என் மலர்
சினிமா

ஹார்வி வெயின் ஸ்டீன்
நடிகைகளை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை
நடிகைகளை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர் ஒருவருக்கு நீதிமன்றம் 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின் ஸ்டீன் (67) மீது நடிகை ஏஞ்சலினா ஜூலி உள்பட 80க்கும் மேற்பட்ட நடிகைகள் மற்றும் மாடல் அழகிகள் புகார் கூறினர். இதுபோல் நடிகை ரோஸ் மெக்கோவன், அன்ன பெல்லா உள்ளிட்ட மேலும் பல நடிகைகளும் அவர் மீது செக்ஸ் புகார் கூறினார்கள்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கில் நேற்று தண்டனை அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர் ஹார்வி உடல்நிலை சரியில்லாமல் இருசக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். ஹார்வியுடன் அவருடைய வக்கீலும் வந்தார்.

வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஹார்வி வெய்ன்ஸ்டீன் உடல்நிலை சரியில்லாதவர். எனவே இவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்க வேண்டும். இதுவே அவருக்கு ஆயுள் தண்டனை போல் இருக்கும் என்று ஹார்வி தரப்பு வக்கீல்கள் வாதாடினார்கள்.
ஆனால் நீண்ட காலமாக பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல்கள் வாதாடினார். விசாரணையின் முடிவில் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story






