகித்து வருகின்றனர். அதேபோல, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் பதவி காலம் முடிந்தும் சங்கத்தை நிர்வகித்து வந்தோம்.

    நடிகர் சங்க பிரச்சனையில், தமிழக அரசு நடுநிலையோடு செயல்படவில்லை. ஒரு சார்பாக நடந்து கொண்டது. தனி நீதிபதி எந்த ஒரு சட்ட ரீதியான அம்சத்தையும் ஆராயாமல் தேர்தலை ரத்து செய்துள்ளார். எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே, நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நாளை மறுதினம் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வர உள்ளது.
    கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு அளிப்பேன் என்று பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான ஜாக்கிசான் அறிவித்துள்ளார்.
    சீனாவில் வுகான் நகரத்தில் உருவான கொரோனா வைரஸ் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.

    இந்த கொடூர கொரோனா வைரசால் இதுவரை 908 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலக அளவில் 37000-க்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. வைரஸ் பரவாமல் தடுக்க சீன அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவசர அவசரமாக 1000 படுக்கையறைகளுடன் இரண்டு தற்காலிக மருத்துவமனைகளையும் உருவாக்கி உள்ளது.

    இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான ஜாக்கிசான் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    இந்த கொடூர வைரசை தோற்கடிக்க விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் முக்கியம். என்னைப் போன்று பலரும் இதனை நம்புகின்றனர். அதனால் வைரசை கட்டுப்படுத்த விரைவில் ஒருமாற்று மருந்தை உருவாக்க முடியும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

    கொரோனா வைரஸ்

    இவ்வாறு தனி நபரோ அல்லது ஒரு அமைப்போ கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் அவர்களுக்கு ஒரு மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய் அளிப்பேன்.

    இந்த அறிவிப்பு பணத்தை பொருட்டாக கொண்டதல்ல. எனது நண்பர்கள் வைரசால் பாதிக்கப்பட்டு போராடுவதை பார்க்க நான் விரும்பவில்லை. அவர்கள் நன்றாக வாழ வேண்டும் அதற்காகத்தான்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் விருது வென்றவர்கள் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது.
    ஹாலிவுட் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கர் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகமே உற்று நோக்கிய 92-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்றவர்கள் விவரம் வெளியாகி உள்ளது. 

    பாராசைட் பட போஸ்டர்

    ஆஸ்கர் விருதை வென்ற படங்கள், கலைஞர்கள் குறித்த முழுவிவரம் வருமாறு:

    சிறந்த படம் -  பாராசைட்

    சிறந்த இயக்குநர் -  போங் ஜூன் ஹோ (பாராசைட்)

    சிறந்த நடிகர் -  ஜாக்குயின் பீனிக்ஸ் (ஜோக்கர்)

    சிறந்த நடிகை -  ரெனீ ஜெல்வேகர் (ரூடி)

    சிறந்த ஆவணப்படம் -  அமெரிக்கன் பேக்டரி

    சிறந்த வெளிநாட்டு படம் -  பாராசைட் (கொரியன்)

    சிறந்த அனிமேஷன் திரைப்படம் -  டாய் ஸ்டோரி-4

    1917 பட போஸ்டர்

    சிறந்த அனிமேஷன் குறும்படம் - ஹேர் லவ்

    சிறந்த ஆவண குறும்படம் -  லேர்னிங் டு ஸ்கேட்போர்ட் இன் ஏ வார்ஜோன்

    சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் -  தி நெய்பர்ஸ் விண்டோ

    சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் -  குய்லூம் ரோச்செரோன், கிரெக் பட்லர் மற்றும் டொமினிக் டுஹோய் (1917)

    சிறந்த ஒளிப்பதிவாளர் -  ரோஜர் டீக்கின்ஸ் (1917)

    சிறந்த படத்தொகுப்பாளர் -  மைக்கேல் மெக்கஸ்கர் மற்றும் ஆண்ட்ரூ பக்லேண்ட் (ஃபோர்டு வெர்சஸ் ஃபெராரி)

    சிறந்த திரைக்கதை -  போங் ஜூன் ஹோ, ஹான் ஜின் வான் (பாராசைட்)

    தழுவல் திரைக்கதை -  டைகா வெயிட்டி (ஜோஜோ ராபிட்)

    சிறந்த பின்னணி இசை -  ஹில்தூர் குனாடாட்டிர் (ஜோக்கர்)

    சிறந்த பாடல் -  லவ் மீ அகெய்ன் (ராக்கெட் மேன்)

    ஜோக்கர் பட போஸ்டர்

    சிறந்த துணை நடிகர் - பிராட் பிட் (ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்)

    சிறந்த துணை நடிகை -  லாரா டெர்ன் (மேரேஜ் ஸ்டோரி)

    சிறந்த ஒப்பனை -  கசு ஹிரோ, அன்னே மோர்கன் மற்றும் விவியன் பேக்கர் (பாம்ஷெல்)

    ஆடை வடிவமைப்பு -  ஜாக்லின் டூரான் (லிட்டின் வுமன்)

    தயாரிப்பு வடிவமைப்பு -  பார்பரா லிங் மற்றும் நான்சி ஹை (ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்)

    சிறந்த ஒலி படத்தொகுப்பு -  டொனால்டு சில்வஸ்டர் (ஃபோர்டு வெர்சஸ் ஃபெராரி)

    ஒலி கோர்ப்பு -  மார்க் டெய்லர் (1917)
    வருமானவரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நடிகர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
    ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையின்போது ‘பிகில்’ திரைப்படம் வெளியானது. சுமார் ரூ.150 கோடி செலவில் உருவான இந்த திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தின் மூலம் தயாரிப்புக் குழு ரூ.300 கோடி வரை லாபம் சம்பாதித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த வருமானத்தை அந்த திரைப்படக் குழு மறைத்ததாக கூறப்பட்டது.

    இதையடுத்து சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான மதுரை, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர். ஏ.ஜி.எஸ். நிறுவன அலுவலகங்கள், விஜய்க்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.

    பிகில் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு பல கோடி ஊதியமாக வழங்கப்பட்டிருந்ததால் நெய்வேலி என்.எல்.சி.சுரங்கம் பகுதியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த விஜய்யை அவரது காரிலேயே சென்னை அழைத்து வந்து பனையூரில் உள்ள அவரது பங்களாவில் வைத்து விசாரித்தனர். 

    விஜய்

    வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி ரொக்கம், நகைகள் மற்றும் 2 பைகள் நிறைய ஆவணங்களை வருமான வரித்துறை கைப்பற்றியது. ஆவணங்கள் மற்றும் காசோலைகள் மூலம் ரூ.300 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோருக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சொத்துக்களில் முதலீடு செய்ய தேவையான நிதி ஆதாரம், எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை செய்ய, நடிகர் விஜய் உள்ளிட்ட மூவரும் 3 நாட்களுக்குள் ஆஜராகி, கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விஜய், அன்புசெழியன், கல்பாத்தி அகோரம் ஆகியோர் 3 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு இருப்பதாக முதலில் தகவல் வந்தது. இன்று காலை வெளியான தகவல்படி இன்றே ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கடலூர் என்.எல்.சி வளாகத்தில் நடைபெற்று வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிகிறது. இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானால் படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்பதால் நாளை ஆஜராவார் என தெரிகிறது.
    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது விழாவில் கொரியன் படமான 'பாராசைட்' நான்கு விருதுகளை அள்ளியது.
    உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. அவ்வகையில் 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது.

    விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரெட்கார்பட் நிகழ்ச்சி நடைபெற்றது. திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைத்துறையின் பல்வேறு கலைஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெறுகிறது.

    பாராசைட் படக்குழு

    இதில் போங் ஜுன் ஹோ இயக்கிய பாராசைட் திரைப்படம் நான்கு ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. சிறந்த திரைப்படம், திரைக்கதை, வெளிநாட்டு படம், இயக்குனர் ஆகிய 4 பிரிவுகளில் பாராசைட் படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. ஆங்கில மொழி அல்லாத பிற மொழியில் எடுக்கப்பட்டு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை பெற்ற முதல் திரைப்படம் என்ற பெருமையை கொரியன் படமான ’பாராசைட்’ பெற்றுள்ளது.
    ஜோக்கர் படத்தின் நாயகன் ஜாக்குயின் பீனிக்ஸ் இந்த ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார்.
    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது. திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைத்துறையின் பல்வேறு கலைஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெறுகிறது.

    சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுக்கு வழங்கப்பட்டது. ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a time in Hollywood) என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பிராட் பிட்டுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மேரேஜ் ஸ்டோரி படத்திற்காக லாரா டெர்னுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.  

    சிறந்த நடிகருக்கான விருதுக்கு ஸ்பெயின் நடிகர் அன்டோனியோ பான்டராஸ் (பெயின் அண்ட் குளோரி), லியோனார்டா டிகாப்ரியோ (ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்), ஆடம் டிரைவர் (மேரேஜ் ஸ்டோரி), ஜாக்குயின் பீனிக்ஸ் (ஜோக்கர்) மற்றும் ஜோனாதன் பிரைஸ் (தி டூ போப்ஸ்) ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர்.

    இதில் ஹாலிவுட் படமான ஜோக்கர் படத்தின் நாயகன் ஜாக்குயின் பீனிக்ஸ் (வயது 45) சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச் சென்றார். முதல் முறையாக ஆஸ்கர் விருதை இவர் பெற்றுள்ளார்.

    ரெனீ ஜெல்வேகர்

    இதேபோல் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை ரூடி படத்தில் நடித்த ரெனீ ஜெல்வேகர் பெற்றுக்கொண்டார். சிறந்த நடிகைக்கான போட்டியில் சிந்தியா எரிவோ (ஹாரியட்), ஸ்கார்லட் ஜோகன்சன் (மேரேஜ் ஸ்டோரி), சவாயிர்ஸ் ரோனன் (லிட்டில் வுமன்), சார்லிஸ் தேரான் (பாம்ப்ஷெல்) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
    சிறந்த சவுண்ட் மிக்சிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் 1917 என்ற படம் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.
    உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. அவ்வகையில் 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது.

    விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரெட்கார்பட் நிகழ்ச்சி நடைபெற்றது. திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைத்துறையின் பல்வேறு கலைஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெறுகிறது.

    சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுக்கு வழங்கப்பட்டது. ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a time in Hollywood) என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பிராட் பிட்டுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருதும் இந்த படத்திற்கு கிடைத்துள்ளது.

    போங் ஜூன் ஹோ மற்றும் ஹன் ஜின்

    சிறந்த திரைக்கதைக்கான விருது கொரியன் படமான பாராசைட் திரைப்படத்துக்கு கிடைத்துள்ளது. தென்கொரிய திரையுலகிற்கு கிடைத்திருக்கும் முதல் ஆஸ்கர் விருது இதுவாகும்.  ஹன் ஜின், போங் ஜூன் ஹோவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

    சிறந்த ஆடை வடிவமைப்புக்காக லிட்டின் வுமன் படத்திற்கு விருது கிடைத்தது. இப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய ஜாக்லின் டூரானுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.  மேரேஜ் ஸ்டோரி படத்திற்காக லாரா டெர்னுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.  

    சவுண்ட் எடிட்டிங்கிற்கான ஆஸ்கர் விருதை Ford Vs Ferrari படம்  வென்றது. விருதை டொனால்டு சில்வஸ்டர் பெற்றார். சிறந்த சவுண்ட் மிக்சிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் 1917 என்ற படம் விருதுகளை வென்றுள்ளது. ஒளிப்பதிவுக்கான விருது ரோஜர் டீக்கின்சிடமும், சவுண்ட் மிக்சிங் விருதை மார்க் டெய்லர் மற்றும் ஸ்டுவார்ட் வில்சன் ஆகியோரிடமும் வழங்கப்பட்டது.

    சிறந்த அனிமேசன் திரைப்படத்திற்கான விருதை டாய் ஸ்டோரி-4 தட்டிச்சென்றது. இப்படத்தில் ஜோஷ் கூலே, மார்க் நீல்சன், ஜோனஸ் ரிவேரா ஆகியோர் நடித்திருந்தனர். சிறந்த ஆவணப்படத்திற்கான விருது அமெரிக்கன் பேக்டரி என்ற படத்திற்கும், சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருது, லேர்னிங் டு ஸ்கேட்போர்ட்  இன் ஏ வார்ஜோன் என்ற படத்திற்கும் வழங்கப்பட்டது. சிறந்த குறும்படத்திற்கான விருது, தி நெய்பர்ஸ் விண்டோ என்ற படத்திற்காக மார்ஷல் கரிக்கு வழங்கப்பட்டது.

    நெய்வேலி என்.எல்.சி. 2-வது சுரங்கம் முன்பு வேன் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் விஜய் ‘செல்பி’ எடுத்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பு கடந்த 5-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஆனால் என்.எல்.சி. சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து கடந்த 7-ந் தேதி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இது பற்றி அறிந்ததும் என்.எல்.சி. சுரங்கம் முன்பு திரண்ட விஜய் ரசிகர்கள், பா.ஜனதாவினரை கண்டித்தும், மாஸ்டர் படப்பிடிப்பை தொடர்ந்து இங்கேயே நடத்தக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். நேற்று முன்தினம் மாலையிலும் நடிகர் விஜய்யை காண்பதற்காக ரசிகர்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் 2-வது சுரங்கத்தின் முன்பு திரண்டனர். படப்பிடிப்பு முடிவடைந்து விஜய் வெளியே வருவதை அறிந்த அவர்கள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தை மீறி சுரங்கத்தின் நுழைவு வாயிலை நோக்கி ஓடினர். அப்போதும் போலீசார் ரசிகர்களை விரட்டியடித்து கூட்டத்தை கலைத்தனர்.




    இந்த நிலையில் நேற்றும் என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நடிகர் விஜய்யை காண ரசிகர்கள் மட்டுமின்றி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர். இதனால் பொதுமக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் தலைமையில் போலீசாரும், என்.எல்.சி. மத்திய தொழிலக பாதுகாப்பு படை தலைவர் ஷேக் அப்துல்லா தலைமையில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே கடந்த 2 நாட்களாக ரசிகர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவத்தை அறிந்தும், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும், மாலையில் ரசிகர்களின் மத்தியில் நடிகர் விஜய் பேசுவார் என்று தகவல் பரவியது. அதற்கு ஏற்றார் போல் என்.எல்.சி. 2-வது சுரங்க நுழைவு வாயிலின் முன்பு வேன் ஒன்றும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். சில ரசிகர்கள் ஆள் உயர மாலையையும் தயார் நிலையில் வைத்திருந்தனர். இந்த நிலையில் மாலை 6.15 மணியளவில் படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் விஜய், காரில் வெளியே வந்தார். பின்னர் அவர் தான் வந்த காரை சுரங்கத்தின் முன்பு நிறுத்திவிட்டு அதில் இருந்து இறங்கி, தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த வேனில் ஏறி ரசிகர்களை நோக்கி கையசைத்தார். அப்போது அங்கு திரண்டு இருந்த ரசிகர்கள் தலைவா... தலைவா... என்று உற்சாக குரல் எழுப்பினர்.

    நடிகர் விஜயை காண திரண்டிருந்த ரசிகர்கள்

    தொடர்ந்து நடிகர் விஜய், தான் வைத்திருந்த செல்போனை எடுத்து ரசிகர்களுடன் ‘செல்பி’ எடுத்தார். இதைபார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். பின்னர் மீண்டும் ஒருமுறை ரசிகர்களை நோக்கி கையசைத்து விட்டு வேனில் இருந்து கீழே இறங்கினார். இதைதொடர்ந்து தனது காரில் ஏறி வெளியே வந்தார். நடிகர் விஜய் பேசுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    இதற்கிடையே நடிகர் விஜய் வெளியே வருவதை அறிந்த ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு அவரை காண ஓடினர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் முயன்றபோது ரசிகர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வரும் நடிகை சாய்பல்லவி, போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
    பிரேமம் என்ற மலையாள படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபலமானவர் விஜய் இயக்கிய தியா என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தார். அடுத்து தனுசுடன் ‘மாரி 2’ படத்தில் நடித்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. யுடியூப்பில் அதிகமானோர் பார்த்த பாடலாகவும் ரவுடி பேபி சாதனை படைத்தது. 

    இந்நிலையில் போர்ப்ஸ் இந்தியா இதழ் வெளியிட்டுள்ள, 30 அண்டர் 30 என்ற தொகுப்பில் நடிகை சாய் பல்லவியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இது வேறு யாருக்கும் கிடைக்காத பெருமை. வேறு எந்த தென்னிந்திய நடிகையின் பெயரும் இந்த வருட பட்டியலில் இடம் பெறவில்லை. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 பெண்களில் இவரும் ஒருவர். 

    சாய் பல்லவி

    இதையடுத்து சமூக வலைத்தளங்களில் நடிகை சாய் பல்லவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், தன்னைப் பெருமைப்படுத்திய போர்ப்ஸ் இதழுக்கு நன்றி தெரிவித்துள்ளார், நடிகை சாய் பல்லவி. இதுபற்றி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அவர், இதன்மூலம் தான் பெருமைப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

    ரூ.2 கோடி மதிப்புள்ள முக அழகு கிரீம் விளம்பர ஒப்பந்தத்தையும் ரூ.1 கோடி மதிப்புள்ள மற்றொரு ஒப்பந்தத்தையும் நடிகை சாய் பல்லவி நிராகரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இப்போது, நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி, நடிகர் ராணாவுடன் விரத பர்வம் ஆகிய தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
    நிஜார் இயக்கத்தில் ராம்குமார், வரலஷ்மி சரத்குமார், இனியா நடிப்பில் உருவாகி வரும் கலர்ஸ் படத்தின் முன்னோட்டம்.
    "லைம் லைட் பிக்சர்ஸ்" தயாரிப்பில் நிஜார் இயக்கும் படம் "கலர்ஸ்". இயக்குனர் நிஜார், நடிகர்கள் ஜெயராம், திலீப், சுரேஷ் கோபி, குஷ்பு , மாதவி, தேவயானி உள்ளிட்ட பல பிரபல நடிகர்களை வைத்து மலையாளத்தில் 25 படங்களை இயக்கியுள்ளார். மலையாளத்தில் பிரபலமான கமர்ஷியல் இயக்குனரான இவர் தமிழில் இயக்கும் முதல் படம் ‘கலர்ஸ்’.

    கலர்ஸ் படக்குழு

    ராம்குமார் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் வரலஷ்மி சரத்குமார், இனியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். ப்ரியதர்ஷன், ஜோசி உள்ளிட்ட பல பிரபல இயக்குனர்களுடன் பணியாற்றியவரும், தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களுக்கு இசையமைத்தவருமான எஸ்.பி.வெங்கடேஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
    ×