search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சனாகான்"

    • சிலம்பாட்டம் படத்தின் மூலம் பிரபலமானவர் சனாகான்.
    • இவர் முஃப்தி அனஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, சிலம்பாட்டம், தலைவன், அயோக்யா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சனா கான். சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துள்ளார். தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்தார்.


    முஃப்தி அனஸ் -சனாகான்

    இதையடுத்து கடந்த 2020-ஆம் ஆண்டு நடிகை சனா கானுக்கு குஜராத் மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய அறிஞரான முஃப்தி அனஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களும், காணொலிகளும் சமூக வலைதளத்தில் வைரலாகி இருந்தது. திருமணத்திற்கு பின் நடிகை சனாகான் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எதிலுமே பங்கு பெறாமல் தன்னுடைய குடும்ப வாழ்வில் ஈடுபட்டு வருகிறார். இவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.


    முஃப்தி அனஸ் -சனாகான்

    இந்நிலையில் சனா கானை அவருடைய கணவர் வலுக்கட்டாயமாக இழுத்து செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் மும்பையில் நடந்த இஃப்தார் விருந்தில் முஃப்தி அனஸ் மற்றும் சனா கான் கலந்து கொண்டிருந்தார். அப்போது சனா கான் கையை பிடித்து அவரது கணவர் வேகமாக இழுத்து சென்றிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கும் பெண்ணை இப்படியா? இழுத்து செல்வது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


    சனாகானை இழுத்து சென்ற கணவர்

    இதைத்தொடர்ந்து, இதற்கு விளக்கம் கொடுத்துள்ள சனா கான் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், எனக்காக கவலைப்பட்டதற்கு நன்றி. எங்கள் கார் டிரைவரை எங்களால் அழைக்க முடியவில்லை. நான் அப்பகுதியில் நின்றதால் எனக்கு வியர்த்துக் கொட்டியது. இதனால் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால் அவர் என்னை அப்பகுதியில் இருந்து விரைவாக அழைத்துச் செல்லும் நோக்கில் அப்படி செய்தார் என்று கூறப்படுகிறது.

    ×