என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்கர் விருது பெற்ற 1917 படம்
    X
    ஆஸ்கர் விருது பெற்ற 1917 படம்

    ஆஸ்கர் விருதுகளை அள்ளிய 1917 திரைப்படம்

    சிறந்த சவுண்ட் மிக்சிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் 1917 என்ற படம் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.
    உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. அவ்வகையில் 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது.

    விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரெட்கார்பட் நிகழ்ச்சி நடைபெற்றது. திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைத்துறையின் பல்வேறு கலைஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெறுகிறது.

    சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுக்கு வழங்கப்பட்டது. ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a time in Hollywood) என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பிராட் பிட்டுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருதும் இந்த படத்திற்கு கிடைத்துள்ளது.

    போங் ஜூன் ஹோ மற்றும் ஹன் ஜின்

    சிறந்த திரைக்கதைக்கான விருது கொரியன் படமான பாராசைட் திரைப்படத்துக்கு கிடைத்துள்ளது. தென்கொரிய திரையுலகிற்கு கிடைத்திருக்கும் முதல் ஆஸ்கர் விருது இதுவாகும்.  ஹன் ஜின், போங் ஜூன் ஹோவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

    சிறந்த ஆடை வடிவமைப்புக்காக லிட்டின் வுமன் படத்திற்கு விருது கிடைத்தது. இப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய ஜாக்லின் டூரானுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.  மேரேஜ் ஸ்டோரி படத்திற்காக லாரா டெர்னுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.  

    சவுண்ட் எடிட்டிங்கிற்கான ஆஸ்கர் விருதை Ford Vs Ferrari படம்  வென்றது. விருதை டொனால்டு சில்வஸ்டர் பெற்றார். சிறந்த சவுண்ட் மிக்சிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் 1917 என்ற படம் விருதுகளை வென்றுள்ளது. ஒளிப்பதிவுக்கான விருது ரோஜர் டீக்கின்சிடமும், சவுண்ட் மிக்சிங் விருதை மார்க் டெய்லர் மற்றும் ஸ்டுவார்ட் வில்சன் ஆகியோரிடமும் வழங்கப்பட்டது.

    சிறந்த அனிமேசன் திரைப்படத்திற்கான விருதை டாய் ஸ்டோரி-4 தட்டிச்சென்றது. இப்படத்தில் ஜோஷ் கூலே, மார்க் நீல்சன், ஜோனஸ் ரிவேரா ஆகியோர் நடித்திருந்தனர். சிறந்த ஆவணப்படத்திற்கான விருது அமெரிக்கன் பேக்டரி என்ற படத்திற்கும், சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருது, லேர்னிங் டு ஸ்கேட்போர்ட்  இன் ஏ வார்ஜோன் என்ற படத்திற்கும் வழங்கப்பட்டது. சிறந்த குறும்படத்திற்கான விருது, தி நெய்பர்ஸ் விண்டோ என்ற படத்திற்காக மார்ஷல் கரிக்கு வழங்கப்பட்டது.

    Next Story
    ×