என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், சைவத்துக்கு மாறியுள்ளதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    என்ஜிகே படத்தை அடுத்து இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங் இந்தியிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும், தீவிர அசைவ உணவு பிரியையான ரகுல் பிரீத் சிங் திடீரென்று முழு சைவத்திற்கு தான் மாறியிருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

    அதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், நான் திடீரென்றுதான் சைவத்துக்கு மாறினேன். அந்த மாற்றத்திற்கு பிறகு எனக்குள் ஆற்றல் அதிகரித்திருப்பதாக உணர்கிறேன். மேலும், மும்பையில் படப்பிடிப்பு நடக்கும்போது வீட்டில் இருந்தே பழங்களை எடுத்து செல்கிறேன்.

    ரகுல் பிரீத் சிங்

    அதேசமயம் வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புக்கு செல்லும்போது அரிசியுடன் காய்கறி, பருப்பை கலந்து சமைக்கிறார்கள். ஆனால் நான் அதில் சுவைக்காக சைவ நெய்யை கலந்து சாப்பிடுகிறேன் என்று ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.
    என்.கே.கண்டி இயக்கத்தில் ஆதர்ஷ், அன்னம் ஷாஜன் நடிப்பில் வெளியாகி இருக்கும் டே நைட் படத்தின் விமர்சனம்.
    ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் நாயகன் ஆதர்ஷை தேடி, நாயகி அன்னம் ஷாஜன் அங்கு செல்கிறார். இருவரும் காதலித்து வரும் நிலையில், நாயகன் ஆதர்ஷுக்கு ஒரு விபத்து மூலம் பணம் கிடைக்கிறது. இந்த பணத்தால் நாயகன் ஆதர்ஷ்க்கு பிரச்சனை ஏற்படுகிறது. 

    மேலும் நாயகி அன்னம் ஷாஜன் மர்மமான முறையில் இறக்கிறார். இவர் இறந்து ஓராண்டு கழித்து, ஆதர்ஷுக்கு அன்னம் ஷாஜன் போன் பண்ணுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் ஆதர்ஷ், அன்னம் ஷாஜனை தேடி செல்கிறார்.

    இறுதியில் அன்னம் ஷாஜனை ஆதர்ஷ் கண்டுபிடித்தாரா? அன்னம் ஷாஜன் உயிருடன் தான் இருக்கிறாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    டே நைட் படக்குழு

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஆதர்ஷ், புதுமுக நடிகர் என்று தெரியாதளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். பதட்டம், படபடப்பு என அவரது நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. நாயகியாக நடித்திருக்கும் அன்னம் ஷாஜன் பயத்துடன் நடித்து கவனிக்க வைத்திருக்கிறார்.

    கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் என்.கே.கண்டி. ஆஸ்திரேலியாவில் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுத்தது போல் தெரியவில்லை, அந்தளவிற்கு காட்சியமைப்பை கொடுத்திருக்கிறார். இயக்குனர் என்.கே.கண்டி, இயக்கியது மட்டுமில்லாமல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து கவர்ந்திருக்கிறார். 

    டே நைட் படக்குழு

    அரவிந்தின் ஒளிப்பதிவும் அரி சென்னின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக ஆஸ்திரேலியாவின் அழகை அரவிந்தின் கேமரா அழகாக படம் பிடித்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘டே நைட்’ பட்ஜெட் திரில்லர்.
    ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் இடம்பெறும் கிளிக்கி என்கிற மொழிக்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது.
    பாகுபலி படத்தில் வில்லன் கூட்டமான காளகேயர்கள் பேசும் மொழி மிகவும் வித்தியாசமாக இருக்கும். படத்துக்கு தமிழ் வசனம், பாடல்கள் எழுதிய மதன் கார்க்கி இதற்காகவே புது மொழியை கண்டுபிடித்து அதை படத்தில் பயன்படுத்தினார். இப்போது இந்த மொழியை அனைவரும் கற்றுக்கொள்ளும் வகையில் தனி இணையதளம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். 

    மதன் கார்க்கி

    கிளிக்கி என்ற இந்த மொழிக்காக 3000 வார்த்தைகளை உருவாக்கி அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இந்த இணையதளத்தை இயக்குனர் ராஜமவுலி தொடங்கி வைத்தார். பாகுபலி படத்திற்கு பின் ராஜமவுலி தற்போது ஆர்.ஆர்.ஆர். படத்தை இயக்கி வருகிறார். இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீசாக உள்ளது.
    கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
    நடிகர் அதர்வா தற்போது இயக்குனர் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமம், கொடி போன்ற படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். குடும்பம் மற்றும் உறவுகளை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. கோபி சுந்தர் இசையமைக்கும் இப்படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார்.

    தள்ளிப்போகாதே பட போஸ்டர்

    இப்படத்தில் அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், அனுபமா பரதநாட்டிய டான்சராகவும் நடிக்கிறார்கள். இந்நிலையில், இப்படத்தின் நாயகி அனுபமா பரமேஸ்வரனின் பிறந்தநாளான இன்று படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு “தள்ளிப்போகாதே” என பெயரிடப்பட்டுள்ளது.
    வரதட்சணை கொடுமையால் சினிமா பாடகி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கன்னட சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்தவர் சுஷ்மிதா ராஜன் (26). எம்.பி.ஏ பட்டதாரியான இவர் கன்னட திரைப்படங்களில் பின்னணி பாடல்கள் பாடியுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சாப்ட்வேர் என்ஜினியரான சரத்குமார் என்பவரை சுஷ்மிதா திருமணம் செய்து கொண்டார். இருவரும் குமாரசாமி லே அவுட்டில் வசித்து வந்தனர்.

    இவர்களுடன் சரத்குமாரின் பெரியம்மா வைதேகி, சகோதரி கீதா ஆகியோர் வசித்து வந்தனர். கருத்து வேறுபாடு தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. குறிப்பாக சரத் மற்றும் அவரது குடும்பத்தினர் தரப்பில் வரதட்சணை கேட்டு அதிகளவு கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் மனதளவிலும், உடல் அளவிலும் சுஷ்மிதா மிகவும் பாதிக்கப்பட்டார்.

    நேற்று முன்தினம் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கணவனிடம் கோபித்துக் கொண்டு, அன்னபூர் னேஸ்வரிநகர் மாலகாலாவில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று தூக்கம் வருவதாக கூறிவிட்டு அறைக்கு சென்றவர் அதிகாலை வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. வழக்கமாக சுஷ்மிதா தாமதமாகத்தான் எழுந்திருப்பார் என்று நினைத்து தாய் மற்றும் சகோதரன் இருந்துவிட்டனர். 

    பின்னர் தங்கள் மொபைல்போனை எடுத்து பார்த்தபோதுதான், அதில் சுஷ்மிதா அனுப்பியிருந்த தற்கொலை கடிதம் இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது, சுஷ்மிதா தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். இது குறித்து தாய் மற்றும் சகோதரரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் தங்கள் வாட்ஸ் அப்பிற்கு வந்த தற்கொலை கடிதம் தொடர்பான மெசேஜை எடுத்து காட்டினர். 

    கணவருடன் சுஷ்மிதா

    அதில் சுஷ்மிதா கூறியிருப்பதாவது:- அம்மா என்னை மன்னித்துவிடு. நான் செய்த தவறுக்கு நானே தண்டனை அனுபவித்து விட்டேன். எனது கணவர் அவரது பெரியம்மா வைதேகியின் பேச்சை கேட்டு தொடர்ந்து வரதட்சணை தொல்லை கொடுத்து வந்தார். இதற்கு கணவனின் சகோதரி கீதாவும் காரணம். அனை வரும் ஒன்று சேர்ந்து என்னை மனதளவிலும், உடல் அளவிலும் வேதனைப்படுத்தி விட்டனர். 

    பல முறை நான் அவர்களின் காலில் விழுந்தும் என்னை விடவில்லை. இந்த கொடுமை தாங்காமல் அவர்கள் வீட்டில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. பிறந்த வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டால் தான், முறையான ஆதாரங்கள் கிடைக்கும் என்று கருதி நான் நமது வீட்டில் தற்கொலை செய்து கொண்டேன். இந்த விபரீத முடிவால் நான் உனது அன்பை பெற முடியாதவளாகி விட்டேன். 

    என்னுடைய இந்த தற்கொலைக்கு காரணமான அவர்களை சும்மா விட்டுவிடாதீர்கள். அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுங்கள். அப்போதுதான் எனது ஆத்மா சாந்தியடையும். இறுதியாக உங்களை சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என்னை நமது சொந்த ஊரிலேயே புதைத்து விடுங்கள். இல்லையென்றால் எரித்து விடுங்கள். ஆனால் என்னை வேதனைபடுத்தியவர்களை சும்மா விட்டுவிடாதீர்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    சுஷ்மிதாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கணவன் சரத், அவரது பெரியம்மா வைதேகி, சகோதரி கீதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசார் அவர்களை தேடியபோது, 3 பேரும் மாயமாகி விட்டனர். தனிப்படை போலீசார் அவர்களை தேடிவருகின்றனர்.
    மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை இணைந்துள்ளார்.
    மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், அசோக் செல்வன் உள்ளிட்ட பலரும் நடித்துவருகின்றனர். அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுவதாக இருக்கும் சூழலில், இந்த படத்தில் இந்தி, தெலுங்கு திரையுலகங்களில் புகழ்பெற்ற சோபிதா துலிபலா இணைந்திருக்கிறார். இந்த தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோபிதா அறிவித்திருக்கிறார்.

    சோபிதா துலிபலா

    ராமன் ராகவ் 2.0, மூதோன், த பாடி ஆகிய திரைப்படங்களின் மூலம் புகழ்பெற்ற சோபிதாவுக்கு தென் இந்திய சினிமாவிலும் நல்ல வரவேற்பு இருந்தது. பெரும்பாலும் அனுராக் காஷ்யப்புடன் தொடர்புள்ள படங்களில் மட்டுமே சோபிதா தலைகாட்டுவார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இணைந்ததன் மூலம் தமிழ்த் திரையுலகிலும் சோபிதா வரவிருக்கிறார்.
    சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
    விஜய் நடித்த ‘பிகில்’ படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் மற்றும் சினிமா பைனான்சியரான மதுரை அன்பு என்கிற அன்புச்செழியன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகம் என 38 இடங்களில் வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது கணக்கில் காட்டப்படாத ரூ.77 கோடி ரொக்கம், பல்வேறு சொத்து ஆவணங்கள் மற்றும் நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து அவர்கள் 3 பேருக்கும் வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் 3 நாட்களுக்குள் அவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது. கடந்த 11-ந்தேதி மாலை நடிகர் விஜய் மற்றும் அன்புச்செழியனின் ஆடிட்டர்கள் வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரிகளை சந்தித்து ஆவணங்களை சமர்ப்பித்து விளக்கம் அளித்தனர்.

    அன்புச்செழியன்

    அதன் தொடர்ச்சியாக மறுநாளும் அவர்களின் ஆடிட்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியும், கல்பாத்தி அகோரத்தின் மகளுமான அர்ச்சனா கல்பாத்தி நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு அலுவலகத்தில் ஆடிட்டருடன் நேரில் ஆஜரானார். அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    ‘பிகில்’ திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர் களுக்கு வழங்கப்பட்ட ஊதியம், படத்துக்கான செலவுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அர்ச்சனா கல்பாத்தியும், அவரது ஆடிட்டரும் விளக்கம் அளித்தனர்.

    இந்நிலையில் பைனான்சி யர் அன்புசெழியன் இன்று சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். வருமான வரித்துறை சோதனையின் போது கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம், சொத்து ஆவணங்கள் குறித்து அவர் விளக்கம் அளித்தார். வரி ஏய்ப்பு தொடர்பாக ரூ.165 கோடி வருவாய்க்கு அவர் வரி கட்டுவதற்கு ஒப்புக் கொண்டுள்ளார் என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பொம்மை’ படத்தின் முன்னோட்டம்.
    இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் உருவாகி வரும் படம் ‘பொம்மை’. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. சரியாக திட்டமிட்டதினால் இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்பார்த்த நேரத்தில் வேகமாகவும் சிறப்பாகவும் நிறைவு பெற்றுள்ளது என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.

    ஏஞ்சல் ஸ்டுடியோஸ் எம்.எச். எல்.எல்.பி வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன் டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ் டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

    படத்தொகுப்பு - ஆண்டனி, கலை கே.கதிர், பாடல்கள் - கார்க்கி, நடனம் - ராஜு சுந்தரம், பிருந்தா, சண்டைப்பயிற்சி - கனல் கண்ணன், வசனம் - எம்.ஆர்.பொன் பார்த்திபன், காஸ்டியும் டிசைனர் - சுபஶ்ரீ கார்த்திக், பூர்த்தி ப்ரவீன், ஸ்டில்ஸ் - ராமசுப்பு, எக்சிகியுடிவ் புரொடுயுசர் - நிர்மல் கண்ணன் மேக்கப் - மாரி

    25 வருட திரைப்பயணத்தை தனது ரசிகர்களுடன் மாஃபியா பட விழாவில் நடிகர் அருண் விஜய் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.
    துருவங்கள் 16 படம் மூலம் மிகவும் பிரபலமான இயக்குனர் கார்த்திக் நரேன். இவர் தற்போது எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் ‘மாஃபியா’.  லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் பிப்ரவரி 21ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

    இச்சந்திப்பில் அருண் விஜய்யின் 25 வருட சினிமா பயணத்தை பாராட்டும் வகையில் அவரது ரசிகர்கள் மேடையில் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

    அதன்பின் நடிகர் அருண் விஜய் பேசும்போது, ‘25 வருடம் சினிமாவில், பத்திரிக்கையாளர்களின் எழுத்து தான் என்னை வடிவமைத்தது. 25 வருடம் எனக்கு நிறைய பேர் ஆதரவாக இருந்தார்கள், எனது குடும்பம், ரசிகர்கள் எல்லோரும் பெரிதும் ஆதரவாக உள்ளார்கள். 25வது வருடத்தில் எனது முதல் படம் “மாஃபியா”. 

    அருண் விஜய்

    இயக்குனர் கார்த்திக் பார்வையில் என்னை எப்படி காட்டப்போகிறார் என ஆர்வமாக இருந்தேன். கார்த்திக்கை பற்றி எல்லோரும் சொல்லிவிட்டார்கள். ஒரு படத்தை எப்படி வழங்க வேண்டும் என்பதில் படு தெளிவாக இருக்கிறார். அவர் இன்னும் பெரிய அளவில் வர வேண்டும். இவ்வளவு சீக்கிரத்தில் படமெடுக்க லைகா மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்கள். 

    பிரசன்னாவுடன் வேலை பார்த்தது மிகப்பெரிய சந்தோஷம். மிக அர்ப்பணிப்பு மிக்க நடிகர். இந்தப்படத்தில் நிறைய புது விஷயங்கள் முயற்சி செய்துள்ளேன். தமிழ் பேசும் அழகான ஹீரோயின் பிரியா பவானி சங்கர்’ என்றார்.
    இந்திய கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சி.எஸ்.கே. அணியின் வீரருமான ஹர்பஜன் சிங், ஆக்‌ஷன் கிங் அர்ஜுனுடன் மோத இருக்கிறார்.
    கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தீவிர ரசிகர்களை கொண்ட சி.எஸ்.கே. அணியின் வீரருமான ஹர்பஜன் சிங், தற்போது நடிகராக அவதாரம் எடுத்து வருகிறார். சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தில் நடிகராகவும் அறிமுகமாகி உள்ளார். சந்தானம் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார்.

    அடுத்ததாக ஹர்பஜன் சிங் ‘பிரண்ட்ஷிப்’  என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர். பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

    அர்ஜுன்

    தற்போது இந்த படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதில் அர்ஜுன், ஹர்பஜன் சிங்கிற்கு வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.
    விவேக் நடிப்பில் கடந்த வருடம் வெளியான வெள்ளைப்பூக்கள் திரைப்படத்தின் 2ம் பாகம் உருவாக இருக்கிறது.
    தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் வந்து வரவேற்பை பெற்றுள்ளன. ரஜினிகாந்தின் எந்திரன், கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்தின் பில்லா இரண்டாம் பாகங்கள் வந்தன. சூர்யாவின் சிங்கம் படம் 3 பாகங்கள் வெளியானது. சாமி, சண்டக்கோழி, மாரி, கலகலப்பு, காஞ்சனா, திருட்டுப்பயலே உள்ளிட்ட மேலும் பல படங்களின் 2-ம் பாகங்கள் வந்தன.

    தற்போது இந்தியன், சதுரங்க வேட்டை ஆகிய படங்களின் 2-ம் பாகங்கள் தயாராகி வருகிறது. விஜய்யின் துப்பாக்கி, அஜித்குமாரின் வேதாளம் படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் யோசனையும் உள்ளது. இந்த நிலையில் விவேக்கின் வெள்ளைப்பூக்கள் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது.

    விவேக்

    இந்த படம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. விவேக் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அமெரிக்காவில் இருக்கும் மகன் வீட்டுக்கு செல்லும் விவேக் அங்கு நடக்கும் மர்ம கொலைகளை துப்பு துலக்கி குற்றவாளிகளை எப்படி கண்டு பிடிக்கிறார் என்பது கதை.

    பெரும்பகுதி படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்தி இருந்தனர். விவேக் இளங்கோவன் இயக்கி இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை எழுதும் பணியில் இயக்குனர் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த பணிகள் முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் நடிகர் விவேக் கூறினார்.
    தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது தெலுங்கு ரசிகர்களை கவர இருக்கிறார்.
    ஆந்திரா, தெலுங்கானாவில் தமிழ் படங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. தெலுங்கு நடிகர்கள் படங்களுக்கு இணையாக வசூல் குவிக்கின்றன. இதனால் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் தெலுங்கு மொழியிலும் வெளியிடுகிறார்கள்.

    தற்போது சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தையும் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். இந்த படத்தை இரும்புத்திரை படத்தை எடுத்து பிரபலமான மித்ரன் இயக்கினார். நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் அர்ஜுன், இந்தி நடிகர் அபய் தியோல், இவானா ஆகியோரும் நடித்து இருந்தனர். அறிவியல் கண்டுபிடிப்புகளில் சாதிக்கும் மாணவர்களின் திறமை எப்படி அழிக்கப்படுகிறது என்ற திரைக்கதையில் தயாராகி இருந்தது.

    சிவகார்த்திகேயன்

    இதில் சிவகார்த்திகேயன் சூப்பர் மேன் கதாபாத்திரத்தில் வந்தார். இந்த படத்துக்கு தெலுங்கில் சக்தி என்று பெயர் வைத்துள்ளனர். எல்லா மொழிக்குமான கதை என்பதால் தெலுங்கில் வெளியிடுகிறோம் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது.
    ×