என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் சைலன்ஸ் படத்தின் முன்னோட்டம்.
    ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சைலன்ஸ்’. இதில் மாதவன் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார். மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த படத்தில், அனுஷ்கா காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

    அனுஷ்கா

    4 இந்தியர்களுக்கும், அமெரிக்க போலீசுக்கும் இடையே நடக்கும் கிரைம் திரில்லர் படமாக தயாராகி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர். ஷெனியல் டியோ ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.
    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூப்பில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
    தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் கடந்த 2018ம்  ஆண்டு வெளியான படம் ‘மாரி 2’. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ரவுடி பேபி என்ற பாடலை தனுஷ் எழுதி பாடி இருந்தார். இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். இந்த பாடலில் தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.

    ‘மாரி 2’ படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலின் வீடியோவை ‘யூடியூப்’பில் படக்குழுவினர் வெளியிட்டனர். இணையத்தில் வைரலான இந்த பாடல் சர்வதேச பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று சாதனை படைத்தது. இப்பாடல் வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. 
    அந்த வகையில், தற்போது 800 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ‘யூடியூப்’பில் ரவுடி பேபி பாடல் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதோடு இந்த பாடல் இதுவரை 3 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
    மாஸ்டர் படத்திற்காக யுவன் சங்கர் ராஜா பாடியுள்ள ‘அந்த கண்ண பாத்தாக்கா’ பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
    விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தை அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

    மாஸ்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டைய கிளப்பு வருகின்றன. குறிப்பாக யுவன் சங்கர் ராஜா பாடியுள்ள ‘அந்த கண்ண பாத்தாக்கா’ பாடல் நல்ல  வரவேற்பை பெற்று வருகின்றது. 
    விக்னேஷ் சிவன் எழுதியுள்ள இப்பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விஜய் இளமையான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் 61-வது படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
    நடிகர் அஜித்தின் 60 வது படம் வலிமை. இப்படத்தை வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட உள்ளனர். இதனிடையே அஜித்தின் 61 வது படத்தை இயக்கப்போவது யார் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

    இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே இறுதிச்சுற்று படத்தை இயக்கி உள்ளார். மேலும் சூர்யாவை வைத்து இவர் இயக்கி இருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. 

    சுதா கொங்கரா

    அஜித் இதுவரை இரண்டு முறை பெண் இயக்குனர்கள் இயக்கிய படத்தில் நடித்துள்ளார். அஜித்தின் உயிரோடு உயிராக படத்தை சுஷ்மா அஹுஜாவும், இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தை கவுரி ஷிண்டேவும் இயக்கி இருந்தனர். அஜித்தின் 61வது படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    நடிகர் விசு மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது. அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பதிவில் கூறியியுள்ளார்.

    சென்னை:

    டைரக்டர் விசு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர். ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குனர், நடிகர் விசு மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது. அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பா.ஜனதா மாநில தலைவர் எல். முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகரான விசு உடல் நலக்குறைவினால் காலமானார் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியுற்றேன்.

    விசு

    கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் சமூக, குடும்பத்திரைப்பட வகையைச் சேர்ந்ததாகும்.

    பிரதமர் நரேந்திர மோடி செயல்களால் ஈர்க்கப்பட்டு 2016- ம் ஆண்டு தன்னை பாரதீய ஜனதா கட்சியில் இணைத்துக்கொண்டு மக்கள் பணியாற்ற பா.ஜ.க.வில் இணைந்ததாகவும், தமிழகத்தில் மக்கள் விரும்பும் மாற்றத்தை பா,ஜனதாவால் மட்டுமே தர முடியும் என்றும் தெரிவித்தார்.

    அவருடைய இழப்பு பாரதீய ஜனதா கட்சியினருக்கும் அவரது குடும்பத்தினருக்கும். கலைத்துறையினருக்கும் மிகப்பெரிய பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதோடு அவருடைய ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    நாடக ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா, இயக்குனர், நடிகர் என கலையுலகில் பன்முகத்தன்மையுடன் சிறந்து விளங்கியவரான விசு மறைவு மிகுந்த வருத்த மளிக்கிறது.

    சமுதாய கருத்துகளை நகைச் சுவையாக, நாகரிகமாக எடுத்து சொல்வதில் ஆற்றல்மிக்கவர் விசு. தனது திரைப்படங்களின் மூலம் குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் பாசசிக்கல்களை நகைச்சுவை உணர்வோடும், எதார்த்தமாகவும், அழுத்தமாகவும் எடுத்து கூறியவர்.

    சம்சாரம் அதுமின்சாரம், குடும்பம் ஒரு கதம்பம், நாணயம் இல்லாத நாணயம், திருமதி ஒரு வெகுமதி, பெண்மணி அவள் கண்மணி என திரைப்படங்களுக்கு வித்தியாசமான தலைப்பு அளிப்பதில் வல்லவர்.

    அவரது இழப்பு நாடகம், திரைத்துறை, சின்னத்திரை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கலைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, சினிமாவில் பாலியல் சீண்டல் நடப்பதாக கூறியுள்ளார்.
    பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மீது நடிகைகள் பலர் ஏற்கனவே மீ டூவில் புகார் கூறினர். தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியும் செக்ஸ் குற்றம் சாட்டினார். இதில் தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் சிக்கினர். தற்போது தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் அனுஷ்காவும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் திரையுலகில் இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.

    மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. ஐதராபாத்தில் இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுஷ்காவிடம் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு சினிமாவில் இருப்பதாக கூறப்படுகிறதே? இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    அனுஷ்கா

    இதற்கு பதில் அளித்து அனுஷ்கா கூறும்போது, “அப்படி நடக்கவில்லை என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் எனக்கு அதுபோன்ற அனுபவம் எதுவும் ஏற்படவில்லை. காரணம் நான் எப்போதுமே வெளிப்படையாக இருந்து இருக்கிறேன். பெண்களிடம் இதுபோன்ற ஆதாயங்களை சினிமா துறையினர் எதிர்பார்த்தால் அது தவறு. அதனை தவிர்க்க வேண்டும்” என்றார்.
    கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா நடித்துள்ள ‘நரகாசூரன்’ படத்தை நேரடியாக ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
    துருவங்கள் 16 படத்தின் மூலம் பிரபலமானவர் கார்த்திக் நரேன். இவர் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் நரகாசூரன் . இதில் அரவிந்தசாமி, ஸ்ரேயா ஜோடியாக நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு 2 வருடங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. ஆனாலும் படத்தின் தயாரிப்பாளர் கவுதம் மேனனுக்கு ஏற்பட்ட பண பிரச்சினையால் படம் திரைக்கு வரவில்லை.

    இதனால் கவுதம் மேனனும், கார்த்திக் நரேனும் டுவிட்டரில் மோதிக் கொண்டனர். அதன்பிறகு பல தடவை படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தும் ரிலீசாகாமல் தள்ளி வைத்தனர். இந்த நிலையில் நரகாசூரன் படத்தை இணைய தளத்தில் நேரடியாக வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.

    நரகாசூரன் படக்குழு

    நரகாசூரன் படத்தை டிஜிட்டலில் வெளியிடலாமா? என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் கார்த்திக் நரேன் கருத்து கேட்டுள்ளார். இதற்கு பலரும் வெளியிடலாம் என்று பதில் அளித்துள்ளனர். இதனால் நரகாசூரன் படம் தியேட்டர்களில் திரைக்கு வராமல் நேரடியாக இணைய தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நரகாசூரன் படத்துக்கு பிறகு அருண் விஜய் நடித்த மாபியா படத்தை கார்த்திக் நரேன் இயக்கினார். இந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. தற்போது தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
    படப்பிடிப்புக்காக ஜார்ஜியா நாட்டுக்குச் சென்று வந்த நடிகர் பிரபாஸ், தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
    ‘பிரபாஸ் 20’ படத்தின் படப்பிடிப்புக்காக ஜார்ஜியா நாட்டுக்குச் சென்று வந்தது படக்குழு. ராதா கிருஷ்ணா இயக்கி வரும் இந்தப் படத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். யு.வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜார்ஜியா படப்பிடிப்பு முடிந்து இந்தியா திரும்பிவிட்டு, பிரபாஸ் யாரையும் சந்திக்கவில்லை. 

    பிரபாஸ்

    தற்போது இது தொடர்பாகத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பிரபாஸ் கூறுகையில், “வெளிநாட்டுப் படப்பிடிப்பைப் பத்திரமாக முடித்துத் திரும்பியுள்ள நிலையில், கோவிட்-19 பரவும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு நானே என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். நீங்கள் அனைவரும் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
     'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். நிறைய கமர்சியல் படங்களில் நடித்த இவருக்கு, 'நடிகையர் திலகம்' படம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுக்கொடுத்தது.

    இனி தன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் கூறியிருந்தார். அதன்படி , பெண்குயின் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் ரஜினி-சிவா கூட்டணியில் உருவாகும் அண்ணாத்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

    கீர்த்தி சுரேஷ்

    இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இருப்பினும் அது விளம்பர ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என கூறப்படுகிறது.
    தமிழ் திரைப்பட நடிகர் விசு உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
    சென்னை: 

    தமிழ் திரைப்பட நடிகர் விசு உடல்நலக்  குறைவால் காலமானார். விசு ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் ஆவார். 

    1941-ம் ஆண்டு பிறந்த இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி இருக்கு சூரரைப் போற்று படத்தின் முன்னோட்டம்.
    சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

    சூர்யா

    ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 
    இயக்குனர் மணிரத்னத்தின் மகன் நந்தன், லண்டனில் இருந்து வந்ததும் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
    இயக்குனர் மணிரத்னம்-சுஹாசினி தம்பதியின் மகன் நந்தன், கடந்த ஐந்து நாட்களாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதால் இவ்வாறு இருப்பதாக வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை சுஹாசினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கண்ணாடி அறையில் தனிமைப்படுத்திக்கொண்ட தனது மகனுடன் உரையாடுவதை அவர் வீடியோவாக எடுத்துள்ளார்.

    அதில் தனது மகன் கடந்த 18ந் தேதி லண்டனில் இருந்து வந்ததாகவும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும் நந்தன் கூறுகையில், தற்போது 5 நாட்களாக தான் தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதாகவும், மேலும் 9 நாட்கள் இதேபோல் தான் இருக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


    வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் தங்களைத்தானே தனிமைப்படுத்தி கொள்வது நல்லது என நந்தன் கூறியுள்ளார். இந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ள குஷ்பு, நந்தனை பாரட்டியுள்ளார். 
    ×