என் மலர்
சினிமா செய்திகள்
ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் பாரிஸ் பாரிஸ் படத்தின் முன்னோட்டம்.
இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற குயீன் படத்தை மீடியன்ட் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் மனு குமரன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். தமிழில் "பாரிஸ் பாரிஸ்" என்று இப்படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. காஜல் அகர்வால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தை நடிகர் மற்றும் இயக்குனரான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். அமித் திரிவேதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். குயீன் படத்திற்கும் இசையமைத்தவர் அமீத் திரிவேதி என்பது குறிப்பிடத்தக்கது. பாஸ்கோ - சீசர் மற்றும் கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்து கொடுத்துள்ளனர்.

தயாரிப்பாளர் மனுகுமரன், "படத்தின் தரத்தை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. அனைத்து நடிகர்களும் தாங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களின் தன்மையை அறிந்து சிறப்பாக நடித்துள்ளனர். நடிகர்களின் வித்தியாசமான பரிணாமங்கள் கண்டிப்பாக ரசிகர்களை கவரும்" என்றார்.
மனோரமாவின் மகன் பூபதி, மது கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் பரவி வரும் நிலையில், அதன் உண்மை நிலவரத்தை பார்க்கலாம்.
மறைந்த பிரபல நடிகை மனோரமாவின் மகன் பூபதி. இவர் வழக்கமாக இரவில் சாப்பிடும் மாத்திரைகளில் ஒன்றை கூடுதலாக நேற்று இரவு சாப்பிட்டு உள்ளார். இதனால் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அவரது உடல் நிலை தேறியது.
இதற்கிடையே மனோரமா மகன் மது கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் பரவியது. இதனை மாம்பலம் போலீசார் மறுத்தனர். இதுபற்றி இன்ஸ்பெக்டர் பாலமுரளி கூறும் போது, ‘இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை’ என்று தெரிவித்தார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, கொரோனா குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சீனாவில் உருவான கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் உலக நாடுகளை பயமுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த கொடிய வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. வைரஸ் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், நடிகை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனா குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: வாழ்க்கையில் நாம் கற்றுக்கொண்டதை எல்லாம் மறந்து, முற்றிலும் புதிதாக கற்றுக்கொண்டிருக்கிறோம். நாம் இதுவரை செய்ய முடியாது என்று நினைத்ததை எல்லாம் இப்பொழுது செய்துகொண்டிருக்கிறோம். நம்மால் முடிந்ததை இப்பொழுது செய்ய முடியாத நிலை.

நாம் காலத்தால் பிரிந்திருந்தாலும், புவியியல் ரீதியான தடையால் நாம் ஒன்றாக நிற்கிறோம். நமது பாதுகாப்புக்காக பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது. இந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரும்போது எல்லோருக்கும் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. சின்னதோ, பெரியதோ அந்த கதாபாத்திரத்தை மனிதனாக மனிதத்துடன் செய்வோம்'' என்று தெரிவித்துள்ளார்.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான் கான், கொரோனாவால் பயப்பட்டுக்கொண்டு இருப்பதாக கூறியுள்ளார்.
கொரோனா பரவலால் இந்திய திரையுலகம் முடங்கி உள்ளது. சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் அனைத்து மொழி நடிகர்-நடிகைகளும் வீட்டில் இருக்கிறார்கள். சிலர் நகரத்துக்கு வெளியே உள்ள பண்ணை வீடுகளில் தங்கி உள்ளனர். இந்தி நடிகர் சல்மான்கானும் தனது சகோதரர் மகனுடன் வீட்டை விட்டு வெளியேறி பண்ணை விட்டில் தங்கி இருக்கிறார்.
அங்கிருந்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது:- “நான் சில நாட்கள் இந்த வீட்டில் இருக்கலாம் என்றுதான் வந்தேன். ஆனால் தற்போது இங்கு சிக்கிக்கொண்டு இருக்கிறேன். பயமாக இருக்கிறது. எனது தந்தையை பார்த்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. அவர் வீட்டில் தனியாக இருக்கிறார்.

பயந்தவன் இறந்து போவான் என்று திரைப்படத்தில் வசனம் வரும். அது இந்த சூழ்நிலைக்கு பொருந்தாது என்பதை துணிச்சலாக ஒப்புக்கொள்கிறேன். இந்த நேரத்தில் யாரும் துணிச்சலை வெளிப்படுத்த வேண்டாம். நாங்கள் பயப்பட்டுக்கொண்டு இருக்கிறோம்”. இவ்வாறு சல்மான்கான் கூறியுள்ளார்.
திரைப்பட தொழிலாளர்கள் 25 ஆயிரம் பேருக்கு உதவுவதாக சல்மான்கான் ஏற்கனவே அறிவித்து உள்ளார். அதன்படி தனது ராதே படக்குழுவினருக்கு வங்கிக் கணக்கில் பணம் போட்டுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் உலகையே சின்னாபின்னமாக்கி வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர். கொரோனா நோயாளிகளால் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன. ஹாலிவுட் நடிகர்-நடிகைகள் இந்த கொடிய வைரசுக்கு இரையாகி வருகின்றனர்.
ஹாலிவுட் நடிகர்கள் ஆண்ட்ரூ ஜாக், மார்க் பிளம், நடிகைகள் பேட்ரிசியா பாஸ்வொர்த், லீ பியர்ரோ, இங்கிலாந்து நகைச்சுவை நடிகர் எட்டி லார்ஜ், ஜப்பான் நடிகர் கென் ஷிமூரா மற்றும் அமெரிக்க பாடகர் ஜோ.டிப்பி உள்ளிட்டோர் கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளனர்.
அந்த வரிசையில் பிரபல ஹாலிவுட் நடிகரான ஜாய் பெனடிக்ட் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தார். அவருக்கு வயது 68. சில தினங்களுக்கு முன்பு ஜாய் பெனடிக்ட்டுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவரது உயிர் பிரிந்தது. இவர் ஜேம்ஸ் கேமரூன் படமான ஏலியன்ஸ், த ஒயிட் நைட், த அபோகலிப்ஸ் கோட் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். ஜாய் பெனடிக்ட் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர்-நடிகைகள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறியதாக பிரபல நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக அந்த நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான லாகோசில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் அந்த நகரில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கும், திருமணம், இறுதி சடங்குகளில் மக்கள் அதிகமாக கூடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த நாட்டின் பிரபல நடிகையான பன்கே அகிண்டெலே உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோரை வீட்டுக்கு வரவழைத்து தனது கணவரின் பிறந்தநாளை கோலகலமாக கொண்டாடினர். மேலும் அவர் மது, ஆடல், பாடல் என களைகட்டிய விருந்து நிகழ்ச்சியை வீடியோ பதிவுசெய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

பிறந்தநாள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் பல நாட்களாக தனது வீட்டிலேயே தங்கியிருப்பதாகவும், யாரும் வெளியே இருந்து வரவில்லை என்றும் கூறி நடிகை பன்கே அகிண்டெலே தனது செயலை நியாப்படுத்தினார். ஊரடங்கு உத்தரவை மீறியதாக கூறி அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு 260 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 ஆயிரம்) அபராதமும் விதித்தனர்.
இந்த நிலையில் அந்த நாட்டின் பிரபல நடிகையான பன்கே அகிண்டெலே உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோரை வீட்டுக்கு வரவழைத்து தனது கணவரின் பிறந்தநாளை கோலகலமாக கொண்டாடினர். மேலும் அவர் மது, ஆடல், பாடல் என களைகட்டிய விருந்து நிகழ்ச்சியை வீடியோ பதிவுசெய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

பிறந்தநாள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் பல நாட்களாக தனது வீட்டிலேயே தங்கியிருப்பதாகவும், யாரும் வெளியே இருந்து வரவில்லை என்றும் கூறி நடிகை பன்கே அகிண்டெலே தனது செயலை நியாப்படுத்தினார். ஊரடங்கு உத்தரவை மீறியதாக கூறி அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு 260 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 ஆயிரம்) அபராதமும் விதித்தனர்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, கடந்த 10 நாட்களாக சமூக வலைத்தளங்களில் எதையும் பதிவிடாமல் உள்ளார்.
கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், திரைப்பிரபலங்களும் வீட்டில் முடங்கி உள்ளனர். இருப்பினும் சமூக வலைத்தளம் மூலம் தங்களது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது, விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வது என இயங்கி வருகின்றனர்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா. கடந்த 10 நாட்களாக சமூக வலைத்தளங்களில் எதையும் பதிவிடாமல் இருப்பது திரையுலகினர் இடையே ஆச்சர்யத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. சினிமா தொழிலாளர்களுக்கு பலர் நன்கொடை அளித்துவரும் சூழலில், அவர் எந்தவித நன்கொடையும் அறிவிக்கவில்லை. அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் அமைதி காத்து வருவதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கள் பரவ ஆரம்பித்து விட்டன.
சமந்தாவை டுவிட்டரில் 79 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 95 லட்சம் பேரும் பின்தொடர்வது குறிப்பிடத்தக்கது.
தமிழில் முன்னணி இயக்குனராக இருக்கும் கவுதம் மேனன், தான் இயக்குவதாக இருந்த படங்கள் தள்ளிப்போவதால் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ மற்றும் ‘அயன்லேடி’ பெயர்களில் திரைப்படங்கள் ஆகின்றன. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத், நித்யாமேனன் ஆகியோர் நடிக்கின்றனர். தலைவி பட வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளன.
இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்க்கையை ‘குயின்’ என்ற பெயரில் கவுதம் மேனன் வெப் தொடராக இயக்கி வெளியிட்டார். இதில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷணன் நடித்து இருந்தார். ஜெயலலிதாவின் அம்மா கதாபாத்திரத்தில் சோனியா அகர்வாலும், எம்.ஜி.ஆர் வேடத்தில் இந்திரஜித் சுகுமாரனும் வந்தனர்.
ஜெயலலிதாவின் குழந்தை பருவம் கல்வி, வக்கீலாக வேண்டும் என்ற கனவு, எதிர்பாராமல் நடிகையானது, சினிமாவில் சந்தித்த சவால்கள் போன்றவை தொடரில் இருந்தன. எம்.ஜி.ஆரின் மரணத்தோடு இந்த வெப் தொடர் முடிந்தது. இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.

இதையடுத்து குயின் தொடரின் 2-ம் பாகத்தை எடுக்க கவுதம் மேனன் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2-ம் பாகத்தில் முழுக்க ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை பதிவு செய்யப்படும் என்றும், இதிலும் ஜெயலலிதா வேடத்தில் ரம்யாகிருஷ்ணனே நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே அவர் இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் படம் ரிலீசாகாமல் உள்ளது. அதேபோல் சூர்யாவை வைத்து அவர் இயக்குவதாக இருந்த படமும் தள்ளிப்போகிறது. இதனால் அவர் குயின் வெப் தொடரின் 2-ம் பாகத்தை இயக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழில் மிகவும் பிரபலமான நடிகை ஸ்ரேயா, நடிகர்கள் ஜெயம் ரவி ஆர்யாவிற்கு சவால் விடுத்துள்ளார்.
தமிழில் மிகவும் பிரபலமான நடிகை ஸ்ரேயா. இவர் டென்னிஸ் வீரரும், தொழில் அதிபருமான ஆன்ட்ரே கோஷ்சியை காதலித்து மணந்தார். திருமணத்துக்கு பிறகு பார்சிலோனாவில் வசித்து வருகிறார்.
அவ்வப்போது இந்தியாவுக்கு வந்து படங்களில் நடித்து விட்டு போகிறார். இப்போது தமிழில் விமல் ஜோடியாக சண்டக்காரி என்ற படத்தில் ஸ்ரேயா நடித்து வருகிறார். கொரோனாவால் பார்சிலோனாவிலேயே கணவருடன் தங்கியுள்ளார். வீட்டில் நேரம் போக வேண்டும் என்பதற்காக விட்டு வேலைகளில் ஸ்ரேயாவுக்கு உதவி செய்து வருகிறார் அவரது கணவர் ஆன்ட்ரே.
சமையல் பாத்திரங்கள் அனைத்தையும் கழுவி தருவது அவர்தான். இதை ஒரு வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார் ஸ்ரேயா. அத்துடன் நிற்காமல், ஜெயம் ரவி, ஆர்யா, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஆகியோருக்கு பாத்திரம் கழுவும் சவால் என அழைப்பு விடுத்துள்ளார். எல்லோரும் இதுபோல் பாத்திரங்களை கழுவுங்கள் என கேட்டிருக்கிறார்.
பிரபல இந்தி நடிகை வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு அதிகாரிகள் சீல் வைத்திருக்கிறார்கள்.
பிரபல இந்தி நடிகை வசிகங்கனா ரனாவத் நடித்த ஜான்சி ராணி லட்சுமி பாய் வாழ்க்கை வரலாற்று படமான மணிகர்னிகாவில், ஜால்காரிபாய் எனும் போராளி வேடத்தில் நடித்தவர் நடிகை அங்கிதா லோகந்தே. டைகர் ஷெரப்பின் பாகி 3 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அங்கிதா வசித்து வருகிறார். அந்த குடியிருப்பில் உள்ள ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டிற்கு சென்று திரும்பியதால் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவருக்கு தனிமை வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வரும் அதிகாரிகள், அங்கிதா வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பை தனிமைப்படுத்தி சீல் வைத்துள்ளனர். மேலும், அந்த அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வரும் மற்றவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஹரிஷ் கல்யாண், தான்யா, விவேக் நடிப்பில் வெளியான தாராள பிரபு படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹரிஷ் கல்யாண் நடித்த தாராள பிரபு திரைப்படம் கடந்த மார்ச் 13 ஆம் தேதி வெளியாகியிருந்தது. இந்தியில் வெளியான 'விக்கி டோனர்' என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இதனை கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக தான்யா ஹோப் நடிக்க, விவேக் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் பாடல்களுக்கு அனிருத், பரத் சங்கர், இன்னோ கெங்கா, கபேர் வாசுகி, ஷான் ரோல்டன், விவேக் - மெர்வின் உள்ளிட்ட பலர் இசையமைத்தனர். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதன் காரணமாக படத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
ஊரடங்கு முடிந்த பிறகு இந்த படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்பட்டநிலையில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி இந்த படத்தை அமேசான் பிரைமில் வருகிற ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.
பிரதமர் மோடியை விமர்சித்து கடிதம் எழுதிய கமல் மீது காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கொரோனாவுக்கு எதிரான போரில் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் இருப்பதை காண்பிக்கும் விதமாக விளக்கேற்ற சொன்ன பிரதமர் மோடியை விமர்சித்து கடிதம் எழுதினார்.
அதில் 'எண்ணெய் இல்லை; விளக்கேற்ற முடியுமா?. உங்கள் தொலைநோக்கு பார்வை தோற்றுவிட்டது. கடந்த இரு முறை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நீங்கள் இந்த கடினமான சூழலில் பிரச்னைகளை சந்திக்கும் மக்களை சமாதானபடுத்தும் முயற்சியில் இறங்கினீர்கள். தலைமேல் கூரையே இல்லாதோரின் நிலை என்னவாவது? நம் சமூகத்தில் அதிகமாக இருக்கும் ஏழை மக்களை புறக்கணித்துவிட்டு பால்கனி மக்களுக்காக இயங்கும் அரசாக நீங்கள் உள்ளீர்கள்.' என எழுதி இருந்தார்.
இதனை விமர்சித்து பா.ஜனதாவை சேர்ந்த காயத்திரி ரகுராம் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: நீங்கள் ஏன் சீன அதிபர் ஜின்பிங்குக்கும், தப்லிக் இ ஜமாத்துக்கும் கடிதம் எழுதி அவர்களின் தோல்வியை சுட்டிக்காட்டக்கூடாது? அரசின் உத்தரவை மதிக்காத, கீழ்படியாமல் இருக்கும் பொறுப்பற்ற குடிமக்களுக்கு கடிதம் எழுதுங்கள். தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் தோல்வியடைந்தார்கள் என கூறுகிறீர்களா? தமிழக எம்.எல்.ஏ., எம்.பி.,க்களுக்கு முதலில் கடிதம் எழுதி அவர்களிடம் முறையிடுங்கள்.
பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவது ஒரு டிரெண்ட் ஆகி விட்டது. நேற்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் ஒற்றுமையை காட்டினார்கள். அதில் நீங்கள் பங்கேற்கவில்லை என உங்களுக்கு உறுத்தவில்லையா? மத்திய மாநில அரசுகள் கடுமையாக உழைத்து வருகின்றன. மேம்போக்காக எழுதாமல், உரிய தகவல்களோடு எழுதுங்கள். இவ்வாறு அவர் டுவிட்டரில் கமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.






