என் மலர்
சினிமா செய்திகள்
மன அழுத்தத்தில் இருந்து மக்கள் விடுபட பாடகர்கள் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கபட்டு வருகிறது. அதையும் மீறி சிலர் வெளியே சுற்றுவதால் அவர்கள் மூலம் கொரோனா பரவலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. நடிகர்-நடிகைகள் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு மக்களை வீட்டில் இருக்கும்படி வற்புறுத்தி வருகிறார்கள்.
கொரோனா தடுப்பு பணிகளில் டாக்டர்கள், செவிலியர்கள், போலீசார், மருத்துவ ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். களத்தில் பணியாற்றும் இவர்களுக்காகவும் மக்களின் மன அழுத்தம் குறைக்கவும் பாடகர்கள் வீட்டில் இருந்தே பாடும் ‘சங்கீத கேது’ என்ற ஆன்லைன் இசை நிகழ்ச்சியை தொடங்கி உள்ளனர். இதனை இந்திய பாடகர்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
தற்போதையை சூழ்நிலையில் நாட்டில் உள்ள முன்னணி பாடகர்கள் மூலம் மக்களின் மன அழுத்தம் கவலையை குறைக்க இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படுவதாக அந்த அமைப்பு அறிவித்து உள்ளது. இதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ், லதா மங்கேஷ்கர், ஹரிஹரன், ஷங்கர் மகாதேவன், ஆஷா போஸ்லே, உதித் நாராயணன், ஷான், பங்கஜ் உதாஸ், சோனு நிகம் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி பாடகர்கள் கலந்து கொண்டு வீட்டில் இருந்தே பாடுகிறார்கள். இந்த இசை நிகழ்ச்சி 3 நாட்கள் இரவு 9 மணிக்கு நடக்கிறது.
கொரோனா தடுப்பு பணிகளில் டாக்டர்கள், செவிலியர்கள், போலீசார், மருத்துவ ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். களத்தில் பணியாற்றும் இவர்களுக்காகவும் மக்களின் மன அழுத்தம் குறைக்கவும் பாடகர்கள் வீட்டில் இருந்தே பாடும் ‘சங்கீத கேது’ என்ற ஆன்லைன் இசை நிகழ்ச்சியை தொடங்கி உள்ளனர். இதனை இந்திய பாடகர்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
தற்போதையை சூழ்நிலையில் நாட்டில் உள்ள முன்னணி பாடகர்கள் மூலம் மக்களின் மன அழுத்தம் கவலையை குறைக்க இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படுவதாக அந்த அமைப்பு அறிவித்து உள்ளது. இதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ், லதா மங்கேஷ்கர், ஹரிஹரன், ஷங்கர் மகாதேவன், ஆஷா போஸ்லே, உதித் நாராயணன், ஷான், பங்கஜ் உதாஸ், சோனு நிகம் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி பாடகர்கள் கலந்து கொண்டு வீட்டில் இருந்தே பாடுகிறார்கள். இந்த இசை நிகழ்ச்சி 3 நாட்கள் இரவு 9 மணிக்கு நடக்கிறது.
நலிந்த நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்களுக்கு உதவ நடிகர் சங்கத்துக்கு விவேக் பணமும், அரிசியும் வழங்கியுள்ளார்.
கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவிக்கும் நலிந்த நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்களுக்கு உதவ நடிகர் சங்கம் நிதி திரட்டி வருகிறது. நடிகர்-நடிகைககள் பலர் நிதி மற்றும் அரிசி வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் விவேக் நலிந்த நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்களுக்கு உதவ நடிகர் சங்கத்துக்கு ரூ.3.5 லட்சம் வழங்கி உள்ளார். மேலும் 100 மூட்டை அரிசியும் வழங்குகிறார். நகைச்சுவை நடிகர் யோகிபாபு நலிந்த நடிகர்களுக்கு 1,250 கிலோ அரிசி வழங்கி உள்ளார். உதவி பொருட்களை அவர் நேரில் வழங்கினார்.
இதுபோல் நடிகர் பசுபதி, நடிகை குட்டி பத்மினி ஆகியோரும் தலா ரூ.15 ஆயிரம் நிதி வழங்கி உள்ளனர். இந்த நிலையில் நடிகர் சங்கத்தில் உள்ள நலிந்த நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்கள் 2 ஆயிரம் பேர் வங்கி கணக்கில் தலா ரூ.500 போடப்பட்டு உள்ளதாக நடிகர் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நடிகர் விவேக் நலிந்த நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்களுக்கு உதவ நடிகர் சங்கத்துக்கு ரூ.3.5 லட்சம் வழங்கி உள்ளார். மேலும் 100 மூட்டை அரிசியும் வழங்குகிறார். நகைச்சுவை நடிகர் யோகிபாபு நலிந்த நடிகர்களுக்கு 1,250 கிலோ அரிசி வழங்கி உள்ளார். உதவி பொருட்களை அவர் நேரில் வழங்கினார்.
இதுபோல் நடிகர் பசுபதி, நடிகை குட்டி பத்மினி ஆகியோரும் தலா ரூ.15 ஆயிரம் நிதி வழங்கி உள்ளனர். இந்த நிலையில் நடிகர் சங்கத்தில் உள்ள நலிந்த நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்கள் 2 ஆயிரம் பேர் வங்கி கணக்கில் தலா ரூ.500 போடப்பட்டு உள்ளதாக நடிகர் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடிகர் விக்ரம் சினிமாவில் இருந்து விலகப் போவதாக வந்த செய்திக்கு அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமது மகன் துருவ்வின் வளர்ச்சிக்காக நடிகர் விக்ரம் சினிமாவிலிருந்து விலகப் போகிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.
இதுகுறித்து விக்ரம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
இந்த செய்தியைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம். இது முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது என்பதை இதன்மூலம் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
விக்ரம் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார், அதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும், செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் லலித்துடன் ஒரு படத்திலும் நடிக்கிறார். அவர் மிகவும் பிஸியாக இருக்கிறார், மேற்சொன்னவை அவரது படங்களில் ஒரு சிலவை மட்டுமே.
எந்தவொரு செய்தியையும் வெளியிடுவதற்கு முன்பு, அதிகாரப்பூர்வ ஆதாரங்களுடன் சரிபார்த்து தெளிவுபடுத்துமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
பர்மா அகதிகளுக்கு கலப்பை மக்கள் இயக்க தலைவரும், தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் உதவி செய்திருக்கிறார்.
கொரோனா அச்சத்தால் வீட்டில் முடக்கியிருக்கும் ஏழை மக்களுக்கு கலப்பை மக்கள் இயக்கம் தொடர்ந்து உதவி கரம் நீட்டி வருகிறது. கஜா புயலால் பாதிக்கபட்ட நபர்களுக்கு முதன் முதலில் இரண்டரை லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் T.ராஜேந்தர் தலைமையில் அனுப்பியதுடன் பட்டு கோட்டையில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் முன்னிலையில் 100 பசுங்கன்றுகள் வழங்கப்பட்டது.
இப்போது கடந்த 4 நாட்களாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட கேளம்பாக்கம், துரைப்பாக்கம் சுற்றி வசிக்கின்ற வட மாநில தொழிலாளர்கள், இருளர் இனத்தவர்கள், ஆந்திரா கட்டிட தொழிலாளர்கள் மற்றும் பர்மா அகதிகள் என அனைவருக்கும் சுமார் 250 மூட்டைகள் அரிசி, மளிகை பொருட்கள், காய் கறிகள் மற்றும் முககவசங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிகழ்வில் கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் கலப்பை மாநில ஒருங்கிணைப்பாளர் வி.கே.வெங்கடேசன், கிராம அதிகாரி பொன்னுதுரை, சமூகஆர்வலர் வேந்தரசி மற்றும் பலர் பங்கேற்றனர்.
பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான சாக்ஷி அகர்வால் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இவர் திரைக்கு வர காத்திருக்கும் டெடி, சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் போராளியாக ‘புரவி’ படத்தில் நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

தற்போது படப்பிடிப்பு இல்லாததால் நடிகைகள் பலரும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் சொல்லி வருகிறார்கள். ஆனால் சாக்ஷி அகர்வால் தினமும் உடற்பயிற்சி வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். மேலும் ரசிகர்கள் பலரும் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் என்றும் அறிவுரை சொல்லி வருகிறார். உடற்பயிற்சி செய்தால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம் என்றும் அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் தெலுங்கில் பிரபலமான நடிகை ரகுல் பிரீத் சிங் வித்தியாசமான முயற்சியில் கொரோனா நிதி திரட்ட முடிவு செய்துள்ளார்.
நடிகர்கள் நடிகைகள் பலரும் கொரோனா நிவாரண நிதி திரட்டி வருகிறார்கள். ஆனால் நடிகை ரகுல் பிரீத் சிங் வித்தியாசமான முறையில் கொரோனா நிவாரண நிதி திரட்ட முடிவு செய்துள்ளார்.
இதற்காக அவர் ஒரு யூ-டியூப் சேனலை ஆரம்பித்துள்ளார். அதில் கிடைக்கும் தொகையை அப்படியே பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்க அவர் முடிவு செய்துள்ளார்.
தனது இந்த முயற்சிக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் சூரி சினிமா தொழிலாளர்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்கி இருக்கிறார்.
கொரோனாவால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட சினிமா பெப்சி தொழிளாளர்களுக்கு, 25kg அரிசி 100 மூட்டைகளை (2500 kg) வழங்கியுள்ளார் நடிகர் சூரி.
துணை நடிகர்கள் சங்கத்திற்கு 25kg அரிசி 20 மூட்டைகளை (500 kg) வழங்கியுள்ளார். மேலும் தனது செலவில் ஏழை எளிய மக்கள் 100 பேருக்கு இன்று உணவளிக்கிறார்.
நடிகர் சங்கத்திற்கு கொரோனா நிவாரண உதவியாக ரூபாய் ஒரு லட்சம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தியாவசிய பொருட்களை பதுக்காதீர்கள் என்று நடிகர் அமிதாப்பச்சன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப் பாடுகள் ஏற்படக்கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் கவனமாக இருக்கின்றன. அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளன.
இந்த நிலையில் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பதுக்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:-
பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவை ஏற்று நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் கொரோனாவுக்கு எதிராக போராடுகிறவர்கள் அத்தியாவசிய பொருட்கள் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதுபோல் சுயநலமில்லாமல் பணியாற்றுபவர்களால் தான் ஊரடங்கு வெற்றிகரமாக நடக்கிறது. உணவு பொருட்களும், மருந்துகளும் தடையில்லாமல் கிடைக்க உழைக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இருக்காது. எனவே மக்கள் பொறுமையோடு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து யாரும் அத்தியாவசிய பொருட்களை பதுக்காதீர்கள். அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்போடு இருங்கள்.
இவ்வாறு அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.
தமிழில் பூ, மரியான், உத்தம வில்லன், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்த பார்வதி ஊரடங்கை மீறியதாக கூறப்படுகிறது.
தமிழில் பூ, மரியான், உத்தம வில்லன், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகை பார்வதி, கடந்த செவ்வாய்கிழமை தனது 32வது பிறந்தநாளை கொண்டாடினார்.
பிறந்தநாளையொட்டி நண்பர்களுடன் அவர் காரில் ஊர் சுற்றிய படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. அதில் என்னை அறிந்தால் படத்தில் இடம்பெற்ற அதாறு அதாறு பாடலுக்கு அவரும், அவரது நண்பர்களும் காருக்குள்ளேயே நடனமாடுகின்றனர். போதிய சமூக இடைவெளியையும் அவர்கள் பின்பற்றவில்லை. நடிகை பார்வதியின் இந்த செயல் கடும் கண்டனத்துக்கு ஆளாகி இருக்கிறது.

ஆனால், இந்த வீடியோ 2 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இது குறித்து பார்வதி எந்த பதிலும் தரவில்லை.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா, அடுத்ததாக கபடி விளையாட இருக்கிறார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த தமன்னாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை மறுத்து தமன்னா கூறியதாவது:- எனக்கு பட வாய்ப்புகள் இல்லை என்று தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இனிமேல் சினிமாவில் எனக்கு எதிர்காலம் இல்லை என்றும் பேசுகிறார்கள்.
இப்படி வதந்தி பரப்புகிறவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் 365 நாட்களும் படங்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
தற்போது ‘சீட்டிமார்’ என்ற தெலுங்கு படத்தில் கபடி அணி பயிற்சியாளராக நடித்து வருகிறேன். இது சவாலான வேடமாக இருக்கிறது. இந்த கதாபாத்திரத்துக்காக கடுமையாக உழைக்கிறேன். நான் நடிக்கும் முதல் விளையாட்டு சம்பந்தமான கதையம்சம் உள்ள படம் இதுவாகும்.
வாழ்க்கையில் இதுவரை கபடி விளையாடியது இல்லை. இந்த படத்துக்காக கபடி பயிற்சிகள் எடுத்து நடிப்பது வித்தியாசமான அனுபவமாக உள்ளது. கபடியை பற்றிய நுணுக்கங்கள், கபடி வீராங்கனையின் உடல் மொழி போன்றவற்றை கற்றுக்கொண்டு நடித்து வருகிறேன். இது எனது சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும்.
இவ்வாறு தமன்னா கூறினார்.
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் தாடி பாலாஜி, மளிகை மற்றும் காய்கறிகளை வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் கூலி தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவிக்கின்றனர். அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உணவு, மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். அதன்படி பூந்தமல்லி பகுதியில் பாதிக்கப்பட்ட சிலருக்கு நடிகர் தாடி பாலாஜி, சமூக ஆர்வலர்களுடன் இணைந்து மளிகை மற்றும் காய்கறிகளை வழங்கினார்.
அதேபோல் மற்றொரு சின்னத்திரை நடிகரான குமரன், திருவேற்காட்டில் உள்ள துப்புரவு பணியாளர்களுக்கு 3,500 முக கவசங்கள் மற்றும் கையுறைகளை வழங்கினார்.
அதேபோல் மற்றொரு சின்னத்திரை நடிகரான குமரன், திருவேற்காட்டில் உள்ள துப்புரவு பணியாளர்களுக்கு 3,500 முக கவசங்கள் மற்றும் கையுறைகளை வழங்கினார்.
தமிழில் அழியாத கோலங்கள், மூடுபனி போன்ற படங்களில் நடித்த பிரதாப் போத்தன் கொரோனா வதந்தி பரப்பியவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழில் அழியாத கோலங்கள், மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு, பன்னீர் புஷ்பங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் பிரதாப் போத்தன். மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். பிரதாப் போத்தனின் குரலில் அவரது சகோதரிக்கு நடிகர் ஒருவர் செல்போனில் பேசி தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதுபோல் பல தடவை இருமி விட்டு போனை துண்டித்துள்ளார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதாப் போத்தன் அந்த நடிகர் மீது வழக்கு தொடர்வேன் என்று எச்சரித்துள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பிரதாப் போத்தன் கூறியிருப்பதாவது:-
“இத்தாலியில் வசித்து வந்த எனது சகோதரி கொரோனா பரவுவதற்கு முன்பே இந்தியா திரும்பி தற்போது கேரளாவில் தனியாக வசித்து வருகிறார். நான் சென்னையில் இருக்கிறேன். இந்த நிலையில் சினிமாவில் தோல்வி அடைந்த நடிகர் ஒருவர் எனது சகோதரிக்கு போனில் தொடர்பு கொண்டு எனது குரலில் ‘மிமிக்ரி’ செய்து பிரதாப் பேசுகிறேன் என்று சொல்லி தொடர்ந்து இருமிக்கொண்டே இணைப்பை துண்டித்துள்ளார். எனது சகோதரி பதறிபோய் எனக்கு போன் செய்து விசாரித்தார். அந்த நடிகர் யார் என்பது தெரிந்து விட்டது. அவர் இப்படி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்”
இவ்வாறு பிரதாப் போத்தன் கூறியுள்ளார்.






