என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முயற்சி செய்து வரும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரை பார்த்திபன் சந்தித்துள்ளார்.
    சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரை பார்த்திபன் சந்தித்த பின் கூறியதாவது, 

    சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் விஜய பாஸ்கர் அவர்களை கடமையை செவ்வனே செய்வதற்காக பாராட்டி உற்சாகப்படுத்தும் நோக்கில் சந்தித்தேன். 

    பொக்கே கொடுப்பதற்கு பதிலாக sanitizer 5 litre cane ஒன்றில் “மலர் கொத்தாய் மனமே திகழ்கையில், நல்வாழ்வைக் காக்கும் மாண்புமிகுக் கரங்களுக்கு” என்றெழுதி தமிழக மக்களின் சார்பில் வழங்கினேன். இன்னும் கூடுதலான மருத்துவ வசதிகளுக்கு திருமண மண்டபங்கள் போன்ற தனியார் இடங்களை இப்போதே சுத்தப்படுத்தித் தயார் நிலையில் வைத்துக் கொண்டால் அவசர நிலைக்கு உதவியாய் இருக்குமென கருத்துத் தெரிவித்தேன்.

    அந்த நல் யோசனையை கருத்தில் கொண்டு செயல் பட செய்கிறேன் என்றார். தமிழகமெங்கும் அந்நோயை எவ்வாறு கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கப் படுகின்றன என்பதையும் சுற்றிக் காட்டினார்.
    கொரோனா வைரஸ் வராமல் இருக்க நிறைய பேர் வேலை செய்கிறார்கள் என்று நடிகர் மைம் கோபி கூறியுள்ளார்.

    கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் 144 தடைச்சட்டம் போட்டுள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

    ஆனால் பலரும் இதை பொருட்படுத்தாமல் வெளியே சென்று வருகிறார்கள். இதற்காக சினிமா நட்சத்திரங்கள் பலரும் அறிவுரை கூறி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர்  மைம் கோபி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. பிரதமர் சொன்னது போல் அனைவரும் 21 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். நமக்காக காவல் துறை, சுகாதாரத்துறை, மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட பலர் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு பெரிய நன்றிகள். ஒருவருக்கு பாதிப்பு வந்தால் அது அவர்களை சுற்றி இருக்கும் அனைவரையும் பாதிக்கும். எனவே இதை உணர்ந்து அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    யுகாதி தினத்தை முன்னிட்டு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ரசிகர்களுடன் உரையாட திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
    சமூக வலைத்தளங்களில் சினிமா பிரபலங்கள் பலரும் இணைந்து அவர்களைப் பற்றிய பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட சமூக வலைத்தளங்களில் இருக்கிறார்கள். ஆனால், அஜித் போன்றவர்கள் அதில் இன்னும் வரவேயில்லை.

    தெலுங்குத்திரையுலகின் மூத்த நடிகரான சிரஞ்சீவி யுகாதியை முன்னிட்டு சமூக வலைத்தளத்திற்குள் வருவதாக அறிவித்துள்ளார். இன்று புதிய கணக்குடன் ரசிகர்களுடன் உரையாடவும் உள்ளதாக தெரிவித்துள்ளார். 

    ரசிகர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், தனது கருத்துக்களைப் பதிவிடுவதற்காகவும் சமூக வலைத்தளத்தில் வருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்று நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
    கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் 144 தடைச்சட்டம் போட்டுள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

    ஆனால் பலரும் இதை பொருட்படுத்தாமல் வெளியே சென்று வருகிறார்கள். இதற்காக சினிமா நட்சத்திரங்கள் பலரும் அறிவுரை கூறி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் இயக்குனர் லாரன்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஒரே வழிதான் இருக்கிறது. யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். ஊருக்கு செல்கிறேன் என்று பெற்றோர்களுக்கு நோயை பரப்பி விட்டு விடாதீர்கள். காலில்  விழுந்து கேட்கிறேன் என்று கூறியுள்ளார். 
    செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி, சிம்ரன் நடிப்பில் உருவாகி வரும் வணங்காமுடி படத்தின் முன்னோட்டம்.
    மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் தயாரிக்கும் படம் `வணங்காமுடி'. செல்வா இயக்கும் இப்படத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்து வருகிறார். மேலும் ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி, தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

    படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்தாண்டு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பொள்ளாச்சி விவகாரத்தை மையமாக வைத்து வணங்காமுடி திரைப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. 

    வணங்காமுடி படக்குழு

    இப்படத்தில் அரவிந்த்சாமி ஐபிஎஸ் அதிகாரி வேடத்தில் நடித்து இருப்பதாகவும், இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களை அவர் சாதுர்யமாக எப்படி பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இப்படத்தை தமிழ் புத்தாண்டு விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    ஹாலிவுட் நடிகர் ஒருவர் தன்னை தனிமைப்படுத்தி கொள்ளாததால் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது.
    சூப்பர் ஹீரோ படங்களான ‘தோர்’ மற்றும் ‘அவெஞ்சர்ஸ்’ படங்களில் நடித்து புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் இத்ரிஸ் எல்பா தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தனக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமலேயே வைரஸ் தாக்கியதாகவும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

    எல்பாவை தொடர்ந்து, அவரது மனைவி சபரினாவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 16-ந்தேதி, இத்ரிஸ் எல்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தனக்கு கொரோனா பாசிட்டிவாக வந்துள்ளது என வீடியோ மூலம் தனது ரசிகர்களுக்கு எல்பா அறிவிக்கும் போது, அவர் அருகில் மனைவி சபரினாவும் உடனிருந்தார். 

    இத்ரிஸ் எல்பா

    எல்பா கொரோனா பாதிப்பு காரணமாக ஐசியூவில் இருக்கிறார் என்ற வீடியோ வைரலாகவே, அது ஒரு பொய்யான தகவல், நான் நலமுடன் வீட்டில் தான் இருக்கிறேன் என எல்பா பதில் அளித்தார்.  மேலும், சிலர், உங்கள் மனைவியை ஏன் அருகில் வைத்துள்ளீர்கள், அவருக்கும் கொரோனா தொற்று பரவி விடாதா? சுய தனிமையை ஏன் செய்துக் கொள்ளவில்லை உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பி இருந்தனர்.

    இந்நிலையில், எல்பா மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பேசிய சபரினா, தனக்கு கொரோனா வைரஸ் தாக்கும் என்று அறிந்தே இருந்தேன். இருந்தாலும், கஷ்ட காலத்தில், கணவனுக்கு பணிவிடை செய்யாமல் எப்படி விட்டு விலகி செல்வது எனக்கூறியுள்ளார். இருவரையும் தனிமைப்படுத்தி வைத்து, தற்போது தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
    பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 350 கோடியில் உருவாகி வருகிறது. மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் லோகோ உடன் கூடிய மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


    புதுவிதமாக அமைந்துள்ள இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் 2021-ம் ஆண்டு ஜனவரி 8-ந் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் கடந்தாண்டு வெளியாகி வெற்றி பெற்ற அசுரன் படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
    பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் அசுரன். தீண்டாமை உள்ளிட்ட அடக்குமுறைக்கு எதிராக பேசிய இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் படைத்தது.

    அசுரன் படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் தனுஷ் வேடத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சு வாரியர் வேடத்தில் பிரியாமணி நடிக்கிறார். 

    சிவ ராஜ்குமார்

    இந்நிலையில், அசுரன் படத்தை கன்னடத்திலும் ரீமேக் செய்ய உள்ளனர். இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தனுஷ் வேடத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்க உள்ளார். இப்படத்தை ஜேக்கப் வர்கீஸ் இயக்க உள்ளார்.
    ‘நாநா’ படத்தில் இணைந்து நடித்து வரும் சசிகுமார், சரத்குமார், மீண்டும் ரீமேக் படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    “கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட தேசம்” என்று கூறப்படும் கேரள மண்ணில் தயாரான சில படங்கள் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி, அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்க்கும். அந்த வகையில், ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற புதிய மலையாள படம், சமீபத்தில் திரைக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தில் பிருத்விராஜ், பிஜுமேனன் ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    எளிமையான கதையை புதிய வடிவில் சொல்லியிருக்கிறார்கள். இப்படி ஒரு படம் இனிமேல் வருமா? என்ற எதிர்பார்ப்பை அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் ஏற்படுத்தி இருக்கிறது. அதைத்தொடர்ந்து ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை 5 ஸ்டார் கதிரேசன் வாங்கியிருக்கிறார். இப்படத்தில் முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

    பிருத்விராஜ், பிஜுமேனன்

    இந்நிலையில், இப்படத்தில் சசிகுமார், சரத்குமார் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பிருத்விராஜ் வேடத்தில் சசிகுமாரும், பிஜூமேனன் வேடத்தில் சரத்குமாரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஏற்கனவே என்.வி.நிர்மல்குமார் இயக்கும்  ‘நாநா’ படத்தில் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
    நடிகை கங்கனா ரனாவத், விடுமுறையில் தனது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப உள்ளதாக கூறியுள்ளார்.
    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க பல்வேறு திரைப்பிரபலங்கள் முயன்று வருகின்றனர். அந்த வகையில் நடிகை கங்கனா ரனாவத், இந்த விடுமுறையில் தனது உடல் எடையை குறைக்க உள்ளதாக கூறியுள்ளார். 

    கங்கனா ரனாவத்

    தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் தலைவி படத்தில் நடித்து வந்த கங்கனா, ஜெயலலிதா வேடத்திற்காக 20 கிலோ வரை தனது உடல்எடையை அதிகரித்து நடித்தார். தற்போது அவரது காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டதால், உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப உள்ளதாக கங்கனா தெரிவித்துள்ளார். இதற்காக வீட்டிலேயே தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் கங்கனா.
    தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், அடுத்ததாக காமெடி வேடத்தில் நடிக்க உள்ளாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை ரகுல் பிரீத் சிங். ‘தடையற தாக்க’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் நல்லவிதமாக அமைந்தது. கார்த்தியுடன் தொடர்ந்து ‘தேவ்’ படத்திலும், சூர்யாவுடன் ‘என்.ஜி.கே’படத்திலும் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். 

    தற்போது கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்திலும், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் படத்திலும் நடித்து வருகிறார். கோலிவுட்டை போல் பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வரும் ரகுல் பிரீத் சிங், அடுத்ததாக அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

    ரகுல் பிரீத் சிங்

    வழக்கமாக பாலிவுட்டில் கவர்ச்சி மற்றும் ரொமாண்டிக் வேடங்களில் நடித்து வந்த ரகுல் பிரீத் சிங், இப்படத்தில் காமெடி கலந்த ஹிரோயின் வேடத்தில் நடிக்கிறாராம். இப்படத்தை இந்திரகுமார் இயக்க உள்ளார்.
    கொரோனா பீதி காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மாஸ்டர் படம் திட்டமிட்ட படி ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    விஜய்யின் 64 வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் வருகின்றனர். சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    விஜய்

    இப்படத்தை ஏப்ரல் மாதம் 9ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மாஸ்டர் படம் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்படத்தை மே 1 ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
    ×