என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ், தெலுங்கில் மிகவும் பிரபலமான ஸ்ருதிஹாசன், தற்போது தெலுங்கில் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
'பிங்க்' தெலுங்கு ரீமேக்கின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு திரும்பியுள்ளார் பவன் கல்யாண். ஸ்ரீராம் வேணு இயக்கி வரும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பவன் கல்யாண். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.
இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்காகத் தயாராகி வருகிறது படக்குழு. இதில் நிவேதா தாமஸ், அஞ்சலி உள்ளிட்டோர் பவன் கல்யாணுடன் நடித்துள்ளனர். 'வக்கீல் சாப்' என்று பெயரிடப்பட்டுள்ள தெலுங்கு ரீமேக்கின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் பெரும் வைரலானது.

தற்போது இந்தப் படத்தில் பவன் கல்யாணுக்கு மனைவியாக சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். தமிழில் வெளியான 'பிங்க்' ரீமேக்கான 'நேர்கொண்ட பார்வை' படத்தில் இந்தக் கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடித்திருந்தார்.
அரசியலில் தனது நிலைப்பாடு குறித்து எடுத்துக்கூறிய நடிகர் ரஜினிக்கு, இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனது நாற்பது ஆண்டுகால நட்பில், இன்று இந்த சமூகம் உயர்ந்த உள்ளம், உயர்ந்த மனிதன், உயர்ந்த கலைஞன், சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் ‘ரஜினி’ என்ற மந்திரத்தை விட, ‘ரஜினி’ என்ற மனிதம் எப்படி வெளிப்படும் என்று நான் முன்பே அறிந்திருக்கிறேன். இன்று அந்த மனிதம் வெளிப்படையாக, மக்களுக்கு நன்மை பயக்கும் புது கொள்கைகளை வரவேற்கிறது.
தமிழன் தான் ஆட்சிக்கு தலைசிறந்தவன் என்ற ரஜினியின் நாற்காலி கொள்கை, தமிழனின் வரலாறு, ஆகியவற்றின் மூலம் பேராசை என்ற சமூக விலங்கை உடைப்பதும் ரஜினி என்ற ஓர் உண்மைக்கே சாரும். ரஜினியின் அரசியல் கொள்கை, அரசியலாக அல்லாமல் தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் நன்மை பயக்கும் விதமாக, சமயுக அரசியலில் யாரும் சிந்திக்காத ஒன்றாக, அன்று நான் அறிந்தவை, இன்று எம் தமிழக மக்களுக்கு ஓர் விதையாக கூட இருக்கலாம்.

ஆருயிர் நண்பன் என்பதை விட, சிறந்த மனிதனாக, ரஜினியின் ‘நாணய அரசியலில்’ அதன் முதல் பக்கத்திலேயே ஓர் தமிழனை ‘அரசனாக’ ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவேன் என்ற ஓர் மனிதத்தை, கொள்கைகளாக பார்க்காமல் அதை ரஜினியாக, ஓர் அற்புத மனிதனாகவே நான் பார்க்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுமுக இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள கமலி from நடுக்காவேரி படத்தின் முன்னோட்டம்.
அபுண்டு ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகி வரும் படம் கமலி from நடுக்காவேரி. இதில் கமலி என்ற கனமான கதாபாத்திரத்தில் ‘கயல்’ ஆனந்தி நடித்திருக்கிறார். மேலும், புது முகம் ரோஹித் செராப், பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், ஶ்ரீஜா பிரியதர்ஷினி, கார்த்தி ஶ்ரீனிவாசன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். தீனதயாளன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜகதீசன் லோகயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

காதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் வயது கல்லூரிக் காலம். நல்ல கல்வி கற்று நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் கனவு ஒருபுறமும், விரும்பியவனை அடையும் காதல் ஒருபுறமும், இருவேறு திசைகளில் இருக்கும் பருவத்தில் இருப்பவள் தான் கமலி. அவள் இந்த இரண்டும் இரண்டையும் அவள் அடைந்தாளா என்பதை தெளிவான திரைக்கதை புதுமையான வசனங்களுடன் உருவாக்கி இருக்கிறார் புதுமுக இயக்குநர் ராஜசேகர்.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா, கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிக்கும் வழிமுறையை கூறியுள்ளார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதால், தற்போது, வெளிநாடுகளில், கட்டிப்பிடித்தோ, கைகளை குலுக்கியோ வரவேற்பதை தவிர்த்து வருகின்றனர். பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, வணக்கத்துக்கு மாறுங்க, என்று வலியுறுத்தி கைகூப்பி வணக்கம் செய்த புகைப்படங்களை மாஷ்அப் வீடியோவாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
It’s all about Namaste 🙏🏻 an old but new way to greet people in a time of change around the world. Please stay safe everyone! pic.twitter.com/fqk12QbD7K
— PRIYANKA (@priyankachopra) March 12, 2020
கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிக்க இது ஒரு வழி என்றும் கூறியுள்ளார். இந்தியர்களின் பாரம்பரியமான வணக்கம் வைக்கும் முறைக்கு உலக நாடுகள் மாறி வருவது நல்ல விஷயம் தான் என்றும், தொற்று நோயாக பரவும் கொரோனா வைரஸிடம் இருந்து தற்காத்துக் கொள்ள இது ஒரு நல்ல யோசனை என்றும் பிரியங்காவின் டுவிட்டுக்கு கீழே அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஐ.கணேஷ் இயக்கத்தில் எஸ்.ஆர்.குணா, காவ்யா மாதவ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கயிறு’ படத்தின் விமர்சனம்.
கிராமத்தில் வசிக்கும் நாயகன் குணா, தந்தை வழியில் பூம் பூம் மாட்டுக்காரராக வந்து குறி சொல்லி வருகிறார். அவர் தவறாக சொல்லிவிட்டதாக ஊர் தலைவர் நாயகனை கண்டிக்கிறார். இதை விட்டுவிட்டு வேறு வேலைக்கு செல்லுமாறு கூறுகிறார். இதனால் மனமுடையும் நாயகன், தனது பூம் பூம் மாட்டுடன் அந்த கிராமத்தை விட்டு வெளியேறி, வேறு ஊருக்கு செல்கிறார்.
செல்லும் இடத்தில், அங்கு பூ வியாபாரம் செய்து வரும் காவ்யா மாதவ் நாயகன் மீது காதல் வயப்படுகிறார். இவர்களின் காதலுக்கு நாயகியின் தாயார் எதிர்க்கிறார். மகளுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையை பார்க்கிறார். ஆனால் நாயகியோ அவரை திருமணம் செய்ய மறுக்கிறார்.

பின்னர் நாயகியின் காதலுக்கு அவரது தாயார் நிபந்தனையுடன் சம்மதம் தெரிவிக்கிறார். நாயகன் பூம் பூம் மாட்டுக்கார தொழிலை கைவிட்டு, வேறு தொழில் செய்ய வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. அதை நாயகன் குணா ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் எஸ்.ஆர்.குணா, பூம் பூம் மாட்டுக்காரராகவே வாழ்ந்திருக்கிறார். தன் மாடு மீது அவர் வைத்திருக்கும் பாசம், ‘கந்தா...கந்தா...’ என்று அழைக்கும் அன்பு, மாட்டை காணாமல் தவிக்கும் உருக்கம் என நடிப்பில் ஜொலிக்கிறார். அவருடன் சேர்ந்து அந்த மாடும் நடித்து இருக்கிறது. நாயகி காவ்யா மாதவ், கிராமத்து பெண் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். ஹலோ கந்தசாமி அவ்வப்போது வந்து சிரிக்க வைக்கிறார்.

இயக்குனர் ஐ.கணேஷ் கதையை விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் விதம் சிறப்பு. வித்தியாசமான கதையை மிக அழகாக கையாண்டுள்ள இயக்குனருக்கு பாராட்டுகள். கிராமத்து யதார்த்தங்களை தன் கதைக்குள் வெகு இயல்பாக கொண்டு வந்து இருக்கிறார். யதார்த்தமான காட்சிகளுடனும், விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் படத்தில், வேகத்தடை போட்டது போல் டூயட்டை வலுக்கட்டாயமாக புகுத்தி இருக்கிறார்.

பாடல்கள் மனதில் பதியவில்லை என்றாலும் பின்னணி இசையில் ஸ்கோர் செய்து விடுகிறார் இசையமைப்பாளர் பிரித்வி. ஜெயன் ஆர் உன்னிதனின் ஒளிப்பதிவு கச்சிதம். கிராமத்து அழகை திரையில் பிரதிபலித்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘கயிறு’ சிறந்த படைப்பு.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், இனி அந்தமாதிரி வேடத்தில் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், தன்னுடைய திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கதாநாயகியாகவும், குழந்தைகளுக்கு அம்மாவாகவும், தங்கையாகவும் நடித்துள்ளார். தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்து மலையாளம், தெலுங்கு என வெவ்வேறு மொழிகளிலும் நடிக்க தொடங்கிவிட்டார்.

அவர் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: சாதிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. அம்மா வேடத்தில் நடித்தால், பிரபல நாயகர்கள் என்னை தவிர்க்கிறார்கள். வயது அதிகமாகி விட்டதாக ரசிகர்கள் நினைக்கிறார்கள். எனவே அம்மாவாக இனிமேல் நடிப்பதில்லை என்று முடிவு செய்து இருக்கிறேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகிறார்.
நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
பிகில் பட சம்பள விவகாரம் தொடர்பாக, கடந்த பிப்ரவரி 5-ந் தேதி நடிகர் விஜய்க்கு சொந்தமான பனையூர், சாலிகிராமத்தில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் படி வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி நடிகர் விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமாரிடம் சில தினங்களுக்கு முன்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர்.

3 வாகனங்களில் வந்த 8-க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சரிபார்த்து ஆய்வில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தி உள்ளதாகவும் பிகில் படத்திற்கு ரூ.50 கோடி, மாஸ்டர் படத்திற்கு ரூ.80 கோடியை விஜய் சம்பளமாக பெற்றுள்ளதாகவும் 2 படங்களின் வருவாய்க்கும் விஜய் முறையாக வரி செலுத்தி உள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ், ஷிரின் காஞ்வாலா, நட்டி நட்ராஜ், சமுத்திரகனி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வால்டர்’ படத்தின் விமர்சனம்.
கும்பகோணத்தில் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார் நாயகன் சிபிராஜ். இவரும் நாயகி ஷிரின் காஞ்வாலாவும் காதலித்து வருகின்றனர். இதே ஊரில் அரசியல்வாதியாக இருக்கும் சமுத்திரகனியை சிபிராஜ் தலைமையிலான டீம் என்கவுண்டர் செய்கிறது.
சில நாட்களில் பிறந்த குழந்தைகள் ஊரில் காணாமல் போகிறது. இதையறிந்த சிபிராஜ் தீவிர தேடுதல் வேட்டையில் களமிறங்குகிறார். கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை ஒன்று வீட்டிற்கு சென்றவுடன் இறக்கிறது. மீண்டும் இதே போல் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. இதே நேரத்தில் சமுத்திரகனி என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் சிபிராஜ் மீது விபத்தை ஏற்படுத்துகிறார் நட்டி.

இந்த விபத்தில் உயிர் பிழைக்கும் சிபிராஜ், தன் மீது விபத்தை ஏற்படுத்திய நட்டி யார் என்பதை விசாரிக்க ஆரம்பிக்கிறார். இறுதியில் நட்டி யார் என்பதை சிபிராஜ் கண்டுபிடித்தாரா? குழந்தைகளை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சிபிராஜ், மிடுக்கான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் கவனிக்க வைத்திருக்கிறார். நாயகியாக வரும் ஷிரின் காஞ்வாலா அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

நட்டி வில்லனாக மிரட்டி இருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். இவர் கதாபாத்திரத்தின் டுவிஸ்ட் ரசிக்க வைக்கிறது. சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிந்திருக்கிறார் சமுத்திரகனி. ரித்விகா, சனம் ஷெட்டி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
மெடிக்கல் கிரைம் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அன்பரசன். இதுபோன்ற கதைகள் பல வந்திருந்தாலும் இப்படம் முற்றிலும் மாறுப்பட்டு வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. மெடிக்கல் கிரைம் பற்றி மிகவும் ஆழமாக சொன்ன விதமும், திருப்பங்கள் கொடுத்த விதமும் அருமை.

தர்ம பிரகாஷ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணியில் ஸ்கோர் செய்திருக்கிறார். ராசாமணியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
மொத்தத்தில் ‘வால்டர்’ கர்ஜனை.
தமிழில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் பாடல் புதிய சாதனை படைத்துள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விஸ்வாசம்'. 2019-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்துடன் வெளியானது. தமிழகத்தில் 'விஸ்வாசம்' படத்துக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என பலருக்கும் நல்ல லாபம் கிடைத்தது.
இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், இதில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே' பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. இந்தப் பாடலை வைத்து டிக்-டாக் செய்து வெளியிடும் தம்பதியினரும் இருக்கிறார்கள்.

இந்தப் படம் வெளியாகி ஓராண்டைக் கடந்துவிட்டாலும், இப்போது 'விஸ்வாசம்' பாடல்கள் மற்றுமொரு சாதனையைப் புரிந்துள்ளது. ஆடியோ வடிவில் இந்தப் பாடல் 500 மில்லியன் ஸ்ட்ரீம்களை கடந்துள்ளது. வீடியோக்களை பார்வைகளாகக் கணக்கிடுவது போல், ஆடியோ கேட்பதை ஸ்ட்ரீமிங் என்று சொல்வார்கள். அந்த வகையில் 'விஸ்வாசம்' படத்தின் பாடல்கள் இதுவரை 50 கோடி முறை கேட்கப்பட்டுள்ளது.
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலாபால், இந்தி பாடகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
நடிகை அமலா பால், மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங் உடன் நெருக்கமாக இருப்பதாக படங்களுடன் சமூக வலைதளங்களில் புதிய தகவல் வைரலாகி வருகிறது. பவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில், ஒரு பெண்ணை கட்டிப் பிடித்து காதலி என பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், இருப்பது அமலா பால் தான் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். முன்னதாக அமலா பால், தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவர் தன்னை அம்மா போல் பார்த்துக் கொள்கிறார் என்று கூறியிருந்தார். விரைவில் அது குறித்து அறிவிப்பேன் என்றும் பேசியிருந்தார்.

இந்நிலையில் அந்த நபர் பாடகர் பவ்னிந்தர் சிங் தான் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அமலா பால் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘கோப்ரா’ படக்குழுவினரை தாக்கி இருப்பதாக இயக்குனர் கூறியிருக்கிறார்.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’ படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் நிலவி வரும் நிலையில், கோப்ரா படக்குழு எதற்கும் அஞ்சாமல் ரஷ்யாவில் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் படக்குழுவினரை தாக்கியுள்ளதாக படத்தின் இயக்குனர் கூறியிருக்கிறார். கொரோனா வைரஸ் பரவி வருவதால் படப்பிடிப்பை நிறுத்தும்படி இந்திய அரசு அறிவித்திருப்பதால் இப்படி கூறியிருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.
பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட சிவகார்த்திகேயன் எங்களுக்கு ஏக்கங்கள் நிறைய உண்டு என்று பேசியிருக்கிறார்.
பத்ரி இயக்கத்தில் ரியோ, ரம்யா நம்பீசன், ரோபோ ஷங்கர், தங்கதுரை, விஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிளான் பண்ணி பண்ணனும்'. யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது: ''பத்ரி சாருடைய 'பாணா காத்தாடி' படமும், பாடல்களும் ரொம்பவே பிடிக்கும்.
அவரும் யுவன் சாரும் கூட்டணி என்றாலே அதுவொரு தனி உணர்வு. அவர் இதுவரை செய்த படங்களை விட, இந்தப் படம் பெரிய வெற்றி பெற வேண்டும். இந்த மேடையில் இருக்கும் அனைவருமே தொலைக்காட்சி, சினிமா இரண்டிலுமே பணிபுரிந்தவர்கள். ஏனென்றால் தொலைக்காட்சியில் இருக்கும்போது சினிமா மேடைகள் கிடைக்குமா என ஏங்கியது உண்டு.

தொலைக்காட்சியில் இருந்தவர்கள் அனைவருமே இந்த மேடையில் இருப்பது கூடுதல் சந்தோஷம். எங்களுக்கு ஏக்கங்கள் நிறைய உண்டு. அதெல்லாம் இந்த மேடையில் பார்ப்பதால் கூடுதல் சந்தோஷம் தருகிறது. ரம்யா நம்பீசன் படம் பண்ணுகிறார், பாடல்கள் பாடுகிறார் என்பதைத் தாண்டி அவர் இயக்கிய குறும்படம் பார்த்தேன். அது அதிகமான தாக்கத்தைக் கொடுத்தது.
அந்தக் குறும்படம் பார்க்கும் போது யாரிடம் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயங்கரமான படைப்பு வரும் என உணர்ந்தேன். கூடிய சீக்கிரம் ரம்யா நம்பீசனை இயக்குநராகவும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.






