என் மலர்
சினிமா

ஹர்பஜன் சிங்
என்ன புது மாப்பிள்ளை, பால்கோவா மாதிரி இருக்கீங்க - ஹர்பஜன் சிங்
என்ன புது மாப்பிள்ளை, பால்கோவா மாதிரி இருக்கீங்க என்று கிரிக்கெட் வீரரும், தற்போது நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் ஹர்பஜன் சிங் பிரபல நடிகரை பற்றி கூறியிருக்கிறார்.
கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தீவிர ரசிகர்களை கொண்ட சி.எஸ்.கே. அணியின் வீரருமான ஹர்பஜன் சிங், தற்போது நடிகராக அவதாரம் எடுத்து வருகிறார். இவர் ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இதில் பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும் அர்ஜுன் இப்படத்தில் நடிப்பதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தனர். தற்போது காமெடி நடிகர் சதீஷ் இப்படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சதீஷ் படத்தில் இணைந்திருப்பதற்கு ‘புது மாப்பிள்ளை @actorsathish எப்பிடி இருக்கீங்க. தம்பி நல்லா சிரிச்ச முகம். பாக்க அப்பிடியே ஸ்ரீவல்லிபுத்தூர் பால்கோவா மாதிரி இருக்கீங்க. படத்துல காமெடி கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும். நல்லா நெருக்கி செய்வோம் #Friendship’ என்று பதிவு செய்திருக்கிறார்.

இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர்.
Next Story






