என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், என் அம்மா அப்பாவிற்காக நான் வீட்டில் இருக்கிறேன் என்று மாஸ்டர் பட நடிகை கூறியுள்ளார்.

    கொரோனா வைரஸ் உலக மக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு விடப்பட்டது. தற்போது தமிழகத்தில் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இருப்பினும் பலர் பல இடங்களுக்கு சென்று வருகிறார்கள்.

    யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என்று திரைத்துறையினர் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன், என்னுடைய அம்மா அப்பாவிற்காக நான் வீட்டில்இருக்கிறேன் என்று எழுதி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், நிறைய பேருக்கு அதன் சீரியஸ்னஸ் தெரியல என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
    கொரோனா வைரஸ் உலக மக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு விடப்பட்டது. தற்போது தமிழகத்தில் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இருப்பினும் பலர் பல இடங்களுக்கு சென்று வருகிறார்கள்.

    இதற்கு நடிகர் சிவகார்த்திகேயன், நிறைய பேருக்கு சீரியஸ்னஸ் தெரியவில்லை. யாரும் வெளியில் செல்ல வேண்டாம். வீட்டிலேயே இருங்கள் என்று கூறியுள்ளார். மேலும் மருத்துவர்கள், காவல்துறையினர், ஊடகங்கள், மாநில அரசாங்கம், மத்திய அரசாங்கம் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி நெகிழ வைத்திருக்கிறார்கள்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் லாஸ்லியா. வீட்டில் இருக்கும் போதே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.

    தற்போது இவர் தமிழ் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் ஃப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் ஆரி அர்ஜுனாவுடன் சேர்ந்து ஒரு படத்திலும் நடிக்கிறார். 

    இந்நிலையில் நேற்று தன் பிறந்தநாளை கொண்டாடிய லாஸ்லியாவிற்கு, ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்துகளை கூறினார்கள். இதுகுறித்து தனது சமூகவலைத்தள பக்கத்தில், 'என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. என்னை வாழ்த்திய வீடியோ, ஆடியோ, போட்டோக்கள் அனைத்தையும் பார்த்தேன். இப்படி ஒரு அன்பும் வாழ்த்துக்களும் கிடைப்பது இதுவே முதல் வருடம் என்பதில் சந்தோஷமாக இருக்கிறது. மேலும் எனது முந்தைய பிறந்தநாளை விட இது வேறுபட்டது' என்று கூறியுள்ளார்.
    பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர் ஆர் ஆர் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 350 கோடியில் உருவாகி வருகிறது.

    மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் லோகோ உடன் கூடிய மோஷன் போஸ்டரை நாளை (மார்ச் 25) வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    இப்படம் 2021-ம் ஆண்டு ஜனவரி 8-ந் தேதி ரிலீசாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
    இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையாக என் வீட்டை தருகிறேன் என்று கூறியுள்ளார்.
    உலக மக்களை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.  பொதுமக்கள்  வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். தினம் தினம் இறப்புகள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

    இந்நிலையில் நடிகர் பார்த்திபன் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில், இப்படி உலகம் முழுக்க இந்த நோய் பரவி வருகிறது. 24 மணி நேரமும் இதை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பதால் எனக்கு ஒரு யோசனை வருகிறது. 

    24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனைகளை நாமே உருவாக்கணும். அதாவது இரண்டு வீடுகள் இருந்தால் அதில் ஒன்றை இந்த கொரோனா மருத்துவமனையாக கொடுக்க முன் வரலாம் . எனக்கு 3 பிளாட் இருக்கு அதையும் கொடுக்க தயார்.

    அதுபோல தெருவுக்கு தெரு இப்படி பட்ட மருத்துவ வசதி செய்து கொள்வது பெரிய உதவியாயிருக்கும்" என்று கூறியுள்ளார்.
    டிவி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகை அனுஷ்கா இயக்குனரை நினைத்து கண்கலங்கி இருக்கிறார்.
    தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. இவர் நடிப்பில் தற்போது நிசப்தம் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படக்குழுவினர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.

    அப்போது நடிகை அனுஷ்காவின் திரைப்பயணம் குறித்து காணொலி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. மேலும் தொகுப்பாளர் கேட்ட பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கும் நடிகை அனுஷ்கா பதிலளித்தார்.

    அப்போது தன்னைப் பற்றி ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் மறைந்த அருந்ததி பட இயக்குநர் கோடி ராமகிருஷ்ணாவும் இடம்பெற்றிருந்தார். அதைப்பார்த்து உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனுஷ்கா, இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா இன்னும் சில காலம் நம்முடன் இருந்திருக்கலாம் என்று கூறினார். அவர் பேசிக்கொண்டிருக்கையில் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார்.

    பின்னர் உடனிருந்தவர்கள் தண்ணீர் கொடுத்த அனுஷ்காவை சமாதானப் படுத்தினர்.  கோடி ராமகிருஷ்ணாவை நினைத்து அனுஷ்கா அழுததற்கு காரணம், அவர் இயக்கிய அருந்ததி படம் தான் அனுஷ்காவுக்கு அதிக புகழையும், பரிமாணத்தையும் பெற்றுத் தந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
    தமிழ்சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வரும் யோகிபாபு திடீரென்று முதலமைச்சரை சந்தித்து உள்ளார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வருகிறார் யோகிபாபு. இவருக்கு எப்போது திருமணம் என்று பலரும் கேட்டு வந்தார்கள். ஆனால் இவர் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திடீர் என்று திருமணம் செய்தார்.

    இவர்களின் திருமணம் யோகி பாபுவின் குலதெய்வ கோவிலில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. வரும் ஏப்ரல் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதற்காகசமீபத்தில் நடிகர் விஜய்காந்தை சந்தித்து அழைப்பு வைத்தார். இந்நிலையில் தற்போது அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.

    மாஸ்டர் படத்தையடுத்து விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை மீண்டும் நடிக்க இருக்கிறார்.
    விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. இப்படத்தையடுத்து விஜய், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விஜய், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த துப்பாக்கி படத்தில் காஜல் அகர்வால் ஜோடியாக நடித்திருந்தார். 
    விஜய்- காஜல் அகர்வால்
    இந்த நிலையில் காஜல் அகர்வால் ரசிகர்களுடன் பேசிய வீடியோவில், ''எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் தான், நாங்கள் கூடிய விரைவில் மீண்டும் ஒரு படத்தில் இணைவோம்,'' என்று தெரிவித்துள்ளார். இதனால் தற்போது விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இணைவதாக பேசிக்கொண்டிருக்கும் படத்தில் இவர் தான் ஹீரோயின் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
    வழக்கமான கதாநாயகியாக நடிப்பதை விட கதைக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களிலும் நடிக்க காஜல் தயாராகி வருகிறாராம்.
    ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில முதிர்ந்த வேடத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால். இதையடுத்து நடன மாஸ்டர் பிருந்தா இயக்கும் படத்தில் துல்கர் சல்மானுடன் நடிக்க உள்ளார். தென்னிந்திய மொழி படங்களில் நடன இயக்குனராக பணியாற்றிய பிருந்தா, முதல்முறையாக இயக்கும் படத்துக்கு ஹே சினாமிகா என்று பெயரிடப்பட்டுள்ளது. 

    இதை ஜியோ ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.  துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பிரீத்தா ஜெயராமன். இசை, கோவிந்த் வசந்தா. சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியது.  பாலிவுட்டில் அவர் நடித்துள்ள படமும் இந்த ஆண்டில் திரைக்கு வருகிறது. இதையடுத்து அவர் ஒரு முடிவெடுத்துள்ளார். 

    காஜல் அகர்வால்

    வழக்கமான கதாநாயகியாக நடிப்பதை விட ரிஸ்க்கான வேடங்களிலும், கதைக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களிலும் நடிக்க தயாராகி வருகிறாராம். மேலும் டாப் ஹீரோக்களுடன் தான் நடிப்பேன் என்ற கொள்கையையும் தளர்த்தி உள்ளார். அதன் காரணமாகவே சமீபகாலங்களில் இளம் நடிகர்களுடன் நடிக்க தொடங்கி உள்ளார்.
    பெப்சி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்காக நடிகர்கள் ரஜினியும், விஜய் சேதுபதியும் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
    கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 19-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பெப்சியில் உறுப்பினர்களாக இருக்கும் பல ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியிருந்தார். மேலும் திரைப்படத்துறையில் நல்ல நிலையில் இருக்கும் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

    இதையடுத்து நடிகர் சிவகுமாரின் குடும்பத்தினர் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்தனர். அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயனும் தன் பங்கிற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார். நடிகர் பிரகாஷ்ராஜ் 150 அரிசி மூட்டைகளை கொடுத்து உதவினார்.

    ரஜினிகாந்த், விஜய் சேதுபதி

    இந்நிலையில்,  சினிமா தொழிலாளர்களுக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார். நடிகர் விஜய் சேதுபதியும் ரூ.10 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். மேலும் சில சினிமா நட்சத்திரங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.
    பாலியல் வழக்கில் சிறையிலிருக்கும் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக மீ டூவில் புகார் கூறப்பட்டது. ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, ராஸ் மெக்கோவன், அன்னபெல்லா, ஜேன் டோ உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் கூறினார்கள்.

    2006-ல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக திரைப்பட தயாரிப்பு பெண் நிர்வாகி மிமி ஹலேயியும், 2013-ல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக நடிகை ஒருவரும் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹார்வி குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.

    ஹார்வி வெயின்ஸ்டீன்

    தற்போது ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 23 வருடம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. கடந்த 2 வாரமாக நியூயார்க் சிறையில் இருக்கும் ஹார்வி வெயின்ஸ்டீன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் குருதி ஆட்டம் படத்தின் முன்னோட்டம்.
    ‘எட்டு தோட்டாக்கள்’ படத்தை இயக்கி, தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்த டைரக்டர், ஸ்ரீகணேஷ். இவர் அடுத்து டைரக்டு செய்திருக்கும் புதிய படம், ‘குருதி ஆட்டம்.’ இதில் அதர்வா முரளி-பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் அழுத்தமான வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.

    குருதி ஆட்டம் படக்குழுவினர்

    படத்தை பற்றி டைரக்டர் ஸ்ரீகணேஷ் கூறியதாவது:- “இது, அதிரடி சண்டை காட்சிகளை கொண்ட 2 தாதாக்களின் கதை. மதுரையை கதைக்களமாக கொண்ட படம். அதர்வாவுக்கும், ராதாரவிக்கும் இடையே நடக்கும் மோதல்கள்தான் திரைக்கதை. அதர்வா, பிரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகிய 4 பேர் இடையே நடை பெறும் சம்பவங்களே படம். 

    பேபி திவ்ய தர்சினி, ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறாள். முருகானந்தம் தயாரித்து இருக்கிறார். ‘எட்டு தோட்டாக்கள்’ போல், இந்த படமும் ஒரு புதிய அனுபவத்தை தரும். படப் பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.” இவ்வாறு அவர் கூறினார்.
    ×