என் மலர்
சினிமா செய்திகள்
வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் கொரோனா பரவலை தடுக்க தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சொல்வதை அவமானமாக எண்ண வேண்டாம் என திரிஷா அறிவுரை கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தபோதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும், உயிர்ப்பலிகளும் நாளுக்கு நாள் உயர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. கொரோனாவால் பாதித்தவர்கள் இருந்த பகுதிகளை சுற்றிலும் தடுப்புகள் அமைத்துள்ளனர்.
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய பலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததால், அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் தானாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் நடிகை திரிஷா வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோவில் அவர் பேசி இருப்பதாவது:- “இந்த கொரோனா அல்லது ‘கோவிட் 19’ சீக்கிரமாக பரவக்கூடிய ஒரு வைரஸ். வெளியூர் அல்லது வெளிமாநிலங்களில் இருந்து தமிழ் நாட்டுக்குள் சமீபத்தில் வந்தவர்கள் தயவு செய்து தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். இப்படி தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்வது உங்களை அவமானப்படுத்தவோ, தொந்தரவு செய்வதற்கோ இல்லை.
இது உங்களுடைய பாதுகாப்புக்காக மட்டும்தான். உங்கள் குடும்பத்தினர் பாதுகாப்புக்காவும், குடும்பத்தில் இருக்கும் சிறியவர்கள், வயதானவர்கள் பாதுகாப்புக்காகவும் மட்டும்தான். தயவுசெய்து அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறாதீர்கள். வீட்டில் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். இதை எல்லோரும் ஒற்றுமையாக செய்தால்தான் இந்த கொரோனா வைரசை ஒழிக்க முடியும்”. இவ்வாறு திரிஷா கூறியுள்ளார்.
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய பலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததால், அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் தானாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் நடிகை திரிஷா வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோவில் அவர் பேசி இருப்பதாவது:- “இந்த கொரோனா அல்லது ‘கோவிட் 19’ சீக்கிரமாக பரவக்கூடிய ஒரு வைரஸ். வெளியூர் அல்லது வெளிமாநிலங்களில் இருந்து தமிழ் நாட்டுக்குள் சமீபத்தில் வந்தவர்கள் தயவு செய்து தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். இப்படி தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்வது உங்களை அவமானப்படுத்தவோ, தொந்தரவு செய்வதற்கோ இல்லை.
இது உங்களுடைய பாதுகாப்புக்காக மட்டும்தான். உங்கள் குடும்பத்தினர் பாதுகாப்புக்காவும், குடும்பத்தில் இருக்கும் சிறியவர்கள், வயதானவர்கள் பாதுகாப்புக்காகவும் மட்டும்தான். தயவுசெய்து அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறாதீர்கள். வீட்டில் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். இதை எல்லோரும் ஒற்றுமையாக செய்தால்தான் இந்த கொரோனா வைரசை ஒழிக்க முடியும்”. இவ்வாறு திரிஷா கூறியுள்ளார்.
கொரோனா மட்டும் வரலேனா இந்நேரம் மாஸ்டர் ரிலீசாகிருக்கும் என பிரபல இயக்குனர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
விஜய்யின் 64 வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் வருகின்றனர். சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மாஸ்டர் படத்தை ஏப்ரல் 9-ந் தேதி (இன்று) வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது.

இந்நிலையில், ஆடை படத்தின் இயக்குனரும், மாஸ்டர் படத்தின் வசனகர்த்தாவுமான ரத்னகுமார் இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: "கொரோனா மட்டும் வரலேனா இந்நேரம் மாஸ்டர் ரிலீசாகி இருக்கும். முதலில் டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசு காரணமாக படப்பிடிப்புக்கு சிக்கல், பின்னர் போராட்டம், அதையடுத்து ஐடி ரெய்டு தற்போது கொரோனா. ஒரு ரசிகனாக இது மிகவும் வருத்தமாக உள்ளது" என பதிவிட்டுள்ளார்.
2 மகள்களை தொடர்ந்து பிரபல இந்தி பட தயாரிப்பாளர் கரீம் மோரானிக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
பிரபல இந்தி பட தயாரிப்பாளர் கரீம் மோரானி. இவர் நடிகர் ஷாருக்கானை வைத்து ரா ஒன், சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே போன்ற படங்களை தயாரித்தவர். கடந்த சில நாட்களுக்கு முன் தயாரிப்பாளரின் மகள்கள் ஷோயா மற்றும் சாஷாவுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதில் ஷோயா ராஜஸ்தான் சென்று திரும்பியதும், சாஷா இலங்கை சென்று திரும்பியதும் தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் கரீம் மோரானிக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று தெரியவந்தது. இதுகுறித்து தயாரிப்பாளரின் சகோதரர் முகமது மோரானி கூறுகையில், ‘‘பரிசோதனைக்கு பிறகு கரீமுக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. சோதனை முடிவுகள் நேற்று காலை தான் வந்தன. அவர் நானாவதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார். கரீமின் மனைவி மற்றும் வீட்டில் வேலை பார்க்கும் மற்ற ஊழியர்களுக்கு கொரோனா இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது’’ என்றார்.

இந்தி திரையுலகில் முதலில் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது அவர் அதில் இருந்து குணமாகிவிட்டார். அவரை தொடர்ந்து நடிகர் புரப் கோலி, கரீம் மோரானி மற்றும் அவரது மகள்கள் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது இந்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமூக விலகலை கடைப்பிடிக்காமல் கும்பலாக சென்றதை தட்டிக்கேட்ட நடிகரை அடித்து உதைத்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்கும்படியும் அரசால் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள பனையூரில் வசித்து வரும் நடிகர் ரியாஸ்கான்(வயது 47) நேற்று காலை அந்த பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது ஒரு பெண் உள்பட 5 பேர் கூட்டமாக சென்றனர்.
இதை கண்ட நடிகர் ரியாஸ்கான், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு போட்டு இருப்பதுடன், சமூக விலகலை கடைப்பிடிக்க அறிவுறுத்தி உள்ளது. ஆனால் அதை கடைப்பிடிக்காமல் இப்படி கும்பலாக செல்லலாமா? என தட்டிக்கேட்டதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அந்த கும்பலில் இருந்த ஒருவர் திடீரென ரியாஸ்கானை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ரியாஸ்கான் கானத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் ரியாஸ்கானை தாக்கிய நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தமிழில் பல படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் பரத்தின் திறமையை கண்டு நடிகர் நகுல் பாராட்டி இருக்கிறார்.
2003-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாய்ஸ். இப்படத்தில் சித்தார்த், பரத், தமன், நகுல் உள்ளிட்டோர் அறிமுகமானார்கள். தற்போது சித்தார்த், பரத், நகுல் உள்ளிட்டோர்கள் ஹீரோவாக நடிப்பதில் பிசியாக இருக்க, தமன் இசையமைப்பாளராக இருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் பரத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராம் படத்தில் இடம்பெற்ற ஆராரிராரோ பாடலை அவர் பாடிய வீடியோவை பகிர்ந்து கொண்டார். இதை பார்த்த நகுல், ''ரொம்ப அருமையாக பாடி இருக்கிறாய். உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. இப்படி ஒரு திறமை உனக்குள் இருப்பது இதுவரை எனக்கு தெரியாது'' என பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் மணிரத்னம், நடிகை அதிதி ராவ் இருக்கும் படத்தை வெளியிட்டு மணிரத்னத்தை கலாய்த்துள்ளார் பிரபல இயக்குனர்.
தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவர் மணிரத்னம். எந்த பிரச்னையிலும் தனது தனிப்பட்ட கருத்துகளை சொல்லாதவர். தனது படம் வெளியாகும் சமயத்தில் மட்டுமே பேட்டியும் கொடுப்பார். அதில் நாட்டு நடப்பு பற்றி கேள்வி கேட்டால் மட்டுமே அவர் பதில் சொல்வார்.
எப்போதும் சீரியசாக இருப்பார் என்று மணிரத்னம் பற்றி சொல்லப்படுவது உண்டு. அவரது இயக்கத்தில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் ஆகிய படங்களில் நடித்தவர் அதிதி ராவ். பார்ட்டி ஒன்றில் மணிரத்னத்துக்கு ஸ்டைலாக ரோஜாப்பூவை கொடுக்கிறார் அதிதி. அதை வாங்கிக்கொண்டு அதிதியை பார்த்து ரொமான்டிக்லுக் விடுவது போல் போஸ் தருகிறார் மணிரத்னம்.
இந்த போட்டோவை தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார் ராம்கோபால் வர்மா. அத்துடன் முதல் முறையாக சூப்பர் சீரியஸ் ஆளான மணி ரத்னம் வெட்கப்படுவதை நான் பார்க்கிறேன் என கமென்ட் போட்டு கலாய்த்துள்ளார்.
தமிழில் பல படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது புதிய யூடியூப் சேனல் தொடங்கி உள்ளார்.
டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நடிகர், நடிகைகள் பிசியாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சில நட்சத்திரங்கள் யூடியூப் சேனல் கூட துவக்கி விடுகிறார்கள். தமிழ் பட இயக்குனர்கள் பலரும் இதுபோல் சேனல் துவக்கி இருக்கிறார்கள்.
நடிகைகளில் பெரும்பாலானோர் இதுபோல் யூடியூப் சேனல் துவக்கியதில்லை. முதல் முறையாக ஹன்சிகா தனக்கென யூடியூப் சேனலை துவக்கியுள்ளார். இது பற்றி ஹன்சிகா கூறும் போது, மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். அதே சமயம் படபடப்பாகவும் இருக்கிறது. முதல்முறையாக என்னுடைய யூடியூப் சேனலை வெளியிடுகிறேன். என்னுடன் சேர்ந்து என்னுடைய வாழ்க்கைக்கு உள்ளே சென்று, என் உண்மையான பக்கத்தை அறிந்துகொள்ள தயாராக இருங்கள் என கூறியுள்ளார். தற்போது மகா படத்தில் ஹன்சிகா நடித்து வருகிறார். யூடியூப் சேனல் துவக்கி அவர் அதில் என்ன சொல்லப் போகிறார் என சில நடிகைகளும் ஆர்வமாக கவனித்து வருகின்றனர்.
ரஜினி, அமிதாப் நடித்த குறும்படத்தின் மூலம் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளனர்.
ஊரடங்கு காலத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது, உடல்நலனைப் பேணுவது, வீட்டிலிருந்து பணிபுரிவது, சமூக விலகல் உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தும் விதமாக ‘ஃபேமிலி’ என்ற குறும்படம் வெளியானது.
இதில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். இந்த படத்தின் மூலம் கிடைக்கும் பணம் அனைத்தையுமே தினசரித் தொழிலாளர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக சிரஞ்சீவி தனது டுவிட்டர் பதிவில், "அமிதாப்பின் அற்புதமான இந்த முன்னெடுப்பில் பங்கெடுப்பதில் மிக்க மகிழ்ச்சி. இதிலிருந்து வரும் வருமானம், இந்தியத் திரைத்துறையில் இருக்கும் ஒரு லட்சம் தினக்கூலிப் பணியாளர்களுக்கு நிவாரணம் தரும்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா சிகிச்சைக்காக தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை அரசு விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளலாம் என ரஜினி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பல்வேறு மருத்துவமனைகளில் தனியாக வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும், பல இடங்கள் சிகிச்சை அளிக்க தயாராகவும் உள்ளன. இந்நிலையில் சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை ரஜினிகாந்தும், சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனது பொன்மணி மாளிகையை கவிஞர் வைரமுத்துவும் கொரோனா சிகிசைக்காக அரசு விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
ரஜினி தரப்பில் இதை உறுதி செய்துள்ளார்கள்.
தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் சூரி, குடும்பத்தோடு தினம் ஒரு விழிப்புணர்வு வீடியோ பதிவு செய்து வருகிறார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் கடந்த 24 -ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரபல நடிகர் சூரி பொது மக்களை மிகழ்விக்கவும் அதே நேரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தன் குடும்பத்தோடு இணைந்து தினம் ஒரு வீடியோ தன் சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.
நடிகர் சூரி வெளியிட்டு வரும் நகைச்சுவை கலந்த கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வீடியோக்கள் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கொரோனா வைரஸ் நிவாரண உதவி தொகை ரூபாய் 1 லட்சம் வழங்கினார்.
மேலும் தனக்கு தொலைப்பேசி வாயிலாக அழைத்து உதவி கேட்கும் நலிந்த கலைஞர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி வருகிறார். உலகமே கண்டு அஞ்சும் கொரோனா வைரஸ் மிக விரைவில் இவ்வுலகிலிருந்து மறைய கடவுளை வேண்டி கொள்வதாகவும், அனைவரும் அரசு கூறும் விதிமுறைகளை பின்பற்றி இந்த இக்கட்டான சூழ்நிலையை வென்று வரவேண்டும் என்று நடிகர் சூரி கூறினார்.
சில மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட "மூடர்" திரைப்படம் கொரோனாவின் தாக்கத்தை சொல்லி எடுத்திருக்கிறார்கள்.
சில நேரங்களில், சில படங்கள் உண்மை தன்மைக்கு பக்கத்தில் ஜெராக்ஸ் எடுத்தது போல அமைந்து விடும். அப்படி சம காலத்தில் கொரோனா நோயினால் உலகமே துவண்டு கிடக்கிறது. சில மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட "மூடர்" பைலட் பிலிம், சிலர் சொந்த சுயலாபத்திற்காக வைரஸ் கிருமிகளை பரப்புவதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
சமகாலத்தில் இன்றைய காலகட்டத்திற்கு இந்த படம் உண்மையை உலகிற்கு உரக்க சொல்வது போல இயக்கியிருக்கிறார் தாமோதரன் செல்வகுமார். இணையத்தில் வெளியான இந்த "மூடர்" திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து இயக்குனர் தாமோதரன் செல்வகுமார் முழு நீள படமாக இயக்கப் போகிறார். அதற்கான அடுத்தகட்ட வேலைகள் நடந்து வருகிறது. மூடர் பைலட் பிலிமில் நடித்தவர்கள் கார்த்தி, அனிஷா, சசிதரன், ஆர்த்தி சுபாஷ், மதன் கோபால், வினோத் லோகிதாஸ், பிர்லாபோஸ், சக்திபோஸ், உறியடி 2 சசிக்குமார், சிவக்குமார் ராஜ், சிவக்குமார்.
விஜய்சேதுபதி நடிப்பில் 5 மொழிகளில் உருவாக உள்ள படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய் சேதுபதிக்கு தமிழ் சினிமாவை போலவே மற்ற தென்னிந்திய மொழி சினிமாக்களிலும் ரசிகர் கூட்டம் உருவாகி உள்ளது. இதனால் பிற மொழி படங்களிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் மார்கோனி மாதாய் படத்தில் நடித்தார். அதேபோல் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான சைரா நரசிம்மா ரெட்டி எனும் வரலாற்று படத்தில் நடித்தார்.
தற்போது தெலுங்கு திரையுலகில் அவருக்கு வில்லன் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் பிச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகும் உப்பெனா என்ற தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார். அடுத்ததாக சுகுமார் இயக்கும் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.

இந்நிலையில், அல்லு அர்ஜுனின் பிறந்தநாளான இன்று அப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு 'புஷ்பா' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாக உள்ளது. செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், விஜய் சேதுபதி வனத்துறை அதிகாரி வேடத்திலும் நடிக்க உள்ளார்.






