என் மலர்
சினிமா

ஸ்ரீகாந்த்
போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஸ்ரீகாந்த், தற்போது போலீஸ் கமிஷனராக களமிறங்கி இருக்கிறார்.
ஹன்சிகா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மஹா’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீகாந்த் நடிக்கிறார். இதில் ஸ்ரீகாந்த், விக்ரம் என்னும் போலீஸ் கமிஷனராக நடிக்கிறார்.
ஶ்ரீகாந்த் நடித்திருக்கும் காட்சிகள் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இக்கதாப்பாத்திரத்திற்காக ஶ்ரீகாந்த் தந்திருக்கும் உழைப்பு இப்படத்தை அவர் சினிமா வாழ்க்கையில் முக்கியமான மைல்கல்லாக மாற்றியுள்ளது என்று படக்குழுவினர் கூறியுள்ளனர். இப்படத்தில் கருணாகாரன், தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

வி.மதியழகன் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ளார். மே மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
Next Story






