என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பி வாசு இயக்கத்தில் உருவாகியிருக்கும் சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
    பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் சந்திரமுகி. இதில் நயன்தாரா, ஜோதிகா, பிரபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வெற்றிகரமாக 100 நாட்களை கடந்து ஓடியது.
    ரஜினியுடன் ராகவா லாரன்ஸ்
    தற்போது சந்திரமுகி 2 திரைப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. ரஜினியின் அனுமதியுடன் இப்படத்தில் நடிப்பதாக ராகவா லாரன்ஸ் கூறி இருக்கிறார்.


    தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட இன்சூரன்ஸ் பாலிசிக்கு சுமுக தீர்வு காண தயாரிப்பாளர் விடியல் ராஜு முயற்சித்திருக்கிறார்.
    தமிழ் திரைப்படம் தயாரிப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம் இன்சுரன்ஸ் கட்டப்பட்டு வந்தது. சங்கத்தில் முறைகேடு நடந்ததாக வந்த புகாரை அடுத்து மார்ச் மாதம் முதல் இந்த இன்சுரன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதனால் சிறு தயாரிப்பாளர்கள் பாதிப்படைந்து இருப்பதாக ஆள் படத்தின் தயாரிப்பாளர் விடியல் ராஜு, சிறு தயாரிப்பாளர்களுக்கு நல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்.

    இதை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி, அரசாங்கத்திடம் பேசி ஒரு வாரத்திற்குள் தீர்வு காணும்படி சொல்லியிருக்கிறார். அரசாங்கமும் சில டெக்னிக்கல் பிரச்சனைகளை முடித்து சமர்ப்பிப்பதாக கூறியிருக்கிறார்கள்.

    விரைவில் தயாரிப்பாளர்களுக்கு இன்சுரன்ஸ் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    யோகி பாபு நடிப்பில் உருவாகவிருக்கும் காக்டெய்ல் படத்தின் நாயகி ராஷ்மி கோபிநாத் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு நாடே முடங்கி கிடக்கிறது. அரசின் உத்தரவை மதித்து சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வீட்டிற்குள்ளேயே இருக்கின்றனர். இதில் சிலர் மக்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாக நல்ல ஆலோசனைகளையும் தருகின்றனர். யோகிபாபுவுடன் ‘காக்டெய்ல்’ மற்றும் சி.வி.குமார் தயாரிப்பில் ஒரு புதிய படம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ராஷ்மி கோபிநாத் மக்களுக்கு சில ஆலோசனைகளுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    காக்டெய்ல் நாயகி ராஷ்மி கோபிநாத்

    “இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தொற்றுநோயாக இருக்கிறது. அதனால் தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள். பொறுப்பில்லாமல் வெளியில் சுத்த  வேண்டாம். பொழுதுபோக்கிற்காக நண்பர்களுடன் அரட்டை அடிக்க, பார்ட்டிக்கு செல்ல என  வீட்டைவிட்டு எதற்காகவும் அநாவசியமாக வெளியே செல்லவேண்டாம். அப்படி செய்தால் அது நம் அனைவரையுமே கடுமையாக பாதிக்கும்.

    அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்வது என்றாலும் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள்.. உங்களுக்கான மாஸ்க்கை நீங்களே தயார் செய்து கொள்ள முடியும்.. எனக்கும் எனது குடும்பத்துக்கும் இந்த மாஸ்க்குகளை என் அம்மா தான் வீட்டிலேயே தயார் செய்தார்.

    இந்த ஊரடங்கு முடிந்த பிறகும் நீங்கள் வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாஸ்க் இல்லையா..? உங்கள் முகத்தை மறைக்க துப்பட்டா அல்லது கைக்குட்டையை பயன்படுத்தலாம்..

    தயவுசெய்து சுகாதார நிபுணர்களுக்காக மாஸ்க்குகளை கொஞ்சம் விட்டுக்கொடுங்கள். ஏனென்றால் நம்மை விட அதிகமாக அவர்களுக்குத்தான் தேவைப்படும். அவர்கள் அனைவரும் நமக்காக போராடிக்கொண்டு இருக்கும் உண்மையான ஹீரோக்கள்' என்றார்.
    நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி நிதியுதவி வழங்கி இருப்பதாக கூறியுள்ளார்.
    கொரோனா நிவாரண நிதிக்கு பலரும் நிதி கொடுத்து வருகிறார்கள். நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

    பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் வழங்கியுள்ளார்.

    மேலும் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சமும், நடனக்கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளார்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சமும், ஏழை மக்களுக்கு  ரூ.75 லட்சமும் வழங்கியுள்ளார்.

    தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, நடிகர் சங்கத்திற்கு அரிசி வழங்கி உள்ளார்.
    கொரோனா நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் அடைந்து உள்ளனர். வேலை செய்பவர்களும் வீட்டிலிருந்தே வேலை செய்கின்றனர்.

    நடிகர் சங்கத்திற்கு அரிசி வழங்கி யோகி பாபு

    படப்பிடிப்பு நிறுத்தி வைக்கபட்டுள்ளதால், குறைந்தளவு சம்பளம் வாங்கும் நடிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகர் சங்கத்திற்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதனையடுத்து பல நடிகர்களும் தங்களால் முடிந்த உதவியை அளித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகர் யோகிபாபு தற்போது 1250 கிலோ அரிசியை நடிகர் சங்கத்திற்கு வழங்கியுள்ளார்.
    கல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதியாக வழங்கி இருக்கிறார்கள்.
    பேரழிவுகரமான கோவிட் -19 வைரஸ்  உலக அளவில் பெரும் நெருக்கடியை உருவாக்கியிருப்பதை  நாம் அறிவோம். சக குடிமக்களின் நிதி நெருக்கடியை சமாளிக்க, மக்களுக்கு உதவிட, கல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் ஏற்கனவே (FEFSI) பெப்சிக்கு ரூ.15 லட்சம் வழங்கிய நிலையில், தற்போது தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் வழங்கியிருக்கிறது.

    முன்னதாக தமிழக அரசு, அதன் கோவிட் -19 பேரிடர் மேலாண்மை திறன்களை மேம்படுத்துவதற்கான முயற்சியில் தாராளமாக நன்கொடை அளிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு  வேண்டுகோள் விடுத்திருந்தது. 

    கல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம், இந்த நெருக்கடியான நேரத்தில் சக குடிமக்களின் துன்பங்களைத் தணிக்க,  தாராளமயமான பங்களிப்புகளைத் தந்து உதவுமாறும் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது.
    குறிப்பிட்ட நாளில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியாகாததால் சோகத்தில் இருந்த ரசிகர்களை படக்குழுவினர் உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள்.
    விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, மாஸ்டர் மகேந்திரன், அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ள நிலையில், படத்தின் டீசர் அல்லது ட்ரெய்லருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

    விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்

    மேலும் இப்படம் இன்று (ஏப்ரல் 9) வெளியாகும் என்று அறிவித்தார்கள். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இன்று வெளியாகவில்லை.

    இந்நிலையில் கொரோனா வைரஸ் வரவில்லை என்றால், மாஸ்டர் படம் இன்று வெளியாகியிருக்கும் என ரசிகர்கள் ட்விட்டரில் பதிவு செய்து வந்தார்கள். இந்நிலையில் மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு, ''உங்களை போல, நாங்களும் உங்கள் வரவை மிஸ் செய்கிறோம், சீக்கிரமே கொரோனா வைரஸூக்கான மருந்தை ஒரு மாஸ்டர் மைன்ட் கண்டுபிடிக்கட்டும், விரைவில் இன்னும் வலிமையுடன் வருகிறோம் நண்பா'' என பதிவிட்டுள்ளனர். படக்குழுவிடம் இருந்து வந்த இந்த பதிவால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 
    மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லால் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கியுள்ளார்.
    கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு மத்திய-மாநில அரசுகள் நிதி திரட்டி வருகின்றன. இதுபோல் சினிமா படப்பிடிப்புகள் நின்று போனதால் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவி வழங்க, சினிமா சங்கங்கள் நிதி திரட்டுகின்றன. இதற்கு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள நடிகர்கள் பலரும் நிதி வழங்கி வருகிறார்கள்.

    ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், சூர்யா, விஜய்சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் பலர் திரைப்பட தொழிலாளர் சங்கமான பெப்சிக்கு நிதி வழங்கி உள்ளனர். இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஆகியோர் பிரதமர் நிவாரண நிதி வழங்கினார்கள். சிரஞ்சீவி, பவன்கல்யாண், ராம்ரசரண் உள்ளிட்ட முன்னணி தெலுங்கு நடிகர்களும் நிதி வழங்கி இருக்கிறார்கள்.

    இதுபோல் மலையாள நடிகர் மோகன்லால் தற்போது கேரள முதல்-அமைச்சரின் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் நிதி வழங்கி இருக்கிறார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் முன்னோட்டம்.
    விஜய்யின் 64-வது படம் `மாஸ்டர்'. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இவர், ‘மாநகரம்,’ ‘கைதி’ ஆகிய 2 படங்களை இயக்கியவர். சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ரஜினியின் பேட்ட படத்தில் நடித்திருந்தார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார்.

    மேலும்  சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான், மகேந்திரன், விஜே ரம்யா, அழகம் பெருமாள், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யன், சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆடை, மேயாதமான் போன்ற படங்களை இயக்கிய ரத்னகுமார் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். 

    விஜய்

    இப்படத்தில் இடம்பெறும் குட்டி ஸ்டோரி பாடலை விஜய் பாடியுள்ளார். அதேபோல் அந்த கண்ண பாத்தாக்கா எனும் பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். இப்பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.
    மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மம்முட்டி, தனது மகன் துல்கர் சல்மான் இயக்கத்தில் நடித்துள்ளார்.
    கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இந்தியா உள்பட பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கொறோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்களும் இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    அந்தவகையில் ‘ஃபேமிலி’ எனும் குறும்படம் மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், ஆலியா பட், மம்முட்டி உள்ளிட்ட பலர் முன்வந்துள்ளனர் . 

    மம்முட்டி, துல்கர் சல்மான்

    ஊரடங்கு காலத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது, உடல் நலனைப் பேணுவது, வீட்டில் இருந்து பணிபுரிவது, சமூக விலகல் உள்ளிட்ட வி‌ஷயங்களை பற்றி பேசும் இப்படத்தை ப்ரசூன் பாண்டே என்பவர் இயக்கியுள்ளார். 

    இக்குறும்படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த குறும்படம் குறித்த ருசீகர தகவல் வெளியாகி உள்ளது. இக்குறும்படத்தில் மம்முட்டி நடித்த காட்சிகளை அவரது மகனும் நடிகருமான துல்கர் சல்மான் தான் படமாக்கினாராம். நடிப்பை தவிர தனக்கு படம் இயக்குவதிலும் ஆர்வம் இருப்பதாக துல்கர் சல்மானை நிறைய பேட்டிகளில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்சிக்கும் திரைப்பிரபலங்கள் அளித்த நிதி எவ்வளவு என்பது குறித்து அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி விளக்கம் அளித்துள்ளார்.
    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- “கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி கஷ்டப்படும் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ நிதி வழங்குமாறு திரையுலகைச் சேர்ந்த அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்து இருந்தோம். அதை ஏற்று நடிகர்கள் உள்ளிட்ட பலர் ரூ.2 கோடியே 45 லட்சம் நிதியுதவி செய்துள்ளனர். 2 ஆயிரத்து 400 அரிசி மூட்டைகளும் கிடைத்துள்ளன.

    பெப்சியில் 25 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் உதவி வழங்க ரூ.3 கோடியே 75 லட்சம் தேவைப்படுகிறது. இதுவரை 15 ஆயிரம் பேருக்கு உதவி உள்ளோம். ஒரு நபருக்கு 25 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வாங்க 500 ரூபாயும் அளித்து வருகிறோம். மற்றவர்களுக்கும் இதர நடிகர்கள், தயாரிப்பாளர்கள் நிதி வழங்குவதை வைத்து உதவிகள் செய்யப்படும்.

    ஆர்.கே.செல்வமணி

    அனைத்து உறுப்பினர்களுக்கும் இன்னும் சில தினங்களில் உதவிகள் வழங்கி முடித்து விடுவோம். திரைப்பட துறையில் வேராக இருக்கும் பெப்சி தொழிலாளர்களுக்கு திரையுலகினர் அனைவரும் உதவ வேண்டும்”. கொரோனாவல் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களின் துயர் துடைக்க முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ‘பெப்சி’ சார்பில் ரூ.10 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்படும்.

    இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார்.
    பிரபல தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 1 லட்சம் பேருக்கு உணவு வழங்க பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஏற்பாடு செய்துள்ளார்.
    கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான ஏழைகள், தினக்கூலி தொழிலாளர்கள், ஆதரவற்றோர் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உதவும் முயற்சியில் அரசுகள் ஈடுபட்டு உள்ளன. தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் உணவு, மளிகை பொருட்கள் வழங்கி வருகிறார்கள். நடிகர்-நடிகைகளும் தங்கள் வீடுகளை சுற்றி வசிக்கும் ஏழைகளுக்கு, தேடி சென்று உணவு வழங்குகிறார்கள்.

    இந்த நிலையில் பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஆதரவற்ற 1.2 லட்சம் பேருக்கு அக்‌ஷய பாத்ரா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து உணவு வழங்க முன்வந்துள்ளார். இதற்காக அந்த தொண்டு நிறுவனம் ஹிருத்திக் ரோஷனுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

    ஹிருத்திக் ரோஷன்

    இதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள ஹிருத்திக் ரோஷன், “நாட்டில் யாரும் பசியுடன் தூங்குகிறார்களா? என்பதை அறியும் சக்தி உங்களுக்கு கிடைக்க வேண்டும். களத்தில் இருக்கும் நீங்கள்தான் சூப்பர் ஹீரோக்கள். நம்மால் என்ன செய்ய முடியுமோ அதை தொடர்ந்து செய்வோம். யாருடைய பங்களிப்பும் சிறியதோ பெரியதோ அல்ல” என்று கூறியுள்ளார்.
    ×