என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘கோப்ரா’ படக்குழுவினரை தாக்கி இருப்பதாக இயக்குனர் கூறியிருக்கிறார்.
    டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’  படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

    இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

    இயக்குனர் அஜய் ஞானமுத்து ட்விட்

    உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் நிலவி வரும் நிலையில், கோப்ரா படக்குழு எதற்கும் அஞ்சாமல் ரஷ்யாவில் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் படக்குழுவினரை தாக்கியுள்ளதாக படத்தின் இயக்குனர் கூறியிருக்கிறார். கொரோனா வைரஸ் பரவி வருவதால் படப்பிடிப்பை நிறுத்தும்படி இந்திய அரசு அறிவித்திருப்பதால் இப்படி கூறியிருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.
    பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட சிவகார்த்திகேயன் எங்களுக்கு ஏக்கங்கள் நிறைய உண்டு என்று பேசியிருக்கிறார்.
    பத்ரி இயக்கத்தில் ரியோ, ரம்யா நம்பீசன், ரோபோ ஷங்கர், தங்கதுரை, விஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிளான் பண்ணி பண்ணனும்'. யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது: ''பத்ரி சாருடைய 'பாணா காத்தாடி' படமும், பாடல்களும் ரொம்பவே பிடிக்கும். 

    அவரும் யுவன் சாரும் கூட்டணி என்றாலே அதுவொரு தனி உணர்வு. அவர் இதுவரை செய்த படங்களை விட, இந்தப் படம் பெரிய வெற்றி பெற வேண்டும். இந்த மேடையில் இருக்கும் அனைவருமே தொலைக்காட்சி, சினிமா இரண்டிலுமே பணிபுரிந்தவர்கள். ஏனென்றால் தொலைக்காட்சியில் இருக்கும்போது சினிமா மேடைகள் கிடைக்குமா என ஏங்கியது உண்டு. 

    படக்குழுவினருடன் சிவகார்த்திகேயன்

    தொலைக்காட்சியில் இருந்தவர்கள் அனைவருமே இந்த மேடையில் இருப்பது கூடுதல் சந்தோஷம். எங்களுக்கு ஏக்கங்கள் நிறைய உண்டு. அதெல்லாம் இந்த மேடையில் பார்ப்பதால் கூடுதல் சந்தோஷம் தருகிறது. ரம்யா நம்பீசன் படம் பண்ணுகிறார், பாடல்கள் பாடுகிறார் என்பதைத் தாண்டி அவர் இயக்கிய குறும்படம் பார்த்தேன். அது அதிகமான தாக்கத்தைக் கொடுத்தது. 

    அந்தக் குறும்படம் பார்க்கும் போது யாரிடம் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயங்கரமான படைப்பு வரும் என உணர்ந்தேன். கூடிய சீக்கிரம் ரம்யா நம்பீசனை இயக்குநராகவும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.
    ராம்தேவ் இயக்கத்தில் மீரான், மேகனா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பழகிய நாட்கள்’ படத்தின் முன்னோட்டம்.
    ராம்தேவ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பழகிய நாட்கள்’. மீரான் என்ற புதுமுகம் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மேகனா நடித்துள்ளார்.
     மேலும் இப்படத்தில் பிரபல நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷ், இயக்குனர் ஸ்ரீநாத், வின்சென்ட் ராய், சுஜாதா, நெல்லை சிவா, சிவக்குமார், மங்கி ரவி ஆகியோர் நடித்து உள்ளனர்.

    மேகனா, மீரான்

    இளம் வயதில் ஏற்படும் காதல் எவ்வாறு முடிவுறுகிறது. அதே பக்குவப்பட்ட காதல் அவர்களின் வாழ்வியலை எவ்வாறு உறுதிப்படுத்துகிறது என்பதை கூறும் காதல் கதை தான் இந்த படம்.
     சண்டைக் காட்சிகள் இன்றி உருவாகி இருக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராம்தேவ் இயக்கி உள்ளார். ஜான் ஏ. அலெக்ஸிஸ் - ஷேக் மீரா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிலிப் விஜயக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
    சினிமா துறையில் நடிகைகளுக்கு முன்பு இல்லாத மரியாதை இப்போது கிடைக்கிறது என நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.
    தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே, இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “தற்போது நிறைய பெண்கள் சினிமாவை ஒரு தொழிலாக செய்ய தைரியமாக வருகிறார்கள். முந்தைய காலத்தில் நடிகைகளை மோசமாக பார்த்தனர். இந்த தொழிலுக்கு மரியாதை இல்லாமல் இருந்தது. பெரிய குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு எல்லா தகுதியும் இருந்தாலும் நடிப்பதற்கு பயந்தனர்.

    ஆனால் இப்போது நடிகர்-நடிகைகளை பெருமையாக பார்க்கிறார்கள். வெளியே சென்றால் மரியாதை கொடுக்கிறார்கள். பிடித்த நடிகர், நடிகைகள் என்ன செய்தாலும் அதை பின்பற்ற விரும்புகிறார்கள். நிறைய பெண்கள் வேலையை விட்டுவிட்டு எழுத்தாளராக சினிமா துறையில் வந்து பணியாற்றுகிறார்கள்.

    தீபிகா படுகோனே

    முன்பெல்லாம் கதாநாயகர்களுக்காக கதை எழுதும் நிலைமை இருந்தது. கதாநாயகிகள் என்றால் ஆடிப்பாடுகிறவர்கள், ரசிகர்களுக்கு போரடிக்காமல் இருப்பதற்காக வந்து போகிறவர்கள் என்று நினைத்தார்கள். அது இப்போது மாறி இருக்கிறது. கதாநாயகிகளுக்கு என்று பிரத்யேகமாக கதை எழுதும் காலம் வந்து விட்டது. சினிமா துறை மீது நம்பிக்கை ஏற்பட்டு புதிது புதிதாக நிறைய பேர் சினிமா பக்கம் வர ஆர்வம் காட்டுகிறார்கள். இது ஒரு நல்ல மாற்றம்.”

    இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.
    நடிகைகளை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர் ஒருவருக்கு நீதிமன்றம் 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
    பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின் ஸ்டீன் (67) மீது நடிகை ஏஞ்சலினா ஜூலி உள்பட 80க்கும் மேற்பட்ட நடிகைகள் மற்றும் மாடல் அழகிகள் புகார் கூறினர். இதுபோல் நடிகை ரோஸ் மெக்கோவன், அன்ன பெல்லா உள்ளிட்ட மேலும் பல நடிகைகளும் அவர் மீது செக்ஸ் புகார் கூறினார்கள்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கில் நேற்று தண்டனை அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர் ஹார்வி உடல்நிலை சரியில்லாமல் இருசக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். ஹார்வியுடன் அவருடைய வக்கீலும் வந்தார். 

    ஹார்வி வெயின் ஸ்டீன்

    வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஹார்வி வெய்ன்ஸ்டீன் உடல்நிலை சரியில்லாதவர். எனவே இவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்க வேண்டும். இதுவே அவருக்கு ஆயுள் தண்டனை போல் இருக்கும் என்று ஹார்வி தரப்பு வக்கீல்கள் வாதாடினார்கள்.

    ஆனால் நீண்ட காலமாக பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல்கள் வாதாடினார். விசாரணையின் முடிவில் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
    சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
    ‘பிகில்’ படத்துக்காக பெற்ற சம்பளம் குறித்தும், சொத்து மதிப்பு குறித்தும் நடிகர் விஜய் வீட்டில் கடந்த மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும், சொத்து முதலீடு குறித்தும் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடம் வருமான வரி அதிகாரிகள் 24 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    விஜய்

    இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள விஜய்யின் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீரென ஆய்வு நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமாரிடம் நடந்த விசாரணையை தொடர்ந்து, இன்று விஜய் வீட்டில் 8 பேர் அடங்கிய வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
    சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திற்காக நடிகை மீனா உடல் எடையை குறைத்துள்ளார்.
    நடிகை மீனா 1991-ம் ஆண்டு வெளியான `என் ராசாவின் மனசிலே' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் ரஜினி, கமல், விஜய், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் போன்ற உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். திருமணத்துக்கு பின்னர் படங்கள் நடிப்பதை குறைத்துக்கொண்டார். தற்போது சிவா இயக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கிறார். 

    மீனா

    இப்படத்தில் அவர் ரஜினியின் மனைவியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்காக அவர் தனது உடல் எடையை குறைத்துள்ளார். ஸ்லிம்மான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன் மீனா, ரஜினியுடன் எஜமான், வீரா, முத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது 24 வருடங்களுக்குப் பின் மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    நடிகர்களின் கால்ஷீட் இல்லாத காரணத்தால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    ‌ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். 22 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க கமல், ‌ஷங்கர் இருவரும் திட்டமிட்டனர். லைகா நிறுவனம் தயாரிக்க படப்பிடிப்பு தொடங்கியது. கமலுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தமானார்கள். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கியது.

    பாராளுமன்ற தேர்தலில் கமல் பிரசாரம் காரணமாக இடையில் சிலகாலம் தடை பட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த பிப்ரவரி 1-ந் தேதி படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். படப்பிடிப்பில் நடந்த இந்த திடீர் விபத்து காரணமாக படப்பிடிப்பு முழுமையாக பாதிக்கப்பட்டு பாதியில் நிற்கிறது. இந்த விபத்து காரணமாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை நடைபெற்று வருகிறது. ‌ஷங்கர், கமல்ஹாசன் இருவரையும் விசாரித்தது பரபரப்பானது.

    இவர்கள் தவிர விபத்து நடந்தபோது படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். இயக்குனர், தயாரிப்பாளர், ஹீரோ உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை நடப்பதால் படப்பிடிப்பை குறிப்பிட்ட தேதியில் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    ஷங்கர்

    இதற்கிடையே விபத்துக்கு தயாரிப்பு நிறுவனம் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று லைகாவுக்கு கமல்ஹாசன் கடிதம் எழுத அதற்கு லைகா நிறுவனம், இயக்குனரும், ஹீரோவும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பதில் கடிதம் அனுப்பியது. இதனால் கமலுக்கும் லைகா நிறுவனத்துக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் பரவுகிறது. 

    ஏற்கனவே நடிகர், நடிகைகளிடம் பெறப்பட்ட கால்ஷீட் தேதி முடிந்துவிட்டதால் மீண்டும் அவர்களிடம் புதிதாக கால்ஷீட் பெற்று அதை முறைப்படுத்திய பிறகே முழுமையான படப்பிடிப்பு தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. விசாரணை முழுமையாக முடியும் வரை படப்பிடிப்பை தொடங்கி நடத்துவதும் சிரமம். 

    திடீர் என்று படக்குழுவினர் விசாரணைக்கு அழைக்கப்படலாம். இதனால் இந்தியன் 2 திட்டமிட்ட காலத்தில் வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. திடீரென்று சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டால் கமல் அரசியல் பணிகளை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் அப்போது இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்குவதற்கான சூழல் மேலும் மோசமடையும் என்று தமிழ் சினிமாவில் பேசப்படுகிறது.
    அஜித் நடிப்பில் கடந்தாண்டு வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஒருவர், தொழிலதிபராக அவதாரம் எடுத்துள்ளார்.
    இவன் தந்திரன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். பின்னர் மாதவன், விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா, அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரையுலகிலும் ஸ்ரத்தா பரபரப்பாக இயங்கிவருகிறார். அடுத்ததாக விஷாலுக்கு ஜோடியாக சக்ரா படத்தில் நடித்து வருகிறார். 

    ஸ்ரத்தா ஸ்ரீநாத்

    தற்போது தொழில் அதிபராக அவதாரம் எடுத்துள்ள ஸ்ரத்தா ஸ்ரீநாத், சென்னை வேளச்சேரியில் உள்ள மாலில் ஓட்டல் ஒன்றை திறந்துள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர் “எனது ஓட்டல் சிறியதாக இருந்தாலும் கண்டிப்பாக நல்ல உணவு இங்கே கிடைக்கும்” என்று கூறியுள்ளார். அவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள புதிய படத்தில் நடிகர் வடிவேலு தடையை மீறி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சிம்புவை மிஷ்கின் சந்தித்து கதை சொன்னதாகவும், சிம்புவுக்கும் கதை பிடித்துப்போய் நடிக்க சம்மதம் சொல்லி இருப்பதாகவும், மாநாடு படத்தை முடித்துவிட்டு மிஷ்கின் படத்தில் நடிப்பார் என்றும் தகவல் பரவி உள்ளது.

    இந்த படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. வடிவேலு படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. இயக்குனர் ஷங்கர் தயாரித்த ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் நடிக்க வடிவேலு மறுத்ததால் படத்துக்காக செலவிட்ட ரூ.10 கோடியை வடிவேலு ஈடுகட்ட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    சிம்பு, மிஷ்கின்

    இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தினர் ஷங்கர் படத்தை முடித்து கொடுக்கும்படி வடிவேலுவை நிர்ப்பந்தித்தனர். அதை ஏற்க அவர் மறுத்து விட்டார். இதையடுத்து வடிவேலு படங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என்று பட அதிபர் சங்கம் அறிவித்தது. இதனால் புதிய படங்களுக்கு வடிவேலுவை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்யவில்லை.

    சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருக்கிறார். இந்த நிலையில்தான் சிம்பு படத்தில் அவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் வடிவேலுக்கு எதிரான தடை நீக்கப்படவில்லை என்றனர்.
    இரண்டு முறை சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
    பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் ஹங்ஸ் தனக்கு கொரோனா இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது மனைவி ரீட்டாவும் நானும் பட தயாரிப்பு பணிகளுக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தோம். அங்கு சென்றதும் எனக்கு லேசான உடல் சோர்வு, சளி தொல்லை இருந்தது. அதேபோல் எனது மனைவிக்கும் காய்ச்சல் ஏற்பட்டது. 

    டாம் ஹங்ஸின் அறிக்கை

    இதையடுத்து நாங்கள் இருவரும் மருத்துவ பரிசோதனை செய்ததில் எங்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளோம் என பதிவிட்டுள்ளார். இவர் பாரஸ்ட் கம்ப் மற்றும் பிலாடெல்பியா ஆகிய இரு படங்களுக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    தமிழில் சிம்புவுடன் சிலம்பாட்டம் படத்தில் நடித்த சனாகான், காதலர் என்னை அடித்து உதைத்து இருக்கிறார் என்று மீண்டும் புகார் கூறியிருக்கிறார்.
    தமிழில் சிம்புவுடன் சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்த சனாகான், இந்தி திரையுலகிலும் அதிக படங்களில் நடித்து பிரபலமாக இருக்கிறார். இவருக்கும், நடன இயக்குனர் மெல்வின் லூயிசுக்கும் காதல் மலர்ந்து சில மாதங்கள் ஜோடியாக சுற்றினார்கள். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

    சனாகான் கூறும்போது, “நான் காதலித்த மெல்வின் ஏமாற்றுக்காரர். மோசடி பேர்வழி. நடிகைகள் உள்ளிட்ட சில பெண்களிடமும் அவருக்கு தகாத தொடர்பு இருப்பதை அறிந்து அதிர்ச்சியாகி காதலை முறித்துக்கொண்டேன்” என்றார். சனாகான் தன்மீது தொடர்ந்து அவதூறு கூறி பிளாக்மெயில் செய்கிறார் என்று மெல்வின் குற்றம் சாட்டி உள்ளார்.

    இதற்கு பதில் அளித்து சனாகான் கூறியிருப்பதாவது:-

    காதலருடன் சனாகான்

    “நான் பிளாக்மெயில் செய்யவில்லை. காதலை முறித்தபோது அவர் முன்னால் தைரியமாக நின்றேன். அப்போது என்னை சமாதானம் செய்து மனதை மாற்ற முயன்றார். நான் அவரது பேச்சை கேட்கவில்லை. அவர் என்னை அடித்து உதைத்து இருக்கிறார். அப்போது எனது தலையில் ரத்தம் வழிந்தது. முகத்திலும் அடித்து காயப்படுத்தினார். அந்த புகைப்பட ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது.

    என்னை அடித்து சித்ரவதை செய்த கொடுமைகளை அம்பலப்படுத்துவேன் என்று அவரிடம் தெரிவித்தேன். அதை பதிவுசெய்து வைத்து நான் பிளாக்மெயில் செய்வதாக குறை சொல்கிறார்.”

    இவ்வாறு சனாகான் கூறினார்.

    ×