என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள புதிய படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
    ரஜினி நடித்த பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், தற்போது தனுஷின் 40-வது படத்தை இயக்கி உள்ளார். கேங்ஸ்டர் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். 

    ஜகமே தந்திரம் பட போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘ஜகமே தந்திரம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் வருகிற மே 1-ந் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 
    கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    கமல், ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். சென்னையில் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பை வடமாநிலத்தில் முடித்துவிட்டு, தற்போது மீண்டும் சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

    ஷங்கர், கமல்

    அடுத்தகட்டமாக படப்பிடிப்பை சீனாவில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால், அங்கு படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பை வேறு நாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இத்தாலியில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகி இருக்கும் நான் சிரித்தால் படத்தின் விழாவில் கலந்துக் கொண்ட குஷ்பு, அவன்தான் எனக்கு சக்களத்தி என்று பேசியிருக்கிறார்.
    ஹிப் ஹாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் வெளியான நான் சிரித்தால் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதற்கான வெற்றி சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு, இயக்குனர் ராணா, நடிகர்கள் ஆதி, ஐஸ்வர்யா மேனன், கேஎஸ்,ரவிகுமார், ரவிமரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

    இதில் குஷ்பு பேசும்போது, ’நீண்ட இடைவெளிக்கு பிறகு தோன்றும் சினிமா மேடை. தயாரிப்பு நிறுவனம் தொடங்க காரணம் எங்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது. நானும் கணவரும் சிறு வயதில் இருந்தே சினிமாவில் தான் இருக்கிறோம். எங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்தால் சரியான நேரத்தில் சம்பளம் போய்விடும். 

    நான் சிரித்தால் படக்குழுவினர்

    தயாரிப்பை பொறுத்தவரை எல்லாமே சுந்தர்.சி தான். நாங்கள் சினிமாவை நேசிக்கிறோம். எங்களுக்கு மூச்சே சினிமா தான். எல்லா படங்களுமே ஓடவேண்டும். லாபம் பார்க்கவேண்டும் என்றுதான் விரும்புகிறோம். என் சின்ன மகள் தான் முதலில் ஆதிக்கு விசிறி ஆனார். ஒரே ஒரு பாடலுக்கு இசையமைக்க வந்தவர் இப்போது குடும்பத்தில் ஒருவராகி விட்டார். தூக்கத்தில் எழுந்து பார்த்தால் கூட சுந்தர்.சி ஆதியுடன் பேசிக்கொண்டு இருப்பார். என்னுடைய சக்களத்தி என்றே ஆதியை சொல்லலாம்’ என்றார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் பார்த்திபன், விஜய்யை வைத்து படம் இயக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்துக்கு பிறகு விஜய்யின் புதிய படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. டைரக்டர் ஷங்கர், பேரரசு, ஏ.ஆர்.முருகதாஸ், அட்லி, அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபடுகின்றன.

    இந்த நிலையில் நடிகர் பார்த்திபனும் விஜய் படத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். ரசிகர் ஒருவர் டுவிட்டரில் விஜய்யும், பார்த்திபனும் இணைந்தால் செம மாஸ் என்ற பதிவிட்டிருந்தார். 

    விஜய், பார்த்திபன்

    இதற்கு பதிலளித்த பார்த்திபன், “மாஸுக்கு மாஸ்டரை பிடிக்கும். மாஸ்டருக்கு இந்த நண்பனை பிடிக்கும். நண்பன் படத்தை என்னையே முதலில் இயக்க சொன்னார். அழகிய தமிழ் மகனுக்கு எழுத சொன்னார். நாளை இன்னும் அடுத்த கட்டத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.பார்த்திபனின் இந்த பதிவு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. 
    ஷங்கர் மூவீஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் டிஸ்னி இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள இரும்பு மனிதன் படத்தின் முன்னோட்டம்.
    ஷங்கர் மூவீஸ் இன்டர்நேஷனல் ஜோசப் பேபி தயாரிக்கும் இரண்டாவது படம் ‘இரும்பு மனிதன்’. இதில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அர்ச்சனா நடிக்க மதுசூதனன், கஞ்சா கருப்பு, நிஷாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாடல்களை மோகன்ராஜ், நிரஞ்சன் பாரதி, டிஸ்னி எழுத கே.எஸ்.மனோக் இசை அமைக்கிறார். 

    இரும்பு மனிதன்

    கே.கோகுல் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.பி.அகமது படத்தொகுப்பு செய்ய, கலை கே.மதன் கவனிக்க, ஆக்ஷன் பிரகாஷ் ஸ்டன்ட் செய்ய, கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருக்கிறார் டிஸ்னி. இப்படம் குறித்து இயக்குனர் டிஸ்னி கூறுகையில், இந்த படத்தின் திரைக்கதை பல்வேறு காலகட்டங்களில் நடக்கிறது. இதை ஒரு உணர்வுபூர்வமான காதல், காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்து எடுப்பதாகவும், படப்பிடிப்புகள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடத்த இருப்பதாகவும் சொல்கிறார்.
    நெற்றிக்கண் படத்தின் ரீமேக் குறித்து தனுஷ் மீது விசு கூறிய புகாருக்கு கவிதாலயா பட நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
    ரஜினிகாந்த் நடித்த நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்து நடிக்க விரும்புவதாக தனுஷ் அறிவித்துள்ளார். இதற்கு டைரக்டர் விசு எதிர்ப்பு தெரிவித்தார். நெற்றிக்கண் படத்துக்கு கதை எழுதிய என்னிடம் உரிமை பெறாமல் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடர்வேன் என்றும் எச்சரித்தார்.

    இந்த நிலையில் நெற்றிக்கண் படத்தை தயாரித்த கவிதாலயா பட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ‘நெற்றிக்கண்’ திரைப்படம் குறித்து உண்மைக்கு புறம்பான, மனவருத்தம் அளிக்கக்கூடிய தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக அறிகிறோம். ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் முழு காப்புரிமையும் அப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில், கவிதாலயா வசமே இருக்கிறது. அதன் தமிழ் ரீமேக் உரிமையைக் கேட்டு, யாரும் இதுவரை எங்களை அணுகவும் இல்லை. நாங்களும் யாருக்கும் கொடுக்கவும் இல்லை.

    நெற்றிக்கண் படத்தில் ரஜினி

    இந்நிலையில் விசு, கதாசிரியர் என்ற முறையில் தனக்கு உரிய ஊதியத்தை தரவில்லை என கூறுவது அடிப்படை ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டு. ரீமேக் உரிமை விற்கப்படுமேயானால், சம்பந்தப்பட்டவர்களின் உரிமைகளை மனதில் கொண்டே கவிதாலயா செயல்படும். விசு கவிதாலயாவிற்கும், அதன் நிர்வாகிகளுக்கும் எதிராக ‘தில்லுமுல்லு’ திரைப்படம் தொடர்பாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் எந்த விதமான ஒரு அடிப்படை ஆதாரமும், முகாந்திரமும் கிடையாது.

    இது சம்பந்தமாக, அவர் தொடர்ந்த வழக்கில் கவிதாலயாவும், அதன் நிர்வாகிகளும் சம்பந்தப்படவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஆக, கவிதாலயாவும் மற்றும் அதன் நிர்வாகிகளும் ஒப்பந்தமீறல்களுக்கும், விதி மீறல்களுக்கும் ஒருபோதும் துணை நின்றதில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம்.”

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
    தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு வைப்பதாக புகார் எழுந்துள்ளது.
    ரிஷி ரித்விக், ஆஷா ஜோடியாக நடித்துள்ள படம் மரிஜுவானா. எம்.டி.ஆனந்த் இயக்கி உள்ளார். தேர்டு ஐ கிரியேஷன்ஸ் சார்பில் எம்.டி.விஜய் தயாரித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் டைரக்டர்கள் பாக்யராஜ், மிஷ்கின், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    விழாவில் தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனை குழு உறுப்பினர் கே.ராஜன் கலந்து கொண்டு பேசும்போது, “கோடி கோடியாக சம்பளம் பெறும் நடிகைகளின் உதவியாளர்களுக்கு படி கொடுப்பதால் தயாரிப்பாளருக்கு கூடுதல் செலவு ஆகிறது. வருமானத்தில் 10 சதவீதம் வரி கட்ட வேண்டும். மாநில அரசின் 8 சதவீத வரியை நீக்கும்படி கோரிக்கை வைக்க இருக்கிறோம்.

    மரிஜுவானா படத்தின் கதாநாயகன் ரிஷி ரித்விக்கை பார்க்கும்போது தமிழ் படத்திற்கு அர்னால்டு கிடைத்துள்ளார் என்று தோன்றுகிறது. இந்த படத்தில் சமுதாயத்துக்கு நல்ல கருத்தை கூறியுள்ளனர். இந்த படத்தை பார்த்து போதை பொருளால் பாதிக்கப்பட்டவர்கள் திருந்த வேண்டும்” என்றார்.

    நயன்தாரா

    மேலும் கே.ராஜன் கூறும்போது, “கேரவன் செலவை நடிகர்-நடிகைகளே ஏற்க வேண்டும். நயன்தாராவுடன் சிகை அலங்காரம் செய்பவர், ஒப்பனை கலைஞர், உடை அலங்காரம் செய்பவர், டிரைவர் உள்பட 6 பேர் வருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் தினமும் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை தயாரிப்பாளர் ‘பேட்டா’ கொடுக்க வேண்டி உள்ளது. இதன்மூலம் தினமும் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை செலவு ஆகிறது.

    நடிகைகள் தமன்னா, சமந்தா உள்ளிட்டோரின் உதவியாளர்களுக்கும் இதே மாதிரி படி கொடுக்க வேண்டி உள்ளது. இந்த செலவுகளை நடிகைகளே ஏற்க வேண்டும். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.
    என்ன புது மாப்பிள்ளை, பால்கோவா மாதிரி இருக்கீங்க என்று கிரிக்கெட் வீரரும், தற்போது நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் ஹர்பஜன் சிங் பிரபல நடிகரை பற்றி கூறியிருக்கிறார்.
    கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தீவிர ரசிகர்களை கொண்ட சி.எஸ்.கே. அணியின் வீரருமான ஹர்பஜன் சிங், தற்போது நடிகராக அவதாரம் எடுத்து வருகிறார். இவர் ‘பிரண்ட்ஷிப்’  என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இதில் பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கிறார்.

    மேலும் அர்ஜுன் இப்படத்தில் நடிப்பதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தனர். தற்போது காமெடி நடிகர் சதீஷ் இப்படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சதீஷ் படத்தில் இணைந்திருப்பதற்கு ‘புது மாப்பிள்ளை @actorsathish எப்பிடி இருக்கீங்க. தம்பி நல்லா சிரிச்ச முகம். பாக்க அப்பிடியே ஸ்ரீவல்லிபுத்தூர் பால்கோவா மாதிரி இருக்கீங்க. படத்துல காமெடி கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும். நல்லா நெருக்கி செய்வோம் #Friendship’ என்று பதிவு செய்திருக்கிறார்.

    ஹர்பஜன் சிங் ட்விட்

    இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர். 
    சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி இருக்கிறது.
    சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியிருக்கிறது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

    இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

    மாநாடு படக்குழுவினர்

    யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். 
    நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து வலிமை படத்தில் நடித்து வரும் அஜித்துக்கு, படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர்.

    இப்படத்தில் இடம் பெறும் பைக் சேஸிங் காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கி இருக்கிறார்கள். இந்த படப்பிடிப்பின் போது நடிகர் அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையறிந்த ரசிகர்கள், அஜித் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் GetWellSoonThala என்ற ஹேஸ்டேக்கை டிரெண்டாக்கி வருகிறார்கள்.

    அஜித்

    இந்த விபத்தில் கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் 20 நிமிடங்கள் ஓய்வு எடுத்த பின்பு அஜித் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
    தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஸ்ரீகாந்த், தற்போது போலீஸ் கமிஷனராக களமிறங்கி இருக்கிறார்.
    ஹன்சிகா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மஹா’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீகாந்த் நடிக்கிறார். இதில் ஸ்ரீகாந்த், விக்ரம் என்னும் போலீஸ் கமிஷனராக நடிக்கிறார்.

    ஶ்ரீகாந்த் நடித்திருக்கும் காட்சிகள் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இக்கதாப்பாத்திரத்திற்காக ஶ்ரீகாந்த் தந்திருக்கும் உழைப்பு இப்படத்தை அவர் சினிமா வாழ்க்கையில் முக்கியமான மைல்கல்லாக மாற்றியுள்ளது என்று படக்குழுவினர் கூறியுள்ளனர். இப்படத்தில் கருணாகாரன், தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

    மகா படத்தில் ஸ்ரீகாந்த்

    வி.மதியழகன் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ளார். மே மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் ஜேம்ஸ் பாண்ட் நடிகருக்கும் மற்றும் படக்குழுவினருக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    ஜேம்ஸ்பாண்ட் படமான ‘நோ டைம் டூ டை’ உலகம் முழுவதும் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. இதில் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் டேனியல் கிரெய்க் நடித்துள்ளார். முந்தைய கேசினோ ராயல், குவாண்டம் ஆப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர் ஆகிய ஜேம்ஸ்பாண்ட் படங்களிலும் டேனியல் கிரெய்க்கே நடித்து இருந்தார்.

    இனிமேல் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடிக்க மாட்டேன் என்று டேனியல் கிரெய்க் அறிவித்து உள்ளார். இது அவரது கடைசி ஜேம்ஸ்பாண்ட் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஹாலிவுட் படங்களுக்கு சீனாவில் பெரிய மார்க்கெட் உள்ளது.

    டேனியல் கிரெய்க்

    நோ டைம் டூ டை படத்துக்கு சீனாவில் இப்போதே ஆயிரக்கணக்கான தியேட்டர்களை ஒதுக்கீடு செய்து விளம்பரப்படுத்தும் பணி நடக்கிறது. படம் ரிலீசுக்கு முந்தைய நாள் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். அதில் டேனியல் கிரெய்க் உள்பட படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் அனைவரும் பங்கேற்க இருப்பதாகவும் அறிவித்து இருந்தனர்.

    கொரோனா வைரஸ் உயிர்ப்பலியால் சீனாவே நிலைகுலைந்துள்ள நிலையில் டேனியல் கிரெய்க் உள்ளிட்ட சினிமா பிரபலங்களின் சீன பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. சிறப்பு காட்சிக்கும் தடைவிதித்துள்ளனர்.
    ×