என் மலர்
சினிமா செய்திகள்
ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் குருதி ஆட்டம் படத்தின் முன்னோட்டம்.
‘எட்டு தோட்டாக்கள்’ படத்தை இயக்கி, தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்த டைரக்டர், ஸ்ரீகணேஷ். இவர் அடுத்து டைரக்டு செய்திருக்கும் புதிய படம், ‘குருதி ஆட்டம்.’ இதில் அதர்வா முரளி-பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் அழுத்தமான வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.

படத்தை பற்றி டைரக்டர் ஸ்ரீகணேஷ் கூறியதாவது:- “இது, அதிரடி சண்டை காட்சிகளை கொண்ட 2 தாதாக்களின் கதை. மதுரையை கதைக்களமாக கொண்ட படம். அதர்வாவுக்கும், ராதாரவிக்கும் இடையே நடக்கும் மோதல்கள்தான் திரைக்கதை. அதர்வா, பிரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகிய 4 பேர் இடையே நடை பெறும் சம்பவங்களே படம்.
பேபி திவ்ய தர்சினி, ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறாள். முருகானந்தம் தயாரித்து இருக்கிறார். ‘எட்டு தோட்டாக்கள்’ போல், இந்த படமும் ஒரு புதிய அனுபவத்தை தரும். படப் பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.” இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூருவில் கன்னட திரைப்பட தயாரிப்பாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட திரைப்பட தயாரிப்பாளராக இருந்து வந்தவர் மோகன் வாக்வாடி என்கிற கபாலி மோகன். தொழில் அதிபரான இவர் நிதி நிறுவனமும் நடத்தி வந்தார். மோகன் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியவர்களிடம் கந்துவட்டி வசூலித்ததாகவும் கூறி பெங்களூரு சதாசிவநகரில் உள்ள மோகனின் பங்களா வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி இருந்தனர்.
அப்போது அவரது வீட்டில் இருந்து சில ஆவணங்களை போலீசார் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பீனியா பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் மோகன் அறை எடுத்து தங்கி இருந்தார். ஆனால் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் அவர் தங்கியிருந்த அறையின் கதவை ஓட்டல் ஊழியர்கள் தட்டிப்பார்த்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.
இதையடுத்து ஜன்னல் வழியாக ஓட்டல் ஊழியர்கள் அறைக்குள் எட்டிப்பார்த்தனர். அப்போது மோகன் தூக்கில் தொங்கினார். இதுபற்றி ஓட்டல் ஊழியர்கள் கங்கமனகுடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் மோகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. ஆனால் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. நிதி நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதுகுறித்து கங்கமனகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கன்னட திரைப்பட தயாரிப்பாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் சின்னத்திரை நடிகை ஒருவர் முகக்கவசம் அணிந்து கணவருக்கு முத்தமிட்டுள்ளார்.
கர்நாடகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாநில மக்களிடையே கொரோனா வைரஸ் பீதி ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரசை தடுக்கும் வகையில் கன்னட சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இதனால் நடிகர், நடிகைகள் வீடுகளில் நேரத்தை போக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் கன்னடத்தில் ஒளிபரப்பான நந்தினி என்ற சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமான நடிகை நித்யா ராம், தனது கணவர் கவுதமிற்கு முகக்கவசம் அணிந்து கொண்டு முத்தமிட்டார். இந்த புகைப்படத்தை நடிகை நித்யா ராம் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
மேலும் அந்த படத்திற்கு பாதுகாப்புடன் காதல் என்று குறிப்பிட்டு, கொரோனா தாக்கம், பாதுகாப்பாக இருங்கள், ஒரு போதும் காதலை கைவிடாதீர்கள் என்றும் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படத்திற்கு ெநட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான அதர்வா, ஸ்ரீ கணேஷ் இயக்கும் குருதி ஆட்டம் படத்தில் தாதாவாக நடித்துள்ளார்.
‘எட்டு தோட்டாக்கள்’ படத்தை இயக்கி, தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர், ஸ்ரீகணேஷ். இவர் அடுத்து இயக்கி இருக்கும் புதிய படம், ‘குருதி ஆட்டம்.’ இதில் அதர்வா முரளி-பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் அழுத்தமான வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.
படத்தை பற்றி இயக்குனர் ஸ்ரீகணேஷ் கூறியதாவது:- “இது, அதிரடி சண்டை காட்சிகளை கொண்ட 2 தாதாக்களின் கதை. மதுரையை கதைக்களமாக கொண்ட படம். அதர்வாவுக்கும், ராதாரவிக்கும் இடையே நடக்கும் மோதல்கள்தான் திரைக்கதை. அதர்வா, பிரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகிய 4 பேர் இடையே நடை பெறும் சம்பவங்களே படம்.

பேபி திவ்ய தர்சினி, ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறாள். முருகானந்தம் தயாரித்து இருக்கிறார். ‘எட்டு தோட்டாக்கள்’ போல், இந்த படமும் ஒரு புதிய அனுபவத்தை தரும். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.” இவ்வாறு அவர் கூறினார்.
பெப்சி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 19-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பெப்சியில் உறுப்பினர்களாக இருக்கும் பல ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியிருந்தார். மேலும் திரைப்படத்துறையில் நல்ல நிலையில் இருக்கும் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

நடிகர் சிவகுமாரின் குடும்பத்தினர் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும் சில சினிமா நட்சத்திரங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது மாஸ்டர் படத்தின் டிரைலர் மார்ச் 22ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிடவில்லை.

ஆனால் இன்று எதிர்பாராதவிதமாக அந்த கண்ண பாத்தாக்கா என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது இப்படத்தின் டிரைலரை ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லாலுக்கு ரசிகர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அர்ப்பணிப்புடன் செயல்படும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு கைதட்டி பாராட்டுத் தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் கூறியிருந்தார்.
இதுபற்றி பேசிய நடிகர் மோகன்லால், ஒன்றாக இணைந்து கைதட்டுவது ஒரு செயல் முறை. அந்த ஒலி மந்திரம் போன்று வைரஸையும் பாக்டீரியாக்களையும் அழிக்கக் கூடும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து சமூக வலைத்தளங்களில் அவரை விமர்சிக்க தொடங்கி விட்டனர். ‘மோகன்லால்ஜி கை தட்டினா எப்படி பாக்டீரியாவும் வைரசும் அழியும்னு விளக்கமா சொல்ல முடியுமா? என்று ஒருவர் கேட்டுள்ளார்.
ரஜினிக்கு பிறகு இவரு... இவங்களை எல்லாம் என்ன செய்யலாம்? என்று சிலரும் கடுமையாக கிண்டல் செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டிருக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு சிவகுமார் குடும்பத்தினர் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 19-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பெப்சியில் உறுப்பினர்களாக இருக்கும் பல ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியிருந்தார். மேலும் திரைப்படத்துறையில் நல்ல நிலையில் இருக்கும் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்தார்.
“இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள 15 ஆயிரம் பெப்சி ஊழியர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி தந்தால் அவர்கள் கஞ்சி சோறாவது சாப்பிட்டு உயிர் வாழ இயலும். 10 ஆயிரம் உறுப்பினர்களுக்கு ஒரு மூட்டை அரிசி அளிப்பதாக இருந்தால் ஒரு மூட்டை சுமாரான அரிசி என்றாலும் ரூ.1250 என கணக்கு வைத்தால் ரூ.2 கோடி ஆகிறது.

உங்களோடு பணிபுரிந்து உங்களோடு வாழ்ந்து வருகின்ற குடும்பங்களுக்கு உணவு அளிப்பீர். நிதி அளிப்பீர் என கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் நடிகர் சிவகுமாரின் குடும்பத்தினர் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.
தமிழில் காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்த பூஜா ராமசந்திரன், தனது பிறந்தநாளை கணவருடன் மாலத்தீவில் கொண்டாடியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் வலம் வந்த பூஜா ராமசந்திரன், காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா 2, நண்பேன்டா உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ரா, தேவி ஸ்ரீ பிரசாத், லா, தொச்சாய் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் பிரபல வீடியோ ஜாக்கியாக இருந்த கிரெய்க் கேலியாட்டை காதலித்து வந்த பூஜா ராமசந்திரன், 2010ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். 7 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு, கிரெய்கை விவாகரத்து செய்த பூஜா, ஜான் கொக்கன் எனும் நடிகரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உலகளவில் மக்கள் பயந்து நடுங்கிப் போயுள்ள நிலையில், நடிகை பூஜா ராமசந்திரன், மாலத்தீவில் தனது கணவருடன் நேற்று பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்தை கூறியிருக்கிறார் அவரது கணவர்.
இயக்குனர் விசுவின் மறைவுக்கு நடிகர் சரத்குமார் வீட்டில் இருந்தே கருப்பு சட்டை அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தமிழ் திரையுலகில் இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர் என பன்முகம் கொண்டவர் விசு. இவர் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கல் செலுத்தினர். கொரோனா வைரஸ் அச்சுறுத்துவதால் பலர் இவரது மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது.
#RIPVisu. Let our prayers support the soul to connect the eternity. Considering the current situation we are unable to pay our last respect in person hence wherever we are let us pray for his peaceful departure. pic.twitter.com/vsnkPeDRNb
— R Sarath Kumar (@realsarathkumar) March 23, 2020
இந்நிலையில், நடிகர் சரத்குமார் வீட்டிலேயே கருப்பு சட்டை அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்துவதால் நம்மால் மற்றவர்களுக்கும், மற்றவர்களால் நமக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்ற காரணத்தால் அவரது இறுதி அஞ்சலியில் என்னால் கலந்துக் கொள்ள முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.
விக்ரம் பிரபு, மஹிமா நடிப்பில் வெளியான அசுரகுரு திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் என்று தயாரிப்பாளர் கூறியிருக்கிறார்.
ஜே.எஸ்.பி.சதீஷ் தயாரிக்க ராஜ்தீப் இயக்கத்தில், விக்ரம் பிரபு, மஹிமா ஜோடியாக நடித்த படம் அசுரகுரு. 2 வாரங்களுக்கு முன் வெளியான இந்த படம் கொரோனாவால் தியேட்டர்கள் மூடப்பட்டதால் நிறுத்திவைக்கப்பட்டது.
கொரோனா பீதிமுடிந்து தியேட்டர்கள் திறக்கப்படும்போது படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இது குறித்து சதீஷ் கூறும்போது, ‘’247 திரையரங்குகளில் வெளியான அசுரகுரு, மூன்றே நாட்களில், 1.5 கோடி ரூபாய் வசூலித்தது.

கொரோனோ பீதி காரணமாக, திரையரங்கம் மூடப்பட்டதால், படத்தை தொடர்ந்து திரையிட முடியவில்லை. திரையரங்கங்கள் திறந்ததும், இப்படத்தை மீண்டும் திரையிடுவோம்,” என்றார்.
கொரோனா பரவல் காரணமாக தயாரிப்பாளர் சங்க தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று ஜே.எஸ்.கே சதீஷ்குமார் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் பணிகள் தொடங்கி உள்ளன. கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று டி.சிவா தலைமையிலான அணியில் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- “தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஜூன் 30-ந்தேதிக்குள் தேர்தல் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. உலகமெங்கும் கொரோனா வைரஸ் தாக்கி பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரதமர் 60 வயது கடந்தவர்கள் 2 வார காலத்துக்கு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கூறியுள்ளார்.

எங்களது சங்க உறுப்பினர்கள் பலர் 60 வயதை கடந்தவர்கள். அவர்களால் தற்போது சங்கத்துக்கு வரமுடியாத நிலை உள்ளது. எனவே கொரோனா அச்சுறுத்தல் நீங்கிய பிறகு தேர்தல் வேலைகளை தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.






