என் மலர்
சினிமா செய்திகள்
மத்திய சிறைச்சாலையில் கைதிகளுடன் இணைந்து மாநில அரசின் விருது பெற்ற நடிகர் ஒருவர் மாஸ்க்குகளை தயாரித்து வருகிறார்.
கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே சமயத்தில் அங்கு முக கவசம் தட்டுப்பாடும் நிலவுகிறது. இந்த நிலையில் திருவனந்தபுரம் பூஜைப்புரை மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகள் முக கவசம் தயாரித்து வழங்கி வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து மாநில அரசின் விருது பெற்ற நடிகர் இந்திரன்ஸ் என்பவர் முக கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், நம் கையே நமக்கு உதவி என்பது போல நாமே நமக்கு தேவையான முக கவசங்களை எளிதில் தயாரிக்க முடியும். அதற்கான பயிற்சி முறைகளை சிறை கைதிகளுக்கும் சொல்லி கொடுத்து வருகிறேன் என்றார். இவர் தமிழில் ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் சத்யராஜின் உதவியாளராக நடித்திருந்தார். இவர் நடிக்க வரும் முன்பு டெய்லராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு, மாளவிகா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் பேய் மாமா படத்தின் முன்னோட்டம்.
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம் பேய் மாமா.யோகிபாபுவுடன் மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கம்புலி, நமோ நாராயணன், கோவை சரளா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏலப்பன், விக்னேஷ் ஆகிய இருவரும் தயாரித்து வருகிறார்கள்.
இதுபற்றி அந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்யும் சக்தி சிதம்பரம் கூறுகிறார்: ‘‘பேய் மாமா, ஒரு திகில் படம். வில்லன் ஒரு வெளிநாட்டின் தீயசக்தியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு உயிரை கொல்லும் வைரஸ் கிருமியை உருவாக்கி, அதன் மூலம் பல கோடிகளை சம்பாதிக்க திட்டமிடுகிறான்.
அவனுடைய முகமூடியை கிழித்து உலக மக்களை காப்பாற்ற முயற்சிக்கிறார், உள்ளூர் சித்த வைத்தியர். அவரை வில்லன் கொன்று விடுகிறான். சித்த வைத்தியரின் ஆவி, கதாநாயகனுக்குள் புகுந்து அப்பாவி மக்களை காப்பாற்ற களம் இறங்குகிறது. இதுவே ‘பேய் மாமா’வின் கதை. இந்த கதை இப்போதைய காலகட்டத்துக்கு பொருத்தமாக அமைந்து விட்டது.
நாங்கள் படப்பிடிப்பை தொடங்கும்போது, கொரோனா பற்றி உலகுக்கு தெரியாது. அந்த உயிர் கொல்லி நோய் தொடர்பான காட்சிகளை திகிலாக படமாக்கி இருக்கிறோம். பெரும்பகுதி படப்பிடிப்பு கேரள மாநிலம் கோட்டயம் அருகில் உள்ள கிராமங்களில் நடைபெற்றது. சில முக்கிய காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.
பிரபல இசையமைப்பாளரின் வளர்ப்பு நாய், அவர் இசையமைப்பதற்கு ஏற்ப கொரோனா பாடல் ஒன்றை பாடி அசத்தி உள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய - மாநில அரசுகள் முயற்சி எடுத்து வருகின்றன. தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சினிமா பிரபலங்கள் வீட்டில் இருந்தபடியே சமூக வலைத்தளங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். கொரோனா பாடல் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பாடலின் சிறப்பம்சம் என்னவென்றால், அப்பாடலை அவர் வளர்க்கும் நாய் பாடியுள்ளது. அவர் இசையமைப்பதற்கு ஏற்றார் போல் நாய் பாடும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட ராகவா லாரன்ஸ், இயக்குனர்கள் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாசை விட அதிகம் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
தென்னிந்திய திரையுலகில் டைரக்டர் மணிரத்னம் பெரும்பாலும் சொந்த படங்களையே இயக்கி வருகிறார். அதனால் அவருடைய சம்பளம் இவ்வளவு என்று நிர்ணயிக்கப்படவில்லை. அவர் இப்போது ரூ.1,000 கோடி செலவில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தை உருவாக்கி வருகிறார். அதில், பிரபல கதாநாயகர்கள் பலர் இணைந்து நடிக்கிறார்கள். மணிரத்னத்தை தவிர்த்து, தென்னிந்திய டைரக்டர்களிலேயே அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையை பெற்றவர், ஷங்கர்.
இவர் ஒரு படத்துக்கு ரூ.20 கோடி வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு அடுத்த இடத்தில் இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்து சில வெற்றி படங்களை கொடுத்து, ‘மார்க்கெட்’ அந்தஸ்தை உயர்த்திக் கொண்டார். அதைத்தொடர்ந்து இவரும் ஒரு படத்துக்கு ரூ.20 கோடி சம்பளம் பெறுவதாக பேசப்படுகிறது. தற்போது ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவரையும் சம்பள விஷயத்தில், ராகவா லாரன்ஸ் முந்தி விட்டார்.

இவர் நடித்து இயக்கி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘காஞ்சனா’ (தமிழ்) படத்தை இந்தியில் இயக்கி வருகிறார். அதில் கதாநாயகனாக அக்ஷய்குமார் நடிக்கிறார். இவருக்கு இந்த படத்துக்கான சம்பளம் ரூ.120 கோடி. டைரக்டர் ராகவா லாரன்சுக்கு சம்பளம் ரூ.50 கோடி என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் இருவரையும் சம்பள விஷயத்தில், ராகவா லாரன்ஸ் முந்தி விட்டார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் அட்லீ, கொரோனாவால் வேலை இழந்து தவிக்கும் சினிமா தொழிலாளர்களுக்காக நிவாரண நிதி வழங்கி உள்ளார்.
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பீதியால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவ பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. பல்வேறு திரைப்பிரபலங்களும் நிதி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குனர் அட்லீ ரூ.10 லட்சம் கொரோனா நிவாரண நிதி வழங்கியுள்ளார். இதில் ரூ.5 லட்சம் பெப்சிக்கும், ரூ.5 லட்சம் இயக்குனர்கள் சங்கத்திற்கும் வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார். இயக்குனர் அட்லீ அடுத்ததாக ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாக உள்ள ஆச்சார்யா படத்தில் இருந்து திரிஷா விலகியதன் உண்மை காரணத்தை சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
சிரஞ்சீவி அடுத்ததாக ஆச்சார்யா என்கிற கமர்சியல் படத்தில் நடிக்க உள்ளார். கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். திடீரென அவர் இப்படத்திலிருந்து விலகினார். கதையில் ஏற்கனவே சொன்ன தனது கதாபாத்திரத்தில் நிறைய மாற்றங்களை செய்ததால் தான் இதிலிருந்து விலகுவதாக திரிஷா விளக்கம் அளித்தார். அவருக்கு பதிலாக காஜல் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில், ஆச்சார்யா படத்தில் இருந்து திரிஷா விலகியதன் உண்மை காரணத்தை சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திற்கு திரிஷா மொத்தமாக தனது கால்ஷீட்டை கொடுத்துவிட்டார். அதனால் அவர் ஆச்சார்யா படத்தில் நடிக்கவில்லை. மற்றபடி படக்குழுவினருடன் அவருக்கு எந்தவித மனக்கசப்பும் இல்லை என சிரஞ்சீவி கூறியுள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் கொரோனாவுக்கு விரைவில் மருந்து கண்டுபிடிக்கப்படும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் கொரோனாவுக்கு எதிராக விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இதனை மறுத்த ஜாக்கிசான் நலமாக இருக்கிறேன் என்று தெரிவித்தார். இந்த நிலையில் ஜாக்கிசான் பிறந்த நாளையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இதற்கு நன்றி தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:- “எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ரசிகர்கள் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனாவை குணப்படுத்தும் தடுப்பு மருந்து விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று நம்புகிறேன். இதுவே எனது பிறந்த நாள் விருப்பமும் ஆகும். உலக அமைதியும், நல்லிணக்கமும் ஏற்பட வேண்டுகிறேன். பாதுகாப்பாகவும், ஆரோக்கியத்தோடும் இருங்கள்”
இவ்வாறு ஜாக்கிசான் கூறியுள்ளார்.
ஒரே ஊரில் இருந்தும் குடும்பத்தினரை பார்க்க முடியவில்லை என தனுஷ் மற்றும் செல்வராகவனின் சகோதரி தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சத்தால் இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திரைப்பிரபலங்களும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் தனுஷின் அக்கா கார்த்திகா தனது அண்ணன், தம்பி மற்றும் பெற்றோரை பார்க்க முடியாமல் தவிப்பதாக கூறியுள்ளார். அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: நான் அவர்களை மாதம் இருமுறையாவது சென்று பார்த்து விடுவேன். ஆனால் தற்போது ஒரே ஊரில் இருந்தும் அவர்களை பார்க்க முடியாமல் தவிக்கிறேன். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதை விட சிறந்தது உலகில் எதுவும் கிடையாது. அவர்களை ரெம்பவும் மிஸ் பண்றேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஓய்வெடுக்க நடிகர் சோனுசூட் தனது சொகுசு ஓட்டலை வழங்கி உள்ளார்.
கொரோனா வைரஸ் நிவாரண பணிகளுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள நடிகர்கள் பலர் உதவி வருகிறார்கள். இந்தி நடிகர் ஷாருக்கான் மும்பையில் தனக்கு சொந்தமாக உள்ள 4 மாடி அலுவலகத்தை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்து உள்ளார்.
அவரை தொடர்ந்து பிரபல வில்லன் நடிகர் சோனுசூட்டும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் ஓய்வெடுக்க மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது 6 மாடி ஓட்டலை வழங்க முன்வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் மக்கள் உயிரை காப்பாற்ற இரவும்-பகலும் உழைக்கிறார்கள். அவர்களுக்கு ஓய்வெடுக்க இடம் தேவை என்பதால் என்னால் இயன்ற உதவியாக இதை செய்துள்ளேன்” என்றார். சோனுசூட் தமிழில் கள்ளழகர், மஜ்னு, ஒஸ்தி, சந்திரமுகி, தேவி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா இருவரும் ஹாலிவுட் நடிகர்களுடன் இணைந்து கொரோனா நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் உலகையே அலற வைத்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் பலியாகிறார்கள். அனைத்து நாடுகளும் ஊரடங்கை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ளன. இதனால் ஏழைகளும் ஆதரவற்றோரும் வருமானம் இழந்து தவிக்கிறார்கள்.
அவர்களுக்கு உதவ நடிகர்-நடிகைகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நிதி திரட்டி வருகின்றன. உணவு, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி வருகின்றன.
இந்த நிலையில் ஹாலிவுட் நடிகர்கள் ‘ஒன் வேல்டு’ என்ற பெயரில் தொலைக்காட்சியில் நேரடி நிகழ்ச்சியை நடத்தி கொரோனா நிதி திரட்ட இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இந்தி நடிகர் ஷாருக்கான், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். பிரபல அமெரிக்க பாடகி லேடி காகா தொகுத்து வழங்குகிறார்.

இதன் மூலம் வசூலாகும் தொகையை உலக சுகாதார நிறுவனத்துக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் வழங்க இருக்கிறார்கள். ஏற்கனவே ஷாருக்கான் பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு தனது பட நிறுவனம் சார்பில் நிதி வழங்கி இருக்கிறார்.
அவர்களுக்கு உதவ நடிகர்-நடிகைகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நிதி திரட்டி வருகின்றன. உணவு, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி வருகின்றன.
இந்த நிலையில் ஹாலிவுட் நடிகர்கள் ‘ஒன் வேல்டு’ என்ற பெயரில் தொலைக்காட்சியில் நேரடி நிகழ்ச்சியை நடத்தி கொரோனா நிதி திரட்ட இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இந்தி நடிகர் ஷாருக்கான், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். பிரபல அமெரிக்க பாடகி லேடி காகா தொகுத்து வழங்குகிறார்.

இதன் மூலம் வசூலாகும் தொகையை உலக சுகாதார நிறுவனத்துக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் வழங்க இருக்கிறார்கள். ஏற்கனவே ஷாருக்கான் பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு தனது பட நிறுவனம் சார்பில் நிதி வழங்கி இருக்கிறார்.
கேரளாவில் பிரபல சின்னத்திரை நடிகையாக இருக்கும் ஜூஹி ரஷ்டகி, ஆபாச வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று கூறி இருக்கிறார்.
மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து கேரளாவில் பிரபல சின்னத்திரை நடிகையாக இருப்பவர் ஜூஹி ரஷ்டகி. இவர் நடித்துள்ள உப்பும் மிளகும் என்ற நகைச்சுவை தொடர் கேரள ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார்.
தற்போது ஊரடங்கால் பொதுமக்களும், நடிகர்-நடிகைகளும் வீட்டில் முடங்கி உள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒரு ஆபாச வீடியோ பரவியது. அந்த வீடியோவில் இருக்கும் பெண் ஜூஹி ரஷ்டகி என்று கூறப்பட்டது. ஆபாச வீடியோவை பார்த்த மலையாள ரசிகர்கள் பலர் அதை வைரலாக்கினார்கள். இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியான ஜூஹி ரஷ்டகி போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:- “எனது பெயரில் ஆபாச வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. இது போலி வீடியோ என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த வீடியோவை வெளியிட்டவர்களுக்காக அனுதாபப்படுகிறேன். இதில் சம்பந்தப்பட்டவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் டி.ஜி.பியிடமும், எர்ணாகுளம் போலீசிலும் புகார் அளித்துள்ளேன்”. இவ்வாறு ஜூஹி ரஷ்டகி கூறியுள்ளார்.
பி வாசு இயக்கத்தில் உருவாகியிருக்கும் சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் சந்திரமுகி. இதில் நயன்தாரா, ஜோதிகா, பிரபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வெற்றிகரமாக 100 நாட்களை கடந்து ஓடியது.

தற்போது சந்திரமுகி 2 திரைப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. ரஜினியின் அனுமதியுடன் இப்படத்தில் நடிப்பதாக ராகவா லாரன்ஸ் கூறி இருக்கிறார்.






